பொருளடக்கம்
ஜனவரி 15, 2011
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
பிப்ரவரி 28, 2011–மார்ச் 6, 2011
“யெகோவாவின் பெயரில் அடைக்கலம் புகுவீர்”
பக்கம் 3
பாட்டு எண்கள்: 49, 14
மார்ச் 7-13, 2011
திருமணம் என்ற வரத்தை உயர்வாய் மதியுங்கள்
பக்கம் 13
பாட்டு எண்கள்: 36, 40
மார்ச் 14-20, 2011
மணமாகாதவர்களே—காலத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்
பக்கம் 17
பாட்டு எண்கள்: 26, 53
மார்ச் 21-27, 2011
சோதனையை... சோர்வை... சமாளிக்க பலம்
பக்கம் 22
பாட்டு எண்கள்: 54, 17
மார்ச் 28–ஏப்ரல் 3, 2011
பக்கம் 26
பாட்டு எண்கள்: 49, 17
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரை 1 பக்கங்கள் 3-7
இந்தக் கொடிய காலத்தில் எங்கே அடைக்கலம் காணலாம்? யெகோவாவின் பெயரில் அடைக்கலம் காணலாம் என கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. இப்போதும், ‘யெகோவாவின் பெரிய நாள்’ வரும்போதும் எப்படிப் பாதுகாப்பைக் கண்டடையலாம் என்பதை இக்கட்டுரை கலந்தாராய்கிறது. 2011-க்கான வருடாந்தர வசனத்தையும் சிறப்பித்துக் காட்டுகிறது.
படிப்புக் கட்டுரைகள் 2, 3 பக்கங்கள் 13-21
திருமணம் செய்வதும் செய்யாமல் இருப்பதும் கடவுள் தரும் வரங்களே; இரண்டிலும் நன்மைகள் இருக்கின்றன. நாம் மணமானவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த வரங்களைப் பெரிதும் மதிக்க நல்ல காரணங்களை இந்தக் கட்டுரைகள் தருகின்றன; அதோடு, அவற்றிற்கு நாம் எப்படி நன்றி காட்டலாம் என்பதையும் விளக்குகின்றன.
படிப்புக் கட்டுரைகள் 4, 5 பக்கங்கள் 22-30
யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்திருப்பதற்கு ஏற்ப செயல்பட அவரது உதவி நமக்குத் தேவை. சோதனையை எதிர்த்துப் போராட... சோர்வை சமாளிக்க... துன்புறுத்தலை எதிர்கொள்ள... சகாக்களின் வற்புறுத்தலை எதிர்த்து நிற்க... கஷ்டங்களைச் சகிக்க... கடவுளுடைய சக்தி நமக்கு எப்படி உதவுகிறது என்பதை இந்தக் கட்டுரைகள் விளக்கும்.
இதர கட்டுரைகள்:
9 துன்பத்திலும் யெகோவாவின் சேவையில் இன்பம்
31 யெகோவா உங்களுக்குச் செய்தவற்றையே சிந்தியுங்கள்
© Stähli Rolf A/age fotostock