பொருளடக்கம்
ஆகஸ்ட் 15, 2008
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்
செப்டம்பர் 29–அக்டோபர் 5, 2008
யெகோவா தமக்கு உண்மையுள்ளவர்களைக் கைவிட மாட்டார்
பக்கம் 3
பாட்டு எண்கள் 114, 223
அக்டோபர் 6-12, 2008
முழு இருதயத்தோடு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருங்கள்
பக்கம் 7
பாட்டு எண்கள் 38, 8
அக்டோபர் 13-19, 2008
மரியாதைக்குரிய விதத்தில் நடந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்
பக்கம் 12
பாட்டு எண்கள் 48, 136
அக்டோபர் 20-26, 2008
வயதான ஊழியர்களை யெகோவா அன்போடு கவனித்துக்கொள்கிறார்
பக்கம் 17
பாட்டு எண்கள் 58, 216
அக்டோபர் 27–நவம்பர் 2, 2008
“சுத்தமான பாஷை”—சரளமாகப் பேசுகிறீர்களா?
பக்கம் 21
பாட்டு எண்கள் 78, 169
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-11
இஸ்ரவேல் தேசம் வடக்கு ராஜ்யமாகவும் தெற்கு ராஜ்யமாகவும் பிளவுற்றதைப் பற்றி இக்கட்டுரைகளில் ஆராயும்போது, தமக்கு உண்மையுள்ளவர்களை யெகோவா கைவிட மாட்டார் என்பதை அறிந்துகொள்வோம். பொருளாசை, மனமேட்டிமை ஆகிய கண்ணிகளுக்குள் நாம் சிக்கிவிடாதிருக்க, உள்ளப்பூர்வமாய் யெகோவாவுக்கு உண்மையோடிருப்பது இன்று எவ்வளவு முக்கியம் என்பதை இக்கட்டுரைகள் வலியுறுத்திக் காட்டுகின்றன.
படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 12-16
யெகோவாவின் மகிமையை உயர்வாய்க் கருதுகிறோம் என்பதை எவ்விதங்களில் நாம் வெளிக்காட்ட வேண்டும் என இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது. மற்றவர்களை இயேசு மதிப்பு மரியாதையோடு நடத்திய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. நாம் எப்படி மதிப்பு மரியாதையோடு நடந்துகொள்ளலாம் என்பதையும் இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 17-21
வயதான கிறிஸ்தவர்களை யெகோவா கருதும் விதமாகக் கருதுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள இக்கட்டுரை உதவுகிறது. அவர்களுடைய அறிவுக்கும் அனுபவத்திற்கும் மதிப்புக்கொடுக்க, அவர்களுடைய உணர்ச்சிகளைக் கருத்தில்கொள்ள, ஆன்மீகக் காரியங்களில் அவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவதற்குத் தோள்கொடுக்க பைபிள் நமக்கு எப்படி உதவுகிறது என்பதை இக்கட்டுரையில் கவனியுங்கள்.
படிப்புக் கட்டுரை 5 பக்கங்கள் 21-25
‘நான் ஜனங்களுடைய பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்’ என்று செப்பனியா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொன்னார். (செப். 3:9) “சுத்தமான பாஷை” என்றால் என்ன என்பதை இக்கட்டுரையிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள். இந்தப் பாஷையைப் பேசுவதில் திறம்பட்டவர்களாக ஆவதற்கு என்னென்ன செய்யலாம் என்பதைக் கவனியுங்கள். இந்த ஒப்பற்ற பாஷையில் யெகோவாவை எப்படிப் புகழ்ந்து போற்றலாம் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
இதர கட்டுரைகள்:
பக்கம் 26
பக்கம் 29
மிஷனரிகள் வெட்டுக்கிளிகளைப் போன்றவர்கள்
பக்கம் 30