உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 12/1 பக். 8
  • கேப்டன் மேஜையில்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேப்டன் மேஜையில்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • இதே தகவல்
  • நீங்கள் எந்த மேசையில் புசிக்கிறீர்கள்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • யெகோவாவின் சாட்சிகள் என்ற அமைப்பை ஆரம்பித்துவைத்தவர் யார்?
    யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் நிறுவப்படுகிறது
    கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!
  • ரஸலின் படைப்புகளைப் பாராட்டிய இரு பாஸ்டர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 12/1 பக். 8

கேப்டன் மேஜையில்

குதூகலமான ஆட்கள், சுவைமிகு உணவு, சுவாரஸ்யமான உரையாடல் ஆகியவை கப்பல் தளத்தில் கேப்டன் மேஜையில் உணவருந்துவதை இன்பம் நிறைந்த ஒன்றாக்குகின்றன. ஆனால் உவைட் ஸ்டார் லைன் கேப்டன் ராபர்ட் ஜி. ஸ்மித் மேஜையில் நடைபெற்ற உரையாடல் ஆன்மீக விருந்தளித்தது.​—⁠ஏசாயா 25:6.

1894-⁠ல், ராபர்ட் தன் 24-⁠ம் வயதில், கின்குளூன் ஆஃப் டன்டி கப்பலில் கேப்டனாக பதவியேற்று இந்த உலகை முதல் முறையாக வலம்வர ஆரம்பித்தார். பிற்பாடு செட்ரிக், செவிக், ரூனிக் போன்ற உவைட் ஸ்டார் கப்பல்களில் கேப்டனாக பணியாற்றினார்.a நியூ யார்க்கிலிருந்து இங்கிலாந்திலுள்ள லிவர்பூலுக்கு அட்லாண்டிக் வழியாக இந்தக் கப்பல்கள் ஒன்றில் சென்றபோது, சார்ல்ஸ் டேஸ் ரஸலுக்கு கேப்டன் மேஜையில் ராபர்ட் விருந்தளித்தார். ரஸலுடன் உரையாடியது பைபிள் செய்தியில் ராபர்ட்டின் ஆர்வத்தைத் தூண்டியது. அவர் இன்னும் அதிகமாக தெரிந்துகொள்வதற்கு வேதாகமத்தில் படிப்புகள் என்ற ஆங்கில புத்தகங்களை ரஸலிடமிருந்து மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.

ராபர்ட்டுடன் ரஸல் தொடர்ந்து கடிதத் தொடர்புகொண்டார், அதன் விளைவாக, பைபிள் செய்தியில் அவருடைய ஆர்வம் வளர்ந்தது. புதிதாக பெற்ற அறிவை ராபர்ட் தன் மனைவியுடன் பகிர்ந்துகொண்டார். சீக்கிரத்திலேயே இருவரும் சுறுசுறுப்பான பைபிள் மாணாக்கர்களாக ஆனார்கள், முன்னர் யெகோவாவின் சாட்சிகள் இப்படித்தான் அழைக்கப்பட்டார்கள். பைபிள் சொற்பொழிவுகளை ஆற்றும் பாக்கியம் பின்னர் ராபர்ட்டுக்கு கிடைத்தது. உதாரணமாக, ஆஸ்திரேலியாவிலுள்ள பிரிஸ்பேனில், “கீலேயாத் தைலம்” என்ற தலைப்பில் பேசி, எவ்வாறு கடவுளுடைய வார்த்தையில் ‘பூமிக்குரிய துன்பங்கள் அனைத்திற்கும் அருமருந்தாக’ விளங்கும் செய்தி இருக்கிறது என்பதை எடுத்துரைத்தார். அப்பொழுது இங்கிலாந்தில், அவருடைய துணைவியாரும் இளம் பிள்ளைகளும் ‘ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷனை’ காண்பிப்பதில் உதவினார்கள்; ஸ்லைடுகள் காட்டப்பட்ட அதே சமயத்தில் பதிவு செய்யப்பட்ட ரஸலின் பேச்சுக்களும் ஒலிபரப்பப்பட்டன.

ராபர்ட் தான் பெற்ற ராஜ்ய சத்தியம் எனும் ஆஸ்தியை தன் பிள்ளைகளுக்கு கொடுத்தார். இன்று, ஐந்து தலைமுறைகளுக்குப் பிறகு, குடும்ப அங்கத்தினர்களில் 18 பேர் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள்; கேப்டன் மேஜையில் பரிமாறப்பட்ட ஆவிக்குரிய உணவிற்கு நன்றியுடன் இருக்கிறார்கள்.

யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பிரசுரங்கள் மற்றும் பைபிள் கல்வி பணியின் வாயிலாக, கேப்டன் ஸ்மித்தின் ஆர்வத்தை தூண்டிய பைபிள் செய்தியை உலகமுழுவதிலும் உள்ள மக்கள் அறிந்துகொள்வதற்கு உதவிசெய்து வருகிறார்கள். கேப்டன் மேஜையில் அவ்வளவு ஆர்வத்தைத் தூண்டிய அந்தச் செய்தியை நீங்களும் அறிந்துகொள்ளலாம்.

[அடிக்குறிப்பு]

a முதல் பயணத்திலேயே பேரழிவை சந்தித்த துணைக் கப்பலாகிய டைட்டானிக் கப்பலுக்கு ஈ. ஜே. ஸ்மித் (எந்த உறவுமில்லை) கேப்டனாக இருந்தார்.

[பக்கம் 8-ன் படம்]

ராபர்ட் ஜி. ஸ்மித்

[பக்கம் 8-ன் படம்]

சார்ல்ஸ் டி. ரஸல்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்