உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 8/1 பக். 32
  • யாரைக் குறைகூறுவது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யாரைக் குறைகூறுவது?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 8/1 பக். 32

யாரைக் குறைகூறுவது?

கஷ்டப்படும் அநேகர் கடவுளைக் குறைகூறுகின்றனர். ஒரு பைபிள் நீதிமொழி இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஒரு மனிதனின் சொந்த மதியீனமே அவன் வாழ்க்கையை பாழாக்குகிறது, அதன் பின்பு அவன் ஆண்டவருக்கு விரோதமாய் வன்மங்கொள்கிறான்.” (நீதிமொழிகள் 19:3, த நியூ இங்லீஷ் பைபிள்) இருப்பினும், மனித துயரங்களுக்கு கடவுளைப் பொறுப்பாளியாக்குவது, குடிபோதையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளான ஒருவர், காரை உற்பத்தி செய்தவரை குறைகூறுவதற்கு ஒப்பாக உள்ளது.

கடவுள் மனிதவர்க்கத்துக்கு தம் வார்த்தையாகிய பைபிளில் மதிப்புமிக்க வழிநடத்துதலை அளித்திருக்கிறார். நூலகமாய் திகழும் இந்தத் தெய்வீக புத்தகத்தைப் படிப்பதன் மூலமும், அதிலுள்ள சட்டங்களின்படியும் நியமங்களின்படியும் வாழ்வதன் மூலமும் நாம் வாழ்க்கையின் படுகுழிகள் பலவற்றை தவிர்க்கலாம். ஆனால், கடவுளுடைய வழிநடத்துதலுக்கு முரணாக செயல்பட்டால் அவலமான முடிவே நேரும். உதாரணமாக, பெருந்தீனிக்காரர்கள், புகைப்பவர்கள், வெறிக்க குடிப்பவர்கள், அல்லது ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் கொடிய நோய்களால் அவதிப்படுகின்றனர். (லூக்கா 21:34; 1 கொரிந்தியர் 6:18; 2 கொரிந்தியர் 7:1) கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.”—கலாத்தியர் 6:7, 8.

கடவுளுடைய சட்டங்களின்படியும் நியமங்களின்படியும் வாழ்வது என்னே சிறந்தது! நாம் அவ்வாறு வாழ்ந்தோமென்றால், ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் கடவுள் கூறிய வாக்குறுதியின் நிச்சயத்தை அனுபவிப்போம்: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.”—ஏசாயா 48:17, 18.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்