ஒரு விசேஷ நிகழ்ச்சியில் எங்களோடு கலந்து கொள்ளுங்கள் —சனிக்கிழமை, ஏப்ரல் 11, 1998
கடவுள் தமது குமாரன் இயேசு கிறிஸ்துவை நமக்கு பரிசாக அளித்திருப்பதை நினைவுகூருவதற்காக யெகோவாவின் சாட்சிகள் உங்களை அன்புடன் அழைக்கின்றனர். இந்தப் பரிசு மனிதவர்க்கத்துக்கு நித்திய ஜீவனை அனுபவிக்கும் வாய்ப்பை திறந்து வைத்தது.—யோவான் 3:16.
இயேசுவின் மரண நினைவு ஆசரிப்பு இந்த வருடம் சனிக்கிழமை ஏப்ரல் 11 அன்று சூரிய மறைவுக்கு பின் அனுசரிக்கப்படும். அந்தத் தேதி பைபிளின் சந்திர நாட்காட்டியில் நிசான் 14-ம் தேதிக்கு ஒத்திருக்கிறது.
கூடுமிடத்தையும் சரியான நேரத்தையும் தெரிந்துகொள்ள தயவுசெய்து உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்பு கொள்ளுங்கள்.