உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீப காவற்கோபுர இதழ்களை நீங்கள் விரும்பி வாசித்தீர்களா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடிகிறதா என பாருங்கள்:
◻ ஓர் கிறிஸ்தவ இளைஞன் கல்வி கற்பதன் முக்கிய நோக்கம் என்ன?
யெகோவாவின் திறம்பட்ட ஊழியனாக இருக்கும்படி ஓர் இளைஞனைத் தகுதிபெற செய்வதே கல்வியின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கு, ஆவிக்குரிய கல்வியே எல்லாவற்றைப் பார்க்கிலும் மிக முக்கியமான கல்வி.—8/15, பக்கம் 21.
◻ உடன் கிறிஸ்தவரின் பெருந்தவறை மூப்பர்களிடம் தெரியப்படுத்துவதற்கான காரணங்கள் யாவை?
தவறை தெரியப்படுத்துவதற்கான ஒரு காரணம், அது சபையின் சுத்தத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மற்றொரு காரணம் என்னவென்றால், தவறைப் பற்றி தெரியப்படுத்துவது, கடவுளிடமும் சபையிடமும் தவறிழைத்தவரிடமும் காண்பிக்கப்படும் கிறிஸ்தவ நியமத்தின் அடிப்படையிலான அன்பின் செயலாகும்.—8/15, பக்கங்கள் 28, 30.
◻ ‘யெகோவாவின் நாளை மனதில் இடைவிடாது’ வைத்திருப்பது என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
(2 பேதுரு 3:12) ‘யெகோவாவின் நாளை’ நம் மனதிலிருந்து விலக்காமல் வைத்திருப்பதை அர்த்தப்படுத்துகிறது. யெகோவா இந்தக் காரிய ஒழுங்குமுறையை அழிக்கப்போகும் அந்த நாள் வெகு சமீபத்தில் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அது நம் கண் முன்னே இருப்பதுபோல, நாம் அதைத் தெளிவாகக் காணுமளவிற்கு அது நமக்கு அதிக மெய்ம்மையானதாய் இருக்க வேண்டும். (செப்பனியா 1:7, 14)—9/1, பக்கம் 19.
◻ அநேகர் எதிர்பார்த்ததைவிட இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் கடைசி நாட்கள் ஏன் தொடர்ந்திருக்கின்றன?
மனிதவர்க்கம் முழுவதற்கும் மிகச் சிறந்த நலனுக்கேதுவானவற்றையே யெகோவா கருதுகிறார். ஜனங்களின் உயிர்களில் அக்கறையுடையவராக இருக்கிறார். (எசேக்கியேல் 33:11) பரிபூரண ஞானமும் அன்புமுள்ள நம்முடைய சிருஷ்டிகரின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, முடிவு சரியான நேரத்தில் வருமென்று நாம் திடநம்பிக்கையுடன் இருக்கலாம்.—9/1, பக்கம் 22.
◻ முழுநேர சேவை செய்பவர்கள், பிரச்சினைகளை எதிர்ப்படுகிறபோதிலும் எவ்வாறு தங்களுடைய சந்தோஷத்தைக் காத்துக்கொள்ளலாம்?
தங்களுக்கிருக்கும் அநேக ஆசீர்வாதங்களைப் பற்றியும், இதைவிட அதிகமான கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் மற்ற ஆயிரக்கணக்கானோரைப் பற்றியும் அவர்கள் யோசித்துப்பார்க்க வேண்டும். (1 பேதுரு 5:6-9)—9/15, பக்கம் 24.
◻ பைபிளை மொழிபெயர்ப்பதில் வில்லியம் டின்டேலின் குறிக்கோள் என்ன?
வேதாகமத்தை முடிந்தளவு திருத்தமாகவும் எளிமையான மொழியிலும் பொதுமக்களுக்கு கிடைக்கும்படி செய்வதே டின்டேலின் குறிக்கோளாக இருந்தது.—9/15, பக்கம் 27.
◻ கடவுளுடைய வார்த்தையை உண்மைப் பற்றுறுதியுடன் பிரசங்கிப்போர் என்பதை நாம் எவ்வாறு காண்பிக்கலாம்?
கடவுளுடைய வசனத்தை ஆர்வத்துடன் மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதன்மூலம் காண்பிக்கிறோம். போதகர்களாக, நாம் பைபிளைக் கவனமாய்ப் பயன்படுத்த வேண்டும்; அது சொல்வதை, நம்முடைய சொந்த எண்ணங்களுக்குப் பொருந்துமாறு ஒருபோதும் புரட்டவோ விரிவாக்கவோ கூடாது. (2 தீமோத்தேயு 2:15)—10/1, பக்கம் 20.
◻ இவ்வுலகின் விஷமுள்ள ஆவி எவ்வாறு நம்முடைய உத்தமத்தன்மையை பலவீனப்படுத்த முடியும்?
நமக்கு இருப்பதில் அதிருப்தியுள்ளவர்களாகவும், கடவுளுக்கு மேலாக நம்முடைய சொந்த தேவைகளையும் அக்கறைகளையும் வைப்பதற்கு அது நம்மை ஆவலுள்ளவர்களாகவும் செய்வதன் மூலம் இவ்வுலகின் ஆவி நம் உத்தமத்தன்மையை பலவீனப்படுத்திட முடியும். (மத்தேயு 16:21-23-ஐ ஒப்பிடுக.)—10/1, பக்கம் 29.
◻ யெகோவாவை முழு ஆத்துமாவுடன் சேவிப்பது என்றால் என்ன?
“ஆத்துமா” என்பது, உடல் மற்றும் மன சம்பந்தமான எல்லா திறமைகளும் கொண்ட முழு ஆளை குறிக்கிறது. முழு ஆத்துமாவோடு சேவிப்பது நம்மையே அளிப்பதை, நம்முடைய எல்லா திறமைகளையும், ஆற்றல்களையும் கடவுளுடைய சேவையில் முடிந்தளவு முழுமையாக பயன்படுத்துவதைக் குறிக்கிறது. (மாற்கு 12:29, 30)—10/15, பக்கம் 13.
◻ கடவுளுடைய நியமத்தின்படி வாழும் நபராக இருப்பதற்கான திறவுகோல் யாது?
யெகோவாவையும் அவருடைய விருப்புவெறுப்புகளையும் அவருடைய நோக்கங்களையும் உண்மையில் அறிவதே அந்தத் திறவுகோல். கடவுளைப் பற்றிய இப்படிப்பட்ட நியமங்கள் நம்முடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும்போது, அவை உயிருள்ள நியமங்களாக ஆகின்றன. (எரேமியா 22:16; எபிரெயர் 4:12)—10/15, பக்கம் 29.
◻ மனித ஆட்சியினிடம் யெகோவாவின் ஊழியர்கள் வைத்துவரும் சமநிலையான அணுகுமுறை என்ன?
கடவுளுடைய ராஜ்யத்தின் ஸ்தானாபதிகளாக அல்லது தூதுவர்களாக சேவிப்பதால், அரசியல் விவகாரங்களில் நடுநிலை வகிக்கிறார்கள். (2 கொரிந்தியர் 5:20) மற்றபடி, அதிகாரத்தில் இருப்போருக்கு நல்மனச்சாட்சியுடன் கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.—11/1, பக்கம் 17.
◻ தீர்க்கதரிசியாகிய எலிசா எடுத்தப் போக்கிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
எலியாவோடு விசேஷமான சேவைக்காக எலிசா அழைக்கப்பட்டபோது, தான் செய்யப்போகும் சில வேலைகள் வீட்டு வேலையாட்கள் செய்யும் வேலைகளாக இருந்தபோதிலும், இஸ்ரவேலின் முதன்மையான தீர்க்கதரிசிக்கு ஊழியஞ்செய்வதற்கு தன்னுடைய வயலைவிட்டு உடனடியாக புறப்பட்டார். (2 இராஜாக்கள் 3:11) கடவுளுடைய ஊழியர்களில் சிலர், தொலைவிலுள்ள பிராந்தியங்களில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக தங்களுடைய பிழைப்புகளை விட்டு வருவதன் மூலம் இன்று அதேப்போன்ற சுயதியாக மனப்பான்மையை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.—11/1, பக்கம் 31.
◻ யாக்கோபு நிருபத்தில் என்ன பயனுள்ள அறிவுரை அடங்கியுள்ளது?
துன்பங்களை எதிர்ப்படுவது எவ்வாறு என்பதை அது நமக்குக் காட்டுகிறது, பட்சபாதம் காட்டுவதற்கு எதிராக நமக்கு அறிவுரை அளிக்கிறது, மேலும் நேர்மையான செயல்களில் ஈடுபட்டிருக்கும்படி நம்மை ஊக்குவிக்கிறது. நாவை அடக்கும்படியும், உலக செல்வாக்கை எதிர்த்துத் தடுக்கும்படியும், சமாதானத்தை முன்னேற்றுவிக்கும்படியும் யாக்கோபு நம்மை ஊக்குவிக்கிறார். அவருடைய வார்த்தைகள் நம்மை பொறுமையும் ஜெபசிந்தையும் உள்ளவர்களாகும்படியும் உதவிசெய்கின்றன.—11/15, பக்கம் 24.
◻ ஏன் யெகோவா ‘மன்னிப்பதற்கு ஆயத்தமாய் இருக்கிறார்?’
(சங்கீதம் 86:5) யெகோவா உடனே மன்னிக்கிறார், ஏனெனில் நாம் அபூரணத்தின் விளைவாக, குறைபாடுகளை, அல்லது பலவீனங்களையுடைய தூசியான சிருஷ்டிகளாய் இருப்பதை யெகோவா மறந்துவிடுகிறதில்லை. (சங்கீதம் 103:12-14, தி.மொ.)—12/1, பக்கங்கள் 10, 11.
◻ மற்றவர்களை மன்னிப்பதற்கு நாம் ஏன் மனவிருப்பமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
இரக்கம் காட்ட காரணமிருக்கையில் மற்றவர்களை மன்னிக்க நாம் மறுத்தால், கடவுளிடமாக இருக்கும் நம் சொந்த உறவைத்தானே அது எதிர்மாறாக பாதிக்கலாம். (மத்தேயு 6:14, 15)—12/1, பக்கம் 17.