லட்சக்கணக்கானோர் போகின்றனர்—நீங்களும் போகிறீர்களா?
எங்கே போகின்றனர்? இயேசு கிறிஸ்துவினுடைய மரணத்தின் வருடாந்தர நினைவு ஆசரிப்புக்கே. 1996- ல் உலகம் முழுவதிலும் மொத்தம் 1,29,21,933 பேர் ஆஜராயிருந்தனர்.
ஜனங்கள் ஏன் போகின்றனர்? இயேசுவின் மரணம் மனிதவர்க்கத்துக்கு எதை அர்த்தப்படுத்துகிறதோ அந்தக் காரணத்துக்காகவே. அது வியாதி, துன்பம் மற்றும் மரணத்திலிருந்து விடுதலையை அர்த்தப்படுத்தும். மரித்துப்போன அன்பானவர்களும்கூட பரதீஸ் நிலைநாட்டப்படும் ஒரு பூமியில் வாழ்வதற்காக உயிர்த்தெழுப்பப்படுவர்.
இயேசு கிறிஸ்துவின் மரணம் எவ்விதமாக இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களைக் கொண்டுவர முடியும்? அதைக் கண்டுப்பிடிப்பதற்காகவே நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். இந்த முக்கியமான நிகழ்ச்சியின்போது அவர்களோடு கூடிவரும்படியாக யெகோவாவின் சாட்சிகள் உங்களை அன்புடன் வரவேற்கிறார்கள்.
உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் ராஜ்ய மன்றத்தில் ஆஜராயிருங்கள். இந்த வருடம் அது ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 23 அன்று சூரிய மறைவுக்குப்பின்பு இருக்கும். சரியான நேரத்தை உள்ளூர் சாட்சிகளிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.