உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w97 1/15 பக். 3-4
  • உண்மையான சமாதான தூதுவர்கள் யார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உண்மையான சமாதான தூதுவர்கள் யார்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உண்மையான சமாதானம் அருகிலுள்ளது!
  • கடவுளுடைய சமாதான தூதுவர்கள்
  • உண்மையான சமாதானம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • தேவ சமாதான தூதுவர்களாக சேவித்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • யார் மனிதவர்க்கத்தைச் சமாதானத்துக்கு வழிநடத்துவார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • 1996 “தேவ சமாதான தூதுவர்கள்” மாநாடு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
w97 1/15 பக். 3-4

உண்மையான சமாதான தூதுவர்கள் யார்?

சமாதான செய்தியாகத் தோன்றின ஒன்றை, மே 31, 1996-ல், செய்தி மூலங்கள் அறிவித்தன. அதற்கு முந்தின நாளில், அதிகாரப்பூர்வமான செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அது, இஸ்ரேலின் தலைமை பிரதமராகப்போகிறவராய் இருந்த பென்யாமின் நெட்டான்யாஹூ, “இஸ்ரவேல் நாட்டுக்கும், பலஸ்தீனா உட்பட, அதன் சுற்றுப்புறத்திலுள்ள எல்லா நாடுகளுக்குமிடையே சமாதானமும் பாதுகாப்பும் தொடர்ந்திருப்பதன் சம்பந்தமாக சமாதான ஒப்பந்த பேச்சுகளில் மும்முரமாய் ஆழ்ந்திருந்தார்” என்று உறுதிசெய்தது.

மிகுதியாய்ப் பிரசித்தி செய்யப்பட்ட நெட்டான்யாஹூவின் தேர்தல், மத்திய கிழக்கில் மெய்யாகவே சமாதானம் உண்டாகிவிடுமோ என்று பலர் சிந்திக்கும்படி செய்தது. அப்படியானால், மற்ற தேசங்கள் தங்கள் சச்சரவுகளை மறந்து இஸ்ரவேலின் மாதிரியைப் பின்பற்றுவார்களா?

நிச்சயமாகவே, சமாதானத்தைக் கொண்டுவருவதைப் பார்க்கிலும், அதை வாக்குக்கொடுப்பது எளிதாயுள்ளது. இதை உணர்ந்து, பலர் சந்தேகமுள்ளோராக இருந்தனர். பத்திரிகை எழுத்தாளர் ஹெம்மி ஷாலெவ் குறிப்பிட்டபடி, “இஸ்ரவேலில் உள்ள பொதுமக்களில் பாதிப்பேர், நிலைமை மீண்டும் நலம்பெறுவது சமீபித்துள்ளது என்ற உணர்ச்சியுடன் இப்போது இருக்கின்றனர். மற்ற பாதிப்பேர், பூமியில் ஒரு நரக நிலைமையில் அது சிக்கிக்கொண்டிருப்பதாக நம்புகின்றனர்.” சுருக்கமாக, அவர் சொன்னார்: “சிலர் களிகூருகின்றனர், மற்றவர்கள் அழுகின்றனர்.”

மனிதன் சமாதானத்தைக் கொண்டுவர எடுக்கும் முயற்சிகளைக் குறித்ததில் இவ்வாறே உள்ளது. ஒரு தலைவனின் மற்றும் அவனுடைய ஆதரவாளரின் வெற்றி, எதிர் தொகுதியினருக்குத் தோல்வியைக் குறிக்கிறது. திருப்தியில்லாமை ஏமாற்றத்துக்கும், ஏமாற்றம் பெரும்பாலும் கலகத்துக்கும் வழிநடத்துகிறது. மத்திய கிழக்கோ, லத்தீன் அமெரிக்காவோ, கிழக்கு ஐரோப்பாவோ, அல்லது வேறு எங்கோ ஆயினும்—சமாதானத்தைக் கொண்டுவர மனிதன் எடுக்கும் முயற்சிகள் பெரும் ஏமாற்றமாயுள்ளன.

உண்மையான சமாதானம் அருகிலுள்ளது!

மத்திய கிழக்கில் சமாதானம் மும்முர செய்தி பொருளாக இருந்தபோது, மற்றொரு சமாதானச் செய்தி செவியில் கேட்கப்பட்டது. இது மிகுதியாகப் பிரசித்தி செய்யப்பட்ட அரசியல் பேச்சு அல்ல; தேசங்களுக்கிடையே ஒரு சமாதான ஒப்பந்தமும் அல்ல. மாறாக, கடவுளுடைய ராஜ்யத்தின்மூலமாகவே வரவிருக்கும் ஒரு சமாதானத்தை இந்தச் செய்தி அறிவித்தது. இந்தச் செய்தி எங்கே கேட்கப்பட்டது? 1996/97-ன்போது உலகமுழுவதிலும், யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்பட்ட, ஏறக்குறைய 1,900-க்கும் மேலான “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாடுகளில் கேட்கப்பட்டது.

மனித அரசாங்கம் எதுவும், உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவர முடியாது என்று இந்த மாநாடுகளின்போது தெளிவாகக் காட்டப்பட்டது. ஏன்? ஏனெனில், தினந்தோறும் நம் சமாதானத்தைக் கொள்ளையிடும் காரியங்களுக்கு முடிவைக் கொண்டுவருவதை இது அவசியப்படுத்தும். உண்மையான சமாதானம் என்பது, போர் அல்லது வன்முறையின் பயமுறுத்தல் இல்லாமல் ஒவ்வொரு காலையிலும் விழித்தெழும்புவதைக் குறிக்கிறது. குற்றச்செயல்கள் இனிமேலும் இராததை, நம்முடைய கதவுகளில் பூட்டுகள் இனிமேலும் இராததை, வீதிகளில் நடப்பதற்கு பயம் இனிமேலும் இராததை, குடும்பங்கள் பிரிக்கப்படுவது இனிமேலும் இராததை இது அர்த்தப்படுத்துகிறது. பூமியில் எந்த அரசாங்கம் இந்த எல்லாவற்றையும் நிறைவேற்ற முடியும்? உண்மையில், பூமியிலுள்ள எந்த அரசாங்கம் இதை வாக்குக்கொடுக்கவுங்கூட தைரியங்கொள்ளும்?

எனினும், கடவுளுடைய ராஜ்யம், இந்தக் காரியங்களைக் கொண்டுவர முடியும், கொண்டுவரவும் செய்யும். பைபிள் இவ்வாறு வாக்குக்கொடுக்கிறது: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.” (வெளிப்படுத்துதல் 21:3, 4) துன்பப்படும் மனிதவர்க்கத்திற்கு எப்பேர்ப்பட்ட ஆறுதலை அது கொண்டுவரும்!

யெகோவா தேவனுடைய வாக்கு ஒரு வெற்று வாக்கல்ல. பைபிள் நமக்கு இவ்வாறு உறுதிகூறுகிறது: “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?” (எண்ணாகமம் 23:19) ஆம், கடவுள் வாக்குக்கொடுத்திருப்பது—அவருடைய சார்பில் தங்கள் நிலைநிற்கையை ஏற்கும் எல்லாருக்கும் ஆசீர்வாதமுண்டாக—நிறைவேற்றமடையும்.

கடவுளுடைய சமாதான தூதுவர்கள்

யெகோவாவின் சாட்சிகள், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி ஆர்வத்தோடு பிரசங்கிக்கிறவர்களென நன்றாய் அறியப்பட்டிருக்கிறார்கள். பைபிளின் ஊக்கமூட்டும் செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஒவ்வொரு வருடமும், அவர்கள் மொத்தம் 100 கோடிக்கு மேற்பட்ட மணிநேரங்களைச் செலவிடுகின்றனர். இது இயேசுவினுடைய இவ்வார்த்தைகளின் நிறைவேற்றமாக உள்ளது: “ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” (மத்தேயு 24:14, NW) இந்தச் சாட்சிகள் கொண்டுவருகிற செய்தி, மெய்யாகவே “நற்செய்தி,” ஏனெனில் அது, கடவுளுடைய பரலோக ராஜ்யத்தை மனிதவர்க்கத்திற்கான ஒரே நம்பிக்கையாக யாவரறிய அறிவிக்கிறது. எதிர்காலத்திற்கான எப்பேர்ப்பட்ட உறுதியான நம்பிக்கையாக அது இருக்கிறது!

இப்போதேயுங்கூட கடவுளுடைய ராஜ்யம் அதன் பிரஜைகளில் உண்மையான சமாதான பிணைப்பையும் சகோதர அன்பையும் உண்டாக்குகிறது. இயேசு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) உண்மையான கிறிஸ்தவத்தின் இந்த அடிப்படையான விதியின்படி வாழ்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் பெரும் முயற்சி செய்கிறார்கள். இதன் பலனாக, அவர்களுடைய சகோதரத்துவம், யூதர்களையும் அரபியர்களையும், க்ரோயேஷீயர்களையும் செர்பியர்களையும், ஹூட்டுவையும் டூட்ஸியையும் ஒற்றுமைப்படுத்தும் ஆச்சரியமான சகோதரத்துவமாக உள்ளது. மனிதவர்க்கத்தின் பெரும்பான்மையர் சொப்பனம் மாத்திரமே காணக்கூடிய இந்தச் சமாதானம், உலகமெங்குமுள்ள லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளுடைய உடைமையாக இப்போதுள்ளது.

பைபிள் நியமங்களின் பிரகாரம் தொடர்ந்து வாழ்ந்துவரும்படியும், கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைத் தொடர்ந்து பிரசங்கித்து வரும்படியுமான ஊக்கமூட்டுதல், “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாட்டு நிகழ்ச்சிநிரலில் முக்கியப்படுத்தப்பட்டது. லட்சக்கணக்கானோர் அனுபவித்து மகிழ்ந்திருக்கிற, ஆர்வ ஊக்கமூட்டின அந்த மூன்றுநாள் மாநாட்டின் பின்வரும் அறிக்கையை வாசிக்கும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்