உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீப காவற்கோபுர இதழ்களை வாசித்து மகிழ்ந்தீர்களா? அப்படியென்றால், பின்வருவனவற்றை ஞாபகத்திற்குக் கொண்டுவருது உங்களுக்கு ஆர்வமூட்டுவதாய் இருக்கும்.
◻ மத்தேயு 24:3, 27, 37, 39-ல் பயன்படுத்தப்பட்ட பரோசீயா என்ற கிரேக்க வார்த்தையின் அர்த்தம் என்ன?
வைன் என்பவரின் புதிய ஏற்பாடு சொற்களின் விளக்கவிவர அகராதி (ஆங்கிலம்) இவ்வாறு சொல்கிறது: “பரோசீயா . . . ஒரு வந்துசேருதலையும் அதன் விளைவாக அங்கிருப்பதையும் குறிக்கிறது.” இவ்வாறாக, அது வந்துசேரும் அந்த விநாடி மாத்திரம் அல்ல, ஆனால் வந்துசேர்ந்த பின்பு, நீடித்து இருப்பதை குறிக்கிறது.—8/15, பக்கம் 11.
◻ முதல் நூற்றாண்டில், எவ்வாறு ‘நாட்கள் குறுக்கப்பட்டு’ “மாம்சம்” காக்கப்பட்டன, மற்றும் எப்படி ஒரு பெரிய அளவில் அது நடந்தேறும்?
(மத்தேயு 24:22, தி.மொ.) பொ.ச. 66-ல் எருசேலம் முற்றுகையை ரோமர்கள் எதிர்பாராமல் குறுக்கினார்கள், ‘மாம்சமாகிய’ கிறிஸ்தவர்கள் தப்பிக்க முடிந்தது. அதேபோல், மகா பாபிலோன் மீது வரவிருக்கும் தாக்குதல் எப்படியோ குறைக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இவ்வாறாக, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும், அவர்களது கூட்டாளிகளும் நேரவிருக்கும் அழிவிலிருந்து காக்கப்படுவார்கள்.”—8/15, பக்கங்கள் 18-20.
◻ ஒரு நபர் நினைவு ஆசரிப்பு சின்னங்களில் பங்கெடுக்க ஆரம்பிக்கும்போதோ அல்லது பங்கெடுப்பதை நிறுத்திவிடும்போதோ நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
அதைக்குறித்து மற்ற கிறிஸ்தவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இயேசு சொன்னார்: “நானே நல்ல மேய்ப்பன், என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்.” அதைப் போன்ற உறுதியோடு, ஆவிக்குரிய குமாரர்களாக தாம் தேர்ந்தெடுத்திருக்கும் நபர்களை யெகோவா அறிந்திருக்கிறார். (யோவான் 10:14; ரோமர் 8:16, 17)—8/15, பக்கம் 31.
◻ மோசேயின் நியாயப்பிரமாணத்தினுடைய முக்கிய நோக்கம் என்ன?
முதலாவதாக, இஸ்ரவேலரை அவர்களுடைய பாவ நிலையிலிருந்து மீட்கப்போகிறவராகிய மேசியாவுக்கான அவர்களுடைய தேவையை அவர்களுக்கு அது போதித்தது. (கலாத்தியர் 3:24) தேவ பயத்தையும் கீழ்ப்படிதலையுங்கூட நியாயப்பிரமாணம் போதித்தது மற்றும் சுற்றிலுமிருந்த தேசங்களின் ஒழுக்கங்கெட்ட பழக்கச் செயல்களிலிருந்து தங்களைப் பிரித்துவைத்துக்கொள்ள இஸ்ரவேலருக்கு அது உதவியது. (லேவியராகமம் 18:24, 25)—9/1, பக்கம் 9.
◻ புதிய உடன்படிக்கையின் நோக்கம் என்ன? (எரேமியா 31:31-34)
மனிதவர்க்கம் முழுவதையும் ஆசீர்வதிப்பதற்கு, அரசர்களும் ஆசாரியர்களுமான ஒரு ஜனத்தைப் பிறப்பிப்பதாகும். (யாத்திராகமம் 19:6; 1 பேதுரு 2:9; வெளிப்படுத்துதல் 5:10)—9/1, பக்கங்கள் 14, 15.
◻ வருத்தந்தெரிவிக்கும் கலையை நாம் ஏன் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்?
ஒரு வருத்தந்தெரிவிப்பு, அபூரணத்தால் உண்டாக்கிய மனவேதனையைக் குறைப்பதற்கு உதவிசெய்யலாம், மேலும் உள்ளம்முறிந்த உறவுகளைக் காயமாற்றி சரிசெய்யலாம். நாம் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வருத்தந்தெரிவிப்பும், மனத்தாழ்மையில் ஒரு பாடமாக இருந்து, மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மேலுமதிக உணர்வுள்ளோராகும்படி நம்மைப் பயிற்றுவிக்கிறது.—9/15, பக்கம் 24.
◻ நோவாவின் நாளில் ஏற்பட்ட உலகளாவிய ஜலப்பிரளயம் ஒரு சரித்திரப்பூர்வமான உண்மையா?
ஆம். உலகளாவிய ஜலப்பிரளயத்தைப் பற்றிக் கூறும் பண்டையகால பதிவுகள் அமெரிக்காக்கள் முதல் ஆஸ்திரேலியா வரை என உலகமுழுவதிலும் காணப்படுகின்றன. இந்தச் சம்பவத்தைப் பற்றிய விஷயங்கள் பரவலாக இருப்பது, பைபிளில் விவரித்திருக்கிறபடி ஒரு உலகளாவிய ஜலப்பிரளயம் ஏற்பட்டது என்ற உண்மைக்கு கூடுதலான ஆதரவை அளிக்கிறது. (ஆதியாகமம் 7:11-20)—9/15, பக்கம் 25.
◻ உபசரிக்கும் பண்பை காண்பிப்பதில் என்ன அடங்கியுள்ளது?
(ரோமர் 12:13) “அன்பு” மற்றும் “அந்நியர்” என்ற அர்த்தத்தை உடைய இரண்டு மூலச்சொற்களால் ஆன கிரேக்க சொல்லிலிருந்து “உபசரிப்பு” என்ற சொல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எனவே, உபசரிக்கும் பண்பு என்பது “அந்நியர் பேரில் அன்பு” என்று முக்கியமாக பொருள்படுகிறது. ஆனால் அது கடமையுணர்வின் காரணமாக, நியமங்களின் அடிப்படையில் காட்டப்படும் அன்புக்கும் அப்பால் செல்கிறது. அது மெய்யான பிரியம், பாசம் மற்றும் சிநேகவுணர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது.—10/1, பக்கம் 9.
◻ கொரிந்தியருக்கு எழுதிய முதல் கடிதத்தில், 7-ம் அதிகாரத்தில் திருமணத்தைக் குறித்தும் மணமாகாத நிலையைக் குறித்தும் பவுலின் விவாதம் என்ன?
திருமணம் நேர்மையானதாகவும், சில சந்தர்ப்பங்களில், சிலருக்கு அது உசிதமானதாகவும் இருக்கையில், கவனச்சிதறதல் பெரும்பாலும் இல்லாமல் யெகோவாவைச் சேவிக்க விரும்புகிற கிறிஸ்தவ ஆணுக்கு அல்லது பெண்ணுக்கு, மணமாகாத நிலை மறுக்கமுடையாதவண்ணம் அனுகூலமானது.—10/15, பக்கம் 13.
◻ எவ்வாறு ஒரு மூப்பர் ‘தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடுத்துவார்’?
(1 தீமோத்தேயு 5:8) ஒரு மூப்பர் ‘தன் சொந்தக் குடும்பத்தை’—தன் மனைவிகளையும் பிள்ளைகளையும்—பொருள் சம்பந்தமாகவும், ஆவிக்குரியப்பிரகாரமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் ‘பராமரிக்க’ வேண்டும்.—10/15, பக்கம் 22.
◻ யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு எவ்வாறு ஆறுதலை அளிக்கிறார்?
கடவுளின் பரிசுத்த ஆவி ‘தேற்றரவாளனாக’ செயல்படுகிறது. (யோவான் 14:16) கடவுள் ஆறுதலளிக்கும் மற்றொரு விதம் அவருடைய வார்த்தையாகிய பைபிளின் மூலமாகும். (ரோமர் 15:4) கடவுள் நம்முடைய தனிப்பட்ட தேவைகளை அறிந்திருக்கிறார்; கொரிந்தியர்களைப் பற்றி தீத்து கொடுத்த அறிக்கையின் மூலம் பவுல் ஆறுதலடைந்தது போலவே, ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருக்கும்படி அவர் நம்மை பயன்படுத்த முடியும். (2 கொரிந்தியர் 7:11-13)—11/1, பக்கம் 10, 12.
◻ 2 கொரிந்தியர் 1:3-ல் (NW) யெகோவாவை “கனிவான இரக்கங்களின் பிதா” என்று பவுல் விவரிக்கையில், அவர் எதை அர்த்தப்படுத்தினார்?
‘கனிவான இரக்கங்கள்’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க பெயர்ச்சொல் மற்றொருவர் துன்பம் அனுபவிக்கையில் வருத்தம் தெரிவிப்பதற்கு பயன்படுத்துகிற ஒரு வார்த்தையிலிருந்து வருகிறது. இவ்விதமாக, உபத்திரவத்தை அனுபவிக்கிற அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் எவருக்கும் காண்பிக்கப்படுகிற கடவுளுடைய கனிவான உணர்ச்சிகளை பவுல் விவரிக்கிறார்.—11/1, பக்கம் 13.
◻ வருடந்தார பாவநிவாரண நாளில் இஸ்ரவேலரின் உபவாசம் எதைச் சாதித்தது?
(லேவியராகமம் 16:29-31; 23:27) இஸ்ரவேல மக்கள் தங்கள் பாவ நிலையையும் மீட்புக்கான தேவையையும் குறித்து மிகவும் அதிகமாக உணர்வுள்ளவர்களாவதற்கு உபவாசத்தைக் கடைப்பிடிப்பது அவர்களை உந்துவித்தது. அதை செய்வதன்மூலம் அவர்கள் தங்கள் பாவங்களுக்காக வருத்தத்தையும் கடவுளுக்கு முன்பாக மனந்திரும்புதலையும் வெளிப்படுத்திக் காண்பித்தார்கள்.—11/15, பக்கம் 5.
◻ “உன் சிருஷ்டிகரை நினை,” என்று இளைஞருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை மறைமுகமாக அர்த்தப்படுத்துவது என்ன? (பிரசங்கி 12:1)
“நினை” என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய வார்த்தை, பெரும்பாலும் ‘மனதினுடைய பாசத்தை(விருப்பத்தை)யும் (affection) நினைவுபடுத்துதலோடு சேர்ந்துவருகிற செயலையும்’ மறைமுகமாக அர்த்தப்படுத்துகிறது என்பதாக ஒர் ஆதாரம் தெரிவிக்கிறது. ஆகவே, இந்தக் கட்டளைக்கு செவிசாய்ப்பது என்பது வெறுமனே யெகோவாவைப் பற்றி சிந்திப்பதைவிட அதிகத்தைக் குறிக்கிறது. அது செயலை, அவரைப் பிரியப்படுத்தும் காரியங்களைச் செய்வதை உட்படுத்துகிறது.—12/1, பக்கம் 16.