உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 12/1 பக். 32
  • சுவிசேஷகர்களாக ஆவது யார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சுவிசேஷகர்களாக ஆவது யார்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 12/1 பக். 32

சுவிசேஷகர்களாக ஆவது யார்?

சுமார் 40 வருடங்களுக்கு முன் நடைபெற்ற, தி உவர்ல்டு கவுன்சில் ஆஃப் சர்ச்சுகளின் கூட்டம் ஒன்றில், “சுவிசேஷத்தைப் பரப்பவேண்டும் என்ற வைராக்கியத்தில் வீறுகொண்டு எழுந்து,” தங்களுடைய மந்தைகளுக்கு “எங்கும் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க” கற்றுக்கொடுக்கும்படி அங்கத்தினர்கள் தூண்டப்பட்டார்கள். ஐந்து வருடங்களுக்குப்பின், புதிய சீஷர்களை வெறுமனே “நம் வீடுகளில் உட்கார்ந்தபடி” அல்ல, ஆனால் “அவர்களிடம் சென்று” அழைத்துவரவேண்டிய தேவையைப் பற்றி கத்தோலிக்க பாதிரியார் ஜான் ஏ. ஓபிரைன் எழுதினார். ஜனவரி 1994 அன்று இரண்டாம் போப் ஜான் பால் இவ்வாறு கூறினார் “சுவிசேஷத்தைப் பற்றி வெட்கப்பட இதுவல்ல காலம், அதை வெளிப்படையாகப் பிரசங்கிப்பதற்கு இதுவே காலம்.”

தெரிந்தவிதமாகவே, சுவிசேஷகர்களுக்காக இடையிடையே கொடுக்கப்படும் இத்தகைய அழைப்புகள் செவிடர் காதில் ஊதப்பட்ட சங்குபோல் ஆயிற்று. இலவாரா மெர்குரி என்னும் ஆஸ்திரேலிய செய்தித்தாளின் கட்டுரை ஒன்று இவ்வாறு குறிப்பிட்டது: “தென் கரையைச் சேர்ந்த கத்தோலிக்கர்களில் முதன்மையானவர்கள், யெகோவாவின் சாட்சிகளைப்போன்ற அணுகுமுறையைத் தங்கள் விசுவாசத்தில் பின்பற்ற ஆர்வம் உள்ளவர்களாக இல்லை.” தெளிவாகவே, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது “கத்தோலிக்க மனப்பாங்கின் பாகம் அல்ல” என்பதாக ஒரு நபர் கூறினார். மற்றொருவர் இவ்வாறு நியாயம்காட்டினார்: “சர்ச்சுதானே பிரசங்கிப்பது நல்லது, ஆனால் கதவுகளைத் தட்டுவதன் மூலம் அல்ல. ஒருவேளை பள்ளிக்கூடங்களின் வாயிலாகவும் அல்லது தபாலின் வாயிலாகவும் செய்வது சிறந்ததாக இருக்கும்.” உள்ளூர் சர்ச்சின் முதல்வரும்கூட போப்பின் கூற்றுகளை எவ்வாறு விளக்குவது என்பதில் நிச்சயமற்றவராக இருந்தார். “மக்கள் தாங்கள் அறிந்திருக்கும் சுவிசேஷத்தைத் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் பொருத்தும்படி நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். அது கதவுகளைத் தட்டுவதை உட்படுத்துமா உட்படுத்தாதா என எதையும் கூற விரும்பவில்லை” என்று அவர் கூறினார். அந்தச் செய்தித்தாளின் கட்டுரை இவ்வாறு சுருக்கமாக கூறியது: “பிரசங்கிக்க வேண்டும் என்ற போப்பின் அழைப்பை கத்தோலிக்கர்கள் கேட்பதில்லை.”

சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க கிறிஸ்தவமண்டலம் தவறியபோதிலும், ‘நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்’ என்று இயேசு கொடுத்த கட்டளையை 50 லட்சத்திற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகிறார்கள். (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 5:42-ஐ ஒப்பிடுக.) அவர்களது வீட்டுக்கு வீடு ஊழியம் 230 தேசங்களுக்கும் அதிகமான இடங்களில் இப்பொழுது செய்யப்படுகிறது. அவர்கள் கொண்டுவரும் செய்தி நம்பிக்கையளிக்கும் ஒன்றாகவும், எதிர்காலத்திற்கான பைபிளின் அற்புதமான வாக்குறுதிகளை உயர்த்திக்காட்டும் ஒன்றாகவும் இருக்கிறது. அவர்கள் அடுத்தமுறை வரும்போது, நீங்கள் ஏன் அவர்களிடம் பேசக்கூடாது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்