உங்களுக்கு மனமார்ந்த வரவேற்பு
1,900-க்கும் மேற்பட்ட வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த இயேசு கிறிஸ்து என்ற மனிதனின் மரணம், மனித சரித்திரத்திலேயே மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். அது பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை அடையும் எதிர்பார்ப்பை திறந்து வைத்தது. ஓர் எளிய நிகழ்ச்சியில், புளிப்பில்லாத அப்பத்தையும் திராட்சரசத்தையும் இயேசு தம்முடைய அன்பான மனித பலியின் அடையாளச் சின்னங்களாகப் பயன்படுத்தினார். பின்னர் தம் சீஷர்களிடம்: “என்னை நினைவுகூரும்படி இதைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்றார். (லூக்கா 22:19, NW) இந்த முக்கியமான நிகழ்ச்சியை நீங்கள் நினைவுகூருவீர்களா? இந்த நினைவு ஆசரிப்பை அனுசரிப்பதில் தங்களோடு சேர்ந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களை அன்புடன் அழைக்கின்றனர். பைபிளின் சந்திர நாட்காட்டியில் நிசான் 14-ம் தேதியுடன் ஒத்திருக்கும் தேதியில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் இது நடைபெறும். உங்கள் வீட்டிற்கு வெகு அருகாமையிலுள்ள ராஜ்ய மன்றத்தில் நீங்கள் ஆஜராகலாம். நீங்கள் இருக்கிற இடத்தில் உள்ள யெகோவாவின் சாட்சிகளோடு சரியான நேரத்தையும் இடத்தையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். 1995-ல் நடைபெறும் இந்த ஆசரிப்பிற்கான தேதி வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 14-ஆக இருக்கும்.