உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w95 3/1 பக். 29-31
  • இரண்டக இறையியல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இரண்டக இறையியல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இரண்டகநிலையின் ஆரம்பமும் வளர்ச்சியும்
  • “இடைப்பட்டநிலை” என்பதன் பேரில் பவுல் நம்பிக்கை வைத்திருந்தாரா?
  • உயிர்த்தெழுதல்—ஒரு அற்புதமான பைபிள் சத்தியம்
  • உயிர்த்தெழுதலில் உங்கள் நம்பிக்கை எவ்வளவு உறுதியானது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் செல்வாக்கு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • ‘மரணம் ஒழிக்கப்படும்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் வலிமை
    ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
w95 3/1 பக். 29-31

இரண்டக இறையியல்

“ஆத்துமா அழியாமை என்ற கருத்தும் மரித்தோரின் உயிர்த்தெழுதல் பேரில் விசுவாசமும். . .முழுவதும் வித்தியாசமான அடிப்படையில் உள்ள இரண்டு கருத்துக்கள், அவை இரண்டிற்கும் இடையே ஒரு தெரிவு செய்யப்பட வேண்டும்.” மரித்தோரின் நிலையைக் குறித்து புராட்டஸ்டன்ட் மற்றும் கத்தோலிக்க இறையியலர் எதிர்படும் இரண்டக நிலையை ஃபீலீப் மனூ என்பவரின் வார்த்தைகள் சுருக்கிக் கூறுகின்றன. “கடைசி நாளில்” உயிர்த்தெழுப்பப்படுவதைப் பற்றிய நம்பிக்கையைக் குறித்து பைபிள் பேசுகிறது. (யோவான் 6:39, 40, 44, 54) ஆனால் அநேக விசுவாசிகளின் நம்பிக்கை, “ஆத்துமா அழியாது என்பதன் பேரில் அடிப்படையாக உள்ளது, அது மரணத்தின் போது உடலிலிருந்து பிரிந்து கடவுளிடம் திரும்புகிறது, ஆனால் உயிர்த்தெழுதலின் பேரில் உள்ள நம்பிக்கை முழுவதுமாக இல்லாவிட்டாலும் அதிகமாக மறைந்துவிட்டிருக்கிறது,” என்று இறையியலர் கிஸ்பெர்ட் கிரஷேக் சொல்கிறார்.

அந்தச் சூழ்நிலையில், ஒரு முட்போன்ற பிரச்சினை எழும்புகிறது என்று பெர்னார்ட் சேபூயே விளக்குகிறார்: “தங்கள் சரீர மரணத்துக்கும் இறுதி உயிர்த்தெழுதலுக்கும் இடையே உள்ள ‘இடை வெளியில்’ மரித்தோரின் நிலைமை என்ன?” கடந்த சில வருடங்களில் அந்தக் கேள்வி இறையியல்சார்ந்த விவாதத்தின் மையப்பொருளாக இருந்திருப்பதாகத் தோன்றுகிறது. அதற்கு வழிநடத்தியது எது? அதிமுக்கியமாக, மரித்தோருக்கு என்ன மெய்யான நம்பிக்கை இருக்கிறது?

இரண்டகநிலையின் ஆரம்பமும் வளர்ச்சியும்

ஆரம்ப கிறிஸ்தவர்களுக்கு இவ்விஷயத்தின் பேரில் தெளிவான கருத்துக்கள் இருந்தன. மரித்தோருக்கு எதைக்குறித்தும் உணர்வில்லை என்பதை அவர்கள் வேதாகமங்களிலிருந்து அறிந்திருந்தனர், ஏனென்றால் எபிரேய வேதாகமங்கள் சொல்கின்றன: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . .நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” (பிரசங்கி 9:5, 10) எதிர்காலத்தில் “கர்த்தருடைய வந்திருத்தலின்” போது ஒரு உயிர்த்தெழுதல் நடைபெறும் என்று அந்தக் கிறிஸ்தவர்கள் நம்பினர். (1 தெசலோனிக்கேயர் 4:13-17, NW) அந்தக் கணம் வருவதற்காக அவர்கள் காத்திருந்தபோது வேறு ஏதோவொரு இடத்தில் உணர்வோடு இருக்கப்போவதாக அவர்கள் எதிர்பார்க்கவில்லை, கத்தோலிக்க விசுவாச கோட்பாட்டின் வாடிகன் சபையின் தற்போதுள்ள அதிகாரி, ஜோசஃப் ராட்சிங்கர் சொல்லுகிறார்: “பண்டைய சர்ச்சில் ஆத்துமா அழியாது என்ற கோட்பாடு உறுதியாகச் சொல்லப்படவில்லை.”

இருப்பினும், அகஸ்ட்டின் அல்லது ஆம்ப்ரோஸ்போன்ற சர்ச் ஃபாதர்கள் எழுதியவற்றை வாசிக்கையில், “பைபிள் பாரம்பரியத்தைக் குறித்ததில் நாம் ஏதோவொரு புதிய காரியத்தைக் குறித்து அறிய வருகிறோம்—யூதேயா-கிறிஸ்தவர்களிலிருந்து அடிப்படையில் வித்தியாசமாய் இருக்கும் கிரேக்க அம்மை-மறுமைக் கோட்பாடு வெளிவருவதை நான் காண்கிறோம்” என்று நோவா டிசிநாரியோ டி டியலாஜிக்கல் விளக்குகிறது. இந்தப் புதிய போதனை “ஆத்துமா அழியாமையின் பேரில் சார்ந்திருந்தது, மரித்தவுடனேயே தனிப்பட்டவிதமாய் நியாயந்தீர்க்கப்பட்டு வெகுமதியோ அல்லதது தண்டனையோ பெறுவதைக் குறித்தது.” “இடைப்பட்ட நிலை”யைக் குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. மரித்த உடலிலிருந்து ஆத்துமா தப்பிப் பிழைக்குமென்றால். “கடைசி நாளில்” உயிர்த்தெழுப்பப்படுவதற்காக காத்துக்கொண்டிருக்கையில் அதற்கு என்ன நேரிடுகிறது? இந்த இரண்டக நிலையை தீர்ப்பதற்கு இறையியலர் போராடியிருக்கின்றனர்.

மரிக்கும் போது ஆத்துமாக்கள் தங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு உடனடியாக போகின்றன என்று பொ.ச. ஆறாம் நூற்றாண்டில் போல் கிரெகரி I விவாதித்தார். மரித்தோர் தங்கள் இறுதி வெகுமதியை நியாயந்தீர்ப்பு நாளின் போது பெற்றுக்கொள்வர் என்று பொ.ச. 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போப் ஜான் XXII நம்பினார். ஆனால் போப் பெனடிக்ட் XII முன்னிருந்தவரை தவறென நிரூபித்தார். “மரித்தவர்களின் ஆத்துமாக்கள் மரித்தவுடனேயே, பேரானந்த நிலை [பரலோகம்], பாவம் போக்கப்படும் இடம் [உத்தரிக்கும் ஸ்தலம்], அல்லது நிலையான தண்டனை [நரகம்] போன்ற நிலையை அடைகின்றன, அவை உலகத்தின் முடிவிலே தங்களுடைய உயிர்த்தெழுப்பப்பட்ட உடல்களோடு மறுபடியுமாக சேர்க்கப்படுகின்றன,” என்று பெனடிக்டஸ் டியஸ் (1336) என்ற போப்பின் கட்டளையில் அவர் முடிவு செய்தார்.

வாதம் கருத்து வேறுபாடு ஆகியவற்றின் மத்தியிலும், புராட்டஸ்டன்ட் மற்றும் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகள் பொதுவாக உத்தரிக்கும் ஸ்தலத்தில் நம்பிக்கை வைக்காவிட்டாலும்கூட, கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் நிலைமை பல நூற்றாண்டுகளாக இவ்வாறாகத்தான் இருந்திருக்கிறது. இருப்பினும், பெரும்பாலான கல்விமான்கள் கடந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஆத்துமா அழியாது என்ற கோட்பாட்டின் பைபிள் ஆதாரமற்ற ஆரம்பத்தை ஜனங்களின் கவனத்துக்குக்கொண்டு வந்திருக்கின்றனர். அதன் விளைவாக, “நவீன-நாளைய இறையியல் இப்போது மனிதனை, மரணத்தில் முழுவதுமாக இல்லாமல் போய்விடும் ஒரு முழுமையாக நோக்கமுயலுகிறது.” (தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன்) ஆகையால் “ஒரு இடைப்பட்ட நிலை” இருப்பதை சரியென நிரூபிப்பதற்குப் பைபிள் குறிப்புரையாளர்கள் கடினமாகக் காண்கின்றனர். பைபிள் அதைக் குறித்து பேசுகிறதா, அல்லது அது ஒரு வித்தியாசமான நம்பிக்கையை அளிக்கிறதா?

“இடைப்பட்டநிலை” என்பதன் பேரில் பவுல் நம்பிக்கை வைத்திருந்தாரா?

கத்தோலிக்க சர்ச்சின் வினா-விடை போதனா (ஆங்கிலம்) சொல்லுகிறது: கிறிஸ்துவோடு நாம் உயிர்த்தெழுப்பப்பட வேண்டுமென்றால். நாம் கிறிஸ்துவோடு மரிக்கவேண்டும்: நாம் உடலிலிருந்து பிரிந்திருக்க வேண்டும், ஆண்டவரோடு குடியிருக்க வேண்டும்,’ [2 கொரிந்தியர் 5:8] அந்தப் ‘புறப்பாட்டில்,’ அதாவது மரணத்தில், உடலிலிருந்து ஆத்துமா பிரிந்து செல்கிறது. [பிலிப்பியர் 1:23] மரித்தோர் உயிர்த்தெழும் நாளில் அது உடலோடு மறுபடியும் இணைக்கப்படும்.” உடல் மரித்துப்போகையில் ஆத்துமா தப்பிப்பிழைத்து அதற்குப் பிறகு ‘கடைசி நியாயத்தீர்ப்பின்’ போது உடலோடு மறுபடியும் சேர்க்கப்படுவதற்காக காத்திருக்கும் என்று மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறாரா?

2 கொரிந்தியர் 5:1-ல் பவுல் தன் மரணத்தைக் குறிப்பிட்டு, ‘அழிந்து போகும் பூமிக்குறிய வீட்டைப்பற்றி பேசுகிறார். அழியாத ஆத்துமாவால் விட்டுச் செல்லப்படும் உடலைக் குறித்து அவர் யோசித்துக்கொண்டிருந்தாரா? இல்லை. மனிதன் ஆத்துமாவாக இருக்கிறான் என்று பவுல் நம்பினார், அவன் ஒரு ஆத்துமாவாக இருக்கிறான் என்று பவுல் நம்பினார், அவன் ஒரு ஆத்துமாவைக் கொண்டிருக்கிறான் என்று அல்ல. (ஆதியாகமம் 2:7; 1 கொரிந்தியர் 15:45) பவுல் ஆவியால் -ஆபிஷேகம்செய்யப்பட்ட ஒரு கிறிஸ்தவனாக இருந்தார், அவருடைய நம்பிக்கை தன்னுடைய முதல் நூற்றாண்டு சகோதரர்களைப் போல் ‘பரலோகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தது.’ (கொலோசெயர் 1:4, 6; ரோமர் 8:14-18) ஆகையால் அவருடைய ‘ஊக்கமான ஆர்வம்’ என்னவென்றால், கடவுளின் குறிக்கப்பட்ட நேரத்தில் அழியாமையுள்ள ஆவி சிருஷ்டியாக பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுவது ஆகும். (2 கொரிந்தியர் 5:2-4, NW) இந்த நம்பிக்கையைப் பற்றி பேசுகையில், அவர் எழுதினார்: “கடைசி எக்களாம் தொனிக்கும்போது,. . .நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.”—1 கொரிந்தியர் 15:51,52.

2 கொரிந்தியர் 5:8-ல் பவுல் சொல்லுகிறார்: நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேசத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்,” காத்திருக்க வேண்டிய இடைப்பட்ட நிலையைப் பற்றி இந்த வார்த்தைகள் குறிப்பிடுகின்றன என்று சிலர் நம்புகின்றனர். இயேசு தம்மை உண்மையோடு பின்பற்றியவர்களுக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணப் போவதாகவும் ‘மருபடியும் வந்து அவரிடத்தில் சேர்ந்துகொள்ளப் போவதாகவும்’ கொடுத்த வாக்கைப் பற்றி அப்படிப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் எப்போது நிறைவேற்றப்படும்? கிறிஸ்து தம் எதிர்கால வந்திருத்தலின் போது ‘மறுபடியும் வருகையில்’ அது நடைபெறும் என்று அவர் சொன்னார். (யோவான் 14: 1-3) அதே போன்று, பரலோக வாசஸ்தலத்தை சுதந்தரிக்கப்போவது தன் அபிஷேகம்செய்யப்பட்டவர்களின் பொதுவான நம்பிக்கை என்று 2 கொரிந்தியர் 5:1-10-ல் பவுல் சொன்னார். ஆத்துமா அழியாது என்று ஊகிக்கப்பட்ட ஏதோவொன்றின் மூலமாக இது நடைபெறாது, ஆனால் கிறிஸ்துவின் வந்திருத்தலின்போது ஒரு உயிர்த்தெழுதலின் மூலம் நடைபெறும். (1 கொரிந்தியர் 15:23, 42-44) 2 கொரிந்தியர் 5:1-10 வரை உள்ள வசனங்களா, “இடைப்பட்ட நிலை’ என்ற தற்காலிகக் கருத்தை ஏற்றுக்கொள்ளமாலேயே நன்றாக புரிந்துகொள்ளலாம்” என்று ஷார்ல் மாசோன் முடிக்கிறார்.

பிலிப்பியர் 1:21, 23-ல் பவுல் சொல்கிறார்: “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம், ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; “தேகத்தை விட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்.” பவுல் இங்கே ஒரு ‘இடைப்பட்ட நிலையைக்’ குறிப்பிடுகிறாரா? சிலர் அவ்வாறு நினைக்கின்றனர். இருப்பினும், இரண்டு சாத்தியங்களால் அவர் அழுத்தத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறார் என்று பவுல் சொல்லுகிறார் -ஜீவன் அல்லது மரணம். “தேகத்தை விட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட மரணத்துக்குப் பின் இருப்பதா? ஏற்கெனவே பார்த்தபடி, உண்மையுள்ள அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் வந்திருத்தலின்போது உயிர்த்தெழுப்பப்படுவர் என்று பவுல் நம்பினார். ஆகையால், அந்தக் காலப்பகுதியின் சம்பவங்களை அவர் மனதில் வைத்திருக்க வேண்டும்.

இதை பிலிப்பியர் 3:20, 21 மற்றும் 1 தெசலோனிக்கேயர் 4:16-ல் காணப்படும் அவருடைய வார்த்தைகளிலிருந்து அறிந்துகொள்ளலாம். கிறிஸ்துவின் வந்திருத்தலின்போது அப்படிப்பட்ட ‘பிரிந்து போதல்,’ கடவுள் அவருக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் பலனைப் பவுல் பெற்றுக்கொள்ளும்படி செய்யும். இது தானா அவருடைய நம்பிக்கை என்பது, இளம் மனிதனாகி தீமோத்தேயுவுக்கு எழுதிய வார்த்தைகளில் காணப்படுகிறது: “இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் வந்திருத்தலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.”—2 தீமோத்தேயு 4:8

உயிர்த்தெழுதல்—ஒரு அற்புதமான பைபிள் சத்தியம்

உயிர்த்தெழுதல், கிறிஸ்துவின் வந்திருத்தலின்போது ஆரம்பிக்கப்போகும் ஒரு சம்பவம் என்று ஆரம்ப கிறிஸ்தவர்கள் கருதினர், இந்த அற்புதமான பைபிள் சத்தியத்திலிருந்து அவர்கள் பலத்தையும் ஆறுதலையும் பெற்றுக்கொண்டனர். (மத்தேயு 24:3; யோவான் 5:28, 29; 1 தெசலோனிக்கேயர் 4:13) அந்த எதிர்கால மகிழ்ச்சிக்காக அவர்கள் விசுவாசத்தோடு காத்திருந்தனர், அழியாமையுள்ள ஆத்துமாவைப் பற்றிய விசுவாசத்துரோக போதனைகளை அவர்கள் நிராகரித்து விட்டனர்.—அப்போஸ்தலர் 20:28-30; 2 தீமோத்தேயு 4:3,4; 2 பேதுரு 2:1-3.

உயிர்த்தெழுதல், பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களுக்கு மட்டும் என்று வரையறுக்கப்படவில்லை. (1 பேதுரு 1:3-5) பூமியின் மீது மரித்தோரைத் திரும்பவும் உயிருக்குக் கொண்டுவருவதற்கு யெகோவாவுக்கு இருக்கும் திறமையின் பேரில் முற்பிதாக்களும், மற்ற பூர்வகால கடவுளுடைய ஊழியர்களும் விசுவாசம் காண்பித்தனர். (யோபு 14:14,15; தானியேல் 12:2; லூக்கா 20:37, 38; எபிரெயர் 11:19, 35) “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திரு”க்கப் போவதால், கடவுளைப் பற்றியே அறியாமல் நூற்றாண்டுகளினூடே வாழ்ந்த கோடிக்கணக்கானோர், ஒரு பரதீஸிய பூமியில் மறுபடியும் உயிருக்குக் கொண்டு வரப்போகும் வாய்ப்பைக் கொண்டிருக்கின்றனர். (அப்போஸ்தலர் 24:15; லூக்கா 23:42, 43) இது ஒரு கிளர்ச்சியூட்டும் எதிர்பார்ப்பாக இருக்கிறது அல்லவா?

துன்பமும் மரணமும் எப்போதும் இருக்கும் என்று நாம் நம்பும்படி செய்யலாம், “கடைசிச் சத்துரு மரணம்” என்றுமாக நீக்கப்பட்டு, பரதீஸாக ஆக்கப்பட்ட பூமியில் உண்மையுள்ள மனிதவர்க்கம் என்றென்றுமாக வாழும் சமயத்தை யெகோவா குறிப்பிட்டுக் காட்டுகிறார். (1 கொரிந்தியர் 15:26; யோவான் 3:16; 2 பேதுரு 3:13) நம்முடைய அன்பானவர்கள் மறுபடியும் உயிருக்கு வருவதை காண்பது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கும்! கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் அல்லாமல், கிரேக்க தத்துவத்தின் அடிப்படையிலுள்ள அழியாமையுள்ள மனித ஆத்துமா என்ற கோட்பாட்டைக் காட்டிலும் இந்த நிச்சயமான நம்பிக்கை எவ்வளவு மேலானதாய் இருக்கிறது! கடவுளுடைய நிச்சயமான வாக்கின் பேரில் உங்களுடைய நம்பிக்கையை நீங்கள் ஆதாரமாக வைத்தீர்கள் என்றால், விரைவில் ‘மரணம் இல்லாமல் போகும்’ என்று நீங்களும்கூட நிச்சயமாயிருக்கலாம்!—வெளிப்படுத்துதல் 21:3-5.

[பக்கம் 31-ன் படம்]

உயிர்த்தெழுதல் ஒரு அற்புதமான பைபிள் சத்தியம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்