உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w95 1/15 பக். 32
  • சிறியது ஆனால் சக்திவாய்ந்தது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சிறியது ஆனால் சக்திவாய்ந்தது
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
w95 1/15 பக். 32

சிறியது ஆனால் சக்திவாய்ந்தது

கனடாவிலிருந்து வரும் ராபர்ட் என்ற ஓர் இளம் மனிதன், வாழ்க்கையில் தனக்கான நோக்கத்தைத் தேடி ஐரோப்பா முழுவதும் அலைந்து திரிந்தார். எதிர்காலத்தைப்பற்றி அவரைச் சோர்வாக உணரச்செய்த அநேக காரியங்களை பார்த்தார்.

ஸ்பெய்ன், செவைலியில் ஒரு சிற்றுண்டிச்சாலையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்படும் ஒரு துண்டுப்பிரதியை ராபர்ட் பெற்றார். முதலில், ராபர்ட் நம்பிக்கையற்றவராக இருந்தார். “என்றபோதிலும் நான் அதை வாசித்தேன்,” என்று அவர் சொன்னார். “என்னால் அதை விளக்கமுடியாது, ஆனால் ஏதோவொன்று அர்த்தமுள்ளதாக இருப்பதாக உணர்ந்தேன். என்னுடைய பிரயாணங்களின்போது, நான் மனிதரின் மனச்சோர்வையும் தோல்வியையும் பல வடிவங்களில் பார்த்திருந்தேன், ஆனால் காரியங்களை என்னால் மாற்ற இயலாமல் இருப்பதைக் குறித்து ஏமாற்றமடைந்தேன். துண்டுப்பிரதியை வாசித்தப் பின்னர், ‘இந்தப் “புதிய உலகம்” வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?’ என்று யோசித்தேன். பின்னர், ‘ஆம், ஒருவேளை இந்தப் புதிய உலகம் சாத்தியமாயிருக்கலாம்,’ என்பதாக நினைத்தேன்.”

புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையோடு, ராபர்ட் கனடாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய அலுவலகத்துக்கு எழுதி, தான் வீடு திரும்பிய பின்னர் யாராவது ஒருவர் தன்னை வந்து சந்தித்து பைபிளைப் புரிந்துகொள்ள தனக்கு உதவிசெய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

சந்தேகமின்றி, வாயால் பேசப்படும் வார்த்தை சக்திவாய்ந்தது. என்றபோதிலும், அச்சடிக்கப்பட்ட செய்தியின் சக்தியை ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டுவிடாதீர்கள். எவ்வளவு சிறியதாக இருந்தாலும், பைபிள் அடிப்படையில் அமைந்த பிரசுரங்கள் ஆற்றல்மிகுந்த கவர்ச்சியைக் கொண்டிருக்கின்றன. அவை மனதையும் இருதயத்தையும் தொட்டு எதிர்காலத்துக்கு ஒரு நிச்சயமான நம்பிக்கையைத் தருகின்றன.—எபிரெயர் 4:12.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்