உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 5/15 பக். 31
  • மலாவியிலிருந்து நற்செய்தி!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மலாவியிலிருந்து நற்செய்தி!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 5/15 பக். 31

மலாவியிலிருந்து நற்செய்தி!

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடாகிய மலாவியில் உள்ள உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி ஆஃப் பென்ஸில்வேனியா நவம்பர் 15, 1993-ல் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டது. இது யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்படியான அங்கீகாரத்தையும் மலாவியிலுள்ள மக்களுக்கு பைபிள் சத்தியங்களை பிரசங்கிப்பதற்கான சுதந்திரத்தையும் அளிக்கும்.

மலாவியில் நடைபெற்றுவரும் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை ஒத்திசைவிக்க, 1948-ல் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளை அலுவலகம் அந்த நாட்டில் நிறுவப்பட்டது. ஜனவரி 8, 1957-ல் உவாட்ச் டவர் சொஸையிட்டி முதல் தடவையாக அங்குப் பதிவுசெய்யப்பட்டது. பற்பல வருஷங்களாக யெகோவாவின் சாட்சிகள் மிகைப்பட்ட வளர்ச்சியை அனுபவித்தார்கள். 1964-லிலோ கடுமையான துன்புறுத்துதல் துவங்கியது. ஏன்?

யெகோவாவின் சாட்சிகள் கடவுளுக்கு கீழ்ப்படிந்து, அரசியலில் உறுதியான நடுநிலைமையை வகித்தார்கள். (யோவான் 17:16) தெளிவாகவே, சிலர் இந்த வேதப்பூர்வமான நிலைநிற்கையை சரியாகப் புரிந்துகொள்ளாமல், சாட்சிகளை மதவாதிகளாகவும் சட்டவிரோதிகளாகவும் தவறாக நினைத்தார்கள். ஆகவே, சமாதானப்பிரியராகிய இந்தக் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதை சிலர் நியாயமென கருதினார்கள். அநேக சாட்சிகளை வேலைநீக்கம் செய்தார்கள், அடித்தார்கள், மேலும் வேறுவிதத்தில் இழிவாக நடத்தப்பட்டார்கள். சிலர் பிள்ளைகளைவிட்டு பிரிய பலவந்தப்படுத்தப்பட்டார்கள்.

சாட்சிகளில் 30,000-க்கும் மேற்பட்டவர்களும் அவர்களோடே பைபிளைப் படித்துவந்தவர்களும் தங்கள் உயிர்களை இழந்துவிட நேருமோ என்று பயந்து 1972-ல் நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிருந்தது. அடுத்திருக்கும் மொஸாம்பிக்கில் உள்ள அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் குடியேறினார்கள். ஆனால் 1975-ல் இந்த அகதிகள் திரும்பவும் மலாவிக்கு அனுப்பப்பட்டார்கள்; அங்கு மேலுமாகத் துன்புறுத்தப்படவிருந்தார்கள். அநேகர் சித்திரவதை முகாம்களில் போடப்பட்டார்கள். இந்தக் கலவரத்தின் மத்தியில், உவாட்ச் டவர் சொஸையிட்டி மலாவியில் உள்ள சட்டப்பூர்வமான அங்கீகாரம்பெற்ற அமைப்புகளின் அரசாங்க பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. அதுமுதல் அந்த நாட்டில் யெகோவாவின் சாட்சிகள் தடையுத்தரவின் கீழிருந்தார்கள். அவர்களுடைய சட்டப்பூர்வ அமைப்புகளும் தடைசெய்யப்பட்டன.

இப்படிப்பட்ட காரியங்கள் நடந்தபோதிலும், சாட்சிகள் பழிக்குப் பழிவாங்கவில்லை. அரசாங்கத்திற்கு எதிராகக் கலகக்கார கும்பல்களைக் கூட்டி, ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. மாறாக, அரசாங்க “மேலான அதிகாரங்க”ளுக்குரிய கனத்தையும் மரியாதையையும் காட்டி, தங்கள் கிறிஸ்தவ கடமையை ஜெபத்தோடு செய்துவந்தார்கள். (ரோமர் 13:1-7; 1 தீமோத்தேயு 2:1, 2) பைபிளில் சொல்லப்பட்டுள்ள கிறிஸ்தவ வாழ்க்கைக்கான உயர்ந்த தராதரங்களையும் சாட்சிகள் அனுசரித்து வந்தார்கள். இப்படியாக, நடத்தையில் சிறந்த மாதிரியை வைத்தார்கள்.

சமீபத்தில் கிடைத்த புதிதான சுதந்திரத்தின் காரணமாக, மலாவியில் உள்ள யெகோவாவின் சாட்சிகள், ‘சாதகமான காலத்தில்’ துரிதமாக பைபிள் சத்தியங்களைத் தொடர்ந்து பிரசங்கிப்பதில் திடத்தீர்மானமுடையவர்களாக இருக்கிறார்கள்.—2 தீமோத்தேயு 4:2, NW.

[பக்கம் 31-ன் படம்]

1960-களில் மலாவி பெத்தேல் குடும்பத்தோடு M. G. ஹென்ஷல்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்