உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 8/15 பக். 31
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • இதே தகவல்
  • ஆபிரகாமுடன் கடவுள் ஓர் ஒப்பந்தம் செய்கிறார்
    பைபிள் ஒரு கண்ணோட்டம்
  • ஆபிரகாம் ‘என் நண்பன்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • ஆபிரகாம் அன்பின் அடையாளம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • ‘உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 8/15 பக். 31

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அண்மையில் வெளியான காவற்கோபுரம் பிரதிகள் உங்களுக்கு நடைமுறை பயனுடையதாக நீங்கள் கண்டீர்களா? அப்படியானால் உங்கள் ஞாபக சக்தியை பின்வரும் கேள்விகளினால் ஏன் சோதித்துப்பார்க்கக்கூடாது:

◻ நம்மை அறியாமலேயே நம் மனதில் ஏதேனும் ஒழுக்கக்கேடான எண்ணம் நுழைந்தால், நாம் என்ன செய்யவேண்டும்? மன சிந்தனையை வேறொரு காரியத்திற்கு நாம் மாற்றவேண்டும், உலாவச் செல்லலாம், எதையாவது வாசிக்கலாம், அல்லது ஏதாவது வீட்டுவேலையைச் செய்யலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜெபம் ஒரு வல்லமையான உதவியாக இருக்கிறது. (சங்கீதம் 62:8)—ssbra பக்கம் 33.

◻ இளைஞர் ஏன் தாங்கள் கேட்கும் இசையின் வகையைக்குறித்து ஜாக்கிரதையோடு இருக்கவேண்டும்? கவர்ந்திழுக்கும், ஆட்கொள்ளும், உணர்ச்சிகளைத் தூண்டும் வல்லமையை இசை பெற்றிருக்கிறது. பிரபலமான இசைகள், ஆச்சரியப்படுத்தும் எண்ணிக்கையில் பால்சம்பந்தமான குறிப்புகளையும், ஒழுக்கக்கேட்டைப்பற்றிய மறைமுகமானக் குறிப்புகளையும் கொண்டிருப்பதால், ரெகார்டுகள், ஒலிப்பேழைகள் (டேப்புகள்), டிஸ்குகள் ஆகியவற்றைத் தெரிந்தெடுப்பதில் அதிகக் கவனம் செலுத்தப்படவேண்டும் என்பதைக் காண்பது எளிதாயிருக்கிறது.—ssbr பக்கம் 37.

◻ “நம்முடைய கர்த்தரின் வந்திருத்தல்” என்ற சொற்றொடர் எதை அர்த்தப்படுத்துகிறது? (1 தெசலோனிக்கேயர் 5:23, NW) இது 1914-லிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திலுள்ள சிங்காசனத்தில் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, காணப்படாதவகையில் அவர், அவருடைய ராஜரீக வந்திருத்தலில் ராஜாவாக இருப்பதைக் குறிக்கிறது. (சங்கீதம் 110:1, 2)—ssbr பக்கம் 51.

◻ யெகோவா தம்முடைய ஆவிக்குரிய ஆலயத்தைச் சுத்தஞ்செய்ததால் என்ன நோக்கம் நிறைவேறியது? (மல்கியா 3:1-4) யெகோவா தம்முடைய ஆலயம் சுத்தமான நிலையிலிருக்க விரும்பினார்; அப்போது பூமிக்குரிய நம்பிக்கையுடைய பெரும் எண்ணிக்கையான வணக்கத்தார் அங்கு கொண்டுவரப்படுகையில், அவருடைய சர்வலோகப் பேரரசுரிமை மதிக்கப்படுகிற, அவருடைய தெய்வீக நாமம் பரிசுத்தப்படுகிற, மேலும் அவருடைய நீதியுள்ள சட்டங்கள் கீழ்ப்படியப்படுகிற ஓர் இடத்தை அவர்கள் காண்பார்கள்.—ssbr பக்கம் 56.

◻ கிறிஸ்து இயேசு தம்முடைய நியமிக்கப்பட்ட அடிமைக்குக் கொடுக்கும் “ஆஸ்திகள்” யாவை? (மத்தேயு 24:45-47) பரலோக ராஜாவாகக் கிறிஸ்துவினுடைய அதிகாரத்தின் சம்பந்தமாக அவருடைய உடைமையாய் ஆகியிருக்கிற பூமியிலுள்ள ஆவிக்குரிய சொத்துக்கள் அனைத்தையும் இந்த “ஆஸ்திகள்” குறிக்கின்றன. இது சகல தேசங்களின் மக்களிடமிருந்து கிறிஸ்துவின் சீஷர்களை உண்டாக்கும் பொறுப்பை உட்படுத்தும். (மத்தேயு 28:19, 20)—ssbr பக்கம் 57.

◻ பேதுரு, 1 பேதுரு 5:2-ல் தூண்டியபடி, கிறிஸ்தவ மூப்பர்கள் எப்படி மேய்ப்பதில் ‘மனப்பூர்வத்தை’ காட்டுகிறார்கள்? நல்ல மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலில், செம்மறியாடுகளைக் கவனிக்கிற ஒரு கிறிஸ்தவ மூப்பர் தன்னுடைய சொந்த சுய விருப்பத்தோடு, தன்னுடைய மேய்க்கும் வேலையை மனப்பூர்வமாகச் செய்கிறார். மனப்பூர்வமாய் சேவிப்பது என்பது ஒரு கிறிஸ்தவ மேய்ப்பர், யெகோவாவின் அதிகாரத்திற்கு கீழ்ப்படிவதையும், தேவராஜ்ய ஏற்பாட்டிற்கு மரியாதை காண்பிப்பதையும் அர்த்தப்படுத்துகிறது.—ssbr பக்கம் 48.

◻ இயேசு அவரைப் பின்பற்றுகிற எவரும், ‘தன்னைத்தான் சொந்தம் கைவிடவேண்டும்’ என்று சொன்னபோது எதை அவர் அர்த்தப்படுத்தினார்? (மத்தேயு 16:24) ‘உங்களை நீங்களே சொந்தம் கைவிடுவது’ என்பது, நீங்கள் உங்களுக்குரியவர் அல்லர் என சொந்தம் கைவிட்டு, அந்த உரிமையை யெகோவாவிடம் ஒப்படைப்பதைக் குறிக்கிறது. (1 கொரிந்தியர் 6:19, 20) நீங்கள் உங்களை அல்ல, ஆனால் யெகோவாவைப் பிரியப்படுத்தும்படி வாழ்வதை அது அர்த்தப்படுத்துகிறது. (ரோமர் 14:8)—6/1, பக்கம் 9.

◻ ஓர் ஆளை மகிழ்ச்சியடையச் செய்வதற்கு என்ன தேவை? யெகோவாவுடன் ஒரு நல்ல உறவை அனுபவிப்பதும், அவருடைய சேவையில் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதும், ஓர் ஆளின் வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது.—6/1, பக்கம் 22.

◻ யெகோவா, சோதோமை அழிக்கும் தம்முடைய நோக்கத்தைப்பற்றி, இப்படிச் சுயாதீனத்தோடு தம்மிடத்தில் பேச ஆபிரகாமை ஏன் அனுமதித்தார்? (ஆதியாகமம் 18:22-32) ஒரு காரணமானது, ஆபிரகாம் கடவுளின் நண்பனாக இருந்தார். (யாக்கோபு 2:23) மேலுமாக, யெகோவா ஆபிரகாமின் கடும்வேதனைமிக்க உணர்வுகளை அறிந்திருந்தார். ஆபிரகாமின் உடன்பிறந்தார் மகன் லோத்து சோதோமில் வாழ்ந்தார் என்றும், இவருடைய பாதுகாப்பைப்பற்றி அக்கறையுள்ளவராக ஆபிரகாம் இருந்தார் என்றும் கடவுள் அறிந்திருந்தார். இந்தக் காரணங்களுக்காகவே, யெகோவா, சோதோமை அழிக்கும் தம்முடைய நோக்கத்தைப் பற்றிய ஆபிரகாமின் கேள்விகளுக்குப் பதில்கொடுக்க மனமுள்ளவராய் இருந்தார்.—6/15, பக்கம் 16.

◻ உண்மையான கிறிஸ்தவத்திற்குத் திரும்பிவருதலை, 16-ம் நூற்றாண்டின் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் அடையாளப்படுத்தியதா? இல்லை, அது அடையாளப்படுத்தவில்லை! உண்மையான கிறிஸ்தவத்திற்கு ஒரு திரும்பிவருதலைக் கொண்டுவருவதற்கு மாறாக, அந்தச் சீர்திருத்தம், அரசியல் நாடுகளின் நட்பைப் பெற்றுக்கொண்டு அவர்களுடைய போர்களில் அவர்களுக்கு ஊக்கமாக ஆதரவளித்த பெரும் எண்ணிக்கையான தேசிய அல்லது பிராந்திய சர்ச்சுகளைப் பிறப்பித்தன.—7/1, பக்கம் 10-11.

◻ மத்தேயு 6:20-ல் இயேசு சொன்ன, ‘பரலோகத்தில் பொக்கிஷங்கள்’ யாவை? அவை ஒருபோதும் வாடிப்போகாதவை, யெகோவாவுடன் நற்பெயரையும், உண்மையுள்ள கிறிஸ்தவ ஊழியப் பதிவையும் உட்படுத்துகின்றன. யெகோவா ஒருபோதும் மறக்காதவற்றில் இவையும் உட்பட்டிருக்கின்றன. (எபிரெயர் 6:10)—7/1, பக்கம் 32.

◻ நம் விசுவாசத்தின் இன்றியமையாத ஆக்கக்கூறுகளென பேதுரு குறிப்பிடும் குணங்கள் யாவை? (2 பேதுரு 1:5-7) நற்பண்பு, அறிவு, தன்னடக்கம், சகிப்புத்தன்மை, தேவபக்தி, சகோதரசிநேகம், அன்பு இவையாவும் விசுவாசத்தோடு கூட்டி வழங்கப்படவேண்டும் என்று பேதுரு சொன்னார்.—7/15, பக்கம் 13.

◻ பத்சேபாளுடன் தாவீதின் பாவத்தைப் பற்றிய பதிவில் காணப்படும், கடவுளுடைய ஊழியர்களுக்குரிய எச்சரிக்கை என்ன? (2 சாமுவேல் 11:2-4) தாவீது தன்னுடைய சொந்த திருமணத்தில் இன்பத்தை அனுபவிக்கும் உரிமையை உடையவராய் இருந்தபோதிலும், அவர் முறைதவறிய பாலுறவிற்கான ஆசையை வளர அனுமதித்தார். உரியாவின் மனைவி அவ்வளவு கவர்ச்சியுள்ளவளாய் இருந்தாள் என்று கவனித்ததும், அவளுடன் முறைதவறிய இன்பத்தைக் காணும்படி, தன்னுடைய எண்ணத்தை—செயலையும்—கட்டுப்பாடின்றி வளரவிட்டார். இப்படிப்பட்ட பேராசையைக் கடவுளுடைய ஊழியர்களில் எவரும் வெறுத்து ஒதுக்கவில்லையென்றால், இதேதான் அவருக்கும் நேரிடக்கூடும். (யாக்கோபு 1:14, 15)—8/1, பக்கம் 14.

a விடுபட்ட படிப்புக் கட்டுரைகளின் சிற்றேடு.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்