அவர்களுக்குக் கடவுளுடைய பெயர் தெரியும்
இங்கிலாந்தின் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளில் எழுதி பிரசுரிக்கப்பட்டதாக அறியப்பட்ட அந்த முதல் சிறு புத்தகம், பே சங்கீதப் புத்தகமாகும். அதன் முதல் பதிப்பு 1640-ம் ஆண்டின்போது மஸக்குஸெட்ஸ் பே குடியிருப்பில் ஸ்டீஃபன் டே என்பவரால் அச்சடிக்கப்பட்டது. அந்த ஆதிகால பிரசுரத்தில் பைபிள் புத்தகமாகிய சங்கீதங்கள் அடங்கியிருந்தது, அது எபிரெயுவிலிருந்து அக்காலத்தில் பேசி எழுதப்பட்ட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.
அந்த பே சங்கீதப் புத்தகத்தின் கவனிக்கத்தக்க ஓர் அம்சமானது, அதன் சில வசனங்களில் தெய்வீகப் பெயர் பயன்படுத்தப்பட்டிருந்ததேயாகும். ஆகவே, ஏறக்குறைய 350 ஆண்டுகளுக்கு முன்னான அவ்வளவு தொலைவான காலத்துக்கு முன்பே அந்தப் பிரசுரத்தை வாசித்த எவரும் நம்முடைய சிருஷ்டிகரின் பெயரை அறியும் நிலையில் இருந்தனர். உதாரணமாக, அந்தப் பதிப்பில், சங்கீதம் 83:17, 18 பின்வருமாறு வாசிக்கப்படுகிறது: “அவமாக்கப்பட்டவர்களாய் அவர்கள் என்றும் இருப்பார்களாக, பயங்கரமாய்க் கலக்கமடைவார்களாக: யெகோவா என்னும் பெயருடைய நீர் ஒருவரே பூமியனைத்தின்மீதும் எக்காலத்திலும் மகா உன்னதமானவர் என்று மனிதர் அறியும்படிக்கு, ஆம், அவர்கள் வெட்கத்துக்குட்படச் செய்யப்பட்டு, அழிந்துபோவார்களாக.”
நிச்சயமாகவே, மகா உன்னதமான கடவுள் தம்முடைய பெயர் யெகோவா என நாம் ஒப்புக்கொள்வதற்கும் மேலானவற்றைக் கேட்கிறார். இந்தப் பே சங்கீதப் புத்தகத்தில், சங்கீதம் 1:1, 2 சொல்வதாவது, “ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன்” பொல்லாதவர்களின் ஆலோசனையில் நடக்கிறதில்லை, “ஆனால் யெகோவாவின் சட்டத்திலே, அவனுடைய வாஞ்சையான பிரியம் உள்ளது.” 1648-ன் திருப்பப்பட்ட நியூ இங்லன்ட் சங்கீதங்கள் சொல்வதாவது: “ஆனால் அவன் யெகோவாவின் சட்டத்தின்மீதே தன் முழு பிரியத்தையும் வைக்கிறான்.”
இங்கே இந்த 20-வது நூற்றாண்டு பரிசுத்த வேதவார்த்தைகளின் புதிய உலக மொழிபெயர்ப்பு வாசிப்பதாவது: “பொல்லாதவர்களின் ஆலோசனையில் நடவாமலும், பாவிகளின் வழியில் நில்லாமலும், பரியாசக்காரரின் இருப்பிடத்தில் உட்காராமலும் இருக்கிற மனிதன் சந்தோஷமுள்ளவன். ஆனால் அவனுடைய பிரியம் யெகோவாவின் சட்டத்திலேயே உள்ளது, அவருடைய சட்டத்திலேயே அவன் இரவும் பகலும் அடங்கிய குரலில் வாசிக்கிறான்.”
உண்மையில் சந்தோஷமாயிருப்பதற்கு, ஒருவன் பொல்லாதவர்களின் ஆலோசனையை ஏற்காது தள்ளவேண்டும். பாவிகளின் முன்மாதிரியை அவன் பின்பற்றக்கூடாது, தேவபயமற்ற பரியாசக்காரருடன் சகவாசங்கொள்ளக்கூடாது. மற்றக் காரியங்களோடுகூட, அவர்களின் ஆலோசனையும் நடத்தையும், பாலுறவு ஒழுக்கக்கேட்டுக்கும், போதைப்பொருள் துர்ப்பிரயோகத்துக்கும், கடவுளுடைய சட்டத்துக்கு நேர்மாறான மற்ற நடவடிக்கைகளுக்கும் தன்னைக் கவர்ந்திழுக்கக்கூடிய ஆட்களின் கூட்டுறவை அவன் தவிர்க்க வேண்டும். ஆம், யெகோவா என்னும் பெயரையுடைய உண்மையான கடவுளைப்பற்றிக் கற்றறிவதிலும், பைபிளில் வெளிப்படுத்தியுள்ளபடி அவருடைய சட்டத்தைப் பொருத்திப் பயன்படுத்துவதிலுமே உண்மையான சந்தோஷம் சார்ந்திருக்கிறது. (w92 9⁄15)