ஆர்ச்பிஷப் எதிர்த்துச் சமாளிக்க முடியாது!
சென்ற ஆண்டில், கத்தோலிக்க சர்ச்சின் பெரும் கவலைக்கிடமான சில காரியங்களைக் கலந்துபேசுவதற்கு கத்தோலிக்க குருக்களின் வினையார்ந்த ஓர் ஆலோசனைசபை ஒழுங்குபடுத்தப்பட்டது. ஈல் சாபேட்டோ என்ற செய்தித்தாள் கூறினபடி, இவற்றில் ஒன்று, “மதப்பிரிவுகளின் தீவிரமான விசையூக்கம்.” எனினும், அந்தச் செய்தித்தாள் சொன்னதாவது: “இந்தக் குறிப்பின்பேரில் ஒப்பந்தத்தை அடைவது அந்தக் குருக்களுக்கு ஒரு பிரச்னையும் இருக்க வேண்டியதில்லை. அந்தப் புதிய மத இயக்கங்களின் காரியத்தை மேலும் ஆழமாய் ஆராய்ந்துபார்ப்பதற்குத் தேவையும், மேலும் அவற்றின் பெருக்கத்தைக் கூடிய வரையில் தடுப்பதற்கானத் தேவையும் இருக்கிறதென்பதை அவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டார்கள்.”
எனினும், “மதப்பிரிவுகளின் தீவிரமான விசையூக்கம்” இத்தாலியில் மட்டுமே ஒரு பிரச்னையாக இல்லையென்பது தெளிவாயுள்ளது. ஈல் சாபேட்டோ அறிவிப்பதாவது: “சமீபத்தில் போப்பின் அலுவலக மண்டபத்துக்குச் சென்றிருக்கையில், ஸ்மோலென்ஸ்க்கின் [ரஷ்யாவின் பழமையான நகரங்களில் ஒன்று] ஆர்ச்பிஷப் கீரில் . . . சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகளின் மற்றும் அதைப்போன்ற குழுக்களின் அளவு மீறிய வளர்ச்சியை எதிர்த்துச் சமாளிப்பதற்குச் சர்ச்சின் பொதுவான உதவி தரும்படி போப்பைக் கேட்டார்.”
முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவம், அதைக் கடைப்பிடித்தவர்களால் ஊக்கமுயற்சியுடன் தீவிரமாய்ப் பரவச் செய்யப்பட்டபோது, ஸ்தாபிக்கப்பட்ட மதத்தின் தலைவர்கள் இதைப்போன்று குற்றஞ்சாட்டி முறையிட்டார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் கடுங்கோபங்கொண்ட யூதர்கள் நகர அதிகாரிகளிடம்: “உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்” என்று முறையிட்டார்கள்! (அப்போஸ்தலர் 17:6) அக்காலத்தில், கிறிஸ்தவம் பரவுவதைத் தடுத்துநிறுத்த மதத்தலைவர்கள் கடும் முயற்சி எடுத்தனர், ஆனால் தோல்வியடைந்தனர். இன்றும், உண்மையான கிறிஸ்தவக் கோட்பாடு பரவுவதைத் தடுத்துநிறுத்த எடுக்கும் எந்த முயற்சியும் நிச்சயமாய்த் தோல்வியடையும். கடவுள்தாமே பின்வருமாறு வாக்குக் கொடுக்கிறார்: “உனக்கு விரோதமாய்ச் செய்யப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உன்னோடு நியாயஸ்தலத்தில் வாதாடும் எந்த நாவையும் நீ குற்றவாளியாக்குவாய்; அது யெகோவாவின் தாசருடைய சுதந்தரமும் என்னால் அவர்களுக்குக் கிடைக்கும் நியாயமுமாகும்.”—ஏசாயா 54:17, தி.மொ. (w92 8/15)