உயிர்—கடவுளிடமிருந்து ஒரு பரிசு
ஒரு நாளில் இருபத்து-நான்கு மணிநேரமும், நம்முடைய இருதயம் விலைமதிப்புள்ள இரத்தத்தை நம்முடைய உடல்முழுவதிலும் உந்திச்செலுத்துகின்றது. நாம் உறங்குகிறோம், நம்முடைய நுரையீரல் தொடர்ந்து விசாலித்தும் சுருங்கியும் கொண்டிருக்கிறது. நாம் சாப்பிடுகிறோம், உணவு தானாகவே செரிமானமாகிவிடுகிறது. இவை அனைத்தும் நம்முடைய பங்கில் சிறிதோ அல்லது எந்த உணர்வுடன்கூடிய முயற்சியோ இல்லாமலே ஒவ்வொரு நாளும் நிகழ்கிறது. அத்தனை எளிதாக சாதாரணமானவையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற மனித அறிவுக்கெட்டாததும் அதிசயமானதுமான இந்தச் செயல்முறைகள் நாம் உயிர் என்றழைக்கின்ற பரிசின் ஒரு பாகமாகும். ஒரு கருத்தில் அது அற்புதமானது என்றழைக்கப்படக்கூடிய ஒரு பரிசாகும்.
மனித கருதரிப்பையும் பிறப்பையும் சிந்தித்துப்பாருங்கள். பொதுவாக உடல் அந்நிய திசுவை நிராகரிக்கிற போதிலும், கருப்பை ஒரு வளப்படுத்தப்பட்ட முட்டையின் விஷயத்தில் விதிவிலக்கைச் செய்கிறது. வளர்ந்துகொண்டிருக்கும் முட்டைக்கருவை நிராகரிப்பதற்குப் பதிலாக, அது ஒரு குழந்தையாக வெளிவருவதற்கு ஆயத்தமாகும் வரையாக அதற்கு ஊட்டமளித்து அதைப் பாதுகாக்கிறது. அந்நிய திசுக்களை நிராகரிக்கும் விதிமுறையில் இந்த முக்கியமான விதிவிலக்கை செய்வதற்கு கருப்பைக்கு திறமையில்லாவிடில் மனித பிறப்பு சாத்தியமற்றதாக இருக்கும்.
அப்படியிருந்தும், ஒரு முதிர்க்கரு சுமார் நான்கே மாதங்களாக இருக்கையில் கருப்பையில் நிகழும் வளர்ச்சி மாத்திரம் இல்லையென்றால் புதிதாகப் பிறந்தக் குழந்தையின் வாழ்வு குறுகியதாகவே இருக்கும். அந்தச் சமயம் அது தன் கட்டைவிரலைச் சூப்ப ஆரம்பிக்கிறது, பின்னால் தன் தாயின் மார்பில் பாலருந்த அதற்கு உதவக்கூடிய தசைகளை பயிற்றுவித்துக்கொள்கிறது. ஒரு குழந்தையின் பிறப்புக்கு வெகு முன்னதாகவே தீர்மானிக்கப்படும் உயிர்-மற்றும்-மரணத்தை குறிக்கக்கூடிய விஷயங்களில் இது ஒன்றாகவே இருக்கிறது.
முதிர்க்கரு கருப்பையில் இருக்கையில் அதனுடைய இருதயத்தின் சுவரில் ஒரு துளை இருக்கிறது. ஆனால் இந்தத் துளை பிறப்பின் போது தானாகவே மூடிகொள்கிறது. கூடுதலாக, முதிர்க்கரு கருப்பையில் இருக்கையில் நுரையீரல் வழியாகச் செல்லும் ஒரு பெரிய இரத்தக்குழாய் பிறப்பின் போது தானாகவே சுருங்கிவிடுகிறது; குழந்தை சுவாசிக்க ஆரம்பிக்கையில் இரத்தம் இப்பொழுது பிராணவாயூட்டப்படும் நுரையீரலுக்கு செல்கிறது.
இவை அனைத்தும் வெறும் ஓர் ஆரம்பமே. வாழ்நாள் முழுவதுமாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மண்டலங்கள் (சுவாசம், இரத்த ஓட்டம், நரம்பு மற்றும் சுரப்பி மண்டலங்கள்) மனிதபுரிந்துகொள்ளுதலை தடுமாறச்செய்யும் ஆற்றலோடு தங்கள் கடமைகளை ஆற்றவும் ஒத்திசைவிக்கவும் செய்கின்றன—அனைத்தும் உயிரை பேணி காப்பதற்கே. கடவுளைப் பற்றி பண்டைய எழுத்தாளர் ஒருவர் இவ்விதமாகச் சொன்னது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.”—சங்கீதம் 139:14.
அவ்வழகிய வார்த்தைகளின் எழுத்தாளர், உயிர் குருட்டுத்தனமான, பரிணாம தற்செயல் அல்லது விபத்தின் விளைபொருள் என்பதாக நம்பவில்லை. அது அவ்வாறு இருக்குமென்றால், நாம் நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு உபயோகிக்கிறோம் என்பதைப் பற்றியதில் நமக்கு எந்த உண்மையான கடமைகளும் அல்லது பொறுப்புகளும் இருக்காது. என்றபோதிலும், உயிரின் இயக்கங்கள் வடிவமைப்பை தெளிவாக பிரதிபலிக்கிறது, வடிவமைப்பு வடிவமைப்பாளர் ஒருவரைத் தேவைப்படுத்துகிறது. பைபிள் இந்த நியமத்தை குறிப்பிடுகிறது: “எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.” (எபிரெயர் 3:4) ஆகவே, “கர்த்தரே [யெகோவாவே, NW] தேவனெ”ன்றும் “நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்,” என்றும் அறிவது இன்றியமையாததாகும். (சங்கீதம் 100:3) ஆம், உயிர் சாதகமான ஒரு விபத்தைக் காட்டிலும் அதிகமானதாகும்; அது கடவுளிடமிருந்தே வந்த பரிசாகும்.—சங்கீதம் 36:9.
காரியம் இப்படியிருக்க, உயிரளித்தவரிடமாக நமக்கு என்ன கடமைகள் இருக்கின்றன? நம்முடைய வாழ்க்கையை நாம் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்? இவையும் இதோடு சம்பந்தப்பட்ட கேள்விகளும் அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.