‘கடவுளையும் இயேசுவையும் பற்றிய அறிவை எடுத்துக்கொள்ளுதல்’
“ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) இயேசு தம்முடைய பரம தகப்பனிடமாக இவ்விதமாகச் சொல்லி, நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு இன்றியமையாத ஒரு முன்நிபந்தனையை இவ்விதமாக காண்பித்தார். ஆனால் புதிய உலக மொழிபெயர்ப்பு பெரும்பாலான பைபிள் மொழிபெயர்ப்புகள் குறிப்பிடுவது போல ஏன் “தேவனை . . . அறிவதே” என்பதற்கு பதிலாக “கடவுளைப் . . . பற்றிய அறிவை எடுத்துக்கொண்டிருப்பதே” என்று இந்த வசனத்தை மொழிபெயர்க்கிறது?—யோவான் 17:3-ன் அடிக்குறிப்பையும்கூட பாருங்கள்.
இங்கே ‘அறிவை எடுப்பது’ அல்லது “அறிவது” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதற்குரிய கிரேக்க வார்த்தை gi·noʹsko என்ற வினைச்சொல்லின் ஒரு வடிவமாகும். புதிய உலக மொழிபெயர்ப்பின் மொழியாக்கம், அவ்வார்த்தையின் பொருளை இயன்றவரை முழுமையாக வெளி கொணர வடிவமைக்கப்பட்டுள்ளது. gi·noʹsko-வின் அடிப்படை பொருள் “அறிவது” என்பதாகும். ஆனால் கிரேக்க வார்த்தை சிறு மாற்றங்களையுடைய அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. பின்வரும் சொல்விளக்கங்களை கவனியுங்கள்.
“GINOSKO (γινὦσκω) என்பது அறிவை எடுத்துக்கொள்வதை, அறிய வருவதை, கண்டுணர்வதை, புரிந்து கொள்வதை அல்லது முழுமையாக புரிந்து கொள்வதை அர்த்தப்படுத்துகிறது.” (W. E. வைன் எழுதிய புதிய ஏற்பாட்டு வார்த்தைகளுக்கு விளக்க அகராதி) ஆகவே gi·noʹsko-வை ‘அறிவை எடுத்துக்கொள்வது’ என்று மொழிபெயர்ப்பது புதிய உலக மொழிபெயர்ப்பை விமர்சிப்பவர்கள் வாதிடுவது போல ‘பைபிளை மாற்றுவதாகாது.’ இந்த வார்த்தை உள்ளடக்கக்கூடிய பல்வேறு சிறிய மாற்றங்களோடுகூடிய கருத்து வேறுபாடுகளைப் பற்றிய ஒரு கலந்தாய்வில், பிரசித்திப் பெற்ற சொற்களஞ்சிய ஆசிரியர் ஜேம்ஸ் ஹோப் மெளல்டன் இவ்விதமாகச் சொல்கிறார்: “நிகழ்கால தனிநிலையானது γινὦσκειν தொடர்ந்திருப்பதாக, ‘அறிவை எடுத்துக்கொண்டே இருப்பதாக உள்ளது.’”—புதிய ஏற்பாட்டு கிரேக்குவின் ஓர் இலக்கணம்.
கிரேக்க புதிய ஏற்பாட்டின் ஓர் இலக்கண உறுப்பாராய்வு யோவான் 17:3-ல் தோன்றுகிறபடி gi·noʹsko-வை “தொடர்ச்சியான ஒரு செயல்பாட்டை குறிப்பிடுவதாக” விளக்குகிறது. இந்தக் கிரேக்க வார்த்தையைப் பற்றிய கூடுதலான ஒரு குறிப்பு மார்வின் R. வின்சென்ட் எழுதிய புதிய ஏற்பாட்டு வார்த்தை ஆய்வுகளில் காணப்படுகிறது. இது சொல்கிறது: “நித்திய ஜீவன் அறிவில் அல்லது மாறாக அறிவை நாடுவதில் இணைந்திருக்கிறது, ஏனென்றால் நிகழ்கால வினைவடிவம் ஒரு தொடர்ச்சியை, படிப்படியாக முன்னோக்கிச் செல்கிற அறிவு உணர்ச்சியாக இருக்கிறது.” (தடித்த எழுத்துக்கள் அவருடையது.) A. T. ராபர்ட்ஸனின் புதிய ஏற்பாட்டில் வார்த்தைப் படங்கள், “அறிந்துகொண்டே இருப்பதே” என்று வார்த்தை மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கிறது.
ஆகவே மூல கிரேக்குவில், யோவான் 17:3-லுள்ள இயேசுவின் வார்த்தைகள், மெய்க்கடவுளையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்து கொள்ள தொடர்ந்த ஒரு முயற்சியை சுட்டிக்காட்டுகிறது, இது புதிய உலக மொழிபெயர்ப்பில் நன்றாக கொண்டு வரப்பட்டுள்ளது. கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாகப் படிப்பதன் மூலமாகவும் அவருடைய தராதரங்களுக்கு இசைவாக கீழ்ப்படிதலோடு நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் மூலமாகவும் இந்த அறிவை நாம் அடைகிறோம். (ஓசியா 4:1, 2; 8:2; 2 தீமோத்தேயு 3:16, 17 ஒப்பிடவும்.) கடவுளுடைய மற்றும் அவருடைய குமாரனின் ஆள்தன்மையை அறிந்துகொண்டு பின்னர் அவர்களைப் பின்பற்ற பிரயாசப்படுகிறவர்களுக்கு என்ன நேர்த்தியான வெகுமதி காத்திருக்கிறது? நித்திய ஜீவன்! (w92 3/1)