ஆவலைத் தூண்டுவதைவிட அதிகமான தூண்கள்
இஸ்ரேலின் கரையோரத்திலுள்ள பண்டைய துறைமுகமான சிசெரியாவில் மத்தியதரைக் கடலின் தூண்கள் பார்வையாளர்களின் ஆவலைத் தூண்டுகிறது. மகா ஏரோது இந்தத் துறைமுகத்தைக் கட்டி சீசர் அகஸ்டஸின் சிறப்புக் கருதி இதற்கு அவர் பெயரிட்டார்.
தொல்பொருள் ஆய்வாளர்கள் அதனுடைய பெரிய சுற்றுமாளிகை அரங்கம் உட்பட நகரின் பெரும்பகுதியைக் கண்டுபிடித்துவிட்டிருக்கிறார்கள். மணற்பாங்கான கரையோரமாக துறைமுக வளாகம் எப்படிக் கட்டப்பட்டது என்பதன் பேரில் உட்பார்வை பெற்றுக்கொள்ள அவர்கள் நீரில் மூழ்கியும் பார்த்துவிட்டனர்.
தி நியு யார்க் டைம்ஸ் (ஜனவரி 8, 1991) முன்னர் கடலினுள் நீட்டிக்கொண்டிருந்த ஓர் அரண்மனையின் எஞ்சியப் பகுதிகளுள் தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டதைக் குறித்து அறிவிப்பு செய்திருந்தது. இவைகள் மீது பொறிக்கப்பட்ட எழுத்துக்கள், முன்னர் அறியப்பட்டிராத ஒரு சில ரோம அதிபதிகளின் பெயர்களைக் குறிப்பிடுவதில் தானே இவைகளின் விசேஷம் இருக்கிறது. கப்பல்களின் “பொறுப்பாளர்”கூட குறிப்பிடப்பட்டுள்ளது, இதுவே “துறைமுகத்தோடு சம்பந்தப்பட்ட முதல் கல்வெட்டு பொறிப்பாகும்.”
அப்போஸ்தலனாகிய பவுல் இரண்டு மிஷனரி பிரயாணங்களின் முடிவிலும் இந்தத் துறைமுகத்திற்கு கடற்பிரயாணம் செய்தார் என்பதை பைபிள் மாணாக்கர்கள் அறிவர். இங்கே அவர் சுவிசேஷகனாகிய பிலிப்புவோடே தங்கியிருந்தார், அவருடைய அனுபவங்கள் சீஷர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியிருக்க வேண்டும். (அப்போஸ்தலர் 18:21, 22; 21:7, 8, 16) இந்தக் கிளர்ச்சியூட்டும் பல அனுபவங்களை பைபிள் புத்தகமாகிய அப்போஸ்தலர் நடபடிகளில் நாம் வாசிக்கலாம்.
ஆகவே கரையோரம் நெடுகிலுமாக காணப்படும் இந்தத் தூண்கள் வெறுமனே பயனற்ற வரலாற்றுச் சின்னங்கள் அல்ல. இவை கிறிஸ்தவர்களுக்கு துறைமுகங்களிலும் “பூமியின் கடைசிபரியந்தமும்” நற்செய்தியை சுறுசுறுப்பாக பரப்பி வந்த தங்களுடைய முற்காலத்திய சகோதரர்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது.—அப்போஸ்தலர் 1:8.