உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w92 2/1 பக். 5-7
  • கடவுள் பழிவாங்கும் நாள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுள் பழிவாங்கும் நாள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பழிவாங்கும் ஒரு நாள் ஏன் தேவை?
  • கடவுள் பழிவாங்கும் நாள் எதை நிறைவேற்றும்?
  • நீங்கள் என்ன செய்வீர்கள்?
  • பழிவாங்குதல் தவறா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • யெகோவாவின் பழிவாங்கும் நாளை அறிவித்தல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ‘உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
w92 2/1 பக். 5-7

கடவுள் பழிவாங்கும் நாள்

முந்தின கட்டுரையில் நாம் பார்த்தப் பிரகாரம், நாம் பழிவாங்க நாடுவது ஏன் தவறென்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அது தவறு ஏனெனில் முடிவில் அது எதையும் தீர்ப்பதில்லை. அது தவறு ஏனெனில் நட்பை ஒன்றிணைத்து உறுதிப்படுத்துவதற்குப் பதில் பகையை மேலும் கடுமையாக்குகிறது. மேலும் அது தவறு ஏனெனில் பழிவாங்கும் எண்ணங்களை மனதில் பேணி வளர்ப்பவனுக்கு அது தீங்குண்டாக்குகிறது.

எனினும், மனிதர் பழிவாங்குவது ஏன் தவறென்பதற்கு மிக அதிக முக்கியமான காரணம், மோசே இஸ்ரவேலுக்குக் கூறின பின்வரும் வார்த்தைகளில் காணப்படுகிறது: “உன் கடவுளாகிய யெகோவா இரக்கமுள்ள தேவன்.” (உபாகமம் 4:31, NW) கடவுள் இரக்கமுள்ளவராதலால், நாமும் அவரைப்போல் இரக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும். “உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல், தொடர்ந்து இரக்கமுள்ளவர்களாகிக் கொண்டிருங்கள்,” என்று இயேசு தம்மைப் பின்பற்றினோருக்குக் கூறினார்.—லூக்கா 6:36, NW.

எனினும், பைபிள் யெகோவாவைப் “பழிவாங்கும் கடவுள்,” எனவும் விவரிக்கிறது. (சங்கீதம் 94:1, தி.மொ.) தீர்க்கதரிசியாகிய ஏசாயா “யெகோவாவின் அநுக்கிரக வருஷத்தைப்” பற்றியும் மேலும் “நமது கடவுள் பழிவாங்கும் நாளைப்”பற்றியும் பேசுகிறான். (ஏசாயா 61:2, தி.மொ.) கடவுள் எவ்வாறு இரக்கமுள்ளவரும் பழிவாங்குபவருமாக இருக்க முடியும்? மேலும் கடவுளுடைய இரக்கத்தை நாம் பின்பற்றவேண்டுமென்றால் அவர் பழிவாங்குவதையும் நாம் ஏன் பின்பற்றக்கூடாது?

முதல் கேள்விக்குப் பதில் என்னவெனில், கடவுள் மனிதவர்க்கத்தை நேசிப்பதால் இரக்கமுள்ளவராக இருக்கிறார், மேலும் மனிதர் தங்கள் கெட்ட வழிகளைத் திருத்திக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பளிக்கும்படி அவர் தம்மால் கூடிய அதிக அளவிலும் கூடிய நீடித்தக் காலமும் மன்னிக்கிறார். அப்போஸ்தலன் பவுலைப்போல், பலர் இந்த இரக்கத்தை, நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அத்தகைய இரக்கம் குறிப்பிட்ட ஓரளவு காலம் மட்டுமே நீடிக்கக்கூடுமாதலால், கடவுள்—நீதியைச் சரிக்கட்டும் கருத்தில்—பழிவாங்குபவருமாக இருக்கிறார். சிலர் தங்கள் கெட்ட வழிகளை ஒருபோதும் மாற்றப்போவதில்லையென நிரூபித்தப் பின்பு, கடவுள், ஆக்கினைத் தீர்ப்பைத், தம் பழிவாங்கும் நாள் என அழைக்கப்படும் காலத்தின்போது நிறைவேற்றுவார்.

இரண்டாவது கேள்விக்குப் பதில், இல்லை என்பதே, கடவுள் பழிவாங்குவதால் நாமும் பழிவாங்கலாமென்பது சரியல்ல. யெகோவா நீதியில் பரிபூரணர். மனிதர் அவ்வாறில்லை. கடவுள் ஒரு காரியத்தின் எல்லா அம்சங்களையும் காண்கிறார், எப்பொழுதும் நீதியானத் தீர்ப்பு செய்கிறார். அவ்வாறு செய்வதற்கு நம்மை நம்பமுடியாது. அதனிமித்தமே பவுல் பின்வருமாறு அறிவுரை கூறினான்: “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் [யெகோவா, NW] சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.” (ரோமர் 12:19) நம்முடைய சொந்த நலனுக்காக, பழிவாங்குதலை நாம் யெகோவாவின் கைகளில் விட்டுவிட வேண்டும்.

பழிவாங்கும் ஒரு நாள் ஏன் தேவை?

எனினும், மனந்திரும்பாத பாவிகளிடம் கணக்குக் கேட்பதற்கானத் தேவையை பைபிள் பல இடங்களில் ஒப்புக்கொள்கிறது. உதாரணமாக, “கடவுளை அறியாதவர்களும் கர்த்தராகிய இயேவைப் பற்றிய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களுமானோரின் மீது பழித்தீர்ப்பைக்” கடவுள் இயேசுவின் மூலம் கொண்டுவருவாரென அப்போஸ்தலன் பவுல் முன்னறிவித்தான். (2 தெசலோனிக்கேயர் 1:8, NW) இவ்வார்த்தைகளைப் பொறுப்புணர்ச்சியுடன் ஏற்க நமக்கு எல்லா காரணங்களும் இருக்கின்றன. ஏன்?

ஒரு காரணம் என்னவெனில், இன்று பெரும்பான்மையர் சிருஷ்டிகரின் அரசாட்சியை எதிர்ப்பதில் பிடிவாதமாய்த் தொடருகின்றனர். அவருடைய நீதியுள்ள சட்டங்களை அவர்கள் அவமதிக்கின்றனர். கடவுளில் நம்பிக்கை வைப்பதாக அவர்கள் உரிமை பாராட்டினாலும் பாராட்டாவிடினும், அவர்களுடைய நடத்தை, தாங்கள் கடவுளுக்குமுன் கணக்கொப்புவிக்க வேண்டியவர்களாக அவர்கள் உணருகிறதில்லையென தெளிவாய்க் காட்டுகிறது. சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகள் அத்தகைய எல்லாருக்கும் பொருந்துகின்றன: “துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்?” (சங்கீதம் 10:13) நிச்சயமாகவே, யெகோவா, தாம் இம்முறையில் நிந்திக்கப்பட என்றென்றும் அனுமதித்துக்கொண்டிரார். அவர் அன்புள்ள கடவுளாயினும், நீதியான கடவுளாகவும் இருக்கிறார். நீதியின்பேரில் உண்மையில் அக்கறையுடையோரின் கூக்குரல்களுக்கு அவர் செவிகொடுப்பார்: “யெகோவா எழுந்தருளும், கடவுளே, உமது கையை உயர்த்தும், சிறுமையானவர்களை மறந்துவிடாதேயும்.”—சங்கீதம் 10:12, தி.மொ.

மேலும், சட்டத்தை எதிர்க்கும் மக்கள் நாம் வாழும் இந்தப் பூமியைத்தானே பாழாக்குகின்றனர். ஆகாயத்தையும், நிலத்தையும், தண்ணீரையும் தூய்மைக்கேடு செய்கின்றனர்; பூமியை அநீதியாலும் கொடுமையாலும் நிரப்புகின்றனர். மனிதவாழ்க்கையையே முற்றிலும் அழித்துப்போடுவதற்கு பயமுறுத்தும் போதியளவு இரசாயன, அணுசக்தி, மற்றும் மற்றக் கொல்லும் தன்மைவாய்ந்தக் கொடிய போர்த்தளவாடங்களை அவர்கள் திரளாய்ச் சேகரித்துவைக்கின்றனர். கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்குப் பாதுகாப்பான ஓர் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்குத் தெய்வீகத் தலையிடுதல் முற்றிலும் அவசரமாயிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 11:18) இந்தத் தலையிடுதலையே ஏசாயா பழிவாங்கும் நாள் எனக் குறிப்பிட்டான்.

கடவுள் பழிவாங்கும் நாள் எதை நிறைவேற்றும்?

வைன் என்பவரின் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டுச் சொற்களுக்குரிய விளக்கமான அகராதியின்படி, கிரேக்க வேத எழுத்துக்களில், பழிவாங்குதல் என்றச் சொல், கடவுள் சம்பந்தமாகப் பயன்படுத்துகையில் பின்வருமாறு நேர்ப்பொருளுடையது: “‘நீதியிலிருந்து தோன்றுவது,’ மனிதர் பழிவாங்குதல் சம்பந்தமாக அடிக்கடி இருப்பதுபோல் தீங்கிழைக்கப்பட்ட உணர்ச்சியிலிருந்து அல்லது வெறுமென கோபாவேச உணர்ச்சியிலிருந்து தோன்றுவதல்ல.” இவ்வாறு சத்துருக்களுக்கு எதிராகக் கடவுள் பழிவாங்குவது குடும்பப் பரம்பரை பழித்தீர்ப்பைப்போல், கட்டுப்பாடற்ற இரத்தஞ் சிந்துதலின் காலமாயிராது. “தெய்வபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று விடுவிக்கவும் அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கென்று வைக்கவும் கர்த்தருக்குத் [யெகோவாவுக்கு, NW] தெரியும்,” என பைபிள் நமக்குச் சொல்லுகிறது.—2 பேதுரு 2:9, தி.மொ.

கடவுளுடைய ஊழியர்கள், கடவுள் பழிவாங்கும் நாளை, நேர்மையான நடத்தை நியாயமென நிரூபிக்கப்பட்டு, நீதிமான்கள் பொல்லாதவர்களின் ஒடுக்குதலிலிருந்து விடுவிக்கப்படும் காலமாக ஆவலோடு எதிர்ப்பார்க்கின்றனர். இது அவர்கள் வன்ம மனப்பான்மையுடையோராக அல்லது பழிவாங்கும் எண்ணமுடையோராக இருக்கின்றனரென பொருள்படுகிறதில்லை. “பிறர் கேட்டில் களிப்பவன் தண்டனைக்குத் தப்பான்,” என்று பைபிள் எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 17:5, தி.மொ.) இதற்கு நேர்மாறாக, அவர்கள் இரக்கத்தையும் பரிவு உணர்ச்சியையும் வளர்க்கின்றனர், கடவுளே பழிவாங்குதலைக் குறித்தத் தீர்மானங்களைச் செய்யும்படி விடுகின்றனர்.

மெய்தான், கோபத் தன்மையுள்ள ஆட்கள் இம்முறையில் நடப்பது எளிதல்ல. ஆனால் இது கூடியதே, மேலும் பலர் அவ்வாறு செய்தும் இருக்கின்றனர். உதாரணமாக, பெத்ரோவின் சிறுபிராய வாழ்க்கை துயரமான ஒன்றாயிருந்தது. அவனுடைய மூத்த சகோதரன் அவனை அடிக்கடி அடித்தான். ஆகையால் அவன் வன்னடத்தையுள்ள ஆளாக வளர்ந்தான், அடிக்கடி போலீஸ் கண்டிப்புக்கு ஆளானான், மேலும் தன் சகோதரனிடம் தனக்கிருந்த கோப உணர்ச்சியைத் தன் மனைவி மற்றும் பிள்ளைகளின்பேரில் காட்டினான். கடைசியாக, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவருக்குச் செவிகொடுத்து பின்னால் பைபிள் படிக்கத் தொடங்கினான். “யெகோவாவின் உதவியால் நான் மாறினேன், இப்பொழுது, ஆட்களோடு சண்டைசெய்வதற்குப்பதில், கிறிஸ்தவ மூப்பனாக நான் அவர்களுக்கு உதவிசெய்கிறேன்,” என அவன் கூறுகிறான். வஞ்சப்பகை அல்லது பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்த எண்ணற்ற மற்றவர்கள் அவ்வாறே பைபிளின் மற்றும் பரிசுத்த ஆவியின் உதவியால் மற்றவர்களிடம் அன்பும் பொறுமையும் காட்டுவோராக மாறியிருக்கின்றனர்.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

கடவுள் பழிவாங்கும் நாள் வருவதை மனதில் வைத்திருப்பது யெகோவாவின் பொறுமையை நன்மைக்கேதுவாகப் பயன்படுத்திக்கொள்ள நமக்கு உதவிசெய்யும். ஆனால் அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பு வரம்பற்றதாயில்லை. அந்த நாள் சீக்கிரத்தில் வந்துசேரும். அது ஏற்கெனவே வராததன் காரணத்தை அப்போஸ்தலன் பேதுரு பின்வருமாறு காட்டினான்: “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் [யெகோவா, NW] தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.”—2 பேதுரு 3:9.

அவ்வாறெனில், வேத எழுத்துக்களைப் படித்து அவற்றின் அறிவுரையைப் பொருத்திப்பயன்படுத்தி வருவதன்மூலம் கடவுள் பழிவாங்கும் நாளுக்காக இப்பொழுதே ஆயத்தஞ்செய்வது மிக அவசரம். இது சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகளைப் பின்பற்ற நமக்கு உதவிசெய்யும்: “கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் [யெகோவாவுக்கு, NW] காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.”—சங்கீதம் 37:8, 9. (w91 11/1)

[பக்கம் 7-ன் படம்]

‘யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்கள்,’ கடவுள் பழிவாங்கும் நாளுக்குப் பின்னர் ‘பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்