“கேட்கிற எவனும் ‘வா!’ என்பானாக”
“ஆவியும் மணவாட்டியும் ‘வா!’ என்கிறார்கள்; கேட்கிறவனும் ‘வா!’ என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.”—வெளிப்படுத்துதல் 22:17.
1. நாம் எந்தத் “தண்ணீரி”டமாக ‘வரும்’படியாக அழைக்கப்படுகிறோம்?
நீங்கள் ‘வா!’ என்பதாக வரவேற்கப்படுகிறீர்கள். எதற்காக வரவேண்டும்? ஏன், தண்ணீரினால் உங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக வர வேண்டும். இது சாதாரண தண்ணீர் அல்ல, ஆனால் இயேசு கிறிஸ்து கிணற்றினருகே சமாரியப் பெண்ணிடம் பின்வருமாறு பேசியபோது அவர் குறிப்பிட்ட அதே தண்ணீராகும்: “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்.” (யோவான் 4:14) இயேசு இந்தத் “தண்ணீரை” எங்கிருந்து பெற்றுக்கொண்டார்?
2. “தண்ணீரின்” ஊற்றுமூலம் எது? எந்தச் சம்பவத்திற்குப் பின்பு மாத்திரமே அது பாய்ந்தோட முடியும்?
2 அப்போஸ்தலனாகிய யோவான் வெளிப்படுத்துதல் 22:1-ல் குறிப்பிட்டபடி, இந்தத் “தண்ணீர்” எந்த ஊற்றுமூலத்திலிருந்து புறப்பட்டு வந்தது என்பதை ஒரு தரிசனத்தில் காண அவன் சிலாக்கியம் பெற்றான்: “பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.” ஆம், ஜீவனைக்கொடுக்கும் மூலப்பொருட்களடங்கிய இந்தப் பளிங்குப் போன்ற தெளிவானத் தண்ணீரின் ஊற்றுமூலம், ஜீவனைக் கொடுப்பவராகிய யெகோவாவேயன்றி வேறு எவரும் இல்லை. இவர் இதை ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகக் கிடைக்கும்படிச் செய்கிறார். (வெளிப்படுத்துதல் 21:6 ஒப்பிடவும்.) “தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம்” குறிப்பிடப்பட்டிருப்பதன் காரணமாக, 1914-ல் மேசியானிய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பின்பு, அதாவது கர்த்தருடைய நாள் ஆரம்பமான பின்பு, ஜீவத்தண்ணீர் பாய்ந்தோட ஆரம்பித்திருக்க வேண்டும்.—வெளிப்படுத்துதல் 1:10.
3, 4. “தண்ணீர்” எதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது? யாருக்கு அது கிடைக்கக்கூடியதாக இருக்கும்?
3 இந்த ஜீவத்தண்ணீர் எதை அர்த்தப்படுத்துகிறது? பரிபூரண மனித வாழ்க்கையை, மீட்டுதருவதற்கான கடவுளுடைய ஏற்பாட்டை, பரதீஸாக மாற்றப்பட்ட பூமியின் மீது பரிபூரணத்தில் நித்திய ஜீவனைக் குறிக்கிறது. ஜீவத்தண்ணீர், இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஜீவனுக்கான எல்லா ஏற்பாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. இவை அனைத்தும் இப்பொழுது கிடைக்கக்கூடியதாக இருக்கிறதா? இல்லை. அவற்றில் அனைத்தும் இல்லை. ஏனென்றால் கடவுள் முதலாவதாக தற்போதைய பொல்லாத காரிய ஒழுங்கை அதன் காணக் கூடாத அரசனாகிய பிசாசாகிய சாத்தானோடுகூட நீக்கிவிட வேண்டும். ஆனால் இந்தத் “தண்ணீரில்” இப்பொழுது கிடைக்கக்கூடியதை நாம் எடுத்துக்கொள்ளலாம். ராஜ்யத்தின் நற்செய்தியைக் கேட்டு, கீழ்ப்படிந்து அதோடு அதற்கிசைவாக நம்முடைய வாழ்க்கையை நடத்துவதன் மூலம் அதைச் செய்யலாம்.—யோவான் 3:16; ரோமர் 12:2.
4 இவ்விதமாக யோவானுக்கு ‘ஜீவநதியைக்’ காண்பித்தப் பிறகு இயேசு தம்முடைய தூதனை ஒரு தரிசனத்தோடு அனுப்பியதில் தம்முடைய நோக்கத்தைப் பற்றி யோவானிடம் பேசினார். பின்னர் யோவான் இந்த அறிவிப்பைக் கேட்டான்: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” (வெளிப்படுத்துதல் 22:17) ஆகவே, தேவனுடைய ஆட்டுக்குட்டியின் மூலமாக பூமியின் மீது நித்திய ஜீவனைப் பெறுவதற்குரிய கடவுளுடைய ஏற்பாடுகளைப் பருக ஆரம்பிக்கும்படியாகத் தாகமாயிருப்பவர்களுக்குக் கடவுளுடைய ஊழியர்கள் அழைப்பை நீட்டுகிறார்கள்.—யோவான் 1:29.
ஜீவத்தண்ணீர்களுக்கான தேவை எழுகிறது
5. மனிதவர்க்கத்துக்கு இந்தத் தெய்வீக ஏற்பாட்டின் தேவை ஏற்பட்டது எவ்வாறு?
5 விசனகரமாக, மனித குடும்பத்தின் முதல் பெற்றோர், தங்களுடைய சந்ததிக்கு ஒரு பரதீஸிய வீட்டில் என்றென்றுமாக பரிபூரண மனித ஜீவனை அனுபவிக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கக்கூடிய பாதையை வாழ்க்கையில் பற்றிக்கொண்டிருக்கவில்லை. மனிதவர்க்கத்துக்கு நித்திய ஜீவன், ஆதாம் தன்னுடைய சிருஷ்டிகரைக் கீழ்ப்படிதலுடன் சேவிக்கும் புத்திக்கூர்மையுள்ள தெரிவை செய்வதைத் தேவைப்படுத்தியது. கலகத்தனமான ஓர் ஆவி சிருஷ்டியின் செல்வாக்கின் கீழ், ஏவாள் மனிதவர்க்கத்துக்கு மரணத்தில் விளைவடைந்த ஓர் இயக்கத்தைத் துவங்கிவைத்தாள். அவளுடைய பரிபூரண கணவனாகிய ஆதாம், மரண–தொடர்புடைய அந்தப் போக்கில் அவளைச் சேர்ந்துகொள்வதைத் தெரிந்துகொண்டான். இவ்விதமாக, வரவிருந்த மனிதவர்க்க சந்ததிகளுக்கு இயற்கையான உயிரைக்கொடுப்பவனாக, உண்மையில் ஆதாமே முழு மனித குடும்பத்தினுள்ளும் மரணம் செயல்படுவதை அறிமுகப்படுத்தினான். ஆகவே பைபிள் சொல்வதாவது: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது.” (ரோமர் 5:12) ஆதாமும் ஏவாளும் பாவத்துக்குள் வீழ்ந்த பின்புதானே அவர்கள் மனித குடும்பத்துக்குப் புதிய உறுப்பினர்களைக் கூட்ட ஆரம்பித்தார்கள்.—சங்கீதம் 51:5.
6. “தண்ணீர்” கிடைப்பதற்கு யெகோவா ஏன் ஏற்பாடு செய்தார்?
6 பரிபூரண மனிதர்கள் நிரம்பிய ஒரு பரதீஸிய பூமியை உண்டுபண்ணும் தம்முடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தில் கடவுள் என்றென்றுமாக தடுத்து நிறுத்தப்பட இருந்தாரா? பைபிள் நிச்சயமாகவே இல்லை என்பதாகப் பதிலளிக்கிறது. இருப்பினும், தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஆதாமின் அவலமான குறைபாடுகளைச் சமப்படுத்தி, அதேசமயத்தில் நியாயம் மற்றும் நீதியின் முழுமையும் இறுதியுமான வெளிக்காட்டாக இருக்கும் அவர், அதோடு முழு இசைவாக இருக்கக்கூடிய ஓர் அன்புள்ள ஏற்பாட்டைச் செய்தார். இதை அவர் “ஜீவத்தண்ணீருள்ள நதி”யின் மூலமாகச் செய்கிறார். அதன் மூலமாக, ஜீவ ஊற்றினிடமாகச் செல்லும் வாய்ப்பை இழந்த கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்குப் பரிபூரண மனித ஜீவனை அவர் மீட்டுத்தருவார். இந்த நதி இயேசு கிறிஸ்துவின் ஆயிரம் வருட ஆட்சியின் போது அதனுடைய முழுமையான கருத்தில் பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக, கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சி முழுவதிலுமாக, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் உட்பட மனிதர்கள், “ஜீவத்தண்ணீருள்ள நதி”யில் பருக வேண்டும்.—எசேக்கியேல் 47:1–10; அப்போஸ்தலர் 24:15-ஐ ஒப்பிடவும்.
7 யெகோவா தம்முடைய சொந்த ஜீவனை அனுபவித்துக்களிக்கிறார். தம்முடைய சிருஷ்டிகள் சிலவற்றின் மீதும் புத்திக்கூர்மையுள்ள ஜீவனை அளிக்கும் சிலாக்கியத்தை அனுபவித்துக்களிக்கிறார். இயேசுவின் மீட்பின் பலியே யெகோவாவின் ஜீவனைக்கொடுக்கும் ஏற்பாட்டின் அடிப்படையாக இருக்கிறது. (மாற்கு 10:45; 1 யோவான் 4:9, 10) சில சமயங்களில் பைபிள், “தண்ணீர்” என்பதாகக் குறிப்பிடும் கடவுளுடைய வார்த்தையும்கூட உட்பட்டிருக்கிறது. (எபேசியர் 5:26) கடவுள் பரிபூரண மனித தம்பதியான ஆதாமுக்கும் ஏவாளுக்கும் செய்திருந்த ஆதி ஏற்பாடுகளின் இழப்பை அனுபவித்திருக்கும் மனித சிருஷ்டிகளிடம் “வா!” என்று சொல்ல யெகோவா தேவன் உரிமையுள்ளவராக இருக்கிறார்.
மணவாட்டி வகுப்பு “வா!” என்ற அழைப்பை நீட்டுகிறது
8. யாருக்கு மற்றும் எப்போது இந்தத் “தண்ணீர்” முதலாவதாக அளிக்கப்பட்டது?
8 யெகோவாவின் முதல்பேறான ஆவிக்குமாரனாகிய ஆட்டுக்குட்டியின் அடையாளமான மணவாட்டியை உண்டுபண்ணுகிறவர்களே “வா!” என்ற அழைப்பை நீட்டுவதில் முதலாவதாக இருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:1, 3, 4; 21:9) கிறிஸ்துவின் ஆவிக்குரிய மணவாட்டி “வா!” என்பதாகத் தன்னிடமே சொல்லிக்கொண்டில்லை, அதாவது அதை எண்ணிக்கையில் 1,44,000-ஆக ஆக்குவதற்காக, யெகோவா தேவன் மணவாட்டி வகுப்பின் பாகமாக இன்னும் கூட்டிச் சேர்க்கப்பட இருப்பவர்களிடமாகச் சொல்லிக்கொண்டில்லை. அந்த அழைப்பு, அர்மகெதோனுக்குப் பின்பு பூமியின் மீது பரிபூரண மனித ஜீவனை அடைய நம்பியிருக்கும் மனிதர்களுக்கு நீட்டப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 16:14, 16) 1914 முதற்கொண்டு, இந்தக் காரிய ஒழுங்கின் முடிவின்போது, கடவுளுடைய பரிசுத்த ஆவியின் ஒத்தாசையோடு “மணவாட்டி”யால் நீட்டப்படும் அழைப்பை நாம் கேட்டிருக்கிறோம்.
9. இது வெறுமென ஒரு சிறிய தொகுதிக்கு அல்ல என்பது நமக்கு எப்படித் தெரியும்?
9 ‘ஒருவனும் எண்ணக்கூடாத திரளான கூட்டமாகிய ஜனங்கள்’ கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியின் அறிவிப்புக்குப் பிரதிபலித்து அந்த ராஜரீக அரசாங்கத்தின் பக்கத்தில் தங்களை உறுதியாக வைத்துக்கொள்வார்கள் என்பதை பைபிளின் கடைசி புத்தகம் காண்பிப்பது கிளர்ச்சியூட்டுவதாக உள்ளது. (வெளிப்படுத்துதல் 7:9, 10, 16, 17) அந்தத் திரள்கூட்டத்தாரில் நீங்கள் ஒருவரா? அப்படியென்றால், “கேட்கிற எவனும் ‘வா!’ என்பானாக.”
ஆவியும் மணவாட்டியும், “வா!” என்கிறார்கள்
10. அடையாள அர்த்தமுள்ள தண்ணீர் எங்கிருந்து வெளிப்பட்டு வரவேண்டும்? ஏன்?
10 ஆனால் ஏன் கடவுளும் அடையாளமான மணவாளனும் வெளிப்படுத்துதல் 22:17-ல் குறிப்பிடப்பட்டில்லை? முதலாவதாக, ஆவி யாருடைய வழிநடத்துதலின் கீழ் கிரியை செய்கிறது என்பதை வசனம் சொல்வதில்லை என்பதைக் கவனியுங்கள். என்றபோதிலும், ஆவியைப் பற்றிய குறிப்பு நம்முடைய கவனத்தை யெகோவா தேவனிடமே திருப்புகிறது. பிதா காட்சியிலிருந்து வெளியே தள்ளப்படுவதில்லை, ஏனென்றால் அவரே பரிசுத்த ஆவியின் ஊற்றுமூலமாக இருக்கிறார். இரண்டாவது குமாரன், அவர்தாமே சொல்லுகிறபடி, தம்முடைய பிதாவோடு முழுமையாக ஒத்துழைக்கிறார்: “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்.” (யோவான் 5:19) மேலுமாக, இந்த அழைப்பு ஆதிகாரணராகிய யெகோவா தேவனிடமிருந்தே வெளிப்பட்டுத் தோன்றிய ஆவியால் ஏவப்பட்ட கூற்றாக இருக்கையில், மனிதர்கள் தெய்வீக வழிநடத்துதலை அல்லது “ஏவப்பட்ட வெளிப்படுத்தல்கள்” “வார்த்தை”யாகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாகப் பெற்றுக்கொள்ளமுடியும். (வெளிப்படுத்துதல் 22:6; மற்றும் 22:17 ஆங்கில ஒத்துவாக்கிய பைபிள், அடிக்குறிப்பு; யோவான் 1:1) அப்படியென்றால், இந்த அழைப்போடு பொருத்தமாகவே நாம் மணவாளனாகிய கிறிஸ்துவைச் சம்பந்தப்படுத்துகிறோம். ஆம், மணவாளனின் தந்தையான யெகோவா தேவனும் மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவும் ஆகிய இருவருமே “வா!” என்று சொல்வதில் பரிசுத்த ஆவியின் மூலமாக “மணவாட்டி”யை சேர்ந்துகொள்கிறார்கள் என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம்.
11, 12. (எ) குடிப்பதற்கான அழைப்பு விரிவாக்கப்படும் என்பதற்கு அங்கு என்ன ஆரம்பகால அறிகுறி இருந்தது? (பி) ஆண்டுகளினூடாகக் காரியம் எவ்விதமாக அதிகமதிகமாகத் தெளிவானது?
11 பல பத்தாண்டுகளாக “வா!” என்ற இந்த அழைப்பு “ஜீவத்தண்ணீருக்காக” தாகமாயிருக்கும் ஜனங்களுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. 1918-லேயேக்கூட, மணவாட்டி வகுப்பு, பூமியின் மீது வாழக்கூடியவர்களைக் குறிப்பாக உட்படுத்திய செய்தியைப் பிரசங்கிக்க ஆரம்பித்துவிட்டது. அது, “இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் இலட்சக்கணக்கானோர் ஒருவேளை ஒருபோதும் மரிக்கமாட்டார்கள்” என்ற தலைப்புடைய பொதுப்பேச்சாக இருந்தது. இது, அநேகர் அர்மகெதோனைத் தப்பிப்பிழைத்து அதற்குப் பின்பு கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின் கீழ் பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனைப்பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையை அளித்தது. ஆனால் அந்தச் செய்தி பொதுவாக நீதியினாலே என்பதாகத் தெரிவித்ததேயன்றி, இந்தத் தப்பிப் பிழைக்கும் சிலாக்கியத்துக்கான வழியைத் திட்டவட்டமாக காண்பிக்கவில்லை.
12 “வா!” என்ற அழைப்போடு அதிகமாக ஆட்களை எட்டுவதற்காக 1922-ல் கடவுளைச் சேவிக்க அக்கறையாயிருந்த அனைவருக்கும், “ராஜாவையும் ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள்” என்ற செய்தி சென்றது. 1923-ல் மத்தேயு 25:31–46-ல் இயேசுவின் உவமையின் “செம்மறியாடுகளும்” “வெள்ளாடுகளும்” அர்மகெதோனுக்கு முன்னால் வெளிப்படுவார்கள் என்பதை மணவாட்டி வகுப்பு புரிந்துகொண்டனர். பின்னர் 1929-ல் மார்ச் 15, ஆங்கில காவற்கோபுரம் “கனிவான அழைப்பு” என்ற விசேஷக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. வெளிப்படுத்துதல் 22:17 அதன் பேச்சுப்பொருள் வசனமாக இருந்தது. “வா!” என்ற அழைப்பை நீட்ட வேண்டிய மணவாட்டி வகுப்பின் பொறுப்பை அது உயர்த்திக் காண்பித்தது.—பக்கங்கள் 87–9.a
“வா!” என்று சொல்வதில் வேறே ஆடுகள் சேர்ந்துகொள்கின்றனர்
13, 14. 1930-களில், அடையாள அர்த்தமுள்ள தண்ணீரை மற்றவர்கள் குடிப்பார்கள் என்பதற்கு என்ன கூடுதலான தெளிவுபடுத்துதல் கொடுக்கப்பட்டது?
13 1932-ம் ஆண்டிலேயே “வா!” என்று சொல்வதில் வேறே ஆடுகளின் உத்தரவாதத்தைக் காவற்கோபுரம் சுட்டிக்காண்பித்தது. (யோவான் 10:16) அதனுடைய ஆகஸ்ட் 1, ஆங்கில பிரதி பக்கம் 232-ல் பாரா 29 சொன்னதாவது: “யெகோவாவின் சாட்சிகள் இப்பொழுது யெகூவைப் போல வைராக்கியமுடையவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் யோனதாப் வகுப்பினரை [வேறே ஆடுகள்] தங்களோடே கூட வந்து, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்று மற்றவர்களுக்கு அறிவிப்பதில் ஓரளவான பங்கை எடுத்துக் கொள்ளுமாறு உற்சாகப்படுத்த வேண்டும்.” பின்னர், வெளிப்படுத்துதல் 22:17-ஐ மேற்கோள் காண்பித்தப் பிறகு பாரா சொன்னதாவது: “ராஜ்யத்தின் நற்செய்தியைச் சொல்வதில் பங்கு கொள்ளஇருக்கும் அனைவரையும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் உற்சாகப்படுத்தட்டும். கர்த்தருடைய செய்தியை அறிவிப்பதற்கு அவர்கள் கர்த்தரின் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக இருக்கவேண்டியதில்லை. யெகோவாவின் தாராளமான நற்குணத்தின் காரணமாக அர்மகெதோனின் ஊடாகக் கொண்டுசெல்லப்பட்டு பூமியின் மீது நித்திய ஜீவன் கொடுக்கப்படும் ஒரு ஜனத்தொகுதிக்கு ஜீவத்தண்ணீர்களைக் கொண்டு செல்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பது இப்பொழுது அவர்களுக்குப் பெரும் ஆறுதலாக இருக்கிறது.”b
14 வேறே ஆடுகள் இப்போது கடவுளுக்குத் தங்களைத் தாங்களே ஒப்புக்கொடுத்து தண்ணீர் முழுக்காட்டுதல் மூலமாக இந்த ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தி பின்னர், தாகமாயிருக்கும் இன்னும் மற்றவர்களை “வா!” என்று சொல்வதில் மணவாட்டி வகுப்பைச் சேர்ந்து கொள்ளவேண்டும் என்பதை அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோர் 1934 முதற்கொண்டு சுட்டிக்காண்பித்தனர். இவ்விதமாக, தாகமாயிருக்கும் இந்த வேறே ஆடுகளை, “ஒரே மேய்ப்பனாகிய” இயேசு கிறிஸ்துவின் கீழ் “ஒரே மந்தை”க்குள் ஒன்றாகக் கூட்டிச்சேர்ப்பதற்கு மணவாட்டி வகுப்பினரால் இப்பொழுது தெளிவான ஓர் அழைப்பு இருந்தது. (யோவான் 10:16) 1935-ல், அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர், “வா!” என்பதாகச் சொல்லிக்கொண்டிருந்த அந்தச் செம்மறியாடுகளைப் போன்ற ஜனங்களின் வகுப்பு உண்மையில் வெளிப்படுத்துதல் 7:9–17-லுள்ள “திரள் கூட்டத்தாரே” என்பதை அந்த வருடத்தில் அவர்களுடைய பொது மாநாட்டில் கற்றறிவதில் கிளர்ச்சியடைந்தனர். இது அழைப்பு வேலைக்குப் பிரமாண்டமான செயல்தூண்டுதலை அளித்தது.
15. “வா!” என்ற அழைப்பில் “ஆவி” எவ்விதமாக உட்பட்டிருக்கிறது?
15 “வா!” என்பதாக அழைப்பதில் மணவாட்டி வகுப்பு கடவுளுடைய ஆவியோடு இசைவாக இருந்தது. எழுதப்பட்ட வார்த்தையின் தீர்க்கதரிசனங்களின் பொருளைத் தம்முடைய ஆவியினால் வெளிப்படுத்துவதன் மூலம் அவர் மணவாட்டி வகுப்பின் மீதியானோரை அழைப்பை நீட்டச் செய்தார். இவர்களுடைய அழைப்பின் ஆதாரமாக இருந்த இந்தத் தீர்க்கதரிசனங்கள் கடவுளின் ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருந்தன. ஆகவே கிறிஸ்துவின் மூலமாகவும் அவருடைய மணவாட்டியின் மூலமாகவும் பெருக்கெடுத்து வந்த கடவுளுடைய ஆவியே செம்மறியாடுகளைப் போன்ற திரள்கூட்டத்தாரிடம் “வா!” என்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தது.—வெளிப்படுத்துதல் 19:10.
16. ஆவியும் மணவாட்டியும் இன்று அழைப்போடு எவ்விதமாக உள்ளிணைக்கப்பட்டிருக்கிறார்கள்?
16 இன்றுவரையாகவும் மீதியானோரால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ஆவியும் மணவாட்டியும் தொடர்ந்து “வா!” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். மீதியானோர் இந்த வேறே ஆடுகளிடம் இன்னும் மற்றவர்களை “வா” என்றழைக்கும்படியாக சொல்கிறார்கள். இன்று கிடைக்கக்கூடியதாக இருக்கும் “ஜீவத்தண்ணீரை” அவர்கள் தங்களிடமே வைத்துக்கொள்ளக்கூடாது. “ஆவியும் மணவாட்டியும்” கொடுக்கும் கட்டளைக்கு அதாவது: “கேட்கிறவனும் வா என்பானாக” என்ற கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டும். தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளும் அனைவரும் அழைப்பைக் கொண்டு செல்லவேண்டும். இனம், தேசம், பாஷை அல்லது தற்போதைய மதம் என்னவாக இருந்தபோதிலும் அவர்கள் எல்லாருக்கும் எல்லாவிடங்களிலும் அதை நீட்ட வேண்டும். தற்போது “ஜீவத்தண்ணீரில்” கிடைப்பவற்றையே யெகோவாவின் சாட்சிகள் எல்லா ஜனங்களையும் இலவசமாக வந்து பங்குகொள்ளுவதற்காக அழைக்கவும் உதவவும் செய்கிறார்கள்!
17. இன்று என்னவிதமான “தண்ணீர்” கிடைக்கக்கூடியதாக இருக்கிறது?
17 உலகம் முழுவதிலும் ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுகிறிஸ்து நிச்சயமாகவே திரள்கூட்டத்தாரை “ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு” நடத்திச்செல்கிறார். (வெளிப்படுத்துதல் 7:17) இது தூய்மைக் கெடுக்கப்பட்ட தண்ணீர் அல்ல, ஆனால் அதன் ஊற்றுமூலத்திலிருந்தே நேராக வரும் தெளிவான, குளிர்ந்த ஆரோக்கியமானத் தண்ணீராகும். அடையாள அர்த்தமுள்ள இந்தத் தண்ணீர்கள் பைபிள் சத்தியத்தைப் புரிந்துகொள்ளும் கருத்தில் தண்ணீர்களைவிட அதிகத்தை அர்த்தப்படுத்துகின்றன. அவை, இப்பொழுதேகூட திரள்கூட்டத்தாரை மகிழ்ச்சியில் நித்தியமான பரிபூரண வாழ்க்கையை முயன்று அடையும் பாதையில் வைக்க ஆரம்பித்திருக்கும் இயேசு கிறிஸ்துவின் மூலமான கடவுளுடைய எல்லா ஏற்பாடுகளையும் அர்த்தப்படுத்துகின்றன.
அறிவிப்பில் இப்பொழுது சேர்ந்துகொள்ளுங்கள்
18. நம்முடைய காலத்தில் அழைப்பு எத்தனை விரிவாக இருக்கிறது?
18 ஏற்கெனவே, இந்தத் திரள்கூட்டத்தாரின் எண்ணிக்கை பல இலட்சமாகிவிட்டிருக்கிறது. ராஜ்யத்தின் நற்செய்தியை அவர்கள் தொடர்ந்து வைராக்கியமாக குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலுமாக அறிவித்துவருகிறார்கள். இவர்கள் ராஜ்ய நற்செய்தி பிரசங்கிப்பில் தங்கள் வெளிஊழிய நடவடிக்கைகளை ஒழுங்காக அறிக்கைச் செய்கிறார்கள். இது இப்பொழுது 212 தேசங்களுக்கு சென்றுவிட்டிருக்கிறது. இந்தக் காரிய ஒழுங்கின் முடிவின்போது நேரம் அனுமதிக்கப்படுகையில் மிகப் பெரிய நேரப் பதிவாளராகிய யெகோவா தேவனின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் இசைவாகத் தொடர்ந்து அழைப்பு கொடுக்கப்படும். நேரம் முடிகையில் அவர் அதை அறிவார், பைபிள் தீர்க்கதரிசனத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட கூற்றுகளின்படி, அவர் செய்யப்போவதாக வாக்களித்த வண்ணமே யெகோவாவாக தம்மை அறியப்பண்ணுவதற்கு தீர்வான சமயத்தையும் அறிந்திருக்கிறார்.—எசேக்கியேல் 36:23; 38:21–23; 39:7.
19. இந்தத் “தண்ணீர்” இலவசமாக அளிக்கப்படுகிறது என்பதாக நாம் ஏன் சொல்லக்கூடும்?
19 ஆகவே இன்னும் சமயம் இருக்கும் போதே, திரள் கூட்டத்தாரின் உறுப்பினர்கள், மணவாட்டியின் மீதியானோரோடு ‘வந்து ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்’ என்று சொல்வதில் மகிழ்ச்சியோடு பங்குகொள்கிறார்கள். ஜீவனைக்காக்கும் நற்செய்தியின் அறிவிப்பாளர்கள், உலகம் முழுவதிலும் ராஜ்ய செய்தியைப் பரப்பி வருகையில், அவர்கள் ஆற்றும் சேவைக்காக எந்தக் கட்டணமுமில்லாமல் அறிவிப்பை இலவசமாகச் செய்கிறார்கள்.
20 பங்குகொள்ள விரும்பும் ஆட்கள், ஜீவனைக்காக்கும் விளைவுகளோடு முழு திருப்தியுண்டாக அவ்விதமாகச் செய்யும் பொருட்டு ஜீவத்தண்ணீர்கள் இப்போது உலகம் முழுவதிலும் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. மீட்கப்பட்ட மனிதவர்க்கம், யெகோவாவின் அருமையான நோக்கங்களுக்கு நியாயநிரூபணம் செய்யும் வகையில் பரதீஸாக மாற்றப்பட இருக்கும் இந்தப் பூமியின் மீது இங்கேயே முடிவில்லா வாழ்க்கையை அனுபவித்துக் களிப்பர். நம்முடைய சிருஷ்டிகர் பூமியை வெறுமையாயிருக்க சிருஷ்டிக்கவில்லை, ஆனால், கடவுளுடைய சாயலிலும் ரூபத்திலுமிருக்கும் பரிபூரண மனித ஜீவன்கள் குடியிருக்கும் இன்பமான பரதீஸ் அல்லது உலகை சூழ்ந்துகொள்ளும் ஏதேன் தோட்டமாக இருக்கும்படி அதை உண்டாக்கினார்.
21. பூமிக்கான கடவுளுடைய நோக்கம் எவ்விதமாக நிறைவேற்றமடையும்?
21 நிச்சயமாகவே இப்பேர்ப்பட்ட ஒரு புதிய உலகில் இருப்பது சொல்லமுடியாத மகத்தான சிலாக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். அப்போது ஆதியாகமம் 1:27, 28-ல் முதல் மனித தம்பதிக்குக் கடவுள் கொடுத்த வேலை முழுமையாக நிறைவேற்றமடையும். மனித குடும்பத்துக்கு நேரிட்ட பேராபத்தைத் திறமையாக யெகோவா கையாண்டிருப்பதன் காரணமாக, பூமியானது ஒரு பரதீஸாக இருக்கும் அளவுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டு பரிபூரண மனித இனத்தால் நிரப்பப்படும். ஆம், கடவுள் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் காண்பார். இதோ, அவை மிக நன்றாக இருக்கும். நீங்கள் அங்கே இருப்பீர்களா? அப்படியென்றால், இப்பொழுது போற்றுதலோடு ஜீவத்தண்ணீரை இலவசமாக எடுத்துக்கொள்ள நீங்கள் ஆரம்பிக்கவேண்டும். “வா!” இப்பொழுது பாய்ந்தோட ஆரம்பித்து, வரப்போகும் ஆயிரவருடங்களின் போது முழுமையாகப் பாய்ந்தோட இருக்கும் ஜீவத்தண்ணீரைத் திருப்தியாகக் குடித்து, உங்கள் தாகத்தைத் தணித்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியூட்டும் அழைப்பைக் கேட்கும் எவனும் “வா!” என்பானாக. (w90 12/15)
[அடிக்குறிப்புகள்]
a மற்ற காரியங்களோடுகூட, இந்தக் கட்டுரை சொன்னதாவது: “கடந்த சில ஆண்டுகளின் போது இருந்ததைப் போல சத்தியத்துக்கான சாட்சி இத்தனை விரிவாக ஒருபோதும் இல்லை. . . . மீதியானோர் அவர்களுக்கு மகிழ்ச்சித்தரும் செய்தியைக் கொண்டுவருகிறார்கள். அவர்கள் அவர்களிடம் சொல்லுகிறார்கள்: “விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ளக்கடவன்.” இப்பொழுது கர்த்தருடைய பக்கத்திலும் பிசாசுக்கு எதிராகவும் தங்களுடைய நிலைநிற்கையை எடுத்து ஓர் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதாக அவர்கள் சொல்லப்படுகிறார்கள். மனத்தாழ்மையையும் நீதியையும் இப்பொழுது தேடி, அவருடைய கோபாக்கினையின் நாளில் மறைக்கப்பட்டு, அர்மகெதோன் மகா யுத்தத்திற்கு அப்பால்கொண்டு செல்லப்பட்டு மரிக்காமலே என்றுமாக வாழப் போகிறவர்கள் இப்படிப்பட்ட ஜனங்களின் ஒரு தொகுதியல்லவா? (செப். 2:3) . . . உண்மையுள்ள மீதியானோர் வகுப்பு கனிவான அழைப்பில் சேர்ந்துகொண்டு ‘வா!’ என்கிறார்கள். இந்தச் செய்தி நீதிக்காகவும் சத்தியத்துக்காகவும் வாஞ்சையாயிருக்கிறவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். அது இப்போதே செய்யப்பட வேண்டும்.”
b ஆகஸ்ட் 15, 1934 ஆங்கில காவற்கோபுரம்கூட வேறே ஆடுகளின் உத்தரவாதத்தைக் குறிப்பிட்டு பக்கம் 249, பாரா 31-ல் சொன்னதாவது: “யோனதாப் வகுப்பாரே, சத்தியத்தின் செய்தியைக் ‘கேட்கிற’வர்கள். இவர்கள் மற்றவர்களிடம் சொல்லவேண்டியது: “கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ளக்கடவன்.” (வெளி. 22:17) யோனதாப் வகுப்பினர், மாதிரிப் படிவமான யெகூவோடுகூட, அதாவது அபிஷேகம் பண்ணப்பட்டவர்களோடுகூடச் சென்று ராஜ்யத்தின் செய்தியை அறிவிக்கவேண்டும். அவர்கள் யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சாட்சிகளாக இல்லாவிட்டாலும்கூட அவ்விதமாகச் செய்யவேண்டும்.”
உங்களுடைய விடை என்ன?
◻ வெளிப்படுத்துதல் 22:17-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் “தண்ணீர்” எது?
◻ “தண்ணீரின்” ஊற்றுமூலம் என்ன?
◻ “தண்ணீர்” ஏன் தேவைப்படுகிறது? எப்போது மாத்திரமே அது பாய்ந்தோட ஆரம்பிக்கும்?
◻ நம்முடைய வருடாந்தர வசனத்தில், “ஆவி” குறிப்பிடப்பட்டிருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? “மணவாட்டி” எவ்வாறு உட்பட்டிருக்கிறாள்?
◻ யார் “தண்ணீரில்” பங்குகொள்ளமுடியும்? என்ன விளைவோடு?
7. எதன் அடிப்படையில் “தண்ணீரு”க்கான ஏற்பாடு செய்யப்படுகிறது?
20. இந்தத் “தண்ணீர்” கிடைப்பதாயிருப்பதன் காரணமாக விளைவு என்னவாயிருக்கும்?
[பக்கம் 11-ன் படம்]
வரவிருக்கும் ஆண்டு முழுவதிலுமாக, உலகம் முழுவதிலும் 200-க்கும் அதிகமான தேசங்களில் யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடைய 1991 வருடாந்தர வாக்கியத்திற்கு இசைவாகத் தங்கள் நேரத்தை செலவழித்துக்கொண்டிருப்பார்கள்:
“கேட்கிற எவனும் ‘வா!’ என்பானாக.”