உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w91 4/1 பக். 30-32
  • “மேன்மைக்கு முன்னானது தாழ்மை”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “மேன்மைக்கு முன்னானது தாழ்மை”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ‘தாழ்மையிலிருந்து மேன்மைக்குச்’ சென்ற மற்றவர்கள்
  • வெவ்வேறு வகை மேன்மை
  • எது இந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்களைத் தளராது சகித்துநிலைத்திருக்கச் செய்தது?
  • மிமிகுதியின் காலத்தில் மரணத்துக்கேதுவான கொடிய பஞ்சம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • யோசேப்பு சிறையில் அடைக்கப்படுகிறான்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • யெகோவா உங்களுக்கு வெற்றி தருகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • யோசேப்பை யெகோவா மறக்கவே இல்லை
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
w91 4/1 பக். 30-32

“மேன்மைக்கு முன்னானது தாழ்மை”

ஓர் இளைஞன் பொய்க் குற்றச் சாட்டின்பேரில் ஓர் எகிப்திய சிறைச்சாலையில் இருந்தான். அவன் மிகவும் தாழ்வுபடுத்தப்படுதலை அனுபவித்திருந்தான், மேலும் சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகும் எந்த நம்பிக்கையும் இருந்ததாகத் தெரியவில்லை. பின்பு அவன் பார்வோனுக்கு முன் தோன்றும்படி கட்டளையிடப்பட்டான். சிறைக் காவலாளர்கள் அவனை விரைவில் வெளியே கொண்டுவந்தார்கள். அவன் சவரம் செய்து, தன் அங்கிகளை மாற்றி, பின்பு பேரரசனின் முன் தோன்றினான்.

யோசேப்புக்கு எதிர்பாரா நிகழ்ச்சி காத்திருந்தது. யெகோவாவின் உதவியினால் யோசேப்பு பார்வோனின் இரண்டு சொப்பனங்களுக்குத் திருத்தமாய்ப் பொருள்விளக்கம் கூறினான். பார்வோன் பின்வருமாறு கூறினான்: “பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன்.” (ஆதியாகமம் 41:41) நம்புதற்கரிய எத்தகைய அனுபவம்—சிறைச்சாலையிலிருந்து அரசமாளிகைக்கு, எல்லாம் ஒரே நாளில்! பின்னால் அரசன் சாலொமோன் தேவாவியால் ஏவப்பட்டு பின்வருமாறு எழுதினதற்கு யோசேப்பின் அனுபவம் உதாரண விளக்கமளிக்க முடியும்: “சிறைச்சாலையிலிருந்தாலும் அங்கிருந்து அரசபதவிக்குப் போவதுமுண்டு.” பொருத்தமாகவே, சாலொமோன்: “மேன்மைக்கு முன்னானது தாழ்மை,” என இருமுறை எழுதினான்.—பிரசங்கி 4:14, தி.மொ.; நீதிமொழிகள் 15:33; 18:12.

ஆகையால் இந்தத் தெய்வீகச் சத்தியத்திலிருந்து பயனடைய உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: யோசேப்பு தாழ்வுபடுத்தலை அனுபவித்தக் காலத்தின்போது தளராதபடி அவனைத் தாங்கிநடத்தினதென்ன? 17 யெகோவாவின் இந்த உண்மையுள்ள ஊழியன் தன்னைச் சிறைச்சாலையில் போட வைத்த அந்தப் பொய்க் குற்றச்சாட்டை எவ்வாறு பொறுத்து சமாளித்தான்? யெகோவா யோசேப்புக்கு என்ன மேன்மையை மனதில் கொண்டிருந்தார்? நூற்றாண்டுகளினூடே உண்மையுடனும் தைரியமாயும் துன்புறுத்தலையும் தாழ்வுபடுத்தலையும் அனுபவித்தவர்களுக்கு என்ன வகையான மேன்மை காத்திருக்கிறது? எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் தாழ்வுபடுத்தலை அனுபவிக்கையில் சமநிலையான மனப்பான்மையைக் காத்துக்கொள்ள எது நமக்கு உதவிசெய்கிறது?

யோசேப்பு, தன் சகோதரரும் தன் பெற்றோருங்கூட தன் முன் ‘வணங்குவார்கள்’ என்று குறிப்பாய் உணர்த்தின அந்த முந்தின இரண்டு தீர்க்கதரிசன சொப்பனங்களின்பேரில் அடிக்கடி சிந்தனைசெய்திருக்கலாம். உண்மையில், அவனுடைய சகோதரர், அந்த முதல் சொப்பனத்தைக் கேட்டபோது: “நீ எங்களை ஆளப்போகிறாயோ?” என்று சொன்னார்கள்.—ஆதியாகமம் 37:8-10.

யோசேப்பின் பொறாமைகொண்ட சகோதரர் ஏறக்குறைய அவனைக் கொலைசெய்யும் அளவுக்குச் சென்றார்கள்! ஆனால் யெகோவாவின் வழிநடத்துதலின்கீழ் அந்த 17-வயது வாலிபன் பயணப்பட்டுக்கொண்டிருந்த வியாபாரிகளிடம் விற்கப்பட்டான், அவர்கள், தங்கள் முறையாக, அவனை, பார்வோனின் காவற்சேனாதிபதியாகிய போத்திபாரிடம் விற்றுவிட்டார்கள்.

முடிவில், யோசேப்பு போத்திபாரின் வீட்டு விசாரணைக்காரனானான், போத்திபாரின் மனைவி இந்த அழகிய ரூபமுள்ள இளைஞனைக் கற்பிழக்கச் செய்ய முயன்றாள். எனினும் யோசேப்பு யெகோவாவுக்கு உண்மைத்தவறாமல் இருந்து தப்பியோடினான். வஞ்சகக் கரவுள்ள அந்த மனைவி, யோசேப்பு தன்னைக் கற்பழிக்க முயற்சி செய்ததாகப் பொய்யாய்க் குற்றம்சாட்டினாள், போத்திபார் அவளை நம்பினான், ஆகையால் ஏழை யோசேப்பு சிறைச்சாலையில் போடப்பட்டான்.

எனினும், அவன் யெகோவாவுக்கு உண்மைத்தவறாமல் நிலைத்திருந்தான், அவர், ஏற்கெனவே குறிப்பிட்டபடி, அவன் சொப்பனங்களுக்குப் பொருள்விளக்கமளிப்பதற்காகப் பார்வோனிடம் கொண்டுசெல்லப்பட ஏற்பாடு செய்தார். அதன்பின் பார்வோன் எகிப்தின் உணவு வழங்கீட்டை ஏற்பாடு செய்து நடத்தும் மேன்மையான சிலாக்கியபதவியில் யோசேப்பை நியமித்தான். பஞ்சம் கானானுக்குப் பரவினபோது, யோசேப்பின் சகோதரர்கள் குடும்பத்துக்கு உணவு வாங்கிச்செல்ல நிச்சயமாகவே அவன்முன் வணங்கினார்கள்.

‘தாழ்மையிலிருந்து மேன்மைக்குச்’ சென்ற மற்றவர்கள்

“மேன்மைக்கு முன்னானது தாழ்மை” என்ற இந்தத் தெய்வீகச் சத்தியத்தைத் தன் வாழ்க்கை மாதிரி நிரூபிக்கும் யெகோவாவின் மற்றொரு உண்மையுள்ள ஊழியன் மோசேயாவான். செல்வவளம் மிகுந்த பார்வோனின் அரண்மனையில் வளர்க்கப்பட்ட மோசே தனக்குமுன் வெகுவாய்ப் போற்றத்தக்க எதிர்காலத்தைக் கொண்டிருந்தான். பின்பு சம்பவங்கள் மோசமான நிலைக்கு மாறுபவையாகத் தோன்றின. மோசே யெகோவாவின்பேரிலுள்ள விசுவாசத்தாலும் தன் ஜனத்துக்காகக் கொண்டிருந்த அன்புள்ள அக்கறையாலும் தூண்டப்பட்டு செயல்பட்டான், ஆகையால் அவன், கோபமூண்ட பார்வோனிடமிருந்து தன் உயிருக்காகத் தப்பியோட வேண்டியிருந்தது. தன்னந்தனிமையாக அவன் மீதியானுக்குப் பயணப்பட்டான். அங்கே தன் மாமன் எத்திரோவுக்கு வேலைசெய்து, எளிய மேய்ப்பனின் வாழ்க்கை நடத்துவதனால் 40 ஆண்டுகளாகத் தன் மனத்தாழ்மையைக் காட்டினான். தன் சுபாவ பண்புகள் சரிவுருப்படுத்தியமைக்கப்பட்டுவந்த அந்த 40 ஆண்டுகளின்போது தன்னைத் தாழ்மையுள்ளவனாக்குவதற்குரிய யெகோவாவின் வழியின்பேரில் ஆழ்ந்து சிந்திப்பதும் இனிமேலும் தனக்கு என்ன வைக்கப்பட்டிருக்கலாம் என்பதன்பேரில் எண்ணிப்பார்ப்பதும் மோசேக்கு எவ்வளவு ஊக்கமூட்டுதலாயிருந்திருக்கவேண்டும்!

பின்பு மேன்மை வந்தது. பார்வோனுக்குத் தம்முடைய செய்தி கொண்டுசெல்பவனாயிருப்பதற்கும் தம்முடைய ஜனத்தை எகிப்திலிருந்து வெளிகொண்டுவருவதற்கும் யெகோவா மோசேயை நியமித்தார். அந்தப் பத்து வாதைகளில் தான் நேரடியாய் உட்பட்டு இஸ்ரவேலைச் சிவந்த சமுத்திரத்தினூடே வழிநடத்தினபோது மோசே எத்தகைய மேன்மையான சிலாக்கியங்களையுடையவனாக இருந்தான்! பின்னால், சீனாய் மலையில் மோசே யெகோவாவிடமிருந்து நியாயப்பிரமாணத்தைப் பெற்றான். அவன் மலையிலிருந்து கீழிறங்கினபோது, “மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்கள்.”—2 கொரிந்தியர் 3:7.

கிழக்கத்தியர் எல்லாரிலும் மிகப் பெரியவனாயிருந்த யோபையும் கவனியுங்கள். அவன் “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமா”யிருந்தான். (யோபு 1:2, 3, 8) பின்பு, திடீரென்று, அவன் தன் பத்துப் பிள்ளைகளையும் தன்னுடைய ஆயிரக்கணக்கான ஆடுகள், ஒட்டகங்கள், எருதுகள், பெண்-கழுதைகள் எல்லாவற்றையும் இழந்தான்.

இதோடு முடிந்துவிடவில்லை. யோபின் உடல் முழுவதிலும் கொடிய பருக்கள் உண்டாகி, அவன் மாம்சம் அருவருப்பூட்டினது. அவனுடைய சொந்த மனைவி அவனை இகழ்ந்து: “நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்,” என்று கூறினாள். (யோபு 2:9) யோபு கடுமையாய்ச் சோதிக்கப்பட்டு தாழ்த்தப்பட்டான், ஆனால் அவன் யெகோவாவுக்கும் பிரதான கலகக்காரனாகிய சாத்தானுக்கும் இடையில் உண்டான பரலோக வாக்குவாதத்தைப்பற்றி ஒன்றும் அறியாதிருந்தான். யோபின் மூன்று “சிநேகிதருடன்” நடந்த நீண்ட விவாதத்தாலும் நிலைமை சற்றும் திருந்தவில்லை. எனினும், யோபு தன் உத்தமத்தைக் காத்தான். தன்னைவிட மிக இளைஞனாயிருந்த எலிகூவிடமிருந்தும் ஞானமான அறிவுரையை அவன் மனத்தாழ்மையுடன் ஏற்றான்.—யோபு 32:4.

யோபுக்குப் பலன் அளிக்கப்பட்டதா? ஆம். யெகோவா யோபை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவந்தார், மிருகஜீவன்களின் மந்தைகள் இரட்டிப்பான அளவில் அவனுக்கு உண்டாயிருக்கச் செய்தார், மேலும் அவனுக்கு ஏழு குமாரர்களையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்—இவர்கள் தேச முழுவதிலும் மற்றெல்லாரையும்விட மிக அதிக அழகுவாய்ந்திருந்தனர்! யோபின் தாழ்மைக்கு எத்தகைய மேன்மையான பலன்! “மேன்மைக்கு முன்னானது தாழ்மை”—எவ்வளவு உண்மையாய் நிரூபித்தது.—யோபு 42:12-15.

வெவ்வேறு வகை மேன்மை

சந்தேகமில்லாமல் மேன்மை பல்வேறு வகைகள் உண்டு—ஒரு பெண்ணின் தலைமயிரின் மேன்மையிலிருந்து சீனாய் மலையிலிருந்து இறங்குகையில் மோசேயின் முகத்தில் தோன்றின மேன்மை அல்லது மகிமை வரை. (1 கொரிந்தியர் 11:15; 2 கொரிந்தியர் 3:7) கண்களைக் கவரும் சூரிய மறைவுகள் மிகப் பகட்டான மகிமையுள்ளவை, மற்றும் நட்சத்திரங்கள் வேறொரு மகிமையுள்ளவை.—1 கொரிந்தியர் 15:41.

“மேன்மை” என்றச் சொல்லின் வெவ்வேறு வகைகள் பைபிளில் நூற்றுக்கணக்கான தடவைகள் பயன்படுத்தியிருக்கின்றன. இந்த வசனக் குறிப்புகளையும் அவற்றின் சூழமைவையும் ஆராய்ந்து பார்க்கையில், யெகோவாவே எல்லா மேன்மை அல்லது மகிமைக்கும் மூலக்காரணரெனத் தெளிவாய்த் தெரிகிறது. அவருடைய உண்மையுள்ள ஊழியர்களும் அவருடைய படைப்பின் சிறந்த வேலைப்பாடுகளும் இந்த மகிமையைப் பல வழிகளிலும் பல்வேறு அளவுகளிலும் பிரதிபலிக்கவே முடியும்.

நம்முடைய 20-ம் நூற்றாண்டில், பரலோக வாழ்க்கைக்குரிய மேன்மையான நம்பிக்கையுடையோர் தாழ்மை அல்லது சிறுமைப்படுத்தும் பாடுகளை அனுபவித்ததற்கு மிகுதியான அத்தாட்சி நமக்குண்டு. முதல் உலகப் போரின்போது, புரூக்லினிலிருந்த உவாட்ச் டவர் சங்கத்தின் தலைமை உறுப்பினர்கள், பொய்க் குற்றச்சாட்டுகளின்பேரில் 20 ஆண்டுகள் சிறை தண்டனைத்தீர்ப்பளிக்கப்பட்டனர். ஏறக்குறைய அதே சமயத்தில், பல இடங்களில் துன்புறுத்தல் திடீரெனத் தொடங்கியது. உதாரணமாக, J. B. சீபென்லிஸ்ட் கைதுசெய்வதற்குரிய ஆணைப்பத்திரம் எதுவுமில்லாமல் மூன்று நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார், கெட்டுப்போன மூன்று மக்காச்சோள ரொட்டித் துண்டுகளைத் தவிர உணவில்லாமல் விடப்பட்டார். கலகக்காரக் கூட்டம் அவரை சிறைச்சாலையிலிருந்து வெளியிழுத்து, உடையைக் கழற்றி, உடலில் சூடான கீல் பூசி, நுனியில் கம்பியைக் கொண்டிருந்த வண்டி குதிரையை ஓட்டும் சவுக்கால் அடித்தனர். ஒரு விசாரணையின்போது குற்றச்சாட்டு வழக்குரைஞன்: “உன் பைபிளுடன் நரகத்துக்குப் போ; உன் முதுகு உடைக்கப்பட்டு நீ நரகத்தில் இருக்கவேண்டும்; நீ தூக்கிலிடப்படவேண்டும்,” என்று சொன்னான்.

இரண்டாம் உலகப் போரின்போது, யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் சிலர் நாஜி கான்சன்ட்ரேஷன் முகாம்களில் உண்மையென நம்பமுடியாதக் கொடுமையை அனுபவித்தனர். இவர்களில் ஒருவர் மார்ட்டின் போயட்ஸிங்கர், இவர் அபிஷேகஞ்செய்யப்பட்ட சாட்சி, அதிலிருந்தும் உயிர்தப்பி யெகோவாவின் சாட்சிகளின் நிர்வாகக் குழுவின் ஓர் அங்கத்தினரானார். அவர் அந்த டாக்கு முகாமை “பேய்களின் பயித்தியமனை” என விவரித்தார். மாத்தாஸன் முகாமில், “ஜெர்மன் இரகசிய போலீஸ் படையினர், யெகோவாவில் வைத்துள்ள எங்கள் விசுவாசத்தைவிட்டு எங்களை விலகச் செய்யும்படி எல்லா வகையான முறைகளையும் முயன்று பார்த்தனர். பட்டினி தண்டமுறை உணவு, வஞ்சகப் போலிநட்புகள், கடுங்கொடுமைகள், ஒரு சட்டத்தின்மேல் நாள்தோறும் தொடர்ந்து நிற்கவேண்டியது, கைமுட்டுகள் முதுகின் பின் திருகிக் கட்டப்பட்டிருக்க பத்தடி கம்பத்திலிருந்து தொங்கவைக்கப்பட்டிருத்தல், சவுக்கடிகள்—இவையாவும் மற்றவையும் . . . முயன்று பார்க்கப்பட்டன.”

எது இந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்களைத் தளராது சகித்துநிலைத்திருக்கச் செய்தது?

தங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்வோருக்கு வைக்கப்பட்டுள்ள அந்த மேன்மையான எதிர்காலத்தின் எதிர்பார்ப்பு உட்பட, முடிவாயுண்டாகும் பலனில் அவர்களுக்கிருந்த விசுவாசம், அத்தகைய துயரார்ந்த மற்றும் இழிவுபடுத்தும் நிலைமைகளின்கீழ், சகித்து நிலைத்திருக்கும்படி அவர்களுக்கு உதவிசெய்தது. அபிஷேகஞ்செய்யப்பட்ட சாட்சிகளின் “சிறு மந்தை”க்கு இந்த எதிர்பார்ப்பு பரலோகச் சுதந்தரமாகும். (லூக்கா 12:32) உண்மையுள்ள மற்ற மானிடருக்கு பூமியில் ஒரு தனிப்பட்ட வகையான மேன்மை ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது. யோசேப்பையும் மோசேயையும் போன்ற, அவர்களில் சிலர் எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர். வசனங்கள் 32-40-ஐத் தயவுசெய்து வாசித்து இந்த உண்மையுள்ளோர் சிலர் சகித்த இழிவுபடுத்தல்களின்பேரில் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். மேலும், “ஒரு திரள் கூட்டத்தார்” இன்று பூமியில் யெகோவாவைச் சேவித்துக்கொண்டிருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9, 15) இவர்களுடைய எதிர்காலம் என்ன?

ஒரு மேன்மைநிறைந்த எதிர்காலம் அவர்களுக்குக் காத்திருக்கிறது. இயேசு கிறிஸ்துவின்கீழுள்ள அந்தப் பரலோக அரசாங்கத்துக்குப் பூமியில் பிரதிநிதிகள் இருப்பார்கள், இவர்கள் வெளிப்படுத்துதல் 20:12-ல் குறிப்பிட்டுள்ள அந்தப் புஸ்தகச் சுருள்களில் எழுதப்பட்டிருக்கும் கட்டளைகளைப் பொருத்திப் பயன்படுத்துவார்கள். இத்தகையோர், அரசர்களாக அல்ல, ஆனால் “பூமியெங்கும் பிரபுக்களாக” இருக்கும் மேன்மையான சிலாக்கியங்களை உடையோராயிருப்பர். அவர்களோடுகூட, உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் உட்பட, எண்ணிக்கையற்றத் தாழ்மையான, உண்மையுள்ள மனிதர்கள் மகிமையான பரதீஸ் பூமியில் நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.—சங்கீதம் 45:16.

இன்று பொய் மதத்தைவிட்டுவிலகி யெகோவாவின் சாட்சிகளின் வீட்டுக்கு-வீடு பிரசங்க வேலையில் மகிழ்ச்சியுடன் பங்குகொள்வதன்மூலம் தங்கள் மனத்தாழ்மையை மெய்ப்பித்துக் காட்டியுள்ள லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர். இவர்களில் பலர் குடும்ப உறுப்பினராலும் நண்பர்களாலும் இகழ்ந்து ஏளனஞ்செய்யப்பட்டிருக்கின்றனர், ஆனால் அவர்கள் உண்மையான வணக்கத்தை விடாமல் பற்றியிருக்கின்றனர். உண்மையான கடவுளாகிய, யெகோவாவைச் சேவிக்கக்கூடும்படி அவர்கள் திருத்தப்படுதலையும் பயிற்றுவிப்புக்குரிய சிட்சையையும் மனத்தாழ்மையுடன் ஏற்றனர். திரும்பக் கொண்டுவரப்படவிருக்கிற பரதீஸில் வாழ்வதே அவர்களுடைய நம்பிக்கை, அப்பொழுது “சமுத்திரத்திலே தண்ணீர் நிறைந்திருப்பதுபோல பூமியிலே யெகோவாவின் மகிமையை அறியும் அறிவு நிறைந்திருக்கும்.”—ஆபகூக் 2:14, தி.மொ.

யெகோவாவின் ஜனங்களுக்கு இவை சோதனைக்குரிய நாட்கள். இது நாம் ஓர் அயல் நாட்டில் அன்னியரைப்போல் பெரும்பாலும் இருப்பதைப் போன்றுள்ளது. உண்மையான வணக்கத்துக்கும் பொய் வணக்கத்துக்கும் இடையேயுள்ள பெரும் பிளவு மேலும் மேலும் ஆழமும் விரிவுமாகிக்கொண்டு வருகிறது. ஏதோ ஓரளவு நாமெல்லாரும் தாழ்வுபடுத்தப்படுதலை அனுபவிக்கிறோம். ஆனால் இயேசு தமக்குமுன் வைக்கப்பட்ட மகிழ்ச்சியால் ஆறுதல்படுத்தி பலப்படுத்தப்பட்டதுபோல், நாமும் முடிவான பலனை நினைவுபடுத்திக்கொள்வதால் சோதனைகளைச் சகித்து வெற்றிபெறுவோம்.

பைபிள் பின்வருமாறு நமக்கு அறிவுரை கூறுகிறது: “யெகோவாவின் கண்களுக்குமுன் உங்களைத் தாழ்த்துங்கள், அவர் உங்களை உயர்த்துவார்.” (யாக்கோபு 4:10, NW) நீங்கள் கடுமையாய்ச் சோதிக்கப்படுகிறபோதெல்லாம், பின்வரும் இந்த வார்த்தைகளை நினையுங்கள்: “மேன்மைக்கு முன்னானது தாழ்மை.” மேலும், யெகோவா கைவிடமாட்டார் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்! (w89 6⁄15)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்