செய்திகளின் பேரில் உட்பார்வை
நோய்ப்பட்ட கல்வி
கடந்த பத்தாண்டுகளாக, நியு யார்க் நகரிலுள்ள ஒரு கல்லூரி, மாணவர்களுக்கு மூன்று கல்லூரி சான்றிதழ்களைப் பெற்றுத் தரக்கூடிய மனித பாலீடுபாடு பற்றிய பயிற்சி ஒன்றை அளிக்கிறது. மாணவர்கள், ‘செயற்களத்துக்குச் செல்ல’ கேட்கப்படுகிறார்கள். “அவர்கள் விலைமாதர்களோடு பேசவும், ஒழுக்கமற்றவர்கள் செல்லும் மது அருந்தும் கடைகளுக்குச் செல்லவும் அல்லது நிர்வாண கடற்கரைகளில் ஒப்பிட்டு சரிபார்க்கவும் கேட்கப்படுகிறார்கள்” என்பதாக நியு யார்க் போஸ்டில் ஒரு பத்திரிகை ஆசிரியர் அறிவிக்கிறார். வகுப்பு பாடபுத்தகம், வாய்வழி பாலுறவில் ஈடுபடுவதன் பேரில் பிரத்தியேகமான அறிவுரைகளை அளித்து, தற்புணர்ச்சிப் பழக்கத்தை ஊக்குவிக்கிறது. போஸ்ட் பிரகாரம், வகுப்பறை பாடதிட்டத்தின் ஒரு பாகமாக, மாணவர்கள் “பாலுறவில் ஈடுபடும் தம்பதிகளை” காண்பிக்கும் திரைப்படங்களும் “ஆண் மற்றும் பெண் உடல் உறுப்புகளின் அமைப்பியல்புகளும்” காண்பிக்கப்படுகின்றனர். வேறு எது ஒழுக்கம் மற்றும் கற்பின் தராதரத்திலிருந்து இத்தனை தூரம் விலகிச் செல்வதாக இருக்கக்கூடும்?—பிலிப்பியர் 4:8, 9.
இளைஞர்கள் வாழ்க்கையின் உண்மைகளை அறிந்து, இதனிடமாக ஆரோக்கியமான ஒரு மனநிலையைக் கொண்டிருப்பது அவசியமாக இருப்பினும், இப்பபடிப்பட்ட அறிவுரைகளை வழங்குவது பெற்றோரின் முக்கிய பொறுப்பாகும். (நீதிமொழிகள் 22:6) விவாகத்துக்குப் புறம்பாக பாலுறவை ஊக்குவிக்கவும் மாணவர்களை, வயது வந்தவர்கள் மாத்திரமே பார்க்கக்கூடிய திரைப்படங்களைப் பார்க்கவும், ஓரினப்புணர்ச்சியையும், விலைமாதர் பழக்கங்களையும் ஆராயவும் கேட்கும் எந்த ஒரு பள்ளி பயிற்சியும் கடவுளின் உண்மை வணக்கத்தாரால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாது. வேசித்தனத்தையும் விபசாரத்தையும் ஓரினப்புணர்ச்சியையும் அப்பியாசிக்கும் ஆட்கள், “இழிவான இச்சைரோகங்களை”யுடையவர்களாயும் “அவலட்சணமானதை” நடப்பிக்கிறவர்களாயும் இருக்கிறார்கள் என்று பைபிள் தெளிவாக விளக்குகிறது. இப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து பைபிள் கட்டளையிடுவதாவது: “நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருங்கள்.” மேலுமாக அது சொல்வதாவது: “வேசித்தனம் . . . பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங் கூடாது.”—ரோமர் 1:24–32; 1 தெசலோனிக்கேயர் 4:3; எபேசியர் 5:3, 5; கலாத்தியர் 5:19, 21.
பொய்யான ஒரு நம்பிக்கை
மரணத்திற்குள் “மிகவும் சொந்தமான பாதையில்” செல்ல நாடும் ஆட்கள், சடலத்தைப் புதைக்கும் வழக்கமான பழக்கத்தை விட்டு, சடலத்தை பதனீடு செய்யும் பூர்வ பழக்கத்தை விரும்புகிறார்கள் என்பதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவிக்கிறது. “வாசனை எண்ணெய் தேய்த்து, நாரால் செய்யப்பட்ட துணி, கண்ணாடி நுண்ணிழையாலான இழைமப் பொருள், பாலிஎத்திலீன் மற்றும் ப்ளாஸ்டர் அடங்கிய ஒரு பொதியுறையில் சுற்றி, இரண்டு மாதங்களுக்கு திராட்சரசம், பூண்டுகள் மற்றும் வேதியல் பதனசரக்குகளில் ஊற வைக்கப்படுவதற்கு” 1,27,000 ரூபாய் செலவாகும் என்கிறது ஜர்னல். உடலின் வடிவில் பொன் பூசு அல்லது மணிகற்கள் பதிக்கப்பட்ட வெண்கலப் பேழையின் விலை 17 லட்சம் ரூபாயும் அதற்கும் மேலும் இருக்கலாம்.
என்றபோதிலும் வெறுமென சடலத்தை பதனீடு செய்யும் அந்தத் தனித்தன்மை மாத்திரமே வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதில்லை. “சில கிறிஸ்தவர்கள் சொல்வது போல, நியாயத்தீர்ப்பு நாளில் கிறிஸ்து நம்மை கல்லறையிலிருந்து வெளிவரும்படியாக அழைப்பார் என்பது உண்மையாக இருக்குமானால், நான் மிகச் சிறந்த வடிவத்திலிருக்க விரும்புகிறேன்” என்பதாக ஒருவர் சொன்னார்.
மறுமையில் ஆத்துமா திரும்புவதற்காக உடல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நம்பிய பூர்வ எகிப்தியர்களைப் போலவே இப்படிப்பட்ட ஆட்கள் பொதுவாக ஆத்துமா அழியாதது என்ற போதகத்தின் பேரில் நம்பிக்கைக்கு ஆதாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் நீதிமான்களுடைய மற்றும் பொல்லாதவர்களுடைய உடல்கள் அவரவரின் ஆத்துமாக்களோடு மீண்டும் சேர்க்கப்படும் என்றும் அவை பரலோக ஆனந்தத்திலோ அல்லது நரக அக்கினி ஆக்கினையிலோ பங்கு பெறும் என்றும் மதத்தலைவர்கள் போதித்திருக்கிறார்கள்.
என்றபோதிலும் ஆத்துமாவின் இயல்பான சாவாமைக் கோட்பாடு பைபிளில் கற்பிக்கப்படுவதில்லை. மாறாக, ஆத்துமா அழிகிறது என்பதாக பைபிள் போதிக்கிறது. “பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்.” (எசேக்கியேல் 18:4) இதன் காரணமாகவே, எதிர்கால வாழ்க்கைக்கான பைபிள் ஆதாரமுள்ள நம்பிக்கை சாவாமையுள்ள ஆத்துமா தப்பிப்பிழைத்தலின் மீது அல்ல, ஆனால், ஒருவர் மரிக்கையில் கொண்டிருந்த அதே அடையாளத்தையும் ஞாபகத்தையும் கொண்ட பொருத்தமான ஒரு சரீரத்தோடும் சொந்த வாழ்க்கை மாதிரியோடும் ஒரு நபரை கடவுள் உயிர்த்தெழுப்புவதன் பேரில்தானே சார்ந்திருக்கிறது. சரியாகவே இயேசுவால் இவ்விதமாகச் சொல்லமுடிந்தது: “ஞாபகார்த்த கல்லறைகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்டு வெளிவரும் காலம் வரும்.”—யோவான் 5:28, 29.
“உலகத்தின் பாகமல்ல”
நியு யார்க்கிலுள்ள உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டி, கடந்த ஆண்டு 19 மாடி குடியிருப்புக் கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக மண்டல மாற்றம் கோரி நியு யார்க் நகர மதிப்பீட்டு மன்றக்குழுவைச் சந்தித்துப் பேசியது. பெரும்பாலான குழு உறுப்பினர்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கையில், நியு யார்க் நகர மேயர் எட்வார்ட் காக் மண்டலமாற்றத்தை ஆதரித்து இரண்டு வாக்குகளை அளித்தார். தன்னுடைய தீர்மானத்துக்கு விளக்கமளிப்பவராய் மேயர் காக், “யெகோவாவின் சாட்சிகளை . . . நல்ல அயலாராக மாத்திரமே கருதமுடியும் . . . அவர்களை நான் மிக உயர்வாக மதிக்கிறேன்” என்று குறிப்பிட்டார். மேலுமாக அவர் சொன்னார்: “மதசம்பந்தமான காரணங்களுக்காக அவர்கள் எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிப்பதில்லை என்று நான் கேள்விப்பட்டேன். அதுவே இந்தத் திட்டத்தில் ஒரு பிரச்னையாக இருக்கலாம். ஏனென்றால் தெரிந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், எண்ணிக்கையில் அதிகமான ஆட்களால் வற்புறுத்தப்படுகையில் கருத்து மாறுபாட்டுக்குரிய ஒரு விஷயத்தில், தேர்தலில் கலந்து கொள்ளாதவர்களால் வெற்றிபெறுவது மிகவும் கடினமாகும்.”
இத்தனை அநேகர் எதிர்த்தப் போதிலும், மேயர் காக் காண்பித்த தைரியத்துக்கும் பாரபட்சமின்மைக்கும் அவர் பாராட்டப்பட வேண்டும். அரசியல் தேர்தல்களில் யெகோவாவின் சாட்சிகள் பங்கு கொண்டிருந்தார்களேயானால் விஷயம் வேறுவிதமாக இருந்திருக்கலாம். ஆனால் வெகுமதி எத்தனை பெரியதாக இருப்பினும் அரசியல் விவகாரங்களில் அவர்களுடைய நடுநிலைக் கொள்கையிலிருந்து அவர்களை மாற்றமுடியாது. மெய்கிறிஸ்தவர்களுக்கு நிலைமை தெளிவாக இருக்கிறது. இயேசு சொன்னார்: “நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல.”—யோவான் 17:16. (w89 2/15)