மெய்யான நீதிக்காக நாம் யாரை நோக்கியிருக்கலாம்?
“சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ?”—ஆதியாகமம் 18:25, நவீன ஆங்கிலத்தில் பரிசுத்த வேதாகமம், ஃபிரெரர் ஃபென்டன்.
அநீதி மிகுந்திருப்பதை ஒருவேளை நீங்கள் நன்றாகவே அறிந்திருக்கலாம். மெய்யான நீதி இல்லாமல் குறைவுபடுவது மேலோங்கியிருப்பதற்கு நீங்கள் எவ்விதமாக தனிப்பட்டவராக பிரதிபலிக்கிறீர்கள்?
2 சில ஆட்கள் நீதியுள்ள ஒரு கடவுள் இருப்பதை சந்தேகிப்பதன் மூலம் பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் உலோகாயவாதிகள் (agnostic) என்றுகூட சொல்லிக் கொள்ளலாம். ஒருவேளை அந்த வார்த்தையை நீங்கள் கேட்டிருக்கலாம். “(கடவுளைப் போன்ற) ஆதிகாரணமான நிஜம் எதுவும் அறியப்படாததாகவும் ஒருவேளை அறியமுடியாததாகவும்” இருப்பதாக நினைக்கும் ஒரு நபரை அது குறிக்கிறது. டார்வினின் பரிணாமத்தை ஆதரிக்கும் 19-வது நூற்றாண்டு உயிரியலர் தாமஸ் H. ஹக்ஸிலி இந்த விதத்தில் “உலோகாயவாதி” என்ற பெயரை முதலாவதாக பயன்படுத்தினார்.a
3 ஆனால் “உலோகாயவாதி” என்ற வார்த்தையை ஹக்ஸிலி எங்கிருந்து பெற்றார்? உண்மையில் முதல் நூற்றாண்டு வழக்கறிஞராக, அப்போஸ்தலனாகிய பவுல் வேறொரு கருத்தில் பயன்படுத்திய ஒரு சொற்றொடரை இவர் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அது மிகப் பிரபலமான ஒரு பேச்சில் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பேச்சு இன்று பொருத்தமாக இருக்கிறது. ஏனென்றால் நீதி எவ்விதமாக மற்றும் எப்பொழுது அனைவருக்கும் கிடைக்கும் என்பது பற்றியும் இன்னும் அதிகமாக, நாம் எவ்விதமாக அதிலிருந்து தனிப்பட்ட வகையில் நன்மையடையலாம் என்பது பற்றியும் அறிந்துகொள்ள சரியான ஆதாரத்தை அது நமக்குக் கொடுக்கிறது.
4 “உலோகாயவாதி” (“அறியப்படாத”) என்ற வார்த்தை பவுல் “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதியிருந்த ஒரு பலிபீடத்தைப் பற்றி பேசிய குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டது. அந்தச் சுருக்கமான பேச்சு மருத்துவனான லூக்காவால் வரலாற்றுப் புகழ்பெற்ற அப்போஸ்தலர்களின் நடபடிகள் புத்தகத்தில் 17-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டது. முதலாவதாக பவுல் எப்படி அத்தேனேவுக்கு வந்தான் என்பதை அதிகாரம் காண்பிக்கிறது. பக்கம் 23-லுள்ள பெட்டியில் லூக்காவின் முன்னுரைத் தகவலையும் முழு பேச்சின் வாசகத்தையும் நீங்கள் வாசிக்கலாம்.
5 பவுலின் பேச்சு சக்திவாய்ந்ததாகவும் நாம் கவனமாக அதை ஆலோசித்துப் பார்ப்பதற்கு தகுதியுள்ளதாகவும் இருக்கிறது. படுமோசமான அநீதங்களால் நாம் சூழப்பட்டிருப்பதால் அதிலிருந்து நாம் அதிகத்தைக் கற்றுக் கொள்ளலாம். முதலாவதாக பின்னணி தகவலை கவனியுங்கள். இதை அப்போஸ்தலர் 17:16–21-ல் நீங்கள் வாசிக்கலாம். அத்தேனியர்கள் சாக்ரட்டீஸ், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் கற்பித்த இடமாகிய ஒரு பிரபலமான கல்வி மையத்தில் வாழ்வது குறித்து பெருமைக் கொண்டவர்களாக இருந்தார்கள். அத்தேனே பட்டணம் மிகவும் மதப்பற்றுள்ள மக்கள் வாழ்ந்த ஒரு நகரமாகவும் இருந்தது. தன்னைச் சுற்றி பவுல் விக்கிரகங்களை—போர் தெய்வங்களாகிய அங்காரகன் அல்லது செவ்வாய்; யூப்பித்தர்; மருத்துவ தெய்வமாகிய அஸ்க்லீப்பியஸ்; கொடூரமான சமுத்திர தெய்வமாகிய பாசிடோன்; டயானிசஸ், அத்தீனா, ஈராஸ் இன்னும் மற்றவற்றைப் பார்த்தான்.
6 ஆனால் பவுல் நீங்கள் வாழும் பட்டணத்தை அல்லது பகுதியை மேற்பார்வையிட்டால் அப்பொழுது என்ன? அவன் கிறிஸ்தவமண்டல தேசங்களிலும்கூட ஏராளமான விக்கிரகங்களை அல்லது மதசம்பந்தமான சிலைகளை பார்க்கக்கூடும். வேறொரு இடத்தில், இன்னும் அதிகத்தை அவன் பார்க்கக்கூடும். வழிகாட்டு ஏடு ஒன்று சொல்கிறது: “இந்திய கடவுட்கள் அடிக்கடி மாறுகின்ற இயல்புள்ள அவர்களுடைய கிரேக்க ‘சகோதரர்களை’ப் போல் இல்லாமல், அவை ஒரே துணையை உடையனவாக, மிக அதிகமான சக்தியை அவைகளின் பெண் துணைவருக்கு ஒதுக்கி வைத்தவையாக இருக்கின்றன . . . மிகைப்படகூறாமலே எல்லாவிதமான உயிர் மற்றும் இயற்கையோடு தொடர்புள்ள லட்சக்கணக்கான கடவுட்கள் இருக்கின்றன.”
7 அநேக கிரேக்க கடவுட்கள் கீழ்த்தரமாகவும் மிகவும் ஒழுக்கங்கெட்டவையாகவும் சித்தரித்துக் காட்டப்பட்டன. அவைகளின் நடத்தை மனிதர்களுக்கு வெட்கக்கேடானவையாக, ஆம் இன்று அநேக தேசங்களில் குற்றச்செயலாகவும் இருக்கும். ஆக இப்படிப்பட்ட கடவுட்களிடமிருந்து அப்போது வாழ்ந்த கிரேக்கர்கள் என்னவிதமான நீதியை எதிர்பார்த்திருப்பார்கள் என்பதாக நீங்கள் வியப்படைவதற்கு உங்களுக்கு எல்லாக் காரணமுமிருக்கிறது. என்றாலும் அத்தேனே பட்டணத்தார் அவைகளிடம் பக்தியுள்ளவர்களாக இருப்பதை பவுல் கண்டான். நீதியான நம்பிக்கைகளால் நிறைந்தவனாய், மெய் கிறிஸ்தவத்தின் மேன்மையான சத்தியங்களை அவன் விளக்க ஆரம்பித்தான்.
துணிவைத் தேவைப்படுத்துகின்ற அவையோர்
8 சில யூதர்களும் கிரேக்கர்களும் அக்கறையோடு கேட்டனர். ஆனால் செல்வாக்குமிக்க எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகள் எவ்விதமாக பிரதிபலித்தார்கள்? நீங்கள் பார்க்கப் போகிறவிதமாகவே, அவர்களுடைய கருத்துக்கள் அநேக விதங்களில் பள்ளிகளில் இளைஞர்களுக்குப் போதிக்கப்படுவது உட்பட, இன்றுள்ள பொதுவான நம்பிக்கைகளுக்கு அவை ஒத்திருக்கின்றன. எப்பிக்கூரர்கள் இயன்ற அளவு சிற்றின்பத்தை, விசேஷமாக மனதின் பிரகாரமான சிற்றின்பத்தை பெற்றுக் கொள்வதற்காக வாழ்வதைத் துரிதப்படுத்தினார்கள். ‘புசி, குடி, ஏனென்றால் நாளைக்குச் சாவோம்’ என்ற அவர்களுடைய தத்துவம் கொள்கையும் ஒழுக்கமும் இல்லாதவர்களாக இருப்பதைக் காண்பித்தன. (1 கொரிந்தியர் 15:32) கடவுட்கள் பிரபஞ்சத்தை சிருஷ்டித்தார்கள் என்பதாக அவர்கள் நம்பவில்லை; மாறாக உயிர் தற்செயலாக, தானே இயங்குகின்ற பிரபஞ்சத்தில் தோன்றியது என்பதாக அவர்கள் நம்பினார்கள். மேலுமாக கடவுட்கள் மனிதர்களில் அக்கறையுள்ளவர்களாக இருக்கவில்லை. ஸ்தோயிக்கரைப் பற்றி என்ன? அவர்கள் சடப்பொருளும் ஆற்றலும் பிரபஞ்சத்தின் அடிப்படை தத்துவங்கள் என்பதாக நம்பி மாறா நியதிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஸ்தோயிக்கர்கள், கடவுளை ஓர் ஆளாக இல்லாமல், பொது முறையான ஒரு தெய்வமாக கற்பனை செய்தார்கள். விதியே மனித விவகாரங்களைக் கட்டுப்படுத்தியதாகவும்கூட அவர்கள் நினைத்தார்கள்.
9 இப்படிப்பட்ட தத்துவஞானிகள் பவுலின் மேடைப் போதகத்துக்கு எவ்விதமாக பிரதிபலித்தார்கள்? அறிந்துகொள்ளும் ஆவலும், மன அகந்தையும் கலந்தது அத்தேனியர்களின் விசேஷ குணமாக இருந்தது. இந்தத் தத்துவ ஞானிகள் பவுலோடு தர்க்கம் பண்ண ஆரம்பித்தார்கள். கடைசியாக அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். அத்தேனே பட்டணத்தின் சந்தை வெளிக்கு மேலே, ஆனால் உயரமாக எழும்பி நின்ற உள்ளரணுக்குக் கீழே போர் கடவுளுக்காக பெயரிடப்பட்ட பாறைகள் நிறைந்த ஒரு மலை மார்ஸ் அல்லது ஏரிஸாக இருந்தது. ஆகவே இது மார்ஸ் மலை அல்லது மார்ஸ் மேடை என்று அழைக்கப்பட்டது. பூர்வ காலங்களில் ஒரு வழக்கு மன்றம் அல்லது குழு அங்கே கூடியது. பவுல், ஒருவேளை பிரமிக்கச் செய்யும் உள்ளரணையும் அதன் பிரபலமான அத்தீனா என்ற கிரேக்க பெண் தெய்வத்தின் கோயிலையும் மற்ற ஆலயங்களையும் சிலைகளையும் பார்வையிடக்கூடிய இடத்தில் கூடிவந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். ரோம சட்டம் புதிய கடவுட்களை அறிமுகஞ்செய்வதை தடை செய்ததன் காரணமாக அப்போஸ்தலன் ஆபத்திலிருந்தான் என்பதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அப்போஸ்தலன் வெறுமென அவனுடைய நம்பிக்கைகளை தெளிவுபடுத்தவோ அல்லது அவன் தகுதியுள்ள ஒரு போதகனா என்பதை காண்பிப்பதற்காகவோ அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தாலும்கூட, கையாளுவதற்கு கடினமான ஓர் அவையோரை அவன் எதிர்ப்பட்டான். அவர்களை விலக்கிவிடாமலே தன்னுடைய இன்றியமையாத செய்தியை அவன் விளக்கமுடியுமா?
10 பவுல் எத்தகைய சாதுரியத்தோடும் ஞானத்தோடும் ஆரம்பித்தான் என்பதை அப்போஸ்தலர் 17:22, 23-ல் கவனிக்கவும். அத்தேனே பட்டணத்தார் எத்தனை மதப்பற்றுள்ளவர்களாக இருந்தார்கள் என்பதையும் எத்தனை விக்கிரகங்களைக் கொண்டிருந்தார்கள் என்பதையும் அவன் ஒப்புக்கொண்டபோது, அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலர் அதைப் பாராட்டாக எடுத்துக் கொண்டிருக்கக்கூடும். அவர்களுடைய பல கடவுள் வணக்கத்தை தாக்குவதற்குப் பதிலாக பவுல், அவன் பார்த்திருந்த “அறியப்படாத தேவனுக்கு” அர்ப்பணிக்கப்பட்டிருந்த ஒரு பலிபீடத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தினான். இப்படிப்பட்ட பலிபீடங்கள் இருந்ததை சரித்திர அத்தாட்சி காண்பிக்கிறது. இது லூக்காவினுடைய பதிவில் நம்முடைய நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும். பவுல் இந்தப் பலிபீடத்தை துவக்கக் குறிப்பாக பயன்படுத்தினான். அத்தேனே பட்டணத்தார், அறிவையும் தர்க்கத் திறமையையும் உயர்வாக மதித்தனர். இருந்தாலும் தங்களுக்கு “அறியப்படாத”தாயிருந்த (கிரேக்குவில், aʹgno·ṣtos) கடவுள் ஒருவர் இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அப்படியென்றால், பவுல் அவர்களுக்கு அதை விளக்குவதற்கு அனுமதிப்பது நியாயமாகவே இருந்தது. அந்தக் காரணத்தை எவரும் குற்றம் கண்டு பிடிக்க இயலாது. அவன் அவ்விதமாகச் செய்ய முடியுமா?
கடவுள் அறிந்துகொள்ளப்பட முடியாதவரா?
11 சரி, இந்த “அறியப்படாத தேவன்” எப்படிப்பட்டவராக இருந்தார்? “தேவன்” உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கியிருக்கிறார். சர்வலோகம் இருப்பதையும், தாவரங்களும் மிருகங்களும் இருப்பதையும், மனிதர்களாகிய நாம் இருப்பதையும் எந்த மனிதனும் மறுதலிக்கமாட்டான். இவை அனைத்திலும் விளங்கப்பண்ணப்படும் வல்லமையும் புத்திக்கூர்மையும், ஆம், ஞானமும் அவை தற்செயல் நிகழ்வாக இல்லாமல் ஞானமும் வல்லமையுமுள்ள சிருஷ்டிகர் ஒருவரின் படைப்பாக இருப்பதைச் சுட்டிக் காண்பித்தன. உண்மையில் நியாயங்களை எடுத்துக்காட்டும் பவுலின் முறை நம்முடைய காலத்தில் இன்னும் அதிக பயனுள்ளதாகவே இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 4:11; 10:6.
12 அளக்கயியலா பெரும்பரப்பின் மையம் (In the Centre of Immensities) என்ற தன்னுடைய புத்தகத்தில் பிரிட்டிஷ் வான சாஸ்திரி சர் பெர்னாட் லவ்வெல், பூமியின் மீதுள்ள மிக எளிய உயிரினங்களில் காணப்படும் மிக அதிகமான சிக்கல் வாய்ந்த தன்மையைக் குறித்து எழுதினார். இப்படிப்பட்ட உயிர் ஒரு விபத்தில் ஏற்பட்டிருக்கக்கூடுமா என்பதையும்கூட அவர் கலந்தாராய்கிறார். அவருடைய முடிவு: “மிகச் சிறிய ஒரு புரதப் பொருளின் மூலக்கூறு தற்செயல் நிகழ்ச்சியில் உருவாவதற்கான சாத்தியம் கற்பனை செய்ய முடியாதபடி மிகவும் குறைவாகும். நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரம் மற்றும் இடைவெளியின் எல்லை நிபந்தனைகளுக்குள் அது நிச்சயமாகவே பூஜியமாக இருக்கிறது.”
13 அல்லது மற்ற மிக உயர்ந்த நம்முடைய பிரபஞ்சத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். வான சாஸ்திரிகள், அதன் ஆரம்பத்தை ஆராய மின் இயக்க கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்திருப்பது என்ன? கடவுளும் வான சாஸ்திரிகளும் (God and the Astronomers) என்பதில் ராபர்ட் ஜாஸ்ட்ரோ இவ்வாறு எழுதினார்: “இப்பொழுது வானாராய்ச்சியின் அத்தாட்சி எவ்விதமாக உலகினுடைய தோற்றத்தைப் பற்றிய பைபிளின் கருத்துக்கு வழிநடத்துகிறது என்பதை நாங்கள் காண்கிறோம்.” “பகுத்தறிவு சக்தியின் நம்பிக்கையில் வாழ்ந்து வந்த விஞ்ஞானிக்குக் கதை ஒரு கெட்ட கனவு போல முடிகிறது. அவன் அறியாமையின் மலைகளை ஏறியிருக்கிறான். அவன் மிக உயர்ந்த மலை உச்சியை வெற்றிக் கொள்ளப் போகிறான். கடைசி பாறையின் மீது ஏறுகையில், பல நூற்றாண்டுகளாக அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் இறைமையியல் வல்லுநர்களின் ஒரு குழு (சிருஷ்டிப்பை நம்புகிற ஆட்கள்) அங்கே அவனை வாழ்த்துகிறது.”—சங்கீதம் 19:1 ஒப்பிடவும்.
14 ஆகவே அப்போஸ்தலர் 17:24-லுள்ள பவுலின் குறிப்பு எவ்வளவு திருத்தமாக இருந்து, வசனம் 25-ல் அவனுடைய அடுத்த கருத்துக்கு நம்மை வழிநடத்துகிறது என்பதை நாம் காணமுடிகிறது. “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின” சக்தியுள்ள கடவுள் நிச்சயமாகவே சடப்பொருளாலான பிரபஞ்சத்தைக் காட்டிலும் பெரியவராயிருக்கிறார். (எபிரெயர் 3:4) ஆகவே அவர் கோயில்களில் குடியிருப்பதற்கு கட்டுப்படுத்தப்பட்டவராக இருப்பார், குறிப்பாக தங்களுக்கு “அறியப்படாதவர்” என்பதை வெளியரங்கமாக ஒப்புக் கொண்ட மனிதர்களால் கட்டப்பட்ட கோயில்களில் இருப்பார் என்று நினைப்பது நியாயமற்றதாகும். அந்தச் சமயத்தில் தானே அங்கே அதற்கு மேலேயிருந்த அநேக ஆலயங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கக்கூடிய தத்துவஞானிகளிடம் சொல்ல என்னே ஓர் அர்த்தமுள்ள குறிப்பாக இருந்தது!—1 இராஜாக்கள் 8:27; ஏசாயா 66:1.
15 பவுல் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், அத்தேனே நகரத்தின் உள்ளரணில் (ஆக்ரோபோலிஸில்) அவர்களுடைய காவல் தேவதையாகிய அத்தீனாவின் சிலையை வழிபட்டு வந்தார்கள். நகரின் உள்ளரணிலுள்ள ஆலயத்தில் பூஜிக்கப்பட்டுவந்த அத்தீனா தந்தத்தினாலும் பொன்னினாலும் செய்யப்பட்டிருந்தாள். மற்றொரு அத்தீனாவின் சிலை 70 அடி உயரமுள்ளதாக சமுத்திரத்தில் கப்பல்களிலிருந்து பார்க்க முடிகிற நிலையில் இருந்தது. மேலுமாக அத்தீனா பொலியாஸ் என்றழைக்கப்பட்ட மற்றொரு விக்கிரகம் வானத்திலிருந்து விழுந்ததாகச் சொல்லப்பட்டது. மக்கள் வழக்கமாக கையால் தைக்கப்பட்ட ஒரு புதிய அங்கியை அதற்கு கொண்டுவந்தார்கள். ஆனால் இந்த மனிதர்கள் அறிந்திராத அந்தக் கடவுள் உன்னதமானவராக இருந்து சர்வலோகத்தைப் படைத்திருந்தால் மனிதர்கள் கொண்டுவரக்கூடிய காரியங்களால் அவருக்குப் பணிவிடைச் செய்ய வேண்டியதேன்? அவர் நமக்கு தேவையானவற்றைத் தருகிறார்: நமக்கு “ஜீவனை”யும் அதைக் காத்துக்கொள்ள “சுவாசத்தையும்”, சூரியன், மழை, நமது உணவு உற்பத்தியாகும் செழிப்பான நிலம் உட்பட “சகலத்தையும்” கொடுக்கிறார். (அப்போஸ்தலர் 14:15–17; மத்தேயு 5:45) அவர் கொடுக்கிறவராகவும், மனிதர்கள் பெற்றுக் கொள்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். நிச்சயமாகவே கொடுப்பவர், பெற்றுக் கொள்கிறவர்கள் மீது சார்ந்தவராக இல்லை.
ஒரே மனிதனிலிருந்து எல்லாரையும்
16 அடுத்து, அப்போஸ்தலர் 17:26-ல் பவுல் ஓர் உண்மையைக் கூறினான். விசேஷமாக இனம் சார்ந்த அநீதி அவ்வளவு அதிகமாக இன்று காணப்படுவதால், அநேக ஆட்கள் இந்த உண்மையைக் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிருஷ்டிகர் “மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப் பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்தார்” என்று அவன் சொன்னான். மனித இனம் ஒரே நிலையிலுள்ளது அல்லது சகோதரத்துவமாக உள்ளது (இது நீதியைக் கேட்பதாயிருக்கிறது) என்ற கருத்து, அந்த மனிதர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு விஷயமாக இருந்தது. ஏனென்றால், அத்தேனே மனிதர்கள் தங்களுக்கு மனிதவர்க்கத்திலுள்ள மற்றவர்களிலிருந்து தனியே பிரித்து வைத்த விசேஷமான ஆரம்பம் இருந்ததாக உரிமைப்பாராட்டினார்கள். ஆனால், பவுல், நம் அனைவருக்கும் முதல் தந்தையான, முதல் மனிதன் ஆதாமைப் பற்றிய ஆதியாகமப் பதிவை ஏற்றுக் கொண்டான். (ரோமர் 5:12; 1 கொரிந்தியர் 15:45–49) ஆனால் ‘இப்படிப்பட்ட ஒரு கருத்து நம்முடைய நவீன விஞ்ஞான சகாப்தத்தில் நிலைநாட்டப்படமுடியுமா?’ என்பதாக நீங்கள் ஒருவேளை நினைக்கலாம்.
17 மனிதன் பல்வேறு இடங்களிலும் வகைகளிலும் பரிணமித்து வந்தான் என்பதாக பரிணாமக் கோட்பாடு தெரிவிக்கிறது. ஆனால் கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் நியூஸ்வீக் பத்திரிகை அதனுடைய விஞ்ஞான பகுதியை “ஆதாம் ஏவாளைத் தேடிக் காண முயற்சி” என்பதற்காக ஒதுக்கியிருந்தது. அது பிறப்பு மூலத்துக்குரிய துறையில் அண்மைக் கால வளர்ச்சியின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தியது. நாம் எதிர்பார்க்கிறபடியே, எல்லா விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே தந்தையே இருக்க வேண்டும் என்ற முடிவை இது சுட்டிக் காண்பிக்கிறது. பைபிள் வெகு காலத்துக்கு முன்பாகச் சொன்னதுபோலவே, நாம் அனைவரும் சகோதரர்களாக இருப்பதன் காரணமாக அனைவருக்குமே நீதி கிட்ட வேண்டுமல்லவா? நம்முடைய தோலின் நிறம், முடியின் அமைப்பு அல்லது மற்ற வெளிப்புற தனிப்பண்புகள் எப்படியிருந்தபோதிலும் பாரபட்சமற்ற வகையில் நடத்தப்படுவதற்கு நாம் அனைவருமே தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டுமல்லவா? (ஆதியாகமம் 11:1; அப்போஸ்தலர் 10:34, 35) ஆனால் மனிதவர்க்கத்துக்கு நீதி எவ்விதமாக, எப்போது வரும் என்பதை நாம் இன்னும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
18 ஆம், வசனம் 26-ல், பவுல், மனிதவர்க்கத்துக்குச் சிருஷ்டிகர் ஒரு விருப்பத்தை அல்லது நியாயமான நோக்கத்தைக் கொண்டிருக்க எதிர்பார்க்கலாம் என்று சுட்டிக் காண்பித்தான். கடவுள் இஸ்ரவேல் தேசத்தோடு செயல் தொடர்புக் கொண்ட போது, அவர்கள் எங்கே வாழ வேண்டும் என்றும் மற்ற தேசங்கள் அவர்களை எவ்விதமாக நடத்தக்கூடும் என்பது பற்றியும் கடவுள் அறிவித்திருந்ததை அப்போஸ்தலன் அறிந்திருந்தான். (யாத்திராகமம் 23:31, 32; எண்ணாகமம் 34:1–12; உபாகமம் 32:49–52) நிச்சயமாகவே, பவுல் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அவனுடைய குறிப்புகளை அடிப்படையில் தங்களுக்கே பெருமையுடன் பொருத்திக் கொண்டிருக்கக்கூடும். உண்மையில் அவர்கள் அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் யெகோவா தேவன் காலத்தைப் பற்றிய தம்முடைய சித்தத்தை அல்லது எப்போது சரித்திரத்தில் கிரீஸ் ஐந்தாவது மகா உலக வல்லரசாக இருக்கும் என்பது பற்றி தீர்க்கதரிசனமாக விளக்கியிருந்தார். (தானியேல் 7:6; 8:5–8, 21; 11:2, 3) இவர் தேசங்களின் போக்கையும்கூட கட்டுப்படுத்த வல்லவராக இருந்ததன் காரணமாக, அவரைப் பற்றி கற்றறிய நாம் விரும்புவது நியாயமான காரியமல்லவா?
19 கடவுள் நம்மை அறியாமையில் விட்டு இருட்டில் தடவிக் கொண்டிருக்கும்படி விட்டுவிடவில்லை. அவரைப் பற்றி கற்றறிய அத்தேனியர்களுக்கும் நமக்கும் ஓர் அடிப்படை ஆதாரத்தைக் கொடுத்தார். ரோமர் 1:20-ல் பவுல் பின்னால் எழுதியதாவது: “காணப்படாதவைகளாகிய அவருடைய [கடவுளுடைய] நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்.” ஆகவே நாம் அவரைத் தேடிக் கண்டுபிடித்து அவரைப் பற்றி கற்றறிய விரும்பினால் அவர் நமக்கு அவ்வளவு தூரமானவரல்ல.—அப்போஸ்தலர் 17:27.
20 போற்றுதலானது, அப்போஸ்தலர் 17:28 குறிப்பிடுவதை செய்யும்படியாக நம்மைத் தூண்ட வேண்டும். கடவுள் நமக்கு ஜீவனைக் கொடுத்திருக்கிறார். உண்மையில் ஒரு விருட்சத்துக்கு உயிர் இருக்கிறது என்ற அர்த்தத்தில் நமக்கு வெறுமென சாதாரண ஜீவனைக் காட்டிலும் அதிகம் நமக்கிருக்கிறது. நமக்கும் பெரும்பாலான மிருகங்களுக்கும் நடமாடக்கூடிய உயர்வான திறமை இருக்கின்றது. அதற்காக நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாக இல்லையா? ஆனால் பவுல் விஷயத்தை மேலுமாக எடுத்துச் சொல்கிறான். நாம் ஆள்தன்மைகளோடுகூட புத்திக்கூர்மையுள்ள ஆட்களாக வாழ்கிறோம். கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கும் நமது மூளை நாம் சிந்திக்கவும், (மெய்யான நீதி போன்ற) புலனாகாத நியமங்களை கிரகித்துக் கொள்ளவும் நம்பிக்கை வைக்கவும்—ஆம் கடவுளுடைய சித்தத்தின் எதிர்கால நிறைவேற்றங்களுக்காக எதிர்நோக்கியிருக்கும்படியும் நமக்கு உதவி செய்கிறது. இது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளுக்கு ஏற்றுக்கொள்வதற்கு மிக அதிகமாக இருக்கும் என்பதை பவுல் உணர்ந்திருந்தான். அவர்களுக்கு உதவி செய்வதற்காக அவர்கள் அறிந்திருந்த மற்றும் மதிப்புக் கொடுத்து வந்த சில கிரேக்க புலவர்களை மேற்கோள் காண்பித்தான். இந்தப் புலவர்களும்கூட அதேவிதமாகவே, “நாம் அவருடைய சந்ததியார்” என்று சொல்லியிருந்தார்கள்.
21 நாம் மகா உன்னதமான கடவுளின் சந்ததியார் அல்லது படைப்புகள் என்பதை மக்கள் மதித்துணருவார்களோயானால், எவ்விதமாக வாழ்வது என்பது பற்றிய அறிவுரைகளுக்கு அவரை எதிர்நோக்கியிருப்பது பொருத்தமாக இருக்கிறது. நீங்கள் பவுலின் தைரியத்தை வியந்து பாராட்ட வேண்டும். ஏனென்றால் அவன் ஏறக்குறைய அத்தேனே நகரத்தின் உள்ளரணின் நிழலில்தானே நின்றுகொண்டிருந்தான். நம்முடைய சிருஷ்டிகர் மனிதனால் உண்டுபண்ணப்பட்ட எந்த உருவச் சிலையைக்காட்டிலும், தந்தத்தினாலும் பொன்னினாலுமான அத்தீனா என்ற கிரேக்க தெய்வத்தின் ஆலயத்திலிருந்ததைக் காட்டிலும்கூட மகத்துவமுள்ளவர் என்பதை தைரியமாக அவன் காரணகாரியத்தோடு விளக்கினான். அதேவிதமாக பவுலின் கூற்றை ஏற்றுக் கொள்ளும் நாம் அனைவரும், இன்று மனிதர்களால் வழிபடப்படும் எந்த விக்கிரகத்தைப் போலவும் கடவுள் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.—ஏசாயா 40:18–26.
22 இதை மனதளவில் ஏற்றுக் கொண்டு, முன்பு வாழ்ந்தது போலவே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதற்கு இதுவெறுமென தனித்துறைச் சார்ந்த குறிப்பு இல்லை. வசனம் 30-ல் பவுல் இதைத் தெளிவுபடுத்தினான்: “அறியாமையுள்ள காலங்களைத் [கடவுள் ஓர் அற்பமான விக்கிரகம் அல்லது இப்படிப்பட்டவற்றின் மூலமாக செலுத்தப்படும் வணக்கத்தை ஏற்றுக் கொள்வார் என்பதை கற்பனை செய்வது] தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.” இப்படியாக இந்த உறுதியான முடிவுக்கு அவன் வந்தபோது பவுல் எதிர்பாரா அதிர்ச்சிதரும் ஒரு குறிப்பை அங்கே தெரிவித்தான்—மனந்திரும்புதல்! ஆகவே நாம் மெய்யான நீதிக்காக கடவுளை நோக்கியிருப்போமேயானால், நாம் மனந்திரும்ப வேண்டும் என்று அர்த்தமாகிறது. அது நம்மிடம் தேவைப்படுத்துவது என்ன? கடவுள் அனைவருக்கும் நீதியை எவ்விதமாக வழங்கப் போகிறார்? (w89 2⁄15)
[அடிக்குறிப்புகள்]
a இன்றுள்ள அநேகரைப் போன்றே ஹக்ஸிலி கிறிஸ்தவமண்டலத்தின் அநீதிகளைக் கவனித்தார். கடவுள் உண்டு என்பதைக் கண்டறிய முடியாது என்ற தலைப்புக் கொண்ட கட்டுரையில் அவர் எழுதியதாவது: “இங்கிருந்து வெளிப்பட்டு, கிறிஸ்தவ தேசங்களின் வரலாறு முழுவதிலும் பெருக்கெடுத்து வந்திருக்கும் ஏராளமான மாய்மாலத்தையும் கொடுமையையும் பொய்களையும் படுகொலைகளையும் மனித இனத்தினிடமான ஒவ்வொரு பொறுப்பு மீறுதலையும் . . . நீங்கள் மட்டும் பார்க்கக்கூடுமானால் நரகத்தைப் பற்றிய நம்முடைய மிக மோசமான கற்பனையும் இந்தக் காட்சியின் அருகே மங்கலாகவே இருக்கும்.”
நீங்கள் பதிலளிக்க முடியுமா?
◻ அத்தேனே பட்டணத்தில் பவுல் மதசம்பந்தமான என்ன நிலைமையைக் கண்டான்? இன்று எவ்விதமாக அதேப் போன்ற ஒரு நிலைமை காணப்படுகிறது?
◻ பவுலின் நாட்களில் அத்தேனே பட்டணத்தில் வழக்கமாக வணங்கப்பட்டுவந்த எல்லாப் பொய் தெய்வங்களையும்விட கடவுள் என்ன விதங்களில் உயர்ந்தவராக இருக்கிறார்?
◻ மனித இனத்தை கடவுள் சிருஷ்டித்தவிதத்தைப் பற்றிய என்ன அடிப்படையான உண்மை, எல்லாருக்கும் நீதி கிட்ட வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது?
◻ கடவுளுடைய மகத்துவத்தைப் பற்றிய அறிவுக்கு மனிதர்கள் எவ்விதமாக பிரதிபலிக்க வேண்டும்?
[கேள்விகள்]
1, 2. மேலோங்கியிருக்கும் அநீதிக்கு அநேக ஆட்கள் எவ்விதமாக பிரதிபலிக்கிறார்கள்?
3, 4. “உலோகாயவாதி” என்ற வார்த்தையின் பின்னணி என்ன?
5. எந்த பின்னணியில் பவுல் அத்தேனே பட்டணத்தாருக்குப் பேச்சைக் கொடுத்தான்? (அப்போஸ்தலர் 17:16–31 வாசிக்கச் செய்யவும்.)
6. அத்தேனேவில் பவுல் கண்டதோடு ஒப்பிட நீங்கள் வாழுமிடம் எப்படியிருக்கிறது?
7. பூர்வ கிரேக்க கடவுட்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தனர்?
8. (எ) என்ன நம்பிக்கைகளும் கருத்துக்களும் எப்பிக்கூரரை தனிப்பட குறித்துக் காட்டியது? (பி) ஸ்தோயிக்கர்கள் நம்பியது என்ன?
9. பிரசங்கிப்பதற்கு பவுலினுடைய நிலை ஏன் கடினமாக இருந்தது?
10. பவுல் எவ்விதமாக தன்னுடைய தகவலை அறிமுகஞ் செய்வதில் சாதுரியத்தைப் பயன்படுத்தினான்?
11. பவுல் எவ்விதமாக அவையோரை மெய்க் கடவுளைப் பற்றி சிந்திக்கும்படியாகச் செய்தான்?
12, 13. எந்த நவீன அத்தாட்சி பவுல் சொன்ன குறிப்பை ஆதரிக்கிறது?
14. கடவுள் மனிதனால் உண்டுபண்ணப்பட்ட ஆலயங்களில் வாசஞ்செய்வதில்லை என்ற பவுலின் குறிப்பை ஆதரித்த நியாயம் என்ன?
15. (எ) பவுல் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களின் மனதில் ஏன் அத்தீனா இருந்திருக்கலாம்? (பி) கடவுள் கொடுக்கிறவர் என்பது என்ன முடிவுக்கு வழிநடத்த வேண்டும்?
16. மனிதனின் ஆரம்பத்தைக் குறித்து பவுல் சொன்னது என்ன?
17. (எ) சில நவீன அத்தாட்சிகள் எவ்விதமாக பவுல் சுட்டிக் காட்டிய அதே காரியத்தையே காண்பிக்கின்றன? (பி) நீதியின் மீது இது என்ன பாதிப்புடையதாக இருக்கிறது?
18. மனிதர்களோடு கடவுளுடைய செயல் தொடர்புகளைப் பற்றிய பவுலின் கருத்துக்கு என்ன ஆதாரமிருக்கிறது?
19. அப்போஸ்தலர் 17:27-லுள்ள பவுலின் குறிப்பு ஏன் நியாயமானதாக இருக்கிறது?
20. கடவுளாலே “நாம் பிழைக்கிறோம், அசைகிறோம் இருக்கிறோம்” என்பது எவ்விதமாக உண்மையாயிருக்கிறது?
21. நாம் கடவுளின் சந்ததியாராய் இருப்பது நம்மை எவ்விதத்தில் பாதிக்க வேண்டும்?
22. நீதியை நாம் பெற்றுக் கொள்வதில் மனந்திரும்புதல் எவ்விதமாக உட்பட்டிருக்கிறது?
[பக்கம் 6-ன் பெட்டி]
எல்லாருக்கும் நீதி—அப்போஸ்தலர், அதிகாரம் 17
“16 அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, 17 ஜெபஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான். 18 அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: ‘இந்த வாயாடி என்ன பேசப் போகிறான்’ என்றார்கள். சிலர்: ‘இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது’ என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள். 19 அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: ‘நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா? 20 நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம்’ என்றார்கள். 21 அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை. 22 அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று:
“அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன். 23 எப்படியென்றால், நான் சுற்றித் திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். 24 உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. 25 எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானது போல, மனுஷர் கைகளால் பணிவிடை கொள்ளுகிறதுமில்லை. 26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; 27 கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. 28 ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.”
29 “நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது. 30 அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். 31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக் கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்.”
[பக்கம் 24-ன் பெட்டி]
பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டது
1980-ல் தேசீய விமான மற்றும் விண்வெளி நிர்வாகத்தைச் சேர்ந்த டாக்டர் A. ஓகீபி எழுதினார்: “பிரபஞ்சமானது சுமார் பதினைந்திலிருந்து இருபது பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக சிருஷ்டிக்கப்பட்டது என்பதற்கு நவீன வானசாஸ்திரம் நம்பத்தக்க அத்தாட்சியை கண்டுபிடித்துவிட்டது என்ற ஜாஸ்ட்ரோவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.” “நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும்: பாறைகள், ஆகாயம், வானொலி அலைகள், பெளதீகத்தின் மிக அடிப்படை விதிகளிலும் சிருஷ்டிப்புக்கான அத்தாட்சி எவ்விதமாக இத்தனை தெளிவாக முத்திரையிடப்பட்டிருக்கிறது என்பதைக் காண்கையில் என் மனம் எழுச்சிக் கொள்கிறது.”
[பக்கம் 26-ன் பெட்டி]
“ஆதாம் ஏவாளைத் தேடிக் காண முயற்சி”
இந்தத் தலைப்பின் கீழ், நியூஸ்வீக் கட்டுரையின் ஒரு பகுதி சொன்னதாவது: “நீண்ட கால அனுபவமுள்ள அகழ் ஆய்வாளர் ரிச்சர்ட் லீக்கி 1977-ல் அறிவித்ததாவது: ‘நவீன மனிதனின் பிறப்பிடம் என்று தனி ஓர் இடம் இல்லை.’ ஆனால் இப்பொழுதோ மரபு வழி பண்பியல் பயிலும் மாணவர்கள் வேறு விதமாக நம்பும் மனசாய்வுடையவர்களாக இருக்கிறார்கள் . . . ‘அது சரியாக இருக்குமானால், நான் அதன் மேல் பணம் கட்டுவேன், இந்தக் கருத்து மிகவும் முக்கியமாகும்’ என்கிறார் ஹார்வர்டின் மண்ணூல் ஆய்வாளரும் கட்டுரையாளருமான ஸ்டீபன் ஜே என்பவர். வெளிப்புறத் தோற்றத்தின் வித்தியாசங்களின் மத்தியிலும் அனைத்து மனிதர்களும் ஒரே இடத்தில் மிக அண்மையில் தோன்றிய தனி ஓர் அமைப்பின் உறுப்பினர்கள் என்பதை அது உணரச் செய்கிறது. நாம் இதுவரை உணர்ந்ததைக் காட்டிலும் மிக அதிகமான ஆழ்ந்த வகையான உயிரியல் சகோதரத்துவம் காணப்படுகிறது.’”—ஜனவரி 11, 1988.