யெகோவாவுக்கு நாம் எவ்விதம் திரும்பச் செலுத்தக்கூடும்?
ஒருவர் நம்மில் உண்மையான அனலான அக்கறையை எடுத்துக்கொண்டு, ஒருவேளை நம்முடைய நன்மைக்காக எதையாவது செய்வாரேயானால், நாம் எவ்விதம் பிரதிபலிப்போம்? தயவும் தாராளமாகக் கொடுத்தலும் பொதுவாக ஒரு பிரதிபலிப்பைக் கொண்டுவருகிறது, அல்லவா? அப்படியென்றால் நம்மீது தொடர்ந்து அன்புள்ள தயவு காண்பித்து வரும் நம்முடைய கடவுளாகிய யெகோவாவிடத்தில் நாம் வெளிப்படுத்தும் உணர்வுகளைப் பற்றியதென்ன?
நம்முடைய அன்றாட வாழ்க்கையின் அழுத்தத்தில் நாம் அவசரமாக செயல்படும்போது, யெகோவாவின் நன்மையுள்ள செயல்களை சர்வசாதாரணமாக எண்ணிவிடுவது எவ்வளவு எளிதாய் இருக்கிறது! சில சமயங்களில் நாம் உண்மையிலேயே நன்றியில்லாதவர்களைப்போலும் நடந்துகொள்கிறோம். ஆகவே நாம் சற்று நின்று சங்கீதக்காரனுடைய கேள்வியைப் பற்றி சிந்திப்பது நன்மையாக இருக்கும்: “யெகோவா (NW) எனக்குச் செய்த எல்லா உபாகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்?” (சங்கீதம் 116:12) என்ன வழிகளில் நாம் பிரதிபலிக்கலாம்?
யெகோவாவிடம் நன்மைகள்
யெகோவாவின் வெகுமதியான அவருடைய வார்த்தையாகிய பைபிள் நமக்குக் கொடுக்கப்படவில்லையென்றால் நாம் எவ்வளவு திசைமாறி சென்றிருப்போம்! கடந்த நூற்றாண்டுகளிலே. தைரியமுள்ள ஆண்களும் பெண்களும் இந்தப் புத்தகத்தை சொந்தமாக வைத்திருப்பதற்கும், படிப்பதற்கும் தங்கள் உயிரையும்கூட அருமையாக எண்ணாமல் ஆபத்துக்குள்ளாக்கினார்கள். அவர்கள் ஏன் அவ்விதம் இருந்தார்கள் என்ற காரியத்தை நாம் புரிந்துகொள்ளும் அளவிற்கு வளர்ந்திருக்கிறோம். தேவனுடைய மனிதர்கள் தேவாவியால் எழுதப்பட்ட வசனங்களுக்கு எப்பொழுதுமே நன்றியுள்ள போற்றுதலை தெரிந்திருக்கிறார்கள். ஏனென்றால் அவைகள் “உபதேசத்துக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும்” எவ்வளவு பிரயோஜனமுள்ளவைகள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.—2 தீமோத்தேயு 3:17.
“எந்த நற்கிரியைகளையும் செய்ய தகுதியுள்ளவர்களாக” நாம் இருக்கவேண்டுமென்றால், பைபிளைப் பற்றித் தலை அறிவைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது. (2 தீமோத்தேயு 3:16) கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலமாகத்தானே நம்முடைய வாழ்க்கையில் நன்மைகள் ஏற்படுகின்றன, யெகோவா தேவனின் அக்கறையூட்டும் வார்த்தைகளால் இந்த உண்மை ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக நம்முடைய கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது: “இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், (யெகோவா,NW) அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார். இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் (யெகோவா,NW) சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் (யெகோவா,NW) நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.” (ஏசாயா 48:16-18) அவருடைய பரிசுத்த ஆவியின் மூலமாகவும் அவருடைய வார்த்தையின் பிரகாரமாகவும் யெகோவா தேவன் நாம் நன்மை பெறும்படி நம்மை வழிநடத்துகிறார், அதுதானே சமாதானத்திலும் நீதியிலும் விளைவடைகிறது. மேலும் யெகோவாவின் கிரியை நடப்பிக்கும் சக்தி நாம் நன்மை அடைவதற்காக திறம்பட்டவிதத்தில் வேலைசெய்கிறது. ஏனென்றால் ஒருவரை சட்டமாக, அவருடைய பூமிக்குரிய ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக பரிசுத்த ஆவி கிரியைசெய்கிறது. 1 கொரிந்தியர் 12-ம் அதிகாரத்தில் பவுல் கிறிஸ்தவ சபையை ஒரு சரீரத்திற்கு ஒப்பிட்டு 7-ம் வசனத்தில் இவ்விதமாக விவரிக்கிறான்: “ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.” மேலும் கடவுளுடைய பூமிக்குரிய அமைப்பின் பாகமாக இருப்பதனால் நாம் எப்படி நன்மை அடைகிறோம் என்பதை தொடர்ந்து காண்பிக்கிறான்.
இந்த வார்த்தைகளை எழுதின ஐந்து ஆண்டுகளுக்குப் பிற்பாடு எபேசுவில் இருக்கும் கிறிஸ்தவ சபைக்கு பவுல் எழுதும்போது, அந்தப் பூமிக்குரிய ஏற்பாடோடு இணைக்கப்பட்டிருப்பதால் வரும் நன்மைகளை விரிவாக விளக்குகிறான். அவன் சொன்னவை ஆரம்பத்திலே, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தினபோதிலும், “திரள் கூட்டத்தாரை”ப் பற்றியதென்ன? இன்றைக்கு அவர்களும்கூட “சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும்” ஆவிக்குரிய ‘முதிர்ச்சியுள்ள மனிதர்களாகவும்’ விசுவாசத்தில் உறுதிப்பட்டவர்களாகவும், “குழந்தையாயிராமல்” “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், வளருகிறவர்களாக” காணப்படவில்லையா? (வெளிப்படுத்துதல் 7:9; எபேசியர் 4:12-16) நாம் அனைவரும் நன்றியுள்ளவர்களாய் இருப்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன.
கிறிஸ்தவ சபையோடு அடையாளப்படுத்தப்படுவது உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாகும். நமக்கு ஆவிக்குரிய உணவளிக்கும் அதனுடைய வேலை, நாம் யெகோவாவினால் நன்மையளிக்கப்படுகிறோம் என்பதற்கு மற்றொரு சான்றாக இருக்கிறது. (மத்தேயு 24:45, 46) முன்னறிவிக்கப்பட்டபடியே இங்கு நாம் இப்பொழுது எஜமானரின் பிரசன்ன காலத்தில் இருக்கிறோம். அந்த “அடிமை” அவருடைய வேலையைச் செய்கிறதா? நம்பிக்கையற்ற “கடைசி நாட்களில்” இருந்தாலும் நாம் நம்பிக்கையினால் நிறைந்தவர்களாக காணப்படுகிறோமா? மதிப்புள்ள நோக்கத்தை நம்முடைய வாழ்க்கையில் கொண்டிருக்கிறோமா? (2 தீமோத்தேயு 3:1-5; ரோமர் 5:5; 1 தீமோத்தேயு 4:10)
ஆம்! நம்முடைய நம்பிக்கையானது ஊகிப்புகளின் பேரில் சார்ந்ததாக இல்லாமல் மாறாக விசுவாசத்தில் கட்டப்பட்டதாயும் அது கனமான சான்றுகளின் அடிப்படையில் அமைந்ததாயும் இருக்கிறது.—எபிரேயர் 11:1.
நன்மைகளைக் கொடுப்பவராக நம்முடைய யெகோவா தந்திருக்கும் அநேக காரியங்களுக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். அதன்பிரகாரம் நியாயமாகவே ஒரு கேள்வி பின்தொடருகிறது:
யெகோவாவுக்கு நான் எதைத் திரும்பச் செலுத்துவேன்?
யெகோவாவுக்கு நம்மிடத்திலிருந்து எதுவும் தேவையில்லை என்பதை நாம் முதலில் ஒப்புக்கொள்ளவேண்டும் அவர்தாமே இவ்விதம் சொல்லுகிறார்: “வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது.” அதேபோல “பர்வதங்களில் ஆயிரமாயிரமாய் திரிகிற மிருகங்களும்” என்னுடையவைகள்.” (ஆகாய் 2:8; சங்கீதம் 50:10; யோபு 41:11) நாம் எந்தவிதத்திலும் யெகோவாவின் தயவை “வாங்க” முடியாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது; ஆனாலும் அவருக்கு மனப்பூர்வமாய் கொடுக்கும்படி நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். (1 நாளாகமம் 29:14-ஐ ஒப்பிடவும்) ஆகிலும் யெகோவாவுக்குக் காணிக்கைக் கொடுக்க நாம் அனுமதிக்கப்பட வேண்டுமென்றால் சில நிபந்தனைகள் இருக்கின்றன.
“என்பதைக் கொண்டு நான் கர்த்தருடைய (யெகோவா, NW) சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்து கொள்வேன்? தகனபலிகளைக் கொண்டும், ஒரு வயது கன்றுக்குட்டிகளைக் கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமா? ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரில், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின் பேரிலும் கர்த்தர் (யெகோவா, NW) பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் முதற் பேறானவனையும் என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் முதற் பேறானவனையும் என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ? மனுஷனே, நன்மை இன்னதன்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்: நியாஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் (யெகோவா, NW) உன்னிடத்தில் கேட்கிறார்:”-மீகா 6:6-8.
யெகோவாவின் தேவைகள் எப்பொழுதுமே நியாயமாகவும், எப்பொழுதும் நம்மால் செய்யக்கூடிய காரியமாகவும் இருப்பதை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம். இயேசுவானவர் இன்னும் கூடுதலாக குறிப்பிடுகையில், நாம் அளிக்கும் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு யெகோவாவிடமும் நம்முடைய உடன் மானிடர்களிடமும் நாம கொண்டிருக்கும் உறவு சரியாக இருக்க வேண்டும் என்ற முன் தேவையை பற்றி பேசினார். (மத்தேயு 5:23, 24) சரியான அடிப்படையை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, இப்பொழுது யெகோவா நம்மிடத்தில் காண்பித்திருக்கும் நற்குணங்களை போற்றுவதற்கு நாம் அனைவரும் அவருக்குக் கொடுக்க எதையாவது கொண்டிருப்பதை நாம் காணமுடிகிறது.
நம்மிடத்தில் இருப்பதை நாம் எப்படி உபயோகிக்கலாம்?
அதற்கு நேரம், முயற்சி மற்றும் ஓரளவு பணம் தேவைப்பட்டாலும், பிரசங்க வேலையில் யெகோவாவை பிரதிநித்துவம் செய்வது என்னே ஒரு சிலாக்கியம்! இந்தத் துதியின் பலியை நாம் அனைவருமே யெகோவாவுக்கு தரமுடியும். மூன்று சிறிய குழந்தைகளை உடைய ஒரு பயணியர் மூப்பர் அதைக்குறித்து இவ்விதமாக உணருகிறார்:
“முழு நேர ஊழிய சிலாக்கியத்தில் பங்குகொள்வதற்காக எந்த ஒரு சுயதியாகத்தையும் நாம் செய்யலாம்—அதற்கு மேலும்கூட—ஏனென்றால் நம்முடைய பரம தந்தைக்குத் துதி செலுத்துவதற்கு மிக திறம்பட்ட வழியாக இருக்கிறது. மேலும் அவர் எனக்குத் தனிப்பட்ட விதத்தில் காண்பித்த தகுதியற்ற தயவுக்கு இந்த ஊழியத்தின் மூலம் நான் ஓரளவுக்கு நன்றிசெலுத்த முடிகிறது.”
அவருடைய மனைவி மேலும் கூறும்போது? “என்னுடைய கணவர் பயனியர் ஊழியம் செய்வதற்காக உதவு செய்வது உண்மையிலேயே ஒரு சிலாக்கியம். முழுகுடும்பமும் ஊழித்தில் பெரும் அளவில் பங்குகொள்வதற்கும் அது உதவியாக இருக்கிறது, மற்றும் யெகோவாவின் தயவுள்ள கரங்கள்தானே எங்களை ஆவிக்குரிய வகையிலும் சரீரப்பிரகாரமாயும் பராமரிப்பதைப் பார்ப்பது அவரை இன்னும் அதிகமாக துதிக்க விரும்பச் செய்கிறது.”
காவற்கோபுர சங்கம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பைபிள்களையும் பைபிள் இலக்கியங்களையும் முன்வந்து விநியோகிக்கும் அடிப்படையில் அளித்து வந்திருக்கிறது. 1920-ம் ஆண்டு முதற்கொண்டு அவைகளை தன்னுடைய சொந்த அச்சு இயந்திரங்களின் மூலம் அச்சிட்டு வந்திருக்கிறது. இப்பொழுது நாம் கொண்டிருக்கும் எல்லாப் பிரசுரங்களையும் உண்டுபண்ணியிருக்கும் பெத்தேலில் மனமுவந்து வேலைசெய்யும் ஆட்களின் நேரமும் முயற்சியும், அவைகளை தன்னுடைய சொந்த அச்சு இயந்திரங்களின் மூலம் அச்சிட்டுவந்திருக்கிறது. இப்பொழுது நாம் கொண்டிருக்கும் எல்லாப் பிரசுரங்களையும் உண்டுபண்ணியிருக்கும் பெத்தேலில் மனமுவந்து வேலைசெய்யும் ஆட்களின் நேரமும் முயற்சியும், அவைகளை விநியோகம் செய்யும் சபை பிரஸ்தாபிகள் மற்றும் பயனியர்களுடையதோடு சேர்ந்து இன்றியமையாத பிரசங்க வேலைக்குக் கூடுதல் நன்கொடையாக அமைகிறது.—மத்தேயு 24:14.
மேலும், அதிக நிலையான பொருளாதாரத்தையுடைய தேசங்களில் வாழும் கிறிஸ்தவர்கள் அவர்கள் தேசத்திலிருக்கும் காவற்கோபுர சங்கத்தின் கிளை காரியாலயத்திற்கு அனுப்பும் தயவுள்ள வெகுமதி பணங்கள், உலகத்தின் மற்ற பாகங்களில் இருக்கும் ஏராளமான சகோதரர்கள் முழுநேர பிரசங்க மற்றும் சீஷராக்கும் பணியில் ஈடுபடு உதவி செய்கிறது என்பதை அறிவதில் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள். இவ்விதமாக மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகள் மூலமாக காவற்கோபுர கிலியட் பைபிள் பள்ளியின் மிஷனரிகளும் வட்டார மற்றும் மாவட்ட கண்காணிகளும் விஷேசித்த பயனியர்களும் தங்களுடைய முழுநேர சேவையைத் தொடர்ந்து செய்வதற்கு உதவி செய்யப்படுகிறார்கள்.
ஒருவேளை பெத்தேலில் சேவை செய்ய உங்களால் முடியாமல் இருக்கலாம் அல்லது கட்டிட வேலையின் மனப்பூர்வ வேளையா திட்டத்தில் நீங்கள் ஓர் அங்கத்தினராக இல்லாதவராக இருக்கலாம். ஆனால் உங்களிடத்தில் நிதி இருக்கலாம். அப்படிப்பட்ட பணியில் ஈடுபடுகின்றன, ஆனால் “உபரியாக” நிதி இல்லாதவர்கள் தங்களை பராமரித்துக் கொள்வதற்கு நீங்கள் ஆதரவு தரலாம். 2 கொரிந்தியர் 8:14-ம் வசனத்தில் விவரிக்கப்பட்டபடி சமநிலையான உதவி காரியங்கள் அங்கு இடம் பெறலாம். அவ்விமான நன்கொடைகள் இணைக்கப்பட்ட கடிதங்கள் ஒன்றில் ஒரு வயதான சகோதரி எழுதும்போது:
“யெகோவா எனக்குத் தந்திருக்கும் எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன், மற்றும் கட்டிட வேலைகளுக்காகவும் அமைப்புக்காகவும் நான் தொடர்ந்து ஜெபித்து வருகிறேன்!”
மற்றொரு சகோதரி இவ்விதமாக குறிப்பிட்டார்கள்: “வங்கிகள் சிதைவுற்று போவதற்கு முன்பாகவே சிறிய இந்தத்தொகையானது தேவராஜ்ய காரியங்களுக்கு நன்மையாக பயன்படவேண்டுமென்று நான் விரும்புகிறேன்!”
ஒரு சகோதரன் இந்த வார்த்தைகள் மூலமாக தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினான்: “நம்முடைய சொந்த உடைமைகளை அவருடைய மகிமைக்காக உபயோகப்படுத்த வேண்டுமென்று யெகோவா நமக்கு ஆலோசனை கொடுத்திருப்பதுதானே நம்மை பாதுகாக்கும் ஏதுவாக இருக்கிறது. ஏனென்றால் இந்தப் பேராசைமிக்க வணிகம் சாத்தானின் பொல்லாத ஒழுங்குமுறையின் “மூன்றாவது பகுதி” ஆக செயல்படுகிறது. யெகோவா நமக்குத் தந்திருக்கும் வேகமான அதிகரிப்பிற்கு உதவ என்னால் முடிந்தவற்றை நன்கொடையாக கொடுப்பதில் நான் மகிழ்ச்சியுள்ளவனாய் இருக்கிறேன் என்று சொல்வதற்கு இந்தச் சந்தரப்பத்தை எடுத்துக்கொள்கிறேன். நான் உபயோகப்படுத்தப்படுவதை சாத்தியமாக்கினதற்காக நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.”
பெரியவர்கள் மற்றும் சிறியவர்களிடமிருந்து வரும் வெகுமதிகள்
வயது சென்றவர்களுடைய விசுவாசம் மிக்க உறுதியுள்ள தீர்மானங்களை அறியும்போது நாம் உற்சாகமடைகிறோம் அப்படிப்பட்டவர்கள் இந்த ஒழுங்குமுறையைத் தப்பிப்பிழைக்க முடியும் என்று நம்பியிருந்தாலும் ஒரு பொருத்தமான உயிலை அவர்கள் உண்டாக்கி அதை உறுதிசெய்து ஒருவேளை தாங்கள் மரிக்க நேரிட்டால் ராஜ்ய வேலைகள் நன்மையடையும்படியாக ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அவ்விதமான உயில்களை எழுதினவர்களுடைய நல்ல நோக்குநிலைகளைக் குறித்து அந்த உயில்களைத் தயாரித்தவர்கள் விவரித்தவைகளில் இதுவும் உட்படுகிறது:
“அனைவரிடத்திலும் தயவாக நடந்துகொண்ட அவள், தன்னுடைய வாழ்நாள் முழுவதும். . .யெகோவாவையும் அவருடைய சிருஷ்டிப்பையும் நேசித்தாள்.”
“ராஜ்யத்தின் அக்கறைகள்தான் எப்போதுமே அவளுடைய முதல் கவனம்.”
“விசுவாசமிக்க 70 ஆண்டுகள் சேவைக்குப் பிற்பாடு அவர் தன்னுடைய பரலோக பரிசைப் பெற்றார். . . தன்னுடைய பொருளுடைமைகள் மூலமாக சத்தியம் பரவவேண்டும் என்பதையே அவர் விரும்பினார்.”
தங்களுடைய பொருட்களை யெகோவாவின் வேலைக்காக உபயோகப்படுத்த வேண்டும் என்று முனைப்பாயிருக்கும் இளம்வயதினர் சொல்வதைக் கேட்பதும்கூட நமக்குச் சந்தோஷத்தை தருகிறது. பிரிட்டனில் இருக்கும் சங்கத்தின் அலுவலகத்திற்கு ஒரு பள்ளி-வயது பிரஸ்தாபியின் கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றது. தான் ஒரு கட்டுரைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றதாக அதில் குறிப்பிட்டிருந்தாள். அந்தப் பரிசுத்தொகை முழுவதுமாக அவள் அனுப்பியிருந்தாள். “கிறிஸ்தவ பொருத்தனை” என்ற கட்டுரையின்பேரில் அவள் எழுதுவதற்கு சங்கத்தின் பிரசுரங்கள்தானே ஊற்றுமூலமாக இருந்தன. ஆகவே இந்தப் பரிசு பணம் பொருத்தமாகவே யெகோவாவுக்கு உரியது என்று அவள் உணர்ந்தாள்.
யெகோவாவுக்கு அவன் எதைத் திரும்ப செலுத்துவான் என்று கேட்ட பிற்பாடு 116-ம் சங்கீதத்தை எழுதிய எழுத்தாளர் வசனம் 13, மற்றும் 14-ல் தொடர்ந்து செல்லும்போது: “இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு யெகோவாவினுடைய (NW) நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன். நான் யெகோவாவுக்குச் (NW) செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்.” யெகோவா குமாரனின் மூலமாக அளிக்கும் இரட்சிப்பு என்ற விலைமதிப்புள்ள பரிசை போற்றுபவர்களாக, சங்கீதக்காரனைப் போல உந்துவிக்கப்பட்டவர்களாக நாம் அவரை நோக்கி கூப்பிடுகிறோம் மற்றும் அவருக்கு நம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற விரும்புகிறோம்.
யெகோவா நமக்கு ஏராளமான நன்மைகளைச் செய்திருக்கிறார், மறுபட்சத்தில் நாம் என்னதான் திரும்பி செலுத்தினாலும் அதற்கு ஒப்பிடும்போது அது சிறிதளவாகத்தான் இருக்கும். ஆகவே நன்றியின் வெளிக்காட்டாக, நம்மால் கூடிய எல்லாவற்றையும் எல்லா வழிகளிலும் செய்வது எவ்வளவு பொருத்தமாக இருக்கும்! நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச்செலுத்தி, யெகோவாவினுடைய (NW) நாமத்தைத் தொழுதுகொள்வேன்.”—சங்கீதம் 116:17. (W88 12/1)
சிலர் எப்படி ராஜ்யவேலைக்கு நன்கொடை அளிக்கிறார்கள்
◻ வெகுமதிகள்: பணமாக மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகள் நேரடியாக உவாட்ச்டவர் சொஸைட்டிக்கு (Wath Tower Bible & Tract Society of Pennsylvania, 25 Columbia Heights, Brooklyn, New York 11201) அல்லது உள்ளூரிலுள்ள கிளைக் காரியாலயத்துக்கு அனுப்பப்படலாம். நிலம், கட்டிட மனைகள் போன்ற சொத்துகள், நகை அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களும்கூட நன்கொடையாக அளிக்கப்படலாம். இவை எந்தவித நிபந்தனையும் இல்லாத ஒரு நன்கொடை என்பதைத் தெரிவிக்கும் சுருக்கமான ஒரு கடிதம் இந்த நன்கொடைகளோடு சேர்ந்துவர வேண்டும்.
◻ நிபந்தனைக்குட்பட்ட நன்கொடை ஏற்பாடு: உவாட்ச் டவர் சங்கத்தின் பொறுப்பில் வைத்துக்கொள்ளும்படியாகப் பணம்கொடுக்கப்படலாம். இந்தப் பணம் சொந்த தேவை ஏற்பட்டால் நன்கொடையாளருக்குத் திரும்பத் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு அளிக்கப்படக்கூடும்.
◻ காப்புறுதி (இன்டசூரன்ஸ்): ஒரு ஆயுள்-காப்புறுதி திட்டத்தின் அல்லது ஓய்வு/ஊதியத் திட்டத்தின் அனுபவ பாத்தியத்தை உடையதாக உவாட்ச் டவர் சொஸைட்டி பெயரிடப்படலாம். இத்தகைய ஏற்பாடுகள் யாவற்றையும் குறித்து சங்கத்துக்குத் தகவல் தெரிவித்திட வேண்டும்.
◻ நம்பிக்கை பொறுப்புறுதி (Trusts): வங்கி சேமிப்பு கணக்குகள் சங்கத்திடம் நம்பிக்கை பொறுப்புறுதியாக (Trusts) வைக்கப்படலாம். இவ்வாறு செய்யப்பட்டால், சங்கத்துக்கு இது தெரிவிக்கப்பட வேண்டும். நன்கொடையாளர் உயிரோடிருக்கும் வரை அதை அனுபவிப்பார் என்ற ஓர் ஏற்பாட்டின்கீழ் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் சொத்துக்களும்கூட நன்கொடையாக அளிக்கப்படலாம். இம்முறையில் உயில் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்காகும் செலவையும் அநிச்சயங்களையும் நீக்கிவிடக்கூடும். மரணம் நேரிடுமானால் சங்கம் இதைப் பெற்றுக்கொள்வதை இது நிச்சயப்படுத்துவதாகவும் இருக்கும்.
◻ உயில்கள்: சொத்து அல்லது பணம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட ஒரு உயில் மூலமாக உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு ஒப்படைக்கப்படலாம். அதன் நகல் ஒன்று சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இதன் பேரில் கூடுதலான தகவல்கள் அல்லது ஆலோசனைகளுக்கு உவாட்ச் டவர் சொஸைட்டியின் பொருளாளர் அலுவலகத்துக்கு (Wath Tower Bible & Tract Society of Pennsylvania, 25 Columbia Heights, Brooklyn, New York 11201) அல்லது சங்கத்தின் உள்ளூர் கிளைக்காரியாலயத்துக்கு எழுதி கேட்கவும்.