உங்களுடைய ஜெபங்கள் எவ்வளவு அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன
“முழு இருதயத்தோடும் குவிந்துவிட்டன, யெகோவாவே என் ஜெபத்தைக் கேளும்.”—சங்கீதம் 119:145.
சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் எப்படிப்பட்ட ஜெபங்களைக் கேட்கிறார்? ஜெபங்களுக்குக் கடவுள் பதிலளிக்க அடிப்படை நிபந்தனைகளில் ஒன்றை இயேசு சொன்னது என்னவென்றால் இரண்டு மனிதர் எருசலேம் தேவாலயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன், உயர்வாக கனப்படுத்தப்பட்ட பரிசேயன், மற்றவன் வெறுக்கப்பட்ட ஆயக்காரன். பரிசேயன் ஜெபித்தான், “ஓ, தேவனே, நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், நான் மற்றவர்களைப் போலல்ல. . . அல்லது இந்த ஆயக்காரனைப் போலுமல்ல ஒரு வாரத்தில் இரு முறை உபவாசிக்கிறேன், என்னுடையவைகளெல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை செலுத்துகிறேன்.” ஆனால் தாழ்த்தப்பட்ட ஆயக்காரனோ, தொடர்ந்து “தன் மார்பில் அடித்துக்கொண்டு சொல்லிக்கொண்டான், ‘ஓ தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்.’”—லூக்கா 18:9-13.
2. இந்த இரண்டு ஜெபங்களைப்பற்றி இயேசு விளக்கம்கூறினார்: “நான் சொல்லுகிறேன், இவனே (ஆயக்காரன்) அவனைக்காட்டிலும் (பரிசேயன்) அதிக நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.” (லூக்கா 18:14) தெளிவாகவே, வெறுமென நம்முடைய பரலோகத் தகப்பனிடம் ஜெபிப்பது போதாது என்று இயேசு காட்டினார். எவ்விதம் ஜெபிக்கிறோம்—நம்முடைய மனநிலை—அதுவும் முக்கியம்.
3. மெய்யாகவே, ஜெபமானது ஒரு மதிப்புள்ள கனத்திற்குரிய, வினைமையான சிலாக்கியம், நன்கு அறிந்த கிறிஸ்தவர்கள் இதை ஆட்கொள்ளும் அடிப்படை சட்டத்துடன் பழக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஒரே தேவனாகிய யெகோவாவிற்கே ஜெபங்கள் ஏறெடுக்கப்பட வேண்டும். அவை அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சொல்லப்படவேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட அவை விசுவாசத்துடன் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆம், “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்று விசுவாசிக்க வேண்டும்.” மேலும் ஒருவருடைய ஜெபங்கள் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக இருக்க வேண்டும். (எபிரேயர் 11:6; சங்கீதம் 65:2; மத்தேயு 17:20; யோவான் 5:14) வேத உதாரணங்களிலிருந்து, ஜெபங்கள் போற்றுதற்குரிய, நன்றி செலுத்துதலாக, சமர்ப்பித்தலாக, வேண்டுதலுக்குரியவையாக இருக்கக்கூடும்.—லூக்கா 10:21; எபேசியர் 5:20; பிலிப்பியர் 4:6; எபிரேயர் 5:7.
அர்த்தமுள்ள ஜெபங்களுக்கான உதாரணங்கள்
4. பளுவான பிரச்னைகளை எதிர்ப்பட இருக்கையில் வினைமையான தீர்மானங்கள் தேவைப்படுகையில், பெரிய தவறுகள் செய்யப்படுகையில் அல்லது நம்முடைய உயிர் பயமுறுத்தப்படுகையில் விசேஷமாக நம்முடைய ஜெபங்கள் ஊக்கமானவையாயும் அர்த்தம் நிறைந்தவையாயும் இருக்கின்றன. விசுவாசமற்ற பத்து வேவுக்காரர்கள் சமர்ப்பித்த எதிர்மறையான செய்தியைத் தெரிவித்த போது இஸ்ரவேலர்கள் கலகம் செய்ததால் அந்த ஜனங்கள் முற்றிலும் அழிக்கப்பட பாத்திரமானவர்கள் என்று யெகோவா மோசேயினிடம் கூறினார். மோசே, இந்த நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான், ஏனெனில் அவருடைய நாமம் உட்பட்டிருந்தது. (எண்ணாகமம் 14:11-19) ஆகானின் பேராசையால் இஸ்ரவேல் ஆயியின் தோற்கடிக்கப்பட்டபோது யெகோவாவின் நாம அடிப்படையில் உணர்ச்சி ததும்பும் வகையில் யோசுவா மன்றாடினான். (யோசுவா 7:6-9) தாவீதின் அநேக சங்கீதங்கள் ஊக்கமான ஜெபங்களாக இருக்கின்றன. குறிப்பாக 51-ம் சங்கீதம் ஆர்வம் அளிக்கும் உதாரணமாகும். மற்றொரு உதாரணம் யூதாவின் மேல் அசீரிய அரசனாகிய சனகெரிப் படையெடுத்தபோது அரசனாகிய எசேக்கியாவின் அர்த்தமுள்ள ஜெபம் மறுபடியும் யெகோவாவின் நாமத்தை உட்படுத்தியது.—ஏசாயா 37:14-20.
5. புலம்பல்களின் புத்தகம் தன்னுடைய ஜனங்களின் சார்பில் எரேமியாவால் செய்யப்பட்ட ஒரு நீளமான, மற்றும் உருக்கமான ஜெபம் என்றே சொல்லப்படலாம். ஏனென்றால் அதில் அடிக்கடி யெகோவாவை பெயர் சொல்லி விண்ணப்பம் செய்யப்படுகிறது. (புலம்பல் 1:20; 2:20; 3:40-45, 55-56; 5:1-22) தங்களுடைய ஜனங்களின் தவறுதல்களுக்காக மன்னிப்பு கோரி எஸ்றாவும் தானியேலும் அர்த்தமுள்ள உருக்கமான ஜெபங்களைச் செய்தனர். (எஸ்றா 5:5-15; தானியேல் 9:4-19) பெரிய மீனின் வயிற்றிற்குள் இருக்கையில், யோனா செய்த ஜெபம் ஊக்கமுள்ளதாயும் அர்த்தமுள்ளதாயும் இருந்தது என்பதும் நிச்சம்.—யோனா 2:1-9.
6. 12 அப்போஸ்தலரைத் தேர்ந்தெடுக்குமுன், தேர்வில் பிதாவின் சித்தம் செய்யப்படுவதற்காக, இயேசு முழு இரவும் ஜெபத்தில் தரித்திருந்தார். (லூக்கா 6:12-16) யோவான் 17-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்ட பிரகாரமாக, தான் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்றிரவு செய்யப்பட்ட இயேசுவின் ஜெபம் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இந்த எல்லா ஜெபங்களையும் உச்சரித்தவர்கள் யெகோவாவுடன் நல்ல கூட்டுறவில் இருந்தார்கள் என்பதற்கான திறமையுள்ள சாட்சியும் இருக்கின்றன. ஒரு சந்தேகமில்லாமல், ஜெபங்கள் அர்த்தமுள்ளவையாக இருக்க வேண்டுமென்றால் அவை ஊக்கமுள்ளவையாயும் அர்த்தமுள்ளவையாயும் இருக்க வேண்டும்.—யாக்கோபு 5:16, தி ஜெருசலேம் பைபிள்.
மானிட அபூரணத்தினால் ஏற்படும் பிழைகள்
7. குறிப்பிட்ட பிரகாரமாக, அழுத்தம் நிறைந்த நிலையின் கீழ் நம்முடைய ஜெபங்கள் ஊக்கமுள்ளவையாயும் அர்த்தமுள்ளவையாயும் இருப்பதாகத் தோன்றுகின்றன. ஆனால் நம்முடைய அன்றாட ஜெபங்களைப் பற்றி என்ன? நம்முடைய பரலோகத் தகப்பனாகிய யெகோவா தேவனோடு அனலான நெருங்கிய உறவில் இருப்பதை நாம் உணரும்வகையில் இருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சியைக் கொடுக்கிறதா? சரியாகவே சொல்லப்பட்டிருக்கிறது: “ஜெபம் யெகோவாவுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டுமானால் நமக்குதானே அது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.” சிந்திக்கப்படுவதற்குத் தகுதியான காரியங்களை நம்முடைய ஜெபத்தில் வைத்து உண்மையாகவே அவை நம்முடைய அடையாளப் பூர்வ இருதயத்திலிருந்து வருகின்றன என்று நிச்சயப்படுத்துகிறோமா?
8. இதன் சம்பந்தமாக நம்முடைய ஜெபங்கள் சிதைவுற அனுமதிப்பது எளிதாக இருக்கிறது. ஏனென்றால் நம்முடைய சுதந்தரிக்கப்பட்ட பாவம், அபூரண மனச்சாய்வுகள் இவற்றால் நம்முடைய இருதயங்கள் எளிதில் நம்மை ஏமாற்றலாம் ஜெபங்கள் என்ன தன்மையுடையதாக இருக்க வேண்டுமோ, அதைக் கொள்ளை கொள்ளலாம். (எரேமியா 17:9) அநேக சந்தரப்பங்களில் ஜெபிப்பதற்கு முன் நாம் நின்று நினைத்து செய்யாவிட்டால் நம்முடைய ஜெபங்கள் தானியங்கியாக, ஒரேமாதிரியான வார்த்தைகளடங்கிய வழக்கமாக உச்சரிக்கும்படி அமைந்து விடுகிறது. அல்லது அவை திரும்பத் திரும்ப உரைப்பது போல் அமைந்து விடுகிறது. ‘புறஜாதியார் செய்வது போல’ (மத்தேயு 6:7, 8) என்று இயேசு கூறியதை நாம் நினைவிற்குக் கொண்டு வரலாம், அல்லது நம்முடைய ஜெபங்கள், குறிப்பிட்ட காரியங்களைப் பற்றியோ, ஆட்களைப் பற்றியோ இல்லாமல் பொதுப்படையான காரியத்தைத் தழுவியதாக இருக்கலாம்.
9. சில சமயங்களில் நம்முடைய ஜெபத்தில் அவசரமான மனச்சாய்வைக் காட்டலாம். “ஜெபிப்பதற்கு நீங்கள் அவ்வளவு அவசரத்தன்மையில் இருந்தால், நீங்கள் மெய்யாகவே அவசரம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்” என்று சொல்லப்படுவது கவனிக்கப்படத்தக்கது நாம் ஜெபம் செய்யும் ஒவ்வொரு சமயமும் குறிப்பிட்ட வார்த்தைகளை மனப்பாடம் செய்து ஒப்பிக்க மாட்டோம். ஒரு யெகோவாவின் சாட்சியாக, ஒருவர் தன் ஜெபத்தை வாசிக்கவும் மாட்டார், உதாரணமாக ஒரு பொதுக்கூட்டத்தில் அவ்வாறு செய்யமாட்டார். சந்தேகமில்லாமல் இப்படிப்பட்ட ஆபத்துக்கள் ஓரளவுக்காவது நிகழுகின்றன, ஏனெனில் யெகோவா தேவனை நம் மாம்சக் கண்களால் காணாதிருந்தும் அவரிடத்தில் ஜெபிக்கிறோம். ஆகிலும், இத்தகைய மனப்பாடம் செய்யப்பட்ட ஜெபங்களில் பிரியங்கொள்வார் என்பதாக நாம் எதிர்பார்க்க முடியாது அவற்றை உச்சரிப்பதால் நாமும்கூட எந்தப் பயனையும் அடைய முடியாது.
தவறுகளை மேற்கொள்ளுதல்
10. எந்த அளவிற்கு நம்முடைய அன்றாட ஜெபங்களைப் போற்றுதலோடு செய்து நம்முடைய பரலோகத்தகப்பனிடம் நல்லுறவில் இருக்கிறோமோ, அந்த அளவிற்கு, மேலே குறிப்பிடப்பட்ட ஆபத்துக்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். ஒரு காரியமானது, அப்படிப்பட்ட போற்றுதல், ஜெபத்தைப் பார்க்கிலும் அதிமுக்கியமான காரியம் நமக்கு இருப்பதுபோல், அவசரமாக ஜெபித்து முடித்துவிடும் பழக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் சர்வலோக அரசராகிய யெகோவா தேவனிடத்தில் பேசுவதைக் காட்டிலும் வேறு எதுவும் அதிக முக்கியமானதாக இருக்கமுடியாது. உண்மைதான், சில சமயங்களில் மட்டுப்படுத்தப்பட்ட நேரமே இருக்கலாம். உதாரணமாக, அரசனாகிய அர்த்தசஷ்டா தன் பான பாத்திரக்காரனாகிய நெகேமியாவிடம் கேட்டான், ‘நீ கேட்கிற காரியம் என்ன?’ நெகேமியாவிடம் உடனே ‘பரலோகத்தின் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணி’னான். (நெகேமியா 2:4) அரசன் உடனடியாக பதிலை எதிர்பார்த்ததனால், நெகேமியா நீண்ட நேரம் ஜெபித்துக்கொண்டிருக்க முடியாது. ஆனால் அவனுடைய ஜெபம் அர்த்தமுள்ளதாயும் இருதயத்திலிருந்து வந்த ஒன்றாகவும் இருந்தது என்று நாம் நிச்சயமாயிருக்கலாம், ஏனெனில் யெகோவா உடனே பதிலளித்தார். (நெகேமியா 2:5, 6) இப்படிப்பட்ட சந்தரப்பங்கள் தவிர, நாம் நம்முடைய ஜெபங்களுக்கு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும், மற்றகாரியங்களைப் பின்தங்கும்படி செய்யலாம். நம்முடைய ஜெபங்கள் அவசரமுள்ளதாக செய்யப்பட்டால், ஜெபத்தின் முக்கியத்துவத்தை நாம் போற்றவில்லை என்று தான் பொருள்படும்.
11. பொதுவான காரியங்களைத் திருப்பத் திரும்பக்கூறும் மற்றொரு ஆபத்தை நாம் தவிர்க்க வேண்டியவர்களாக இருக்கலாம். அப்படிப்பட்ட ஜெபங்கள் விலையேறப்பெற்ற சிலாக்கியமாகிய ஜெபத்திற்கு மதிப்பு காண்பிப்பதாக இல்லை. இதன் சம்பந்தமாகத் தன்னுடைய மாதிரி ஜெபத்தில் இயேசு நல்ல முன்மாதிரியை வைத்தார். அவர் ஏழு தனிப்பட்ட விண்ணப்பங்களை அதில் குறிப்பிட்டார்: அவற்றுள் மூன்று நீதி வெற்றிபெறுவதைக் குறித்தவை, ஒன்று அன்றாட சரீரத் தேவைகளுக்குரியது, மற்றும் மூன்று நம்முடைய ஆவிக்குரிய நலனைப்பற்றியவை.—மத்தேயு 6:9-13.
12. அப்போஸ்தலனாகிய பவுலும் இந்த வழியில் ஒரு நல்ல முன்மாதிரியை வைத்தான். ‘நான் தைரியத்துடன் பேசும்படியான திறனைப் பெற,’ மற்றவர்கள் அவனுக்காக ஜெபிக்கும்படி அவன் கேட்டான். (எபேசியர் 6:18-20) திட்டமாக, மற்றவர்களுக்காகத் தன்னுடைய சொந்த ஜெபத்தில் தரித்திருந்தான். பவுல் சொன்னான், “உங்கள் அன்பானது அறிவிலும், எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாய் இருக்கவும் தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசு கிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாய் இருக்க வேண்டுதல் செய்கிறேன்.”—பிலிப்பியர் 1:9-11.
13. ஆம், நம்முடைய ஜெபங்கள் திட்டமான காரியங்களைப் பற்றியதாக இருக்க வேண்டும். இது நாம் அதைப்பற்றி சிந்திப்பதைத் தேவைப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 15:28 ஒப்பிட்டுப் பாருங்கள்) வெளிஊழியத்தில், நம்முடைய முயற்சிகளில் அவருடைய ஆசீர்வாதத்திற்காக மட்டுமல்ல, ஞானத்திற்காகவும், சுயாதீன பேச்சிற்காகவும் அல்லது நம்முடைய சாட்சி பகரும் வேலையைக் குறுக்கிடும் பலவீனங்களை மேற்கொள்ளும் உதவிக்காகவும் கடவுளிடம் கேட்டுக் கொள்ளலாம். மேலுமாக, நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்களிடம் நம்மை வழி நடத்தும்படி கடவுளிடம் கேட்டுக் கொள்ளக்கூடாதா? ஒரு பொதுப்பேச்சு கொடுப்பதற்கு முன்னால் அல்லது ஊழியக்கூட்டத்தில் அல்லது தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் பங்குவகிக்கும்போது யெகோவாவிடம் அவருடைய பரிசுத்த ஆவி அதிகளவில் தங்கி இருக்கும்படி மன்றாடலாம். ஏன்? அப்போது தான் நாம் நம்பிக்கையையும், நிதானத்தையும் பெற்று ஊக்கத்தோடும், திட நம்பிக்கையோடும் பேசி அதன் காரணமாக கடவுளுடைய நாமத்திற்குக் கனத்தைக் கொண்டுவரவும், நம் சகோதரர்களைக் கட்டியெழுப்பவும் முடியும். பேசும்போது சரியான மனநிலையைக் கொண்டிருக்க அத்தகைய ஜெபங்கள் தகுந்தவையாய் இருக்கின்றன. இப்படிப்பட்ட எல்லா ஜெபங்களும் நாம் பேசுவதற்குத் தகுதியான மனநிலையை உடையவர்களாய் இருக்கிறோம் என்பதைக் காட்டுகின்றன.
14. மேற்கொள்ளக் கடினமாய்க் காணப்படும், நம் ஆவிக்குரிய தன்மைக்கு எதிராகப் போரிடும் ஒரு மாம்ச பலவீனத்தை உடையவர்களாக இருக்கிறோமா? நம்முடைய ஜெபத்தில் அதைக் குறிப்பாக நாம் கையாள விரும்ப வேண்டும். அதைரியப்படுவதற்குப் பதிலாக, தாழ்மையுடனும் ஊக்கத்துடனும் கடவுளிடம் உதவிக்காகவும், மன்னிப்பிற்காகவும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஆம், அப்படிப்பட்ட சூழ்நிலையின் கீழ், துன்பத்தின் சமயம் ஒரு சிறு குழந்தை தன் தகப்பனிடம் போவதுபோல் நாம் யெகோவாவிடம் செல்ல வேண்டும். ஒரே பலவீனத்திதைக் குறித்து கடவுளிடம் அடிக்கடி ஜெபிக்கிறோமே என்பதைப் பொருட்படுத்தத் தேவையில்லை. நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால் யெகோவா நம்மை மன்னித்திருக்கிறார் என்ற உணர்வையும், தக்க உதவியையும் நமக்குக் கொடுப்பார். இப்படிப்பட்ட சூழ்நிலையின் கீழ், நாம் அப்போஸ்தலனாகிய பவுல் தனக்கும் ஒரு பிரச்னை இருந்தது என்று அறிக்கைசெய்த இக்காரியத்திலிருந்து ஆறுதலடையக்கூடும்.—ரோமர் 7:21-25.
அர்த்தமுள்ள ஜெபங்களை ஏறெடுக்க உதவிகள்
15. நம்முடைய ஜெபங்கள் உண்மையாகவே அர்த்தமுள்ளவர்களாக இருக்க எல்லா வெளிக்காரியங்களையும் அகற்றிவிட்டு, உன்னதமான தேவனாகிய யெகோவாவின் பிரசன்னத்திற்கு வருகிறோம் என்று நாம் நினைவுகளை ஒருமுகப்படுத்தியவர்களாக முயற்சி செய்ய வேண்டும். ஆழ்ந்த மரியாதையுடன், பயப்படத்தக்கவர் என்ற போற்றுதலுடன் அவரை நெருங்கவேண்டும். இதைத் தான் ஒரு குறிப்பாக இயேசு தன்னுடைய பரிசேயனும் ஆயக்காரனும் என்ற உவமையில் அழுத்திக் கூறினார். (மீகா 6:8; லூக்கா 18:9-14) யெகோவா நமக்கு மிகவும் உண்மையுள்ளவராக இருக்க வேண்டும். மோசேகொண்டிருந்த அதே மனநிலையையே நாமும் கொண்டிருக்க வேண்டும். “அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறது போல உறுதியாயிருந்தான்.” (எபிரேயர் 11:27) இப்படிப்பட்ட சிறப்பான தன்மைகள் நம்முடைய பரலோகத் தகப்பனிடம் நல்லுறவில் இருப்பதாக நிரூபிக்கிறது
16. நாம் யெகோவாவிடம் முழு அன்புடன் கூடி இருதயத்தோடும் அவரிடம் கொண்டிருக்கும் பாசத்தோடும் அவரிடம் கொண்டிருக்கும் பாசத்தோடும் சென்றால் நம்முடைய ஜெபங்கள் அர்த்தமுள்ளவையாயும் இருக்கும். எடுத்துக்காட்டாக, சங்கீதக்காரனாகிய தாவீது சங்கீதம் 23-லும் 103-லும் என்னே போற்றுதலையும் அன்பையும் யெகோவா தேவனிடம் வெளிப்படுத்திக் காட்டுகிறான்! பெரிய மேய்ப்பராகிய யெகோவாவிடம் நல்ல உறவை தாவீது கொண்டிருந்ததைப் பற்றிய கேள்வி எதுவும் இல்லை. தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் அனலுடனும் உணர்ச்சியுடனும் பேச வேண்டும் என்ற ஆலோசனை கொடுக்கப்படுகிறோம். விசேஷமாக நாம் வசனங்களை வாசிக்கும்போதும் அதைக்காட்டிலும் அதிகமாக, நம் பரலோகத் தகப்பனிடம் ஜெபிக்கும் போதும் இருக்கவேண்டும். ஆம், தாவீது உணர்ந்ததுபோல நாமும் உணரவேண்டும். அவன் ஜெபிக்கும் போது: “யெகோவாவே உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும் உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன்.” நாம் எப்படி உணரவேண்டும் என்பதைப்பற்றிய குறிப்புகள் மற்றொரு சங்கீதக்காரனின் இவ்வார்த்தைகளில் இருக்கின்றன. “முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், யெகோவாவே என் ஜெபத்தைக் கேளும்.”—சங்கீதம் 25:4, 5; 119:145.
17 நம்முடைய ஜெபங்களை அர்த்தமுள்ளதாக வைத்திருக்கவும், திரும்பத் திரும்ப சொல்வதைத் தவிர்க்கவும் ஜெபத்தில் சிந்தனைக்குரிய பொருளடக்கத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்வது நல்லது. அந்த நாளுக்குரிய வேதவசனத்தையோ அல்லது நாம் வாசித்துக் கொண்டிருக்கும் நம்முடைய கிறிஸ்தவ வெளியீட்டின் ஒரு குறிப்பையோ ஜெபத்தில் சொல்லலாம். பொதுப்பேச்சு, மற்றும் காவற்கோபுர பாடத்தின் பொருளையோ ஜெபத்தில் சொல்லலாம். பொதுப்பேச்சு, மற்றும் காவற்கோபுர பாடத்தின் பொருளையோ அல்லது நாம் ஆஜராகும் அசெம்பிளி அல்லது மாநாட்டின் பொருளையோ ஜெபத்தில் கொண்டுவருவது அந்த நோக்கத்தை நிறைவேற்றலாம்.
18. அதிக அர்த்தமுள்ள ஜெபம் செய்யும் மனநிலைக்கு உட்படுத்தி நமக்கு உதவி செய்ய நம்முடைய சரீர நிலையை மாற்றியமைத்துக் கொள்வது நல்லது. பொது இடங்களில் செய்யும் ஜெபத்தில் இயல்பாகவே நாம் தலை குனிந்து ஜெபிக்கிறோம். ஆனால் பெரும்பாலான தனிப்பட்ட ஜெபங்களில், தனியாகவோ அல்லது ஒரு குடும்பமாகவோ ஜெபிக்கையில் யெகோவாவுக்கு முன் முழங்காற்படியிடுவதை சிலர் நல்லதாகக் கண்டிருக்கின்றனர், ஏனென்றால் அந்த நிலை அவர்களது தாழ்ந்த மனநிலையைக் கொண்டிருப்பதைக் காட்டுவதற்குத் தகுந்ததாயிருப்பதாகக் காண்கின்றனர். சங்கீதம் 95:6-ல் “நம்மை உண்டாக்கின யெகோவாவிற்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்,” என்று நம்மை துரிதப்படுத்துகிறது. யெகோவாவின் ஆலயப் பிரதிஷ்டையின்போது சாலொமோன் முழங்காற்படியிட்டு ஜெபிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டான்.—2 நாளாகமம் 6:13; தானியேல் 6:10.
19. ஜெபத்தின் முக்கியத்துவத்தின் நோக்கு நிலையில், நியமிக்கப்பட்ட மூப்பர்கள் சபையின் சார்பில் பொதுவான ஜெபம் செய்ய ஒருவரை அழைக்கும்போது ஒரு நல்ல தீர்ப்பைக் கொண்டவராக இருக்கவேண்டும். சபையைப் பிரதிநித்துவம் செய்யும் அந்த முழுக்காட்டப்பட்டவர் ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ ஊழியராக இருக்க வேண்டும். கடவுளுடன் நல்லுறவில் அவர் இருக்கிறார் என்பதை அவர் ஜெபம் வெளிக்காட்ட வேண்டும். இப்படிப்பட்ட ஜெபத்தை கொடுக்க சிலாக்கியம் பெற்றவர் அது கேட்கப்படுமா என்பதற்கான நினைவைக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் அவை தங்கள் சார்பில் மட்டுமல்லாமல் முழு சபையின் சார்பாக ஏறெடுக்கப்படுகிறது. அப்படி இல்லாவிட்டால், சபையில் உள்ள மற்றவர்கள் ஜெபத்தின் முடிவில் எப்படி அவருடன் சேர்ந்து ‘ஆமென்’ என்பார்கள்? (1 கொரிந்தியர் 14:16) மெய்யாகவே மற்றவர்கள் அர்த்தமுள்ள ‘ஆமென்’ சொல்வதற்கு அவர்கள் கருத்துடன் கவனிக்கவேண்டும். தங்கள் மனதை அலையவிடாமல், ஆனால் மெய்யாகவே ஜெபத்தை தங்கள் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். மற்றொரு எச்சரிப்பின் வார்த்தை என்னவெனில் அப்படிப்பட்ட ஜெபங்கள் யெகோவா தேவனுக்கு ஏறெடுக்கப்படுவதால் கேட்போருக்குப் பிரசங்கிப்பை தவிர்க்கவும், தனிப்பட்ட கருத்துக்களைக் கொடுக்காமலும் இருத்தல் வேண்டும்.
20. சப்தமாகச் செய்யப்படும் ஜெபமானது உண்மையாகவே அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன. கேட்போருக்கு அவை ஆசீர்வாதத்தைப் பகிர்ந்தளிக்கின்றன. இப்படி இருபதால், விவாகத் தம்பதிகளும் குடும்பங்களும் ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் ஒரு முறையாவது ஒரு பொதுவான ஜெபத்தைச் செய்வார்கள். அதில் ஒரு நபர் அதாவது குடும்பத் தலைவர், மற்றவர்களுக்காக அல்லது அவர்கள் சார்பாக பேசுவார்.
21. உண்மையாகவே நம்முடைய ஜெபங்கள் அர்த்தமுள்ளவையாய் இருக்க இன்னுமொரு காரியம் நம்முடைய கவனத்தை தகுதிக்குள்ளாக்குகிறது. இது, நம்முடைய ஜெபங்களுக்கிசைவாக நாம் நடந்துகொள்ள வேண்டும் என்ற உண்மையாகும். இது எதை அர்த்தப்படுத்துகிறது? நாம் நம் ஜெபங்களுக்கிசைவாக வாழ்வதையும், எதற்காக நாம் ஜெபிக்கிறோமோ, அதற்காக உழைப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. நமது ஜெபங்களைப் பற்றி இந்தப் பகுதி அடுத்து வரும் கட்டுரையில் சிந்திக்கப்படும். (W87 7/15)
நீங்கள் எப்படி பதிலளிக்கிறீர்கள்?
◻ என்ன சில அர்த்தமுள்ள ஜெபங்கள் வேதாகமங்களில் பதிவாகியுள்ளன?
◻ மனித அபூரணத்தின் காரணமாக. நம்முடைய ஜெபங்கள் எப்படித் தவறானவையாய் இருக்கலாம்?
◻ நம்முடைய ஜெபங்களில் சில தவறுகளை நாம் எப்படி மேற்கொள்ளக்கூடும்?
◻ அர்த்தமுள்ள ஜெபங்களை ஏறெடுக்கையில் என்ன சில உதவிகள் இருக்கின்றன?
[கேள்விகள்]
1, 2 (எ) இயேசுவின் எந்த உவமை ஜெபத்தோடு கையாளப்பட்டது? (பி) இருண்டு ஜெபங்களிலிருந்து இயேசு என்ன முடிவை கவனத்திற்கிழுக்கிறார்? நமக்கு இது எதைக் காட்ட வேண்டும்?
3. (எ) ஜெபத்தைக் குறித்ததில் சில அடிப்படை சட்டங்களை மேற்கோள் காட்டுக. (பி) ஜெபம் எந்த வடிவங்களை எடுக்கலாம்?
4. (எ) எப்படிப்பட்ட உதாரணங்களடங்கிய அர்த்தமுள்ள ஜெபத்தை மோசேயும் யோசுவாவும் அளித்தார்கள்? (பி) என்ன உதாரணங்களை தாவீதும் அரசனாகிய எசேக்கியாவும் கொடுத்தார்கள்? (பி) என்ன உதாரணங்களை தாவீதும் அரசனாகிய எசேக்கியாவும் கொடுத்தார்கள்? (சி) இதைப் போன்றுள்ள அநேக ஜெபங்கள் என்ன பொதுவான அம்சமுடையவனாக இருக்கின்றன?
5. யெகோவாவின் சில ஊழியர்கள் உச்சரித்த ஜெபம் அர்த்தமுள்ளதாயிருக்கிறது என்பதற்கான மற்றெந்த உதாரணங்கள் நமக்கிருக்கின்றன?
6. (எ) அர்த்தமுள்ள ஜெபங்களுக்கு என்ன உதாரணங்களை இயேசு நமக்குக் கொடுத்தார்? (பி) நம்முடைய ஜெபங்கள் அர்த்தமுள்ளவையாக இருக்கவேண்டுமானால் என்ன அடிப்படை மூலாம்சம் தேவைப்படுகிறது?
7. நம்முடைய ஜெபங்களைக் குறித்து நம்மை நாமே என்ன கேள்விகளைக் கேட்கலாம்?
8. மனித அபூரணத்தின் காரணமாக நம்முடைய ஜெபங்கள் என்ன குறைபாடுகளை உடையவனாக இருக்கலாம்?
9. நம்முடைய ஜெபத்தால் வேறே என்ன ஆபத்துக்கள் நிகழலாம், இத்தகைய ஆபத்துக்களுக்கு ஒரு க ரணம் சந்தேகமின்றி என்னவாக இருக்கிறது?
10. (எ) ஜெபத்தின் முக்கியத்துவத்திற்குப் போற்றுதல் தெரிவிக்காதிருத்தலை எந்த மனநிலை தெளிவாக்கும்? (பி) என்ன வேதாகம உதாரணம் நன்கறியப்பட்டதாயிருக்கிறது?
11. நாம் காத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு ஆபத்து என்ன? இதைக் குறித்து இயேசு என்ன நல்ல முன்மாதிரியை வைத்தார்?
12. நம்முடைய ஜெபத்தில் திட்டமாகக் குறிப்பிட வேண்டும் என்பதற்காகப் பவுல் என்ன நல்ல முன்மாதிரியை கொடுக்கிறான்?
13. யெகோவாவிற்குச் செய்யும் வெவ்வேறு விதமான சேவையின்சார்பில் அர்த்தமுள்ள ஜெபங்களை நாம் எவ்வாறு சொல்லலாம்?
14. மேற்கொள்ளக் கடினமாக இருக்கும் மாம்சப்பிரகாரமான பலவீனங்களைக் குறித்து நம்முடைய மனநிலை என்னவாக இருக்க வேண்டும்?
15. ஜெபத்தில் என்ன மனநிலையுடன் யெகோவாவை அணுகவேண்டும்?
16. அர்த்தமுள்ள ஜெபங்களைச் சொல்வதில் நம்முடைய இருதயங்கள் என்ன பங்கை வகிக்கின்றன?
17. திரும்பத் திரும்ப உரைப்பதிலிருந்து நம்முடைய ஜெபங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாம்?
18. நம்முடைய ஜெபங்களை அதிக அர்த்தமுள்ளவையாக ஆக்கிக் கொள்ள பைபிள் வார்த்தைகளின்படியும் உதாரணங்களின்படியும் நாம் என்ன செய்யலாம்?
19. பொதுவான ஜெபங்களைச் செய்யும் பொறுப்பை உடையவர்கள் சரியாகவே என்ன உண்மைகளை மனதில் கொண்டிருப்பார்கள்?
20. அர்த்தமுள்ள ஜெபங்கள் சப்தமாக செய்யப்படுவதன் மூலம் கேட்போருக்கு ஆசீர்வாதத்தைப் பகிர்ந்தளிப்பதனால் என்ன ஆலோசனை கொடுக்கப்படுகிறது?
21. நம்முடைய ஜெபங்கள் அர்த்தமுள்ளவையாய் இருக்க சிந்திக்கப்பட தகுதியுள்ள மற்றொரு காரியம் என்ன?