ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படுவதன் மூலம் கடவுளோடு சமாதானமாதல்
“யெகோவா பேசி: ‘ . . . அடையாளம் போடப்பட்டிருக்கிற எவனையும் கிட்ட வேண்டாம் . . . என்று சொன்னார்.”—எசேக்கியேல் 9:4, 6, தி.மொ.
கடவுளோடு சமாதானமாவதா? ஏன்? கடவுளுடன் தாங்கள் சண்டையில் இருப்பதாக அநேகர் கருதுகிறதில்லை. எனினும், உண்மையில் கடவுளுடைய சத்துருவாக இருந்துகொண்டு, அதைப்பற்றி அறியாமலிருப்பது சாத்தியமா? முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு விளக்கினான்: “நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.”—எபேசியர் 2:3.
2 அவ்வாறே இன்று, கடவுளைப் பிரியப்படுத்துவதில் நீங்கள் அக்கறைகொண்டிருந்தாலும், ஆதாமிலிருந்து சுதந்தரித்த பாவம் உங்கள் மனநிலைசார்பைப் பாதிக்கிறது, அது “மாம்சம் விரும்பினவைகளையும்” பின்தொடரும்படி உங்களைச் செய்விக்கலாம். நீங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்துக்கொண்டிருப்பவரென்றாலும் அல்லது சாட்சிகளாயிருக்கும் பெற்றோரையுடைய முழுகாட்டப்படாத இளைஞனென்றாலும், ‘என் விருப்பப்படி செய்வேன்’ என்ற தன்னலமே கருதும் மனப்பான்மை உங்கள் வாழ்க்கையின் பெரும்பாகப் பண்பியல்பாயிருந்து உங்களைத் தொடர்ந்து கடவுளிடமிருந்து நட்புப் பிரித்துக்கொண்டிருக்கலாம். இத்தகைய போக்கை விடாமல் தொடரும் ஒருவன் தனக்குக் ‘கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறான்.’ (ரோமர் 2:5; கொலோசெயர் 1:21; 3:5-8) விரைவாய் நெருங்கிக்கொண்டிருக்கும் “தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினையின் நாளிலே,” கடவுள் தம்முடைய கோபத்தை முழுமையாய் வெளிப்படுத்துவார். (ரோமர் 1:28-2:6) நீங்கள் எப்படிக் கடவுளோடு சமாதானமாகி இந்தக் “கோபாக்கினை நாளைத்” தப்பிப் பிழைக்கலாம்.
சமாதானத்துக்கு ஆதாரம்
3 உதவி செய்வதற்கு யெகோவாவே முதல் முயற்சி எடுத்தார். “அவர் நம்மிடம் அன்புகூர்ந்து நமது பாவங்களை நிவிர்த்தி செய்கிற பிராயச்சித்த பலியாகத் தமது குமாரனை அனுப்பினார். (1 யோவான் 4:10, தி.மொ.) இயேசுவின் பலிக்குரிய மரணம் பிராயச்சித்தம் செய்கிறது, அதாவது, யெகோவாவின் நீதியைச் சரிக்கட்டுகிறது அல்லது திருப்திப்படுத்துகிறது. இது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், முடிவில் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள பகையை முற்றிலும் நீக்குவதற்கும் சட்டப்பூர்வ ஆதாரத்தை அளிக்கிறது. ஆம், பவுல் அப்போஸ்தலன் எழுதின பிரகாரம், ‘அவர் குமாரனின் மரணத்தினால் அவரோடு [கடவுளோடு] ஒப்புரவாக்கப்படுவது’ சாத்தியமாகும்.—ரோமர் 5:8-10.
4 .ஆனால் கிறிஸ்துவின் பலியிலிருந்து நாம் ஒவ்வொருவரும் நன்மையடைய சில நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இவை தீர்க்கதரிசி எசேக்கியேலுக்குக் கொடுக்கப்பட்ட நாடக பாணியான ஒரு தரிசனத்தில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன, இது கடவுளுடைய “கோபாக்கினையின் நாள்” எக்கணமும் தொடங்கவிருக்கும் நம்முடைய காலத்தின்போது நிறைவேற்றமடைகிற ஒரு தரிசனம். கடவுள் கட்டளையிடும் ஆக்கினைத் தீர்ப்பை நிறைவேற்றும் படைகள் இந்தத் தரிசனத்தில் ஆயுதந்தரித்த ஆறு ஆண்களால் படமாகக் குறிப்பிடப்படுகின்றன. இவர்கள் கடவுளுடைய கோபாக்கினையை நிறைவேற்றுவதற்கு முன்னால், கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கும் ஏழாவது மனிதனுக்குப் பின்வருமாறு சொல்லப்படுகிறது: “நீ . . . நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சு விட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை [ஆயுதந்தரித்த ஆறு புருஷரை] நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; . . . அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள் . . . என்று சொன்னார்.”—எசேக்கியேல் 9:1-6.
5 பாதுகாப்பாய் ‘அடையாளம் போடப்பட்டிருக்கும்’ இவர்கள், உண்மையான கடவுளை வணங்குவதாக உரிமைபாராட்டும் ஆட்கள் “தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி” பாலுறவு ஒழுக்கக்கேட்டிலும், விக்கிரகாராதனையிலும், எல்லா வகையான மற்றத் தவறான நடத்தையிலும் ஈடுபட்டதனிமித்தம் அருவருத்து மனசங்கடமடைந்தனர். (எசேக்கியேல் 8:5-18; எரேமியா 7:9) அவ்வாறே இன்று, ‘அடையாளம் போடப்பட’விருக்கிறவர்கள், முதலாவது, பைபிள் படிப்பின் மூலமாய், கடவுளுடைய தராதரங்களின் உயர் மதிப்பைக் கற்றுக்கொண்டு, அவருக்கு அவமதிப்புண்டாக்கும் போதகங்களினிமித்தமும் பழக்கச் செயல்களினிமித்தமும் இருதயத்தில் வருந்த வேண்டும், ஆம், “பெருமூச்சுவிட்டழ” வேண்டும். ஒருவேளை அறியாமையினால் சிலர் தவறான செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது அத்தகைய செயல்களுக்குத் தங்கள் ஆதரவைக் கொடுப்பதன் மூலம் சரியென ஒப்புக்கொண்டிருக்கலாம். எனினும், இப்பொழுது அவர்கள் அத்தகைய செயல்களைக் கடவுள் கருதுவதுபோல்—அருவருப்புடன்—கருதத் தொடங்குகிறார்கள்! (ரோமர் 1:24-32; ஏசாயா 2:4; வெளிப்படுத்துதல் 18:4; யோவான் 15:19) இந்த அதிகரிக்கப்பட்ட மதித்துணர்வு, கடவுளுடன் சமாதானமாவதற்கு எடுக்கவேண்டிய முதல் நடவடிக்கைகளில் ஒன்றுக்கு வழிநடத்துகிறது. மனம்வருந்தித் திரும்புவது, “உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள் [மனம்வருந்தித் திரும்புங்கள், NW] அப்பொழுது ஆண்டவருடைய [யெகோவாவின், NW] சமுகத்திலிருந்து [கோபாக்கினைக்குப் பதிலாக] இளைப்பாறுங் காலம் வரும்படி . . . ” (அப். 3:19, தி.மொ.) இத்தகைய மன்னிப்பு எவ்வளவு இளைப்பாறுதலைத் தருகிறது!
“அடையாளத்தைப்” பெறுதல்
6 கடவுளுடைய கோபாக்கினையிலிருந்து தப்புவிக்கப்படுவதற்கு, ‘பெருமூச்சுவிட்டழுதவர்கள்’ தங்கள் நெற்றியில் அடையாளத்தைப் பெறவேண்டும். (எசேக்கியேல் 9:4) பூர்வகாலங்களில் அடிமைகள் தெளிவாய் அடையாளங் கண்டுகொள்ளப்படுவதற்கு அநேகமாய் நெற்றியில் அடையாளம் போடப்பட்டார்கள். நெற்றியிலும் வேறு இடத்திலும் போடப்படும் வேறுபடுத்திக்காட்டும் அடையாளங்கள் ஒருவன் குறிப்பிட்ட ஒரு தெய்வத்தை வணங்குபவன் எனவும் தெரிவிக்கலாம்.a (ஏசாயா 44:5-ஐ ஒத்துப் பாருங்கள்.) ஆகவே, நம்முடைய நாளில், அடையாளம் போடப்பட்டிருப்போரை யெகோவாவின் உண்மையான வணக்கத்தாரும் அடிமைகளுமென தெளிவாய் அடையாளங்கண்டுகொள்ள செய்கிற, உயிரைப் பாதுகாக்கும் அந்தத் தனிவேறுபட்ட அடையாளம் என்ன?
7 இந்த அறிகுறியான அடையாளம் உங்கள் திறந்த நெற்றியில் யாவருக்கும் தோன்றும்படி குறித்திருப்பதுபோல் பின்வருபவற்றிற்கு அத்தாட்சியாயிருக்கிறது: (1) நீங்கள் இயேசு கிறிஸ்துவின் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட சீஷன். (2) கிறிஸ்துவினுடையதைப்போன்ற புதிய சுபாவத்தன்மையைத் தரித்துக்கொண்டீர்கள். (எபேசியர் 4:20-24) இவ்வாறு ‘அடையாளம் போடப்பட்டவர்கள்’ முதலாவது ஒப்புக்கொடுத்தலை செய்ய வேண்டுமாதலால், இது உட்படுவதை நாம் அறியவேண்டும். இயேசு பின்வருமாறு விளக்கினார்: “எவனாவது என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் சொந்தம் கைவிட்டு தன் வாதனையின் கழுமரத்தை எடுத்துக்கொண்டு என்னைத் தொடர்ந்து பின்பற்றக்கடவன்.”—மாற்கு 8:34, NW.
8 “சொந்தம் கைவிட்டு” என்று மொழிபெயர்த்திருக்கும் கிரேக்கச் சொல் “முற்றிலும் கைத்துறந்துவிடுதல்” அல்லது “உரிமை கைவிடுதல்” என்ற கருத்துடையது. ஆகையால், ‘உங்களைச் சொந்தம் கைவிடுவதென்பது’ உங்களுக்கு ஏதோ இன்பத்தை அல்லது சலுகையை அவ்வப்போது மறுத்தலைப் பார்க்கிலும் அதிகத்தைக் குறிக்கிறது. இன்னும் சரியாகச் சொல்ல, உங்கள் சொந்த ஆசைகளும் முன்னேறி மேம்பட வேண்டுமென்ற ஆவலும் உங்கள் வாழ்க்கையை ஆட்கொள்ள விடுவதற்கு வருகையில், ‘இல்லை,’ என்று உங்களுக்கு நீங்களே சொல்ல மனமுள்ளவராயிருப்பதைக் குறிக்கிறது. இந்தக் கருத்து வெவ்வேறு மொழிகளில் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனிப்பது இயேசுவின் வார்த்தைகளின் நோக்கத்தைக் கண்டுகொள்ள நமக்கு உதவிசெய்கிறது: “தன் சொந்த இருதயம் விரும்புவதைச் செய்யாமல் நிறுத்திவிடுவது” (ட்ஸெல்டல், மெக்ஸிகோ), “இனிமேலும் தான் தனக்கு உரியவனாய் இராமல்” (கஞ்சோபல், கெளத்தமாலா), “தனக்குத்தானே மறுப்பது” (ஜாவனீஸ், இத்தோனீஷியா). ஆம், இது ஒருவருக்கே தனிப்பட்ட ஒப்புக்கொடுத்தலைக் குறிக்கிறது, பல காரியங்களுக்குச் செய்யக்கூடிய வெறும் ஒப்படைப்பை அல்ல.
9 சூசன் என்ற பெயருடைய கிறிஸ்தவப் பெண், முன்னால் அதிக சுதந்தரமாயிருந்தவள், ஒப்புக்கொடுத்தல் தனக்குக் குறித்ததைப் பின்வருமாறு விளக்குகிறாள்: “என்னை முழுமையாய் ஒருவருக்கு ஒப்படைத்தேன். இப்பொழுது யெகோவாவே என் நடத்தைப் போக்கைத் தீர்மானிக்கிறார், என்ன செய்வதென்று எனக்குச் சொல்லுகிறார், நான் எவற்றை விரும்பித் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதையும் முடிவுசெய்கிறார்.” யெகோவா தேவனுக்கு அதே வகையான தனிப்பட்ட ஒப்புக்கொடுத்தலைச் செய்ய உங்களுக்கு மனமுண்டா? தன் எஜமானருக்கு மகிழ்ச்சியுள்ள அடிமை இருப்பதுபோல், இந்த அறிகுறியான அடையாளம் உங்களைக் கடவுளுக்கு ‘உரியவனென’ அடையாளங் கண்டுகொள்ள செய்கிறதென்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.—யாத்திராகமம் 21:5, 6; ரோமர் 14:8.
10 “உங்களில் கோபுரங்கட்ட விரும்பும் எந்த மனிதன் முதலாவது உட்கார்ந்து செலவைக் கணக்கிட்டு அதைக் கட்டி முடிப்பதற்குப் போதுமான பொருள் உண்டா என்று பாராமலிருப்பான்?” என்று இயேசு கேட்டார். (லூக்கா 14:28, தி.மொ.) ஆகவே பின்வருபவற்றைச் செய்ய உங்களுக்கு மனமுண்டா: கிறிஸ்தவ கூட்டங்களுக்குத் தவறாமல் வருவதற்கு? (எபிரெயர் 10:25) தம்முடைய ஊழியருக்குக் கடவுள் நியமித்துள்ள உயர் ஒழுக்கத் தராதரத்தைத் தொடர்ந்து காத்துவருவதற்கு? (1 தெசலோனிக்கேயர் 4:3, 4, 7) உங்களால் கூடியவரை ராஜ்ய பிரசங்க வேலையில் முழு பங்குகொள்வதற்கு? வாழ்க்கைத் தொழிலைத் தெரிந்துகொள்கையில் அல்லது வாழ்க்கையில் இலக்குகளை வைக்கையில் கடவுளுடைய சித்தத்தை முதலாவது வைக்க? (மத்தேயு 6:33; பிரசங்கி 12:1) உங்கள் குடும்பக் கடமைகளைக் கவனிப்பதற்கு? (எபேசியர் 5:22-6:4; 1 தீமோத்தேயு 5:8) ஜெபத்தில் நீங்கள்தாமே தனிப்பட்ட ஒப்புக்கொடுத்தலைச் செய்தபின், எடுக்கும் அடுத்த நடவடிக்கை, இதை மற்றவர்கள் அதிகாரமுறைமைப்படி தெரிந்துகொள்ள செய்கிறது.
முழுக்காட்டு—யாருக்கு
11 தம்மைப் பின்பற்றுவோர் முழுக்காட்டப்பட வேண்டுமென இயேசு கட்டளையிட்டார். (மத்தேயு 28:19, 20) அவர்களை முழுவதுமாய்த் தண்ணீருக்குள் முழுக்கி அதிலிருந்து தூக்கிவிட வேண்டும். புதைத்தலையும் உயிர்த்தெழுதலையும்போல் இது, ஒருவன் தன்னலமே கருதும் வாழ்க்கை முறைக்கு மரிப்பதையும் கடவுளுடைய சித்தத்தைச் செய்யும்படி உயிர்ப்பிக்கப்படுதலையும் படமாக நன்றாய்க் குறிப்பிடுகிறது. முழுக்காட்டின் மூலமாய் நீங்கள், உலகமெங்குமுள்ள கடவுளுடைய சபையின் கூட்டுறவில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக உங்களை அடையாளங்காட்டுகிறீர்கள்.b முழுக்காட்டு, கடவுளுடன் செய்த பயபக்தியான ஒப்பந்தத்தைச் சட்டப்படி செல்லக்கூடியதாக்குகிறது. (யாத்திராகமம் 19:3-8-ஐ ஒத்துப் பாருங்கள்.) அவருடைய சட்டங்களுக்கு இணங்க நீங்கள் உங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும். (சங்கீதம் 15; 1 கொரிந்தியர் 6:9-11) கடவுளுடைய ஊழியனாக உங்களை ஒதுக்கிவைக்கிற முழுக்காட்டு, “நல்மனச்சாட்சியைக் கடவுளினிடம் நாடி வேண்டிக்கொள்வ”தையும் குறிக்கிறது, ஏனெனில் நீங்கள் கடவுளோடு சமாதானமாயிருப்பதை அறிகிறீர்கள்.—1 பேதுரு 3:21.
12 இளைஞருங்கூட முழுக்காட்டப்படுவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமா? தரிசனத்தில், ஆயுதந்தரித்த அந்த அறு புருஷருக்கு யெகோவா சொன்னதை நினைவுபடுத்திப் பாருங்கள்: “முதியோரையும், வாலிபரையும் கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்று போடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள்.” (எசேக்கியேல் 9:6) நிச்சயமாகவே, ஒப்புக்கொடுத்தலைச் செய்வதற்கு மிகவும் சிறியவர்களாக இருக்கும் பிள்ளைகள் பெற்றோர் ஒருவரின் ‘அடையாளத்தால்’ பாதுகாக்கப்படுவார்கள், அந்தப் பெற்றோர் பிள்ளைகளை யெகோவாவை நேசிக்கும்படி வளர்த்தும், பிள்ளைகள் அதற்குக் கீழ்ப்படிதலுடன் இணங்கி நடந்தும் வந்தால் அவ்வாறு பாதுகாக்கப்படுவார்கள். (1 கொரிந்தியர் 7:14) எனினும், ஒரு பிள்ளை, தானே தீர்மானம் செய்வதற்குப் போதிய அறிவுள்ளவனாயும், “நன்மை செய்ய அறிந்த” நிலையை எட்டியும் இருந்தால் அவன் தன் பெற்றோரின் “அடையாளத்தின்” மதிப்பின்கீழ் எப்பொழுதும் தொடர்ந்திருப்பானென எண்ணிக்கொள்ள வேண்டாம்.—யாக்கோபு 4:17.
13 ஒப்புக்கொடுத்தலைச் செய்வதற்கு முன்பாக, ஓர் இளைஞன் அதில் உட்படுவதைப் புரிந்துகொள்வதற்குப் போதிய அறிவுடன் இருக்க வேண்டும், மேலும் கடவுளுடன் தனிப்பட்ட உறவைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும். பைபிள் நியமங்களை அவன் விளங்கிக்கொண்டு அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும், அவற்றில் எதையாவது மீறினால் தான் அதன் பொறுப்பேற்கச் செய்யப்படுவானென்று தெரிந்திருக்க வேண்டும். தன்னுடைய விசுவாசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் அவனுக்குப் போதிய அனுபவமும் இருக்க வேண்டும், அது, உண்மை வணக்கத்தின் இன்றியமையாதப் பாகமென்பதைத் தெரிந்திருக்க வேண்டும்; கடவுளைச் சேவிக்க அவன் உண்மையில் விரும்ப வேண்டும். இயல்பாகவே, அவன் முதியவரின் முதிர்ச்சியைக் காட்டும்படி எதிர்பார்க்க முடியாது, ஆனால் அவனுடைய ஆவிக்குரிய முன்னேற்றம் தகுதியானபடி நிலையாயிருக்க வேண்டும்.
14 அவன், ‘செல்லுஞ் செலவைக் கணக்குப் பார்த்திருந்தால்’ இளைஞனாக ஒப்புக்கொடுத்தலைச் செய்வது அவனைப் பாதகமான நிலையில் வைக்காது. எறக்குறைய எல்லா புதிய கிறிஸ்தவர்களின் காரியத்திலும், முழுக்காட்டுதலுக்குப் பின்பு மதித்துணர்வு மேலும் ஆழமாகப் பெருகுகிறது. “இளைஞனாக முழுக்காட்டுதலுக்கு உட்பட்டது எனக்குப் பாதுகாப்பாயிருந்தது,” என்று டேவிட் விளக்கினான். “நான் பெரியவனாக வளர்ந்தபோது, சபையில் 13-லிருந்து 19 வயதுக்குட்பட்ட முழுக்காட்டப்படாத சிலர் மூப்பர்களின் அதிகாரத்தின் கீழ் இராமல் சுயாதீனமாயிருந்ததாக உணர்ந்ததை நான் கவனித்தேன், இதன் விளைவாகக் கெட்ட நடத்தைக்குள் மனம்செல்ல விட்டனர். ஆனால் நான் கடவுளுக்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருந்ததை எப்பொழுதும் நினைவுபடுத்திக் கொண்டேன். என் வாழ்க்கை ஏற்கெனவே எடுத்துக் கொள்ளப்பட்டது, ஆகவே அத்தகைய பருவ வயதினரை நான் பின்பற்ற முடியாது.”
15 “எனினும், என் மகனோ மகளோ இளம் பருவத்தில் முழுக்காட்டப்பட்டு பின்பு ஆர்வங்குன்றி போய்விட்டால் என்ன செய்வது?” என்று பெற்றோர் சிலர் எண்ணமிடுகின்றனர். நிச்சயமாகவே, இளைஞர், வெறுமென பெற்றோரைப் பிரியப்படுத்துவதற்காக அல்லது நண்பர்கள் சிலர் செய்வதனிமித்தம் முழுகாட்டப்படக்கூடாது. எனினும் யேசேப்பும், சாமுவேலும், அரசன் யோசியாவும், இயேசுவும் பத்தொன்பது வயதுக்குட்பட்ட இளைஞராயிருக்கையில் கடவுள் வணக்கத்தை மிகுந்த பயபக்தியோடு கருதி, அதில் உறுதியாய் நிலைநின்றனர். (ஆதியாகமம் 37:2; 39:1-3; 1 சாமுவேல் 1:24-28; 2:18-21; 2 நாளாகமம் 34:3; லூக்கா 2:42-49) நவீன காலங்களில், ஜீன் என்ற பெயரையுடைய கிறிஸ்தவ பெண், பத்து வயதாயிருந்தபோது முழுக்காட்டப்பட்டாள். அந்த நடவடிக்கையை அவள் உண்மையில் விளங்கிக்கொண்டாளாவென பல ஆண்டுகளுக்குப் பின்னால் அவளைக் கேட்டபோது, ஜீன் பின்வருமாறு பதிலளித்தாள்: “நான் யெகோவாவை நேசித்ததை அறிந்திருந்தேன், இயேசு நமக்குச் செய்ததை நான் நன்றியோடு மதித்துணர்ந்தேன், நான் யெகோவாவைச் சேவிக்க விரும்பினேன்.” அவள் தன்னுடைய முழுக்காட்டுதல் முதற்கொண்டு இப்பொழுது ஏறக்குறைய 40 ஆண்டுகள் உண்மையுடன் சேவித்திருக்கிறாள். ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு தனி ஆள்; வயது வரையளவை ஒருவரும் நியமிக்க முடியாது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் இருதயத்தை எட்ட முயற்சிசெய்ய வேண்டும், தெய்வ பக்தியைத் தன்னில் படிப்படியாக வளரச்செய்ய அவனுக்கு அல்லது அவளுக்கு அவர்கள் உதவிசெய்ய வேண்டும்.c ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படுவதன் சிலாக்கியத்தை அவர்கள் தங்கள் பிள்ளைகள் முன் வைத்து வரவேண்டியது மட்டுமல்லாமல், உறுதியாய் நிலைநிற்கும் வணக்கத்தாராக இருக்கும்படி அவர்களைத் திடப்படுத்தவும் வேண்டும்.
இடையூறுகளை வென்று மேற்கொள்ளுதல்
16 பைபிள் அறிவு இன்றியமையாததாக இருக்கையில் இந்த “அடையாளம்,” தலையில் சேகரித்துள்ள அறிவைப் பார்க்கிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. உதாரணமாக, எசேக்கியேலுக்குக் கொடுக்கப்பட்ட தரிசனத்தில், பொய்க் கடவுட்களுக்குத் தூபவர்க்கம் செலுத்தினதற்குத் தண்டனையாகக் கொல்லப்பட்ட அந்த மூப்பர்கள் அநேகமாய் யெகோவாவின் எழுதப்பட்ட வார்த்தையைப் பற்றிய மிக விரிவான அறிவுடையவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் மூடின கதவுகளுக்குப் பின்னால் அவர்களுடைய நடத்தை, அவர்கள் உண்மையான வணக்கத்தாரல்லவென்று காட்டினது. (எசேக்கியேல் 8:7-12; 9:6) ஆகவே, தப்பிப் பிழைப்பதற்கு ‘அடையாளம் போடப்பட,’ “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் [சுபாவத்தன்மையை, NW] தரித்துக்கொள்”வது இன்றியமையாதத் தேவையாயிருக்கிறது.—எபேசியர் 4:22-24.
17 உங்கள் பாவ மாம்சத்தின் வசீகரம் ஒரு கடுமையான இடையூறு ஆகும். (ரோமர் 8:7, 8) சிலர், ஏதோ வினைமையான மாம்ச பலவீனத்தை அடக்கியாளாததன் காரணமாக அல்லது உலகப்பிரகாரமான தவறான இன்பங்களில் மனம்போன போக்கில் செல்ல விரும்புவதனாலுங்கூட முழுக்காட்டப்படுவதிலிருந்து பின்வாங்குகிறார்கள். (யாக்கோபு 4:1, 4) இத்தகையோர் மிக அருமையான உறவைத் தவறவிடுகிறார்கள். “தேவனிடத்தில் சேருங்கள் [அணுகுங்கள்], அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார் [அணுகுவார்]. பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமன முள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்,” என்று கடவுளுடைய வார்த்தை அறிவுரை கூறுகிறது. (யாக்கோபு 4:8) ஒரே தீர்மானமான நடவடிக்கை தேவைப்படுகிறது. உதாரணமாக, பைபிளைப் படிக்கத் தொடங்கின ஒருவர் 16 ஆண்டுகளாக மதுபானம் மற்றும் போதை பொருட்களின் துர்ப்பழக்கத்தில் மிதமீறி ஈடுபட்டு, அதன் காரணமாகச் சாவுக்கேதுவான நோய்ப்பட்டிருந்தார். உறுதியான தீர்மானத்துடன் அவர் இந்தக் கெட்ட பழக்கங்களை அடக்கி மேற்கொண்டார். “நான் ஒப்புக்கொடுத்தலை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் அச்சமயத்தில், ஒரு பெண் தன்னோடு காதல் விவகாரம் வைத்துக்கொள்ளும்படி என்னைக் கெஞ்சத் தொடங்கினாள். அது உண்மையான சோதனையாயிருந்தது,” என்று அவர் ஒப்புக்கொண்டார். “நான் மூளை குழம்பியிருப்பதாக அந்தப் பெண் எண்ணினபோதிலும் நான் அவளிடம்: ‘நான் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்துக்கொண்டிருக்கிறேன் நான் அதைச் செய்யமுடியாது,’ என்று சொன்னேன்.” இவ்வாறு பதில் சொல்ல அவரைத் தூண்டியது எது? “மதுபானத்திலிருந்து விலக உதவிசெய்ததன் மூலம் என் வாழ்க்கைக்கு யெகோவா செய்ததை நான் கண்டிருந்தேன். மற்ற வழிகளிலுங்கூட அவர் எனக்கு உதவி செய்தார். இது என்னைத் தொடர்ந்து அவரிடம் நெருங்க இழுத்துக் கொண்டிருந்தது. நான் அவரை விசனப்படுத்த முடியாது.” இவர் படிப்படியாய் கடவுளிடம் நெருங்கிவிட்டிருந்தார்.
18 உங்களுக்கு எவ்வளவு அதிகம் தெரியுமென்பதல்ல உங்களுக்குத் தெரிந்ததை எவ்வளவு அதிகம் நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதே முக்கியமானது. சங்கீதம் 119:165-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “உம்முடைய [பிரமாணத்தை, தி.மொ.] வேதத்தை [வெறுமென அறிந்திருக்கிறவர்களுக்கு அல்ல] நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.” வெற்றிக்கு அடிப்படையாயிருப்பது கடவுளுடைய பிரமாணத்தை நேசிப்பதும் அதன் உயர்மதிப்பை உங்களுடைய வாழ்க்கையில் ஆழ்ந்துணர்ந்து போற்றுதலைத் தெரிவிப்பதுமேயாகும்.—ஏசாயா 48:17, 18.
20 ஒவ்வொரு தடையையும் நீங்கள் வென்று வருகையில், “மிகுந்த சமாதானத்தை” அடைவீர்கள். (சங்கீதம் 119:165) ஆம், “நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய். . . . உன் நித்திரை இனிதாயிருக்கும். சடுதியில் வரும் திகிலுக்கு அஞ்சிட வேண்டாம், தெய்வ பயமற்றோர் பாழாகும்போதும் அஞ்சவேண்டாம். உனது நம்பிக்கை யெகோவாவே.”—நீதிமொழிகள் 3:23-26, தி.மொ.
[அடிக்குறிப்புகள்]
a எசேக்கியேலின் தரிசனத்துக்கு ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்குப் பின், கிரேக்க சரித்திராசிரியனாகிய ஹெரோடோடஸ், ஹெர்குலீஸ் தெய்வத்தின் பக்தரின் மீதிருந்த அடையாளக் குறிகள் அவர்களுக்குப் பாதுகாப்பை அளித்ததைக் கவனித்துப் பின்வருமாறு எழுதினான்: எத்தகையோனானாலுஞ்சரி ஒர் ஆளின் அடிமை [ஹெர்குலீஸின் ஆலயத்தில்] அடைக்கலம் புகுந்து, பரிசுத்த அடையாளக் குறிகளைத் தன்மேல் பதிய செய்து, இவ்வாறு அந்தக் கடவுளுக்குத் தன்னை ஒப்படைத்துவிட்டால், அவனைக் கைப்பற்றுவது சட்டவிரோதமானது.”
b முழுக்காட்டப்பட விரும்புகிறவர்கள், கடவுளுடனும் அவருடைய பூமிக்குரிய அமைப்புடனும் நெருங்கிய உறவுக்குள் வருவதில் உட்பட்டிருப்பதை முழுமையாய்ப் புரிந்துகொண்டு பதிலளிக்கக்கூடும்படி, அவர்களிடம் கேட்கப்படும் இரண்டு கேள்விகள் சமீபத்தில் எளிதாக்கப்பட்டன.
c “தெய்வபக்தியை வளர்ப்பதற்கு உங்கள் பிள்ளையைப் பயிற்றுவியுங்கள்,” என்பதை எங்கள் ஆங்கில வெளியீடு ஆகஸ்ட் 15, 1985-ல் பாருங்கள்.
விமரிசனம் செய்வதற்குக் குறிப்புகள்
◻ கடவுள், தம்மோடு சமாதானமாவதற்கு நமக்கு எப்படி உதவி செய்கிறார்?
◻ உயிரைக் காக்கும் அந்த அறிகுறி அடையாளம் என்ன?
◻ ஒப்புக்கொடுத்தலின் மற்றும் முழுக்காட்டப்படுதலின் உட்கருத்து என்ன?
◻ எவ்வகையான இடையூறுகளை எதிர்ப்பட வேண்டியிருக்கிறது? அவற்றை வென்று மேற்கொள்வது எப்படி?
[கேள்விகள்]
1, 2. (எ) பொதுவில் மக்கள் ஏன் கடவுளோடு சமாதானமாயில்லை? (பி) இத்தகைய சமாதானத்தை அடைவது எல்லாருக்கும் ஏன் இன்றியமையாதது?
3. ஒப்புரவாக்கப்படுவதற்கு ஆதாரத்தைக் கடவுள் எவ்வாறு ஏற்பாடு செய்தார்?
4. என்ன பொருத்தமான தரிசனம் எசேக்கியேலுக்குக் கொடுக்கப்பட்டது, இது ஏன் நமக்கு முக்கியத்துவமுடையது?
5. மனம் வருந்தித் திரும்புவதற்கு எது வழிநடத்துகிறது?
6. பூர்வ காலங்களில் என்ன காரணங்களுக்காகச் சிலர் அடையாளம் போடப்பட்டார்கள்?
7. இந்த அறிகுறியான அடையாளம் என்ன?
8, 9. (எ) ‘உங்களைச் சொந்தம் கைவிடுதல்’ எதைக் குறிக்கிறது? (பி) ஒப்புக்கொடுத்தல் அவசியப்படுத்துவதை எவ்வாறு உதாரணத்தைக் கொண்டு விளக்கிக் காட்டலாம்?
10. ஒப்புக்கொடுத்தலைச் செய்வதற்கு முன்பாக என்ன காரியங்களை ஒருவன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்?
11. முழுக்காட்டப்படுதல் எதை அடையாளப்படுத்துகிறது? அது நிறைவேற்றுவது என்ன?
12. பிள்ளைகள் எப்போது தங்கள் பெற்றோரின் ‘அடையாளத்தால்’ பாதுகாக்கப்படுகிறார்கள்?
13. ஓர் இளைஞன் முழுக்காட்டப்படுவதற்கு ஆயத்தமாயிருக்கிறானாவென தீர்மானிப்பதற்குக் கவனித்துப் பார்க்க வேண்டிய சில காரியங்கள் யாவை?
14. ஓர் இளைஞன் தான் முழுக்காட்டப்பட்டிருந்ததை ஏன் ஒரு பாதுகாப்பாகக் கருதினான்?
15. (எ) உண்மையான வணக்கத்தை மிகுந்த பயபக்தியோடு கருதுவதைக் காத்துவருவதை இளைஞருக்குச் சாத்தியமென நாம் எப்படித் தெரிந்துகொள்ளுகிறோம்? (பி) பெற்றோர் எப்படி மிகச் சிறந்த வகையில் உதவிசெய்யலாம்?
16. தலையில் சேகரித்துள்ள அறிவைப் பார்க்கிலும் அதிகம் ஏன் தேவை?
17. (எ) என்ன இடையூறு சிலரை முழுக்காட்டப்படுவதிலிருந்து பின்வாங்கும்படி செய்கிறது? (பி) யாக்கோபு 4:8-ல் கொடுத்திருக்கும் அறிவுரையை எப்படிப் பொருத்திப் பிரயோகிக்கலாம்?
18. இடையூறுகளை வெல்லுவதற்கு அடிப்படை உதவி என்ன?
19, 20. (எ) என்ன இடையூறுகளை வெல்ல வேண்டும், என்ன உறுதி நமக்கு இருக்கிறது? (பி) எல்லா இடையூறுகளையும் வெற்றிகரமாய் மேற்கொள்வது என்ன பலனைக் கொண்டுவரும்?
[பக்கம் 19-ன் பெட்டி]
முழுக்காட்டுவதா அல்லது தெளிப்பதா?
இயேசுவின் பாப்டிஸத்தைப் பற்றிய விவரப் பதிவு “அவர் தண்ணீரிலிருந்து மேலே வெளிவந்த”தைக் குறிப்பிடுகிறது. (மாற்கு 1:10, NW) இயேசு முழுக்காட்டப்பட்டார் என்பது ஆங்கிலத்தில் பாப்டிஸம் (பாப்டிஸ்மா) என மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்கச் சொல்லின் பொருளுடன் ஒத்திருக்கிறது. இது பாப்டிஸோ என்ற சொல்லிலிருந்து வருகிறது, அது “அமிழ்த்து, முழுக்கு” என்று பொருள்படுகிறது. இது கப்பல் மூழ்குவதை விவரிக்கச் சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டது. ஒருவன் மற்றொருவனை மூழ்கடிப்பதை விவரிக்க, இரண்டாம் நூற்றாண்டு எழுத்தாளன் லூசியன் அதோடு சம்பந்தப்பட்ட ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறான்: “அவன் திரும்ப மேலே வரமுடியாதபடி அவனை அவ்வளவு ஆழமாய் [பாப்டிஸோன்டா] முழுக்குதல். தி நியூ இன்டர்நாஷனல் டிக்ஷனரி ஆப் நியூ டெஸ்டமென்ட் தியோலஜி பின்வருமாறு முடிவு செய்கிறது: “எதிர்மாறாக வலியுறுத்தல்கள் இருந்தபோதிலும், யூத மற்றும் கிறிஸ்தவ சூழ்நிலைப் பொருத்தங்கள், இரண்டிலும் பாப்டிஸோ இயல்பாய் ‘முழுக்கு’ என்றே பொருள்பட்டதெனவும், பாப்டிஸத்துக்கு அது தனித் துறைக்குரிய பதமானபோதிலுங்கூட முழுக்காட்டுதலின் எண்ணம் நிலைத்திருக்கிறதெனவும் தோன்றுகிறது.”