உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w88 9/1 பக். 28
  • ஒரு “முழு நிறைவான சந்திப்பு”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு “முழு நிறைவான சந்திப்பு”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • இதே தகவல்
  • சபை புத்தகப் படிப்பு
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • வணக்கத்துக்காக ஒன்றுகூடி வரும் இடங்கள்
    யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
  • உங்கள் ராஜ்ய மன்றத்தை நீங்கள் மதிக்கிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • ராஜ்ய மன்றம் நம் வணக்கத்துக்கான இடம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
w88 9/1 பக். 28

ஒரு “முழு நிறைவான சந்திப்பு”

1984-ம் ஆண்டு கோடைக்காலம், ஜெரார்ட் என்ற பிரான்ஸ் நாட்டு இளம் மனிதன் ஓர் ஆறு மாத பயணத்தை உட்படுத்திய ஒரு வீரச் செயலில் இறங்கினார்—ஐக்கிய மாகாணங்கள் மற்றும் கனடா முழுவதும் சைக்கிளில் பயணம் செய்வதை மேற்கொண்டார். கம்பீரமான தோற்றமுடைய கன்மலைகள் அவரைக் கிளர்ச்சியுறச் செய்தன. அமைதியான பூங்காவனங்கள் அவருக்கு சாந்தி அளித்தன, ஆனால் கனடாவில் கியுபெக்கிலுள்ள மாண்ட்மக்னியில் அவர் பார்த்த காட்சி அவரை அதிகமாகக் கவர்ந்தது; அது அவருடைய வாழ்க்கைப் போக்கையே மாற்றியது.

செப்டம்பர் 16-ம் தேதி ஞாயிறு அன்று ஜெரார்ட் மாண்ட்மக்னியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, சாலை ஓரமாக கார்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். அடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் ஒரு கட்டடங் கட்டும் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தார். “அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது?” என்று வாகனங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த அந்த வேலையாட்களில் ஒருவரைக் கேட்டார். அவர் அதிக வேலையாக இருந்தபோதிலும் ஜெரார்டுக்கு விளக்கம் கொடுக்க சற்று நேரத்தை செலவழித்தார். அங்கு வேலை செய்பவர்கள் எல்லோருமே யெகோவாவின் சாட்சிகள், அவர்கள் தங்களுடைய மத கூட்டங்களை நடத்துவதற்கு ஒரு மன்றத்தைக் கட்ட இந்த வார இறுதி நாட்களைப் பயன்படுத்துகிறார்கள். இரண்டே நாளில் ராஜ்ய மன்றத்தைக் கட்டி முடிக்கும் பணியின் உச்சக் கட்டத்தில் தான் அங்கு வந்திருப்பது ஜெரார்டுக்குத் தெரியாது. அவர் பார்த்த கேட்ட காரியங்களால் வெகுவாகக் கவரப்பட்டார். அந்த இரவு தன்னுடைய நாட்குறிப்பேட்டில் இப்படியாக எழுதினார்: “மாலையில் நான் யெகோவாவின் சாட்சிகளை சந்தித்தேன். அவர்கள் ஒரு வீட்டை இரண்டே நாளில் கட்டினார்கள். அவர்களில் 1,000 பேருக்குமதிகமாக அங்கு இருந்தார்கள். முழு நிறைவான சந்திப்பு.”

அதற்குப் பின்பு சில நாட்களில் ஜெரார்ட் பிரான்ஸுக்குத் திரும்பினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, ஜூலை 26, 1986 அன்று அவர் மாண்ட்மக்னியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அவர் எழுதியதாவது:

‘உங்களுடைய ராஜ்ய மன்றம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அந்த இரண்டாம் நாளில் பிரான்ஸிலிருந்து வந்த ஒரு சைக்கிள் பயணியிடம் நீங்கள் பேசினது உங்களுக்கு இன்னும் ஞாபகமிருக்கிறதா? அந்த நாளில்தான் வாகனங்களின் போக்குவரத்தை வழிநடத்திக் கொண்டிருந்த நபர் ஒரு விதை விதைத்தார். ஒரு சில மாதங்களுக்குப் பின்பு சாட்சிகள் என்னை பிரான்ஸில் சந்தித்தனர். அவர்களோடு பைபிளைப் படிக்க நான் ஒப்புக்கொண்டேன். நான் வைராக்கியமான ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவனாயிருந்ததால் படிப்பு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஆனால் யெகோவா அந்த விதையை வளரச் செய்தார். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் நான்டெஸில் நடைபெற்ற மாநாட்டில் நான் முழுக்காட்டுதல் பெற்றேன். நான் சத்தியத்தைக் காண அனுமதித்த யெகோவா தேவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன், அதே சமயத்தில் அந்த ஞாயிறு அன்று, அதாவது செப்டம்பர் 16, 1984 அன்று, அந்த சகோதரர் எனக்குக் கற்பித்த எல்லா காரியங்களுக்கும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். சத்தியத்திற்கு மதம் மாறிய ஒரு துணிச்சல் வீரனின் சகோதர வாழ்த்துக்கள்.’

ஜெரார்டின் கடிதம் ராஜ்ய மன்றத்தில் வாசிக்கப்பட்ட சமயத்தில் மாண்ட்மக்னி சபை எவ்வளவாய் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது! அந்த மன்றத்தைக் கட்டுவதில் உதவி செய்த அனைவரும் சாலொமோனின் பின்வரும் வார்த்தைகளின் உண்மையைக் காண்பவர்களாயிருந்தனர்: “உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள் மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.” (பிரசங்கி 11:1) ஆம், ராஜ்ய மன்றங்கள் கட்டும் திட்டங்களின் நல்ல பலன்கள் நீடித்து நிற்பவை, மற்றும் பல வழிகளில் பரந்த செயல்விளைவைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. (w87 4⁄1)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்