இரத்தத்துக்கு தெய்வீக மரியாதை
“எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.”—அப்போஸ்தலர் 20:27.
ஒரு கிறிஸ்தவனாக அப்போஸ்தலனாகிய பவுலின் அந்த வார்த்தைகள், உயிரின் திரவமான இரத்தத்துக்கு அவனுடைய ஆரோக்கியமான மரியாதையை பிரதிபலிக்கின்றன. விவரமாக இதை சிந்திக்கையில் இந்த வார்த்தைகளினால் பவுல் எதை அர்த்தப்படுத்தினான் என்பதை நாம் ஆராயலாம். ஆனால் முதலாவதாக, மிருக மற்றும் மனித ஆத்துமாக்களின் சிருஷ்டிகர், இரத்தத்தைப்பற்றி என்ன சொல்லுகிறார் என்பதை நாம் பார்க்கலாம். இரத்தம் உயிரை பிரதிநிதித்துவம் செய்வதாக, அது பரிசுத்தமானதாக இருப்பதாக யெகோவா தேவன் கருதுகிறார் என்பதை நாம் ஏற்கெனவே கவனித்தோம். இரத்தத்தை, குறிப்பாக மனித இரத்தத்தை பொறுப்பில்லாமலோ அல்லது கவலையீனமாகவோ சிந்துகிறவர்கள் கடவுளுக்கு முன்பாக இரத்தப்பழி குற்றமுள்ளவர்களாகிறார்கள். என்றபோதிலும் மனிதவர்க்கத்துக்கு பிரயோஜனமாக இருக்கும் வகையில் இரத்தத்தை பயன்படுத்துவதற்கு வழிகள் இல்லையா?
2 இரத்தத்தின் சம்பந்தமாக, இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய சட்டம் மனதில் பதியும்படியாக இருந்தது: “எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்க வேண்டாம். சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே, அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டு போவான்.“ இஸ்ரவேலரோ அல்லது அவர்கள் மத்தியில் தங்கியிருக்கும் அந்நியரோ தேவையான ஊட்டச் சத்துக்காகவுங்கூட இரத்தத்தைப் புசிப்பது, மரண தண்டனைக்குரிய ஒரு குற்றமாக இருந்தது. மாம்சத்தைப் புசிப்பதற்கு முன்பாக, அவர்கள் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி மண்ணினால் அதை மூடி, இவ்விதமாக அடையாளமாக உயிரை கடவுளுக்கு திருப்பித் தந்துவிட வேண்டும். (லேவியராகமம் 17:13, 14) அது தெய்வீக சட்டமாக இருந்தது. அதை கைக்கொள்வதன் மூலம், அந்த இஸ்ரவேலர்கள் ஜீவனின் ஊற்றாகிய யெகோவாவோடு ஆரோக்கியமான ஒரு ஆவிக்குரிய உறவை காத்துக்கொண்டார்கள். மேலுமாக இதனால் கிடைக்கும் பலனாக, சரீர ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் நன்மைகளையுங்கூட அவர்கள் அனுபவித்துக் களித்தார்கள்.
கிறிஸ்துவின் இரத்தம்
3 என்றபோதிலும், இரத்தத்தின் சம்பந்தமாக குறிப்பிடத்தக்க ஒரு உபயோகத்தை யெகோவா மனதில் கொண்டிருந்தார். கிறிஸ்து இயேசுவின் “விலையேறப்பெற்ற இரத்தத்தின்” மூலமாக, மனிதவர்க்கத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்பதற்காக அது இருந்தது. “உலகத் தோற்றத்திற்கு முன்னே”யுங்கூட (பாவமுள்ள ஆதாமும் ஏவாளும் பிறப்பிக்கக்கூடிய மீட்டுக்கொள்ளப்படத்தக்க சந்ததியின் மூலமாக) யெகோவா தாம் மனிதவர்க்கத்தை எவ்விதமாக மீட்டுக்கொள்வார் என்பதை முன்னறிந்திருந்தார். (1 பேதுரு 1:18-20; ரோமர் 6:22, 23) “அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (1 யோவான் 1:7) இரத்தத்தின் இந்த உபயோகம் அத்தனை முக்கியமானதாக இருப்பதன் காரணமாகவே, இயேசுவின் பரிபூரண பலியை முன்னால் சுட்டிக் காட்டிய அநேக மாதிரிகளையும் நிழல்களையும் எபிரெய வேதாகமத்தில் பதிவு செய்யும்படியாக கடவுள் செய்தார்.—எபிரெயர் 8:1, 4, 5; ரோமர் 15:4.
4 இஸ்ரவேலருக்கு நியாயப் பிரமாணத்தைக் கொடுப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, யெகோவா மோரியா மலையின் மேல் ஈசாக்கை பலியிடும்படியாக ஆபிரகாமுக்கு கட்டளையிட்டார். இதன் மூலமாக கடவுள், எவ்விதமாக தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை பலிகொடுப்பார் என்பதை விளக்கிக் காட்டினார். கிளர்ச்சியூட்டிய இந்த நிகழ்ச்சியில் ஈசாக்கு மனமுவந்து கீழ்ப்படிந்தது, பலியில் தம்முடைய இரத்தத்தை சிந்துவதற்கு தம்முடைய தகப்பனின் சித்தத்திற்கு இயேசு கீழ்ப்படிவதற்கு படமாக இருந்தது.—ஆதியாகமம் 22:1-3, 9-14; எபிரெயர் 11:17-19; பிலிப்பியர் 2:8.
5 மோசேயின் நியாயப்பிரமாணம், “வரப்போகிற நன்மைகளின் நிழலாயிருந்து” மனிதவர்க்கத்தின் சார்பாக இயேசுவின் பலியை முன் சுட்டிக் காட்டியது. நியாயப்பிரமாணம் இரத்தத்தின் ஒரே ஒரு உபயோகத்தை மட்டுமே அனுமதித்தது. யெகோவாவுக்கு செலுத்தப்பட்ட மிருக பலிகளில் மட்டுமே அது அனுமதிக்கப்பட்டது. அந்த பலிகள் வெறும் சடங்காக இருக்கவில்லை. அவை ஆவிக்குரிய கருத்துள்ள ஆழமான காரியங்களாக இருந்தன. நுணுக்கமான விவரத்தில் அவை இயேசுவின் பலிக்கும் அதன் மூலமாக செய்துமுடிக்க இருந்த அனைத்துக்கும் முன்நிழலாக இருந்தன.—எபிரெயர் 10:1; கொலோசெயர் 2:16, 17.
6 உதாரணமாக ஆரோன் பாவ நிவாரண பலிகளைக் கையாண்டது, பெரிய பிரதான ஆசாரியனாகிய இயேசு, எவ்விதமாக இரட்சிப்பை அளிப்பதில் தம்முடைய சொந்த விலையேறப்பெற்ற இரத்தத்தின் மதிப்பை பயன்படுத்துகிறார் என்பதற்குப் படமாக இருந்தது. நீதிக்குரியவர்களாக கருதப்பட்டு பரலோகங்களில் அவரோடே ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் ஒரு சுதந்தரத்தைப் பெற்றுக் கொள்ளும்படிக்கு, முதலாவதாக 1,44,000 அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களாலான தம்முடைய ஆசாரிய “வீட்டாருக்காக” அதைப் பயன்படுத்துகிறார். அடுத்ததாக, “ஜனத்தினுடைய” சார்பாக செலுத்தப்பட்ட பலி, இங்கே பூமியின் மீது நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளப் போகும் அனைவரையும் இயேசு மீட்டுக்கொள்வதற்குப் படமாக இருந்தது. இப்பொழுதேயுங்கூட இவர்களில் “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” வரப்போகும் மகா உபத்திரவத்திலிருந்து தப்பிப் பிழைப்பதற்காக நீதிமான்களாக எண்ணப்படுகிறார்கள். இது ஏனென்றால் “இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்களாயும்” கடவுளுக்கு பரிசுத்த சேவை செய்வதன் மூலம் தங்களுடைய விசுவாசத்தைக் காண்பிக்கிறவர்களாயும் இருக்கிறார்கள்.—லேவியராகமம் 16:6, 15, 18-22; எபிரெயர் 9:11, 12; வெளிப்படுத்தின விசேஷம் 14:1, 4; 7:4, 9, 14, 15.
7 ‘உயிர் இரத்தத்திலிருக்கிறது.’ இயேசுவின் இரத்தம் பரிபூரணமாக இருந்தது. ஆகவே அவருடைய பலி விசுவாசத்தை அப்பியாசிக்கும் அனைவருக்கும் பரிபூரண ஜீவனை அளிக்கிறது. அந்தப் பூர்வ மாதிரிகள் இயேசுவின் அன்பான பலியில் நிறைவேறியிருப்பதற்காக நாம் எவ்வளவு களிகூர்ந்திருக்கலாம்!—லேவியராகமம் 17:4; அப்போஸ்தலர் 20:28.
இரத்தம்—ஒரு நேர்மையுணர்வுப் பிரச்னை
8 இரத்தத்தின் திட்ட அமைப்பில் திகைப்பூட்டும் ஞானம் காணப்படுகிறது. உயிரின் ஆரம்பத்தைப் பற்றி இன்னும் அநிச்சயமாயிருக்கும் பரிணாமக் கோட்பாட்டாளர்கள் நம்முடைய உயிர் இரத்தம் எப்படியோ பரிணமித்தது என்பதாக நமக்குச் சொல்ல முயற்சிப்பார்கள். நம்ப முடியாதபடி அது எத்தனை விசித்திரமாக இருக்கிறது!
9 நம்முடைய சிக்கலான இரத்தம் நிச்சயமாகவே மகத்தான வேலைகளைச் செய்து முடிக்கிறது. அது உயிரைக் காக்கும் பிராணவாயுவையும் ஊட்டச் சத்துக்களையும் நம்முடைய உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது. கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துகிறது. நோய்களை எதிர்க்க வெள்ளை அணுக்களையும் சிறிய மற்றும் பெரிய காயங்களை பழுதுபார்க்க பிளாட்டலெட்டுகளை எடுத்துச் செல்கிறது. உடல் வெப்பத்தைச் சீராக்க அது உதவி செய்கிறது. நம்முடைய இரத்தம் நம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாக இருக்கிறது. குற்றவாளிகளை அடையாளங் கண்டுகொள்வதற்கு இரத்த மாதிரிகளிலிருந்து எடுக்கப்பட்ட “டி.என்.ஏ. விரல் அடையாளத்தை” உபயோகிப்பதைப் பற்றியுங்கூட இங்கிலாந்தில், மரபு வழி பண்பியல் ஆய்வாளர்கள் பேசுகிறார்கள். தாவீது ராஜாவை பின்வருமாறு வியந்து கூற தூண்டிய அநேக உடல் உறுப்புகளில் இரத்தம் ஒரு அங்கமாக இருக்கிறது; “யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்!”—சங்கீதம் 139:1, 14.
10 மனிதவர்க்கத்துக்கு வடிவமைத்து நம்முடைய இரத்தத்தைத் திட்டமிட்டவரான நீதியுள்ள அவரே உயிரின் அந்த ஓட்டம் எவ்விதமாக சரிவர பயன்படுத்தப்படலாம் என்பதை தீர்மானிக்க வேண்டியவராக இருக்கிறாரல்லவா? (யோபு 36:3) அதை அவர் நிச்சயமாகவே செய்திருக்கிறார். நம்முடைய முற்பிதாவாகிய நோவாவிடம் அவர் இவ்விதமாக தெரிவித்தார்: “மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்க வேண்டாம்.” (ஆதியாகமம் 9:4) இந்தச் சட்டத்தை இஸ்ரவேலருக்கு மறுபடியுமாக கொடுக்கையில் அவர் தெளிவாக இவ்விதமாகச் சொன்னார்: “இரத்தத்தை மாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே உயிரையும் புசிக்க வேண்டாம். அதை நீ சாப்பிடாமல் தண்ணீரைப் போல் தரையிலே ஊற்றிவிட வேண்டும்.” (உபாகமம் 12:23, 24) தங்களுடைய உயிருக்கு வரக்கூடிய ஆபத்தையுங்கூட பொருட்படுத்தாமல், தாவீது குடிப்பதற்காக பெத்லகேமிலுள்ள கிணற்றின் தண்ணீரை மூன்று பராக்கிரமச்சாலிகள் கொண்டுவந்தபோது அவன் இந்தக் கட்டளையை மனதில் கொண்டிருந்தான் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுடைய உயிரை பிரதிநிதித்துவம் செய்வதாக அவன் அதை “யெகோவாவுக்கென்று ஊற்றி”விட்டான். (2 சாமுவேல் 23:15-17) ஒரு நெருக்கடியான நிலையிலுங்கூட, இரத்தத்தின் பரிசுத்தத்தன்மை அசட்டை செய்யப்படக்கூடாது.—1 சாமுவேல் 14:31-34-ஐயுங்கூட பார்க்கவும்.
கிறிஸ்தவ சபையில்
11 முதல் நூற்றாண்டு எருசலேமில் ஒரு பெரிய அறையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அங்கே இயேசுவின் அப்போஸ்தலர்களும் கிறிஸ்தவ சபையின் மற்ற மூப்பர்களும் கூடியிருக்கிறார்கள். அவர்களுடைய சம்பாஷணையின் பொருள் என்னவாக இருக்கிறது? பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவில் விருத்தசேதனம்பற்றி எழுந்த ஒரு பிரச்னையை அவர்களுக்கு முன்பாக வைக்க அங்கு வந்திருக்கிறார்கள். புதிதாக மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மாம்சப் பிரகாரமாக விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டியதில்லை என்பதாக அந்தக் குழு தீர்மானிக்கிறது.—அப்போஸ்தலர் 15:1, 2, 6, 13, 14, 19, 20.
12 இந்தத் தீர்மானத்தை விவரமாக குறிப்பிடுகையில், நடத்தும் மூப்பனான யாக்கோபு கிறிஸ்தவர்களிடம் இன்னமும் கேட்கப்படும் காரியங்களைத் தொகுத்துரைக்கிறான். அவன் சொல்லுகிறான்: “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும் இரத்தத்திற்கும், நெருங்குண்டு செத்ததிற்கும், [இரத்தம் வெளியேறாமல் இருப்பவை] வேசித்தனத்திற்கும் நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள் மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக.” (அப்போஸ்தலர் 15:28, 29) ஆகவே விக்கிரகாராதனையும், இரத்தம் புசிப்பதும், வேசித்தனமும் மதசம்பந்தமாக ஒரே நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நல்ல ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்வதற்கும் கடவுளுடைய வாக்குத்தத்தங்களின் நிறைவேற்றத்தில் பங்குகொள்வதற்கும் கிறிஸ்தவர்கள் இவை அனைத்திலிருந்தும் விலகியிருக்க வேண்டும். இரத்தத்தைப் பொறுத்தவரையில் அது வாயினால் உட்கொள்ளப்பட்டாலோ அல்லது இரத்த நாளங்களின் மூலமாக செலுத்தப்பட்டாலோ அது எந்தவித வித்தியாசத்தையும் உண்டுபண்ணுவதில்லை. நோக்கம் ஒன்றே சரீரத்தைக் காக்கவும் பேணவுமே. யாக்கோபு தெளிவாக சுட்டிக் காண்பித்தது போலவே இரத்தத்திலிருந்து விலகியிருக்கத் தவறுவது கடவுளுடைய சட்டத்தை மீறுவதாக இருக்கிறது.
13 இரத்தமேற்றுவதனால் வரக்கூடிய ஏய்ட்ஸ் நோய் [AIDS] கல்லீரல் அழற்சி இன்னும் மற்ற நோய்கள் இன்று பொருகியிருப்பது, கடவுளுடைய சட்டங்களைக் கைக் கொள்வதால் அநேகமாக நல்ல உடல் ஆரோக்கியமுங்கூட கிடைக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. பைபிள் காலங்களில் கடவுள் இஸ்ரவேலருக்கு, உணவு, தொற்று நோய் தடைகாப்பு, உடல் ஆரோக்கியம், சுகாதாரம் ஆகியவற்றின் சம்பந்தமாக, திட்டவட்டமான சட்டங்களைக் கொடுத்தார். இது அவர்களுடைய வனாந்தர வாசத்துக்கு அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது. (லேவியராகமம் 11:2-8; 13:2-5; உபாகமம் 23:10-13) அந்தச் சட்டங்களைக் கைக் கொள்வதன் மூலம், இஸ்ரவேலர் அவர்களுடைய கடவுளோடு நெருக்கமான ஆவிக்குரிய ஒரு உறவை காத்துக்கொண்டது மட்டுமல்லாமல் அவர்களைச் சுற்றியிருந்த ஜனங்களை வாதித்த நோய்களிலிருந்து அவர்கள் சரீரப் பிரகாரமாகவுங்கூட பாதுகாக்கப்பட்டார்கள். கடந்த நூற்றாண்டில்தானே மருத்துவர்கள் அந்தச் சட்டங்கள் சிலவற்றின் பின்னாலுள்ள நடைமுறையான ஞானத்தைப் போற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். இரத்தத்தின் சம்பந்தமாகவுங்கூட கடவுளுடைய சட்டம் அர்த்தமுள்ளதாக இருப்பதை அநேகர் உணர்ந்து வருகிறார்கள்.
14 இஸ்ரவேலர் கீழ்ப்படிந்தபோது, கடவுள் பின்வரும் இந்த வாக்கை அவர்களிடமாக நிறைவேற்றினார்: “நீ உன் தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப் பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய யெகோவா.” அதிக முக்கியமாக கீழ்ப்படிதலானது இஸ்ரவேலரை எதிர்கால ராஜ்ய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்களாக்கியது.—யாத்திராகமம் 15:26; 19:5, 6.
15 நவீன மருத்துவம் அளிக்கும் அநேக நன்மைகளை யெகோவாவின் சாட்சிகள் போற்றுகிறார்கள். உதாரணமாக, கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் சிட்னி அருகே பயங்கரவாத குண்டினால் ஒரு ராஜ்ய மன்றம் நொறுங்கியபோது, காயமடைந்த 50-க்கும் மேற்பட்ட சாட்சிகள் அருகாமையிலிருந்த மருத்துவ மனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவர்கள் அங்கே ஏற்றுவதற்கு இரத்தமில்லாத திரவங்களை கைவசம் ஏராளமாக வைத்திருந்ததற்காக இவர்கள் நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள். காயமடைந்த அனைவரும் உயிர்பிழைத்தனர். யெகோவாவின் நியமங்களுக்கு இசைவாக இருந்த இந்த வசதிகளுக்காக அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கக்கூடும். மேலுமாக இரத்தமேற்றுதலினால் கடத்தப்படக்கூடிய நோய்களினால் பாதிக்கப்படும் அபாயத்தில் அவர்களில் ஒருவரும் இல்லை.
“எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி சுத்தமாயிருக்கிறேன்”
16 என்றபோதிலும் மறுபடியுமாக நாம் முதல் நூற்றாண்டுக்கு திரும்பிப் போகலாம். விக்கிரகாராதனை இரத்தத்துக்கும், வேசித்தனத்துக்கும் விலகியிருக்கும்படியாக யாக்கோபு அறிவித்ததை பவுலும் பர்னபாவும் கேட்டது முதற்கொண்டு சுமார் ஏழு ஆண்டுகள் கடந்துவிடுகின்றன. அந்தச் சமயத்தில், பவுல் ஆசியா நாடு முழுவதிலும் மற்றும் கிழக்கத்திய ஐரோப்பாவிலும் இரண்டு மிஷனரி பிரயாணங்களைச் செய்துவிட்டிருந்தான். இப்பொழுது மிலேத்துவின் வழியாக திரும்பி வருகையில், அங்கே அவனை சந்திக்க வந்திருந்த எபேசுவின் மூப்பர்களிடம் அவன் பேசச்கூடியவனாக இருந்தான். அவன் “வெகு மனத்தாழ்மையோடும் மிகுந்த கண்ணீரோடும் கர்த்தரை சேவிப்”பதில் தன்னை ஈடுபடுத்தியதை அவர்களுக்கு நினைப்பூட்டுகிறான். யெகோவாவின் ஊழியத்தில் நம்மிடமுள்ள அனைத்தையும் கொடுப்பதில் நாம் அதே போன்று நம்மை தியாகம் செய்கிறவர்களாக இன்று இருக்கிறோமா? நாம் அவ்விதமாக இருக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 20:17-19.
17 பவுல் எவ்விதமாக அந்த சேவையை புரிந்தான்? ஜனங்களை அவன் பார்த்த இடங்களிலெல்லாம், முக்கியமாக அவர்களுடைய வீடுகளிலும், அவர்களுடைய மதசம்பந்தமான பின்னணியைப் பொருட்படுத்தாமலும் அவர்களுக்கு அவன் சாட்சி கொடுத்தான். அந்த மூப்பர்களுக்கு, அறிவுரை வழங்குவதிலிருந்தும் அவன் பின்வாங்கவில்லை. அவன் “வெளியரங்கமாக வீடுகள் தோறும் “பிரசங்கிக்கையில் அவர்கள் அவனோடு சென்றிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. பவுலின் வைராக்கியமான ஊழியத்திலிருந்து நன்மை அடைந்தது அவர்கள் மாத்திரம் இல்லை. ஏனென்றால் அவன் “தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும் யூதருக்கும் கிரேக்கருக்கும் [முழுமையாக, NW] சாட்சியாக அறிவித்தான்.” “முழுமை”யாக என்ற அந்த வார்த்தையைக் கவனியுங்கள். எல்லா விதமான ஆட்களும், எல்லா இனத்தைச் சேர்ந்த தொகுதிகளும் சாட்சியைப் பெற்றுக்கொள்கிறார்களா என்பதை இன்று முழுமையாக நாம் பார்க்கிறோமா?—அப்போஸ்தலர் 20:20, 21; வெளிப்படுத்தின விசேஷம் 14:6, 7.
18 “முழுமையாக” என்ற வார்த்தை பவுலின் அடுத்த வசனத்திலும் காணப்படுகிறது: “என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தை முழுமையாக பிரசங்கம் பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். (அப்போஸ்தலர் 20:24) இவ்விதமாக அவன் தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றாவிட்டால், அவனுடைய பிராணன் அல்லது உயிருக்கு எந்த மதிப்புமிராது. நம்முடைய ஊழியத்தைக் குறித்து நாம் அதே விதமாக உணருகிறோமா? இந்தக் கடைசி நாட்கள் முடிவை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கையில் அழுத்தங்களும், துன்புறுத்தல்களும், வியாதிகளும் அல்லது வயோதிபமும் நம்மை ஆட்கொள்ளும்போது, “பாத்திரமான” வீட்டாரை முழுவதுமாக தேடிக்கண்டு பிடிப்பதில் பவுலைப் போலவே அதே ஆவியை நாம் இன்னும் காண்பிக்கிறோமா?—மத்தேயு 10:12, 13; 2 தீமோத்தேயு 2:3, 4; 4:5, 7.
19 மறுபடியுமாக அந்த எபேசுவின் மூப்பர்களைச் சந்திக்க அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. என்றபோதிலும் முழு நம்பிக்கையோடு அவனால் அவர்களிடம், இவ்விதமாகச் சொல்ல முடிந்தது: “எல்லாருடைய இரத்தப் பழிக்கும் நீங்கி நான் சத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.” எவ்விதமாக? பவுல் யுத்தத்தில் இரத்தஞ்சிந்தியிருக்கவில்லை. அவன் இரத்தத்தை புசித்திருக்கவுமில்லை. ஆனால் அவர்களுடைய இரத்தத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் மற்றவர்களுடைய ஜீவன்களின் மேல் அவன் அதிக அக்கறையுள்ளவனாக இருந்தான். அவன் முழுமையாக சாட்சி கொடுக்கத் தவறுவதன் காரணமாக கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் நாளிலே அவர்கள் தங்களுடைய ஜீவன்களை இழப்பதைக் காண அவன் விரும்பவில்லை. அந்த மூப்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் “தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும்” அவன் மறைத்து வைத்திருக்கவில்லை.—அப்போஸ்தலர் 20:26, 27.
20 “மகா உபத்திரவம்” நெருங்கி வருகையில், கடவுளுடைய எல்லா ஆலோசனைகளையும் அறிவிப்பதற்கான தேவை முன்னொருபோதும் இராத வகையில் அவசரமானதாகிவிடுகிறது. இன்றுள்ள நிலைமை சுமார் 2,600 வருடங்களுக்கு முன்பாக, எருசலேமுக்கு அழிவு வர இருந்தபோது, இருந்த விதமாகவே இருக்கிறது. யெகோவாவின் வார்த்தை எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு உண்டாகி அவர்: “மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில் நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும் அவனை உயிரோடே காக்கும்படியாகவும் அதை அவனுக்குச் சொல்லாமலும் நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்தத் துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.” (எசேக்கியேல் 3:17-21; 33:7-9) யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியர்களுக்கும் அவர்களுடைய தோழர்களான “திரளான கூட்டமாகிய ஜனங்களுக்கும்” இன்று அதேவிதமான பொறுப்பு இருக்கிறது. நாம் முழுமையாக சாட்சி கொடுக்க வேண்டும். அப்பொழுது, கடவுளுடைய பழிவாங்கும் நாளிலே நமக்குச் செவி கொடுத்துக் கேட்பவர்களோடேகூட நாம் பாதுகாக்கப்படக்கூடும்.—ஏசாயா 26:20, 21; 1 தீமோத்தேயு 4:16; வெளிப்படுத்தின விசேஷம் 7:9, 14, 15.
21 கிறிஸ்தவ நடுநிலை வகிப்பிலும், இரத்தத்திலிருந்து விலகியிருப்பதிலும், முழுமையாக சாட்சி கொடுப்பதிலும் இயேசுவின் விலையேறப்பெற்ற பலியில் விசுவாசத்தை அப்பியாசிப்பதிலும், நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய எல்லா ஆலோசனைகளுக்கும் கீழ்ப்படிந்திருக்க தீர்மானமாக இருப்போமாக. அப்பொழுது நாம் சங்கீதம் 33:10-12-ன் மகிழ்ச்சியான நிறைவேற்றத்தில் பங்கு கொள்ளக்கூடும்: “யெகோவா ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார். யெகோவாவுடைய ஆலோசனை நித்திய காலமாக . . . நிற்கும். யெகோவாவைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதி சந்தோஷமுள்ளது.” (w86 9/1)
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻ இரத்தத்தின் எந்த ஒரு உபயோகம் நிலையான ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது?
◻ இரத்தத்திலிருந்து விலகியிருப்பதால் நீங்கள் எவ்விதமாக நன்மையடைகிறீர்கள்?
◻ நாம் எவ்விதமாக “எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி சுத்தமாயிருக்க” முடியும்?
◻ முழுமையாக செய்வதன் சம்பந்தமாக என்ன முன்மாதிரிகளை நாம் பின்பற்ற வேண்டும்?
[கேள்விகள்]
1. அப்போஸ்தலர் 20:27-லுள்ள பவுலின் வார்த்தைகள் இரத்தத்தைப்பற்றிய யெகோவாவின் கருத்தை எவ்விதமாக பிரதிபலிக்கின்றன?
2. (எ) இஸ்ரவேலரின் மத்தியில் இரத்தத்தைப் புசிப்பது ஏன் மரண தண்டனைக்குரிய ஒரு குற்றமாக இருந்தது? (பி) அந்தச் சட்டத்தைக் கைக்கொள்வதன் மூலம் இஸ்ரவேலர் எவ்விதமாக நன்மையடைந்தார்கள்?
3. (எ) இயேசுவின் இரத்தம் ஏன் குறிப்பிடத்தக்க வகையில் “விலையேறப்பெற்றதாக” இருக்கிறது? (பி) எபிரெய வேதாகமம் எவ்விதமாக இயேசுவின் பலியை முன்னால் சுட்டிக்காட்டுகிறது?
4. ஆதியாகமம் 22-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நாடகத்தில் என்ன எதிர்கால காட்சிகள் இருந்தன?
5. மோசேயின் நியாயப்பிரமாணத்தின் பலிகள் எவ்விதமாக ஆவிக்குரிய கருத்துள்ள ஆழமான காரியங்களாக இருந்தன?
6. பாவ நிவாரண பலிகள் எந்த இரண்டு வகுப்பாரின் மீட்புக்கு முன்நிழலாக இருந்தன? எந்த வகையில்?
7. அந்தப் பூர்வ மாதிரிகளின் நிறைவேற்றத்தில் நாம் ஏன் களிகூர்ந்திருக்கலாம்?
8, 9. (எ) இரத்தம் செய்யும் சில மகத்தான வேலைகள் யாவை? (பி) தாவீதைப் போலவே, நாம் உண்டாக்கப்பட்டிருக்கும் விதத்துக்காக நாம் எவ்விதமாக தெய்வீக மரியாதையை வெளியிடலாம்?
10. (எ) இரத்தம் எவ்விதமாக பயன்படுத்தப்படலாம் என்பதை யார் தீர்மானிக்க வேண்டும்? (பி) நோவாவுக்கும் இஸ்ரவேலருக்கும் கடவுள் என்ன தெளிவான கட்டளையைக் கொடுத்தார்? (சி) நெருக்கடியான ஒரு நிலை ஏற்பட்டாலுங்கூட, இரத்தம் பரிசுத்தமானது என்பதை என்ன உதாரணங்கள் காண்பிக்கின்றன?
11, 12. (எ) முதல் நூற்றாண்டில் கோட்பாடு சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுகளை, ஆவியால் வழிநடத்தப்பட்ட எந்தக் குழு தீர்த்து வைத்தது? (பி) இரத்தத்தைப் புசிப்பதை இந்தக் குழு மதசம்பந்தமாக எந்த நிலையில் வைத்தது? (சி) இரத்தமேற்றுவது வாயினால் இரத்தத்தை உட்கொள்வதற்கு ஏன் சமமாகவே இருக்கிறது?
13. (எ) இரத்தத்திலிருந்து விலகியிருப்பது, யெகோவாவின் சாட்சிகளுக்கு என்ன கூடுதலான பாதுகாப்பை அளித்திருக்கிறது? (பி) மற்ற தெய்வீகச் சட்டங்கள் எவ்விதமாக கடவுளுடைய ஜனங்களை பாதுகாக்க ஏதுவாக இருந்திருக்கின்றன?
14. இஸ்ரவேலர் கீழ்ப்படிந்தபோது என்ன பரிகாரமும் ஆசீர்வாதங்களும் அவர்களுக்குக் கிடைக்கக்கூடியதாக இருந்தது?
15. கடவுளுடைய நியமங்களுக்கு கீழ்ப்படிந்திருப்பதால் நாம் எவ்விதமாக ஆசீர்வதிக்கப்படக்கூடும் என்பதை என்ன சமீப கால உதாரணம் விளக்குகிறது?
16. பவுலைப் போலவே பரிசுத்த சேவையினிடமாக நாம் என்ன மனநிலையை காண்பிக்க வேண்டும்?
17 பவுலைப் போல நாம் எவ்விதமாக நம்முடைய சேவையை புரிய வேண்டும்?
18. (எ) பவுலைப் போல, கடவுளுடைய ஊழியத்தில் நாம் எவ்விதமாக நம்முடைய பிராணனை ஈடுபடுத்துவோம்? (பி) பவுலைப் போலவே அதிகரித்து வரும் அழுத்தங்களின் மத்தியிலும் நாம் எவ்விதமாக செயல்பட வேண்டும்?
19. “எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன்” என்று எவ்விதமாக பவுலினால் சொல்ல முடிந்தது?
20. (எ) யெகோவா, எசேக்கியேலுக்கு மீண்டும் மீண்டும் கொடுத்த எச்சரிப்புக்கு இசைவாக நாம் என்ன பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்? (பி) நமக்கும், நமக்குச் செவி கொடுத்து கேட்பவர்களுக்கும் இதன் பலன் என்னவாக இருக்கும்?
21. இரத்தத்துக்கு தெய்வீக மரியாதையை நாம் என்ன விதங்களில் காண்பிக்கலாம்? என்ன விளைவுகளோடு?
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
மார்ச் 20, 1986, தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் [ஆங்கிலம்], “இரத்த வங்கிகள் ஏய்ட்ஸ் நோய்க்கு விலகியில்லை” என்ற தலைப்பின் கீழ் ஒரு கட்டுரையை பிரசுரித்திருந்தது. முதல் பாரா இவ்விதமாக வாசிக்கிறது: “இரத்த வங்கி அமைப்புகள் நம்மை நம்பச் செய்வது போல ஐக்கிய மாகாணங்களின் இரத்தம் அவ்வளவு பாதுகாப்பாக இல்லை. தற்போதுள்ள உயர் அபாய தொகுதிகளுக்கும் அப்பால் பொது மக்களுக்கு இரத்தமேற்றுதலே ஏய்ட்ஸ் பரவுவதற்கு முக்கிய வழியாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. தானமாக தரப்படும் இரத்தத்தை தடைகாப்பு செய்ய பயன்படுத்தப்படும், ஏய்ட்ஸ் நோய் எதிர் பொருள் சோதனையில், எல்லா கறைகளும் கண்டுபிடிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இன்னும் மோசமான காரியமானது, இரத்த வங்கிதாரர்கள், இரத்தமேற்றுதலின் பாதுகாப்புறுதியை முன்னேற்றுவிக்க நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தயங்குகிறார்கள்.