நீங்கள் கோபமாகப் பதிலளிக்கிறீர்களா?
“மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.” இப்படியாக நீதிமொழிகள் 15:1 குறிப்பிடுகிறது.
உங்களை யாராவது கோபப்படுத்தினால் அவர்களுடைய நிலைக்கு உங்களை ஆளாக்கி, ‘உங்கள் எண்ணத்தைப் பங்குபோட’ தூண்டப்படுகிறீர்களா? அது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
நியு யார்க் மாநகரில் ஓர் இளம் பெண் கடைக்காரரின் மட்டமான சேவையைக் கண்டு, அந்தக் கடைக்காரருடன் கடுமையாக வாதாடிவிட்டு வீடு திரும்பி தன் மாற்றாந்தகப்பனிடம் நடந்ததைச் சொன்னாள். உடனே அவர் அந்தக் கடைக்காரரிடம் பேசுவதற்காகக் கடைக்குச் சென்றார். ஒரு வாய்ச்சண்டை ஏற்பட்டது, அந்தக் கடைக்காரன் இந்த மனிதனை சுட்டுக் கொன்றான்.
மேற் குறிப்பிடப்பட்ட நீதிமொழியின் ஆலோசனையைப் பின்பற்றுவதுதானே அப்படிப்பட்ட ஒரு நிலைமையில் உதவியிருக்குமா? 1 சாமுவேல் 25:2-35-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் அபிகாயிலையும் தாவீதையும் உட்படுத்திய ஒரு சம்பவத்தை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அபிகாயிலின் கணவனாகிய நாபாலிடமிருந்து திரும்பிவந்த ஓர் இளம் மனிதன் கொண்டுவந்த கெட்ட அறிக்கையைக் கேள்விப்பட்டு தாவீது ஒரு வினைமையான குற்றத்தை செய்யவிருந்தான். குற்றமற்ற இரத்தம் சிந்தப்பட்டிருக்கும். அபிகாயிலின் சாந்தமான பிரதியுத்தரமும், அவளுடைய தயவான செயல்களும் மனத்தாழ்மையும் தாவீதின் உக்கிரத்தையும் அவனுடைய ஆட்களின் உக்கிரத்தையும் மாற்றியது. (w86 3/15)