உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w87 4/1 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • இதே தகவல்
  • உலகத்தை மாற்றிய அந்த வாரம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • பெத்தானியாவில், சீமோனுடைய வீட்டில்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • பெத்தானியாவில் சீமோனின் வீட்டில் விருந்து
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
w87 4/1 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

◼ யோவான் 6:53-ல் “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும் அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால், உங்களுக்குள்ளே ஜீவனில்லை, என்று இயேசு குறிப்பிட்டபோது, அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களைக் குறித்து மட்டும்தான் சென்னாரா?

அநேக வருடங்களாக, இந்த வார்த்தைகள் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இயேசு கிறிஸ்துவோடு ஆட்சிசெய்யும் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு மட்டும் பொருந்துவதாகக் கருதி வந்தோம். என்றபோதிலும் இவ்விஷயத்தை மேலும் ஆழ்ந்து பார்க்கும்போது யோவான் 6:53 ஒரு விரிவான பொருத்தத்தைச் சிபார்சு செய்கிறது.

கடந்த வருடங்களில், இதற்கு ஒத்த பதங்களை உபயோகிக்கும் மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் இந்த வசனத்தை நோக்கினோம். உதாரணமாக, “உங்களுக்குள்ளே ஜீவன்” என்ற சொற்றொடரானது, யோவான் 5:26-ல் யெகோவாவுக்கும் இயேசுவுக்குமே தனிப்பட்ட விதமாக உபயோகப்படுத்துகிற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஒப்பாக இருக்கிறது. என்றபோதிலும் ஆகஸ்ட் 1, காவற்கோபுரம் பக்கங்கள் 17, 18-ல் விவரித்துள்ளபடி, யோவான் 5:26-ல் உபயோகிக்கப்பட்ட சந்தர்ப்பம் அந்த வசனத்தில் “தம்மில்தாமே ஜீவன்” என்ற வார்த்தைகளைப் புரிந்துகொள்ள ஆதாரத்தை அளிக்கிறது. ஆனால் யோவான் 6:53 ஒரு வருடம் கழித்து சொல்லப்பட்டதாய் வித்தியாசமான சந்தர்ப்பத்தின்போது உபயோகிக்கப்பட்டது.

யோவான் 6:53-ஐப் பற்றி நம் முந்திய கருத்திற்கு மற்றொரு காரணம், இயேசு தம்முடைய மாம்சத்தைப் புசிப்பதைப் பற்றியும் தம்முடைய இரத்தத்தைப் பானம் பண்ணுவதைப் பற்றியும் குறிப்பிட்டதே. இது கர்த்தருடைய இராப் போஜனத்தை அனுசரிக்க துவங்கினபோது கிறிஸ்து சொன்னதற்கு ஒப்பாக உள்ளது. அந்த ஏற்பாட்டைச் செய்தபோது தம்முடைய மாம்சத்தைப் பற்றியும் இரத்தத்தைப் பற்றியும் சொன்னார். இவற்றின் சின்னங்களைப் (புளிப்பில்லா அப்பமும் திராட்ச ரசமும்) புதிய உடன்படிக்கையிலும் ராஜ்யத்துக்கான உடன்படிக்கையிலும் எடுத்துக்கொள்ளப்படுகிற அவருடைய சீஷர்கள் புசிக்க வேண்டும் என்று அவர்களிடம் கொடுத்தார். (லூக்கா 22:14-22, 28-30) என்றபோதிலும் யோவான் 6:53-ன் சந்தர்ப்பம் மீண்டும் மதித்துணரப்பட வேண்டியதாய் இருக்கிறது.

யோவான் 6:53-ல் பதிவு செய்யப்பட்டுள்ளதை இயேசு சொன்னபோது கர்த்தருடைய இராப்போஜனத்தின் ஏற்பாடு இன்னும் ஒரு வருடம் பின்னால் நடக்க வேண்டி இருந்தது. இயேசு சொன்னதைக் கேட்ட ஒருவருக்காவது கிறிஸ்துவின் மாம்சம் இரத்தம் இவைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் சொல்லர்த்தமான சின்னங்களை ஆண்டுதோறும் உட்கொள்ளுவதைப் பற்றிய எண்ணமே இல்லை. அதற்குப் பதிலாக, யோவான் 6-ம் அதிகாரத்தில் இயேசுவின் பேச்சுப்பொருள் அல்லது விவாதம் தம்முடைய மாம்சம் (இரத்தமுங்கூட சேர்த்து பேசப்பட்டது.) சொல்லர்த்தமான மன்னாவைப் பார்க்கிலும், பெரிதாக இருந்தது. ஏனென்றால் அவருடைய மாம்சம் உலகத்தின் ஜீவனுக்காகக் கொடுக்கப்பட்டது, நித்திய ஜீவனைக் கூடிய காரியமாக்கியது.—யோவான் 6:48-51.

அதைத் தொடர்ந்து மேலுமான ஆராய்ச்சி யோவான் 5:26-ல் சொல்லப்பட்ட இயேசுவின் வார்த்தைகளுக்கும் யோவான் 6-ம் அதிகாரத்தில் அவருடைய குறிப்புகளுக்கும் இடையே ஒரு வருட கால இடைவெளி இருந்தது என்று அண்மையில் தெரியவந்தது; அதைத் தொடர்ந்து கர்த்தருடைய இராபோஜனத்தை ஏற்படுத்த இன்னும் ஓர் ஆண்டு இருந்தது. யோவான் 6:53-ஐ சூழ்ந்த சந்தர்ப்பத்திற்கு இன்னும் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஆகஸ்ட் 1, 1986 காவற்கோபுரம் பக்கங்கள் 21 முதல் 26-லுள்ள கட்டுரை யோவான் 6:53-ன் பேரில் ஒரு விரிவான பொருத்தத்தை, அதாவது பரலோக வாழ்க்கைக்காகப் புதிய உடன்படிக்கையில் இருப்பவர்களையும் பரதீஸான பூமியில் முடிவில்லா வாழ்க்கையை அனுபவிக்கும் எதிர்ப்பார்ப்பை உடையவர்களையும் உட்படுத்துவதாய் இருக்கிறது.

◼ சுவிசேஷ விவரப்பதிவுகளும் மேற்கோள் நூல்களும், இயேசு எப்பொழுது பெத்தானியாவில் குஷ்டரோகியாகிய சீமோன் வீட்டில் சாப்பிட்டு வாசனை நிறைந்த தைலத்தால் பூசப்பட்டார் என்கிற விஷயத்தில் வித்தியாசப்படுவதாகத் தோன்றுகிறது. அது எப்பொழுது நடந்தது?

இந்தச் சம்பவங்கள் பொ.ச.33-ல் நைசான் 9-ம் தேதி நடந்ததாகத் தோன்றுகிறது. ஆனால் இந்த முடிவுக்கான காரணங்களைப் பார்க்கும்போது, கடவுளுடைய வார்த்தையைத் தொடர்ந்து படிப்பது ஏன் உங்கள் அறிவையும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் தன்மையையும் விருத்தி செய்யும் என்பதை நீங்கள் காண்பீர்கள்.

இந்த விருந்தைப் பற்றிய விவரங்கள் நான்கில் மூன்று சுவிசேஷங்களிலும் அளிக்கப்பட்டிருக்கின்றன. (மத்தேயு 26:6-13; மாற்கு 14:3-9; யோவான் 12:2-8) மத்தேயுவும் மாற்குவும் இந்த விருந்தை, எருசலேமுக்குள் இயேசுவின் வெற்றிச் சவாரிக்குப் பின்னும், கனியற்ற அத்திமரத்தைச் சபித்ததற்குப் பின்னும், பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவைப் பற்றிய அப்போஸ்தலரின் கேள்விக்கு விடை கொடுத்த பின்னும் குறிப்பிடுகிறார்கள். மத்தேயுவும் மாற்குவும் விருந்தின் விவரத்தைப் பற்றி சொன்ன பின்பு யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதத் தலைவர்களோடு பேசுவதைப் பற்றி குறிப்பிடுகின்றனர். இந்த இரண்டு விவரங்களிலும் இந்த விருந்தின் சமயம், நைசான் 14-ம் தேதியன்று இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது நைசான் 12-ஆக இருக்க வேண்டும் என்று காண்பிக்கிறது. ஆகவே இயேசுவின் வாழ்க்கைச் சம்பவங்களைக் குறிப்பிடும் நம்முடைய முந்திய பிரசுரங்கள் உட்பட, பல அட்டவணைகளில் இந்த விருந்து நைசான் 12 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

யோவான் 12-ம் அதிகாரத்தில் சீமோன் வீட்டிலிருந்து வித்தியாசமான ஒரு சூழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. யோவான் 12:1, எருசலேமுக்கு அருகிலுள்ள பெத்தானியாவுக்கு “பஸ்கா பண்டிகை வர ஆறு நாளைக்கு முன்னே” வந்தார் என்று சொல்லும்போது அது நைசான் 8-ம் தேதியைக் குறிக்கிறது. பின்பு 2-8 வசனங்கள் பெத்தானியாவில் நடைபெற்ற ஒரு சாயங்கால போஜனத்தைப் பற்றி விவரித்து, 9-11 வசனங்களில் இயேசு அருகில் வந்துள்ளார் என்று கேள்விப்பட்ட யூதர்கள் அவரைப் பார்க்க வந்தார்கள் என்று சொல்லுகிறது. 12-15 வசனங்கள் “மறுநாளிலே” கிறிஸ்து எருசலேமுக்குள் வெற்றி பவனி வந்தார் என்று காட்டுகிறது. (அப்போஸ்தலர் 20:7-11-ஐ ஒப்பிடுங்கள்) ஆகவே யோவான் 12:1-15. சீமோன் வீட்டில் கொடுக்கப்பட்ட சாப்பாடு நைசான் 9-ம் தேதி சாயங்கால வேளை என்று காண்பிக்கிறது. யூத நாள் காட்டியின்படி புதிய ஒரு நாள் ஆரம்பமாவதைக் குறிப்பிடுகிறது. அதைத்தொடர்ந்து நைசான் 9-ம் தேதியின் பகல்பொழுதில் இயேசு எருசலேமுக்குள் வந்தார் என்று காட்டுகிறது.

இந்த இரண்டு தேதிகளில் பின் குறிப்பிடப்பட்ட தேதிக்குப் போதிய காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஏன்? சரி, நாம் விவரப்பதிவுகளையும் அதைச் சூழ்ந்த சந்தர்ப்பசூழ்நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்போமாக. மத்தேயுவும் மாற்குவும் சீமோன் வீட்டு விருந்துக்கு ஒரு தேதியையும் குறிப்பிடவில்லை. ஆகிலும், மரியாள் விலையுயர்ந்த தைலத்தை உபயோகித்ததைப்பற்றி முறுமுறுத்தல் இருந்ததை அவர்கள் காட்டுகிறார்கள். அந்த முறுமுறுத்தல் பேராசையுள்ள யூதாஸால் வழிநடத்தப்பட்டது என்று யோவான் காண்பிக்கிறான். (மத்தேயு 26:8, 9; மாற்கு 14:4, 5; யோவான் 12:4-6) ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, விருந்தைத் தொடர்ந்து, யூதாஸ் ஆசாரியர்களை அணுகி கிறிஸ்துவைக் காட்டிக்கொடுக்க தனக்கு எவ்வளவு பணம் கொடுப்பார்கள் என்பதைப் பார்க்கச் சென்ற காரியத்தை மத்தேயுவும் மாற்குவும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆகவே மத்தேயுவும் மாற்குவும் தாங்கள் எழுதும் பெருளை அழுத்திட வேண்டும் என்ற காரணங்களுக்காக விருந்தைப் குறிப்பிட்டு, யூதாஸுடைய பேராசைக்கான ஓர் அத்தாட்சியையும் இணைத்துக் குறிப்பிடுகின்றனர்.

என்றபோதிலும் யோவான் விருந்துக்கு ஒரு குறிப்பிட்ட நாளைக் குறிப்பிடுவது தானே, அவன் அதைக் கால வரிசைப்படி குறிப்பிடுகிறான் என்பதைக் காட்டுகிறது. இது, பொ.ச.33-ம் வருடம் நைசான் 8-ம் தேதி இயேசு பெத்தானியாவுக்கு வந்த பின்பு சீமோன் வீட்டில் அந்த மாலை விருந்து இருந்தது என்ற முடிவை ஆதரிக்கிறது. மேலும், ‘இயேசு பெத்தானியாவில் இருக்கிறார் என்று அறிந்துகொண்ட’ யூதர்கள் பெத்தானியாவில் வசித்துக் கொண்டிருந்த லாசருவைப் பார்க்க வந்தார்கள் என்றும் அவனோடு விருந்தில் அவனுடைய சகோதரிகளும் இருந்தார்கள் என்றும் யோவான் சொல்லும் விவரங்களையும் மனதுக்குக் கொண்டு வாருங்கள். இயேசு பெத்தானியாவில் வந்திருக்கிறார் என்று அப்பொழுது “அறிந்த” யூதர்களின் வருகை அவர் எருசலேமுக்குள் செல்வதற்கு முன் நடந்திருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் “மறுநாளிலே,” நைசான் 9-ம் தேதியின் பகல்பொழுதில் கிறிஸ்து பட்டணத்துக்குள் பவனிவந்தபோது அவர்கள் அவரை உற்சாகத்தோடு வரவேற்கக்கூடியவர்களாக இருந்தனர்.

மேலும் அதிக கவனமான ஆராய்ச்சியின் விளைவான இந்த முடிவு, கிரேக்க வேதாகமத்தின் தி கிங்டம் இன்டர்லீனியர் மொழிபெயர்ப்பின் 1985-ம் ஆண்டு பதிப்பில், “இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள்,” என்ற அட்டவணையில் காட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு சாதாரண சிறிய குறிப்பாக இருந்தபோதிலும், கடவுளுடைய வார்த்தையின் நுண்ணிய விவரங்களை அறிவதிலும் புரிந்துகொள்வதிலும் நாம் அனைவரும் எப்படித் தொடர்ந்து வளரலாம் என்று காட்டுகிறது. (w86 2/15)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்