வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
தானியேல் 2:31-45-ல் விவரிக்கப்பட்டிருக்கும் அந்த “பெரிய சிலையின்” “பாதங்கள் மற்றும் கால்விரல்கள்” ஆகியவற்றில் எது அடையாளப்படுத்துகிறது?
இந்த தீர்க்கதரிசனமானது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறது உன்ன பேரரசராகிய யெகோவா தேவனால் ஏவப்பட்டதாயிருக்கிறது. மேலும் இது, “கடைசி நாட்களில்” அதாவது உலக ஆதிக்கத்தின் பிரச்னையானது ஒரே முறையாக முற்றிலுமாக தீர்க்கப்படுகையில் அதன் முடிவை எட்டுகிறது. (தானியேல் 2:28) பொ.ச.மு. 607-ன் புறஜாதியாருடைய காலம் ஆரம்ப முதற்கொண்டு நம்முடைய நாள் வரையாக, பாபிலோன் சாம் ராஜ்யம் துவங்கி தொடர்ச்சியான உலக வல்லரசுகள்—மேதியா-பெர்சியா, கிரீஸ், ரோம், மற்றும் ஆங்கில அமெரிக்க சாம்ராஜ்யம்-இருந்திருக்கின்றன இவை அந்த சிலையின் உலோகபாகங்களை பிரதிநித்துவம் செய்கின்றன. லூக்கா 21:24, கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு.
என்றபோதிலும் 1914-ன் “புறஜாதியாருடைய காலங்களின் முடிவுமுதற்கொண்டு கதம்ப கூளமான பலவகை மனித ஆட்சிகள் இங்கே பூமியில் தோன்றியிருக்கின்றன. (மத்தேயு 24:3-12) சாதாரண மனிதன் (பூமியின் மண்ணினாலே உருவாக்கப்பட்ட “மனித சந்ததி”) அரசாங்க விவகாரங்களிலே மிகுதியான செல்வாக்கை செலுத்துகிறான். இரும்பைப்போன்ற கொடுங்கோன்மையான அரசாங்கங்களோடுகூட சமதரும் கொள்கை சார்ந்த ஆட்சிமுறைகளும் மற்றும் மக்களாட்சி சார்ந்த ஆட்சிகளும் முன்னிலைக்கு வந்திருக்கின்றன. அவைகள் “களிமண்ணோடே கலந்திருக்கும் இரும்பை”ப் போன்றிருக்கின்றனர். அதுவே அந்த சிலையின் பாகத்தையும் கால்விரல்களையும் உண்டுபண்ணுகிறது.
பத்து “கால்விரல்களை”க் குறித்து பல்வேறு கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனால் பத்து என்ற எண்ணானது பைபிளின் பூமிக்குரிய காரியங்களின் முழுமையை அடையாளங்காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டிருப்பதால் அந்த பத்து “கால்விரல்கள்” நியாயமாகவே, முழு பூகோள ஒழுங்குமுறையின் ஆட்சிகளை பிரதிநித்துவம் செய்வதாக தோன்றுகிறது. அந்த சிலையின் பாதங்கள் மற்றும் கால் விரல்களுக்கு எதிராகத் தானே அந்த “கடவுளுடைய ராஜ்யம் வருகிறது.” மனித ஆட்சியின் இறுதி தோற்றங்களை தூள்தூளாக நொறுக்கிப் போடுகிறது. அந்த சமாதானமும் செழுமையுமான கிறிஸ்துவின் ராஜ்ய ஆட்சி இந்த பூமி முழுவதையும் நிரப்பும் என்பதில். ஆ நம் எவ்வளவாய் மகிழலாம்!a—மத்தேயு 6:9, 10; ஏசாயா 11:1,9-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்.
தானியேல் 4-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் நேபுகாத்நேச்சாரின் கூடுதலான சொப்பனம் புறஜாதியாரின் காலங்களை பின்தொடர்ந்து சம்பவங்களையும் சுட்டிக்காட்டுகிறது. “உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்கு சித்தமாயிருக்கிறவனுக்கு,” அதாவது, ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்கிறார் என்பதை கடைசியில் ஜனங்கள் அறிய வேண்டும்.—தானியேலே 4: 25; 7:13,14 (W85 7/1)
[அடிக்குறிப்பு]
a காவற்கோபுர பைபிள் சங்கத்தினால் 1958-ல் பிரசுரிக்கப்பட்ட “உம்முடைய சித்தம் பூமியிலே செய்யப்படுவதாக” என்ற ஆங்கி புத்தகத்தி “பெரிய சிலை”யைப் பற்றிய விவரமான விளக்கத்திற்காக பக்கங்கள் 108 முதல் 127 வரை பார்க்கவும்.