பிசாசுக்கு இடங்கொடாமல் இருங்கள்!
“சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.”—எபேசியர் 4:26, 27.
1. பேதுரு பிசாசை எவ்வாறு விவரித்தான்? ஆனால் பாதுகாக்கப்படும் என்ன உறுதிமொழியை அப்போஸ்தலன் கொடுத்தான்?
ஒரு கொடிய மூர்க்க மிருகம் இரைதேடி அலைந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்களை விழுங்குவதற்கு தணியாத ஆசையுள்ளதாக அது இருக்கிறது. பேதுரு எச்சரிக்கிறான்: “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிக் சுற்றிக் திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள் . . . ஆனால் நீங்கள் கொஞ்சக் காலம் பாடநுபவித்தப் பிறகு சகல கிருபையும் பொருந்திய தேவன் . . . உங்களை ஸ்திரப்படுத்தி பலப்படுத்துவார்.“—1 பேதுரு 5:8-10.
2. (எ) என்ன சூழ்நிலைமைகள், சாத்தானின் தாக்குதலுக்கு நம்மை அதிக எளிதில் பணியச் செய்துவிடுகின்றன? (பி) விசுவாச துரோகத்துக்குப் பலியாகிறவர் ஏன் தன்னையே அன்றி, வேறொருவரையும் குற்றஞ்சாட்ட முடியாது? (சி) இயேசுவைக் காட்டிக் கொடுக்க, யூதாஸ் காரியோத்தின் இருதயத்தை தூண்ட என்ன பலவீனம் பிசாசுக்கு வழியை திறந்து வைத்தது?
2 பிசாசும் அவனுடைய பேய்த்தன மற்றும் மானிட ஏஜென்டுகளும், படிப்படியாக எழும் எந்த ஒரு சந்தேகத்தையும், ஆளுமையில் எந்த ஒரு வினைமையான குறைபாட்டையும், விசுவாசத்தில் நம்மை பலமாக வைத்துக்கொள்ள நம்முடைய பங்கில் எந்த ஒரு கவனக்குறைவையும் சுயநலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்பதைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம். ஆனால் நாம் பிசாசுக்கு எதிர்த்து நிற்போமேயானால், அவன் நம்மை விழுங்கமாட்டான் என்பதாக யெகோவாவின் வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது. (யாக்கோபு 4:7) உதாரணமாக, அது தவிர்க்கவேப்பட முடியாததன் காரணமாக எவரும் விசுவாச துரோகத்துக்கு பலியாகிவிடுவது கிடையாது. விசுவாசத்தை விட்டு விலக எவருமே, முன்னரே முடிவு செய்யப்பட்டவராக இல்லை. இருதயத்தின் நோக்கங்கள் உட்பட்டிருக்கின்றன. “அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை” என்பதாக சிலரைக் குறித்து இயேசு சொன்னது உண்மைதான். (1 யோவான் 2:19) ஆனால் இது சம்பவித்ததற்கு காரணம், அவர்கள் விசுவாச துரோகத்தை தெரிந்து கொண்டார்கள் அல்லது ஆரம்பத்தில் அவர்கள் தவறான உள்ளெண்ணத்தோடு யெகோவாவின் அமைப்புக்குள் வந்தவர்களாக இருந்தார்கள். இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் ஒருவனாக அழைக்கப்பட்டபோது, யூதாஸ் காரியோத்து நல்ல இருதயமுள்ளவனாக இருந்தான். ஆனால் பிசாசு, யூதாவின் பலவீனமாக இருந்த பேராசையின் மீது கிரியை செய்தான். இயேசு காட்டிக் கொடுப்பப்படுவதற்கு முந்தின இரவும்கூட, “சீமோனின் குமாரனாகிய யூதாஸ் காரியோத்து அவரை காட்டிக் கொடுக்கும்படி பிசாசானவன் [ஏற்கெனவே] அவன் இருதயத்தை தூண்டினான்.”—யோவான் 13:2.
3. விசுவாச துரோகத்துக்கு ஒரு நபர் பலியாளாவதற்கு என்ன காரணக்கூறுகள் செல்வாக்கு செலுத்தக்கூடும்?
3 ஒரு நபர், தன்னுடைய சொந்த தன்னல நியாயங்களும், தன்னுடைய சொந்த பேராசைகளும் விருப்பங்களும், தான் தெரிந்து கொள்ளும் நண்பர்களும், சுற்றுப்புறச் சூழலும் தன்னுடைய சிந்தனையை உருப்படுத்தி தன்னுடைய செய்களின் போக்கை தீர்மானிக்க அனுமதிப்பதனாலேயே அவர் தவறான வழிக்குப் போய்விடுகிறார். ‘ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும் வீழ்ந்துபோன’ சிலரைப் பற்றி பவுல் பேசினான். (எபிரெயர் 6:4-6) நாம் தொடர்ந்து விழிப்புள்ளவர்களாயிராவிட்டால், பிசாசு அவனுடைய தந்திரமான பிரசாரத்தின் மூலம், நம்முடைய இருதயங்கள், விசுவாச துரோக எண்ணங்களை ஏற்றுக்கொள்ளும்படியாகச் செய்துவிடக்கூடும். ஆனால் உண்மையில் பிசாசு எவ்விதமாக ஒரு நபரை பாதிக்கப்பட சாத்தியமானவராக, விசுவாச துரரோகத்துக்கு பலியாளாக அவரை எளிதில் மோசஞ்செய்துவிடுகிறான்?
4. கசப்பு கடுங்கோபம், குறைக் காணுதல் ஆகியவற்றிக்கு இடமளித்தால் என்ன சம்பவிக்கக்கூடும்?
4 கசப்பும், பகையும், குறை காண்பதுமே சாத்தான் மனிதர்களில் சாதாரணமாக கவனம் செலுத்தும் மனநிலைகளாக இருக்கின்றன. இத்தகைய உள்ளுணர்ச்சிகள் அவ்வளவு பலமாக வளர்ந்துவிடுவதன் காரணமாக அன்புகும் போற்றுதலுக்கும் இடமில்லாமல் போய்விடக்கூடும். ஒருவேளை தீர்க்கப்படாத ஏதாவது ஒரு பிரச்னையினால் மனம் புண்ணாக, ஒரு நபரை அது கோபங்கொள்ளவும் இன்றியமையாத கிறிஸ்தவ கூட்டங்களுக்கு போகாதிருப்பது சரி எனவும் உணரச் செய்யக்கூடும். நீண்ட காலமாக அவர் எரிச்சலுடன் இருப்பதன் மூலம் அவர் “பிசாசுக்கு இடங்கொடு”க்கிறார். (எபேசியர் 4:27) அமைதியை அழந்துவிட்ட நபர் தன்னுடைய சகோதரரை “ஏழெழுபது தரம்” மன்னிப்பதற்கு பதிலாக அவருடைய மனித பலவீனங்களை மாத்திரமே பார்க்கிறார். மேலும் கடுஞ் சோதனையான சூழ்நிலைமைகளை, அவருடைய கிறிஸ்தவ குணாதிசயங்களை பூரணப்படுத்த சந்தர்ப்பங்களாக பயன்படுத்திக் கொள்ளவும் தவறுகிறார். (மத்தேயு 18:22) இந்த மனநிலையில் இருக்கும்போது, எவரோ ஒருவர் வந்து, யெகோவாவின் அமைப்பு ஒடுக்குவதாக அல்லது கட்டுப்படுத்துவதாக இருப்பதாக அல்லது ஒருசில இன்றியமையாத போதகங்களில் தவறாகவும்கூட இருப்பதாக தெரிவிப்பாரேயானால், புண்படுத்தப்பட்ட கிறிஸ்தவனின் இருதயம் இதுபோன்ற பொய்யான கூற்றுகளை வரவேற்கக்கூடிய நிலையில் இருக்கலாம். அப்படியானால் கசப்பும், கடுங்கோபமும் வளருவதை தவிர்ப்பது எவ்வளவு அவசியமாக இருக்கிறது! உங்கள் கோபத்தின் மீது சூரியன் அஸ்தமிக்க அனுமதியாதேயுங்கள். மாறாக, உங்களுடைய வாழ்க்கையில் அன்பு முழுமையாக வெளிப்படட்டும்.
5. (எ) பெருமை அல்லது திருத்தப்படுகையில் சினங்கொள்வது எவ்விதமாக ஒரு படுகுழியாக நிரூபிக்கக்கூடும்? (பி) விசுவாசத்தில் உறுதியாக நிற்பதற்கு மனத்தாழ்மை என்ன பங்கை வகிக்கிறது?
5 இருதயத்தின் மற்றும் மனதின் வேறு என்ன நிலைமைகளுக்கு பிசாசு கவனம் செலுத்துகிறான்? ஆம், பெருமை, சுய-முக்கிய உணர்வு, ஒருவர் தனக்கு கிடைக்க வேண்டும் என்பதாக நினைக்கும் முதன்மை ஸ்தானத்தைப் பெற்றுக்கொள்ளாதிருத்தல் ஆகியவை இருக்கின்றன. இவை அனைத்தும் பிசாசு உபயோகிக்கும் படுகுழிகளாக இருக்கின்றன. (ரோமர் 12:3) ஒரு தவறான பழக்கத்துக்காக அல்லது மனநிலைக்காக உங்களுக்கு புத்திமதி கொடுக்கப்படும்போது அல்லது நீங்கள் கண்டிக்கபட்டாலுங்கூட, நீங்கள் சரியான அமைப்பில்தான் இருக்கிறீர்களா என்பதாக உங்களையே கேட்டுக் கொள்ளும்படியாக தூண்ட, இதுவும்கூட பிசாசுக்கு மிகச் சிறந்த ஒரு சமயமாக இருக்கக்கூடும். ஆகவே மனத்தாழ்மையுடன் இருங்கள். “சிறியவனாக” உங்களை நடத்திக் கொள்வதில் திருப்தியாக இருங்கள். பெருமையோ அல்லது சுய முக்கிய உணர்வோ விசுவாசத்தில் உறுதியாக நிற்பதிலிருந்து உங்களை ஒருபோதும் அசைத்துவிட அனுமதியாதீர்கள்.—லூக்கா 9:48; 1 பேதுரு 5:9.
6, 7. (எ) பிசாசு தாமதமின்றி தன்னலத்துக்காக பயன்படுத்திக்கொள்ளும் பொறுமையின்மையின் சில வெளிக்காட்டல்கள் யாவை? (பி) ஒருவர் ஞானத்தில் குறைவுள்ளவராய் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
6 பிசாசு கவனம் செலுத்தும் மற்றொரு காரியம் பொறுமையின்மையாக இருக்கிறது. சில சமயங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதாக நாம் நினைக்கலாம்; நாம் வேகமான நடவடிக்கையை, உடனடியான பதில்களை விரும்புகிறோம். ‘இந்த பிரச்னை இப்பொழுதே தீர்க்கப்பட வேண்டும் அல்லது நான் விலகி விடுவேன். இந்த கேள்விக்கு எனக்கு இப்பொழுதே பதில் தெரிந்ததாக வேண்டும் அல்லது இதற்குமேல் நான் செல்லப் போவதில்லை. அர்மெகதோனும் புதிய ஒழுங்கும் இப்பொழுது பல வருடங்களாக “வெகு அருகாமையில்” இருந்து கொண்டிருக்கிறது. நான் காத்திருந்து சலித்துப் போனேன்!” இதுபோன்ற பொறுமையில்லாத நிலங்களில் சந்தேகம் மற்றும் கலகத்தின் விதைகளை விதைக்க பிசாசு தயாராக இருக்கிறான் என்பதைக் குறித்து நிச்சயமாயிருங்கள்.—எபிரெயர் 10:36, 39.
7 யாக்கோபு சொன்னான்: “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கெள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன். சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் யெகோவாவிடத்தில் எதையாகிலும் பெரலாமென்று நினையாதிருப்பானாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.” (யாக்கோபு 1:4-8) நீங்கள் அதிகதிகமாக பொறுமையில்லாதவர்களாயும் கடவுளுடைய வாக்குத்தத்தங்களைக் குறித்து சந்தேகிக்கிறவர்களாயும் மாறிவிட்டிருக்கிறபடியால், பிசாசு உங்களை விசுவாச துரோகத்துக்கு ஒரு வேட்பாளராக ஆக்கிவிட அனுமதியாதேயுங்கள்! பொறுமையாயிருங்கள், நன்றியுள்ளவர்களாயிருங்கள். யெகோவாவுக்காக காத்திருங்கள்.—சங்கீதம் 42:5.
8. அதிகாரத்துக்கு எதிராக கலகஞ் செய்யும் மனசாய்வு வேதப்பூர்வமான கட்டுப்பாடுகளை தூக்கி எறிந்துவிடும்படியாக தூண்ட பிசாசுக்கு எவ்விதமாக வழியை திறந்து வைக்கிறது?
8 வேறு திசையில் நம்மை திருப்ப முயற்சிப்பதற்கு வேறு எதை பிசாசு பயன்படுத்துகிறான்? யெகோவாவின் ஊழியர்களை, தலைமைத்தாங்கி வழிநடத்தும் ஆட்களில் குறைகாணும்படியாக கலகத்தை தூண்டிவிட அவன் எப்பொழுதும் முயற்சித்திருக்கிறான் அல்லவா? ‘மூப்பர்களுக்கு அதை புரிந்து கொள்ளவே முடிவதில்லை., அவர்கள் அதிகமாக கண்டிக்கிறவர்களாயும் அதிகமாக வற்புறுத்துகிறவர்களாயும் இருக்கிறார்கள் என்பதாக சிலர் சொல்லாம். ஒரு நபர் இன்னும் ஒரு படி மேலே சென்று யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அல்லது பொறுப்புள்ள மற்ற சகோதரர்கள், மனசாட்சியின் சுயாதீனத்தோடும் வேத வசனங்களுக்கு அர்த்தஞ் சொல்லும் தனி நபரின் “உரிமை”யோடும் குறுக்கிடுவதாகச் சொல்லாம். ஆனால் யோசேப்பின் மனத்தாழ்மையான வார்த்தைகளை நினைவில் வைத்திருங்கள்; “அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா?” (ஆதியாகமம் 40:8) மேலுமாக இந்த கடைசி நாட்களில், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யான அபிஷேகம் பண்ணப்பட்டவர்களின் அமைப்பினிடமாக, ஏற்ற வேளையில், ஆவிக்குரிய உணவை அளிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்பதாக இயேசு முன்னறிவிக்கவில்லையா? (மத்தேயு 24:45-47) தங்களுடைய சொந்த முரணான கருத்துக்களை எடுத்துச் சொல்ல முயற்சிப்பவர்களைக் குறித்து எச்சரிப்பாயிருங்கள். யெகோவாவின் சாட்சிகள் அடிமைகளாக இருப்பதாக குறிப்பிட்டு எல்லா கட்டுப்பாடுகளையும் தூக்கி எறிந்துவிட்டு அல்லது சுயாதீனத்தை வாக்களிக்கும் ஆட்களைக் குறித்தும்கூட எச்சரிப்பாயிருங்கள்! பேதுரு பொய் போதகர்களைக் குறித்து இவ்விதமாகச் சொன்னான்: “தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும் அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம் பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.”—2 பேதுரு 2:1, 19.
9. தலைமைத்தாங்கி வழிநடத்துகிறவர்களில், குறை காண்பவர்களின் மனநிலை அநேகமாக என்னவாக இருக்கிறது?
9 சங்கத்தையோ தலைமைத்தாங்கி வழிநடத்துபவர்களையோ குறித்து குறை காண்பவர்களின் உள்நோக்கம் என்னவாக இருக்கிறது? அநேகமாக சில வேத வசனங்கள் பொருத்தப்படும்போது அவர்களைத் தனிப்பட்ட விதமாக அது பாதிப்பதே இதற்கு காரணமாக இருக்கிறதல்லவா? சரியான கோட்பாட்டுக்கும் அறிவுரைகளுக்கும் ஏற்ப தங்களை அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, அமைப்பு மாற வேண்டும் என்று அவர்கள் விரும்பிகிறார்கள். ஒரு சில உதாரணங்களைக் கொண்டு இதை விளக்குவோமாக:
10. மட்டுக்கு மீறிய உடை அல்லது சிகை அலங்காரத்தில் பிடிவாதமாக இருப்பது, ஒருவர் பிசாசுக்கு இடங்கொடுப்பதில் எவ்விதமாக விளைவடையக்கூடும்?
10 ஒரு சகோதரர் ஏதோ மட்டுக்கு மீறிய உடை அல்லது சிகை அலங்காரத்தில் பிடிவாதமாக இருக்கிறார். அவர் நல்ல முன்மாதிரியாக இல்லை என்பதாக மூப்பர்கள் உணர்ந்து, பேச்சுகளை கொடுக்க மேடையில் தோன்றுவது போன்ற சில சிலாக்கியங்களை அவருக்கு கொடுக்காமல் இருக்கிறார்கள். அவர் ஆத்திரமடைந்து, மற்றவர்கள் தன்னுடைய கிறிஸ்தவ சுயாதீனத்தை பறித்துக்கொள்ள முயலுவதாக வாதாடுகிறார். ஆனால் இதுபோன்ற விவாதத்துக்குப் பின்னால் இருப்பது என்ன? அது பொதுவாக பெருமை, சுதந்தர மனப்பான்மை அல்லது சந்தேகமின்றி தனக்கு இஷ்டமான வழியில் செல்ல வேண்டும் என்ற ஒரு சிறு பிள்ளைத்தனமான விருப்பமாகவே அது இருக்கிறதல்லவா? வெளித் தோற்றத்தில் இது சிறிய காரியமாக இருந்தாலும், அவ்விதமாக விவாதிக்கும் ஒரு நபர், “பிசாசுக்கு இடங்கொடுக்கிறவராக” இருக்கக்கூடும். ஆனால் அன்பும் மனத்தாழ்மையும், அடக்கமாக ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் உடுத்தவும் தலை சீவவும் நம்மைச் செய்யும். நாம் அனைத்துக் காரியங்களையும் நற்செய்தியின் வளர்ச்சிக்காக செய்கிறவர்களாயும், நம்மை நாமே பிரியப்படுத்திக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும்.—ரோமர் 15:1, 2; 1 கொரிந்தியர் 10:23, 24.
11. இரத்தத்திற்கு விலகி இருக்கும்படியான யெகோவாவின் கட்டளையின் சம்பந்தமாக சந்தேகம் எழும்புவதற்கு பின்னால் என்ன இருக்கக்கூடும்?
11 மற்றொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். இரத்தத்தை புசிப்பதற்கு எதிரான பைபிளின் தடை உண்மையில் இரத்தமேற்றிக் கொள்வதற்கும் பொருந்துகிறதா என்பதாக எவராவது சந்தேகமெழுப்புவதை எப்போதாவது நீங்கள் கேட்கக்கூடும். ஆனால் இந்த விவாதத்துக்குப் பின்னாலிருப்பது என்ன? அது ஒருவருடைய தற்போதைய உயிரை அல்லது நேசமானவரின் உயிரை இழந்துவிடக்கூடிய சாத்தியத்தைப் பற்றிய பயமா? உயிர்த்தெழுதலில் நம்பிக்கை மறைந்து கொண்டிருக்கிறதா? உண்மைக் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய கட்டளைகளின் பேரில் ஒத்திணங்கிப் போவதோ அல்லது அதன் வலிமையை பலவீனப்படுத்த வழிமுறைகளைத் தேடுவதோ இல்லை. சரீரத்தைக் காக்க, இரத்தத்திற்கு விலகியிருப்பது, விபச்சாரம் விக்கிரக ஆராதனை ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பதை போன்றே அவ்வளவு அவசியமாயிருக்கிறது. இவை அனைத்துமே பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலர்கள் மற்றும் எருசலேமின் மூப்பர்களின் ஆணையில் விலக்கப்பட்டவையாக இருக்கின்றன.
12 யெகோவாவின் அமைப்பு, சபை நீக்கம் செய்யப்பட்டவர்களோடு சமூக தொடர்புகளை துண்டித்துக் கொள்வதன் சம்பந்தமாக மட்டுமீறிய வகையில் கண்டிப்பாக இருப்பதாக குறைகாணும் மனநிலையிலுள்ள சிலர் சொல்கிறார்கள். (2 யோவான் 10, 11) ஆனால் குறைகாணும் இவர்கள் ஏன் அவ்விதமாக உணருகிறார்கள்? யெகோவாவுக்கும், அவருடைய தராதரங்களுக்கும் கட்டளைகளுக்கும் பற்றுமாறாதிருப்பதற்கும் மேலாக அவர்கள் வைக்கும் நெருங்கிய குடும்ப பந்தமோ அல்லது நண்பருக்கு தவறான வகையில் காண்பிக்கப்படும் பற்றுதியோ அவர்களுக்கு இருக்கிறதா? உறவினர் போன்ற நெருக்கமான ஒருவராக இருந்தாலும்கூட, சபை நீக்கம் செய்யப்பட்ட நபரோடு சமூக தோழமையை தொடர்ந்து கொண்டிருக்கும்போது, தவறு செய்தவரை அவர் செய்த காரியம் அத்தனை வினைமையானதல்ல என்ற முடிவுக்கு வரச் செய்கிறது. இது மேலுமாக அவருக்கு தீங்கிழைக்கிறது. என்றபோதிலும் இது போன்ற கூட்டுறவை துண்டித்துக் கொள்ளும்போது, இழந்து போனதற்கு ஒரு ஏக்கமும், அதை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான ஆசையும், அவனில் உருவாக்கக்கூடும். யெகோவாவின் வழியே எப்பொழுதும் மிகச் சிறந்ததாக இருக்கிறது. அது நம்முடைய சொந்த பாதுகாப்புக்காவே இருக்கிறது.—நீதிமொழிகள் 3:5.
13 இன்னும் மற்றொரு நபர் வீட்டுக்கு வீடு பகிரங்கமாக பிரசங்கம் செய்வதை வேத வசனங்கள் ஆதரிப்பதில்லை என்பதாக தவறாக சொல்லக்கூடும். ஆனால் ஏற்கெனவே இந்த முக்கியமான வேலையை அவர் விரும்பாததாலும் அதை தவிர்ப்பதற்கு ஒரு காரணத்தை தேடுவதாலும் அவ்விதமாக இருக்கிறதா? கடவுள் பேரிலும் அயலான் பேரிலுமுள்ள அன்பு ஜீவனைக் காக்கும் இந்த வேலையின் அவசரத்தன்மையைக் காண நம்மை தூண்ட வேண்டும். மறுபடியுமாக பொறுமை தேவையாக இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல், யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவிக்க” பகிரங்கமாக வீட்டுக்கு விடு பிரசங்கிக்கையில் தன்னுடைய சொந்த பொறுமையைக் குறித்து பேசினான். (அப்போஸ்தலர் 20:18-21) முறையிடுவதற்கு பதிலாக, நாம் அவனுடைய சிறந்த முன்மாதிரியை உண்மையாக பின்பற்ற வேண்டாமா? வீட்டுக்கு வீடு வேலையை யெகோவா ஆசீர்வதித்திருப்பதன் காரணமாக “ஒரே மந்தை”க்குள் கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானோரைப் பாருங்கள்! (யோவான் 10:16) நற்செய்தியைக் கொண்டு ஜனங்களை சென்றெட்டுவதற்காக வீட்டுக்கு விடு செல்வதன் மூலம் பயிற்றுவிப்பிலும் கட்டுப்பாட்டிலும் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக் கொள்வதிலும் நாம் பெற்றுக்கொள்ளும் சிறந்த நன்மைகளை மறந்துவிடாதீர்கள்.—அப்போஸ்தலர் 5:42; 1 தீமோத்தேயு 4:16 ஒப்பிடவும்.
14 கடைசியாக, கடந்த காலத்தில் பைபிள் கணக்குகளைப் பற்றி சங்கம் பிரசுரித்திருப்பவற்றை குறித்து சிந்திக்கலாம். சில எதிரிகள், யெகோவாவின் சாட்சிகள் கள்ளத் தீர்க்கதரிசிகள் என்று சொல்லுகிறார்கள். தேதிகள் குறிக்கப்பட்டு, எதுவும் சம்பவிக்கவில்லை என்பதாக இந்த எதிரிகள் சொல்லுகிறார்கள். மறுபடியுமாக நாங்கள் கேட்கிறோம், குறைகாணும் இவர்களின் உள்ளெண்ணம் என்ன? கடவுளுடைய ஜனங்கள் அவர்கள் விழித்திருக்கும்படியாக உற்சாகப்படுத்துகிறார்களா? அல்லது அவர்கள் தாமே செயலற்ற நித்திரைக்கு சென்றுவிட்டிருப்பது சரி என்பதாக காண்பிக்க முயற்சிக்கிறார்களா? (1 தெசலோனிக்கேயர் 5:4-9) அதிக முக்கியமாக இதுபோன்ற குறைகளை ஒருவர் சொல்லக் கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? ஒரு நபர் நாம் இந்த ஒழுங்கின் “கடைசி நாட்களில்” வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்பதாக சந்தேகமெழுப்பிக் கொண்டிருந்தால் அல்லது கடவுள் அவ்வளவு இரக்கமுள்ளவராக இருப்பதால், “மகா உபத்திரவத்தின்”போது அவர் நிச்சயமாகவே இத்தனை லட்சக்கணக்கானோரை அழிக்க மாட்டார் என்பது போன்ற கருத்துக்களை ஏற்றுக் கொள்வாரேயானால், அப்பொழுது இந்த நபர் இதுபோன்ற குறைகளை செவி கொடுத்து கேட்க தன்னுடைய இருதயத்தை ஏற்கெனவே தயார் செய்துவிட்டிருக்கிறார்.—2 தீமோத்தேயு 3:1; மத்தேயு 24:21.
15 ஆம், யெகோவாவின் ஜனங்கள் அவ்வப்போது, எதிர்பார்ப்புகளை மறு ஆய்வு செய்து மாற்றிக் கொள்ள வேண்டியவர்களாக இருந்திருக்கிறார்கள். நம்முடைய மிகுதியான ஆர்வத்தின் காரணமாக, யெகோவாவின் கால அட்டவணையின்படி அது வருவதற்கு முன்னதாகவே புதிய ஒழுங்கை நாம் எதிர்பார்த்து இருந்திருக்கிறோம். ஆனால் கடவுளுடைய வார்த்தையிலும் அதன் நிச்சயமான வாக்குத்தத்தங்களிலும் நமக்கிருக்கும் விசுவாசத்தை, அதன் செய்தியை, மற்றவர்களுக்கு அறிவிப்பதன் மூலம் நாம் காண்பிக்கிறோம். மேலுமாக ஒரளவு நம்முடைய புரிந்துகொள்ளுதலை மறு ஆய்வு செய்து மாற்றிக் கொள்வதற்கான தேவை நம்மை கள்ளத் தீர்க்கதரிசிகளாக மாற்றிவிடுவதில்லை, அல்லது நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், சீக்கிரத்தில் மகா உபத்திரவத்தை அனுபவிக்கப் போகிறோம், அது பூமிக்குரிய பரதீஸிற்கு வழியைத் திறந்து வைக்கப் போகிறது என்ற உண்மைகளை எல்லாம் மாற்றப் போவதும் இல்லை. ஓரளவு சரிப்படுத்தல்களைத் தேவைப்படுத்தும் எதிர்பார்ப்புகள் முழு சத்தியத்தையும் சந்தேகிக்கும்படியாகச் செய்கிறது என்று சொல்வது எத்தனை முட்டாள்தனமாக இருக்கிறது! “உண்மையும் விவேகமுமுள்ள” அடிமை தலைமைத் தாங்கி வழிநடத்த, யெகோவா தம்முடைய ஒரே அமைப்பையே பயன்படுத்தியிருக்கிறார், தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார் என்பதற்கு அத்தாட்சி தெளிவாக இருக்கிறது. ஆகவே பின்வருமாறு சொன்ன பேதுருவைப் போல நாம் உணருகிறோம்: “ஆண்டவரே யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.”—யோவான் 6:68.
16 யெகோவாவின் சாட்சிகள் மத்தியில், ஆவிக்குரிய பரதீஸில் மட்டுமே மெய்யான சீஷர்களின் அடையாளக் குறியாக இருக்கும் என்பதாக இயேசு குறிப்பிட்ட, அந்த தன்னையே தியாகம் செய்யும் அன்பை நாம் காணமுடியும். (யோவான் 13:34, 35) கள்ளத் தீர்க்கதரிசிகள் அவர்களுடைய கெட்ட கனிகளின் மூலமாக அவர்கள் உண்மையில் என்னவாக இருக்கிறார்ககள் என்று அம்பலமாகியிருக்கிறார்கள். ஆனால் நல்ல மரங்களை அவைகளின் நல்ல கனிகளாலே அடையாளங் கண்டுகொள்ள முடியும் என்பதாக இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 7:15-20) ஆவிக்குரிய பரதீஸில் என்ன சிறப்பான கனிகளை நாம் கொண்டிருக்கிறோம்! உண்மையில் ஒவ்வொரு தேசத்திலும் வியப்பூட்டும் வகையில் அதிகரிப்புகள் இருந்துவருகின்றன. உலகம் முழுவதிலும் கடவுளுடைய ராஜ்யத்தின் 30,00,000-ற்கும் மேற்பட்ட சந்தோஷமுள்ள பிரஜைகள், பூமியில் யெகோவாவுக்கு ஒரு ஜனமிருக்கிறது என்பதற்கு உயிருள்ள அத்தாட்சியாக இருக்கிறார்கள்.
17 கடவுளால் போதிக்கப்படுவதன் காரணமாக யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய வாழ்க்கையில் உண்மையில் கிறிஸ்தவத்தின் கனிகளை பிறப்பிக்கிறார்கள். (ஏசாயா 54:13) யெகோவாவின் ஜனங்கள் மாத்திரமே பாபிலோனிய மூட நம்பிக்கைகளிலிருந்து முழுமையாக விடுபட்டவர்களாக இருக்கிறார்கள். பாலுறவு ஒழுக்கயீனம், கருச்சிதைவுகள், குடிவெறி, திருடு, விக்கிரகாராதனை, இன வெறுப்பு, உலகப் பிரகாரமான உத்தியோகம் மற்றும் வேறு பழக்கங்களின் சம்பந்தமாக கடவுளுடைய வார்த்தையை முழுமையாக பின்பற்றும் அமைப்பை அவர்கள் மாத்திரமே கொண்டிருக்கிறார்கள். யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டும் என்ற கட்டளைக்கு கீழ்ப்படிகிறவர்கள் அவர்கள் மட்டுமே (மத்தேயு 24:14) கடவுளுடைய சொந்த வார்த்தை தானே அவருடைய ஆசீர்வாதத்தைக் கொண்ட ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்ட ஒரே ஜனம் என்பதாக யெகோவாவின் சாட்சிகளை சுட்டிக் காட்டுகிறது!
18 ஆம் கிறிஸ்தவ பாதையில் உண்மையுடனும் பற்று மாறாமலும் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் யெகோவாவின் சத்தியம் இன்னும் அழகானதாக—மனநிறைவை அளிப்பதாக—முதலில் கேள்விப்பட்ட போதிருந்ததைவிட இன்னும் அதிகமாகவே அவ்விதமாக இருக்கிறது என்று நாங்கள் நிச்சயமாயிருக்கிறோம். ஆகவே விசுவாச துரோகிகள் நீங்கள் குடிக்க வேண்டும் என்று நினைக்கும் விஷயத்தை ஒருபோதும் தொடவும்கூட கூடாது என்று உங்களுடைய இருதயத்தில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்களை வஞ்சித்து, தவறாக வழிநடத்தி, மரண வழிக்கு கொண்டு போகக்கூடியவர்களை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்ற யெகோவாவின் உறுதியான ஆனால் ஞானமான கட்டளைக்கு கீழ்ப்படிந்திருங்கள். நாம் யெகோவாவை நம்முடைய முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும் மனதோடும் நேசித்து, நம்மைப் போல பிறனை நேசிப்போமேயானால், விசுவாச துரோக எண்ணங்கள் உள்ளே நுழைய நாம் இடமளிக்க மாட்டோம். (மத்தேயு 22:37-39) நாம் “பிசாசுக்கு இடங்கொடாமலும்” வேறு எங்கும் பார்க்க ஆசையில்லாதவர்களாயுமிருப்போம். ஏதோ பொய்யான போதகத்தினால் நாம் ‘நம்முடைய மெய்யறிவிலிருந்து உடனே அசைக்கப்படாத’வர்களாயிருப்போம்.—2 தெசலோனிக்கேயர் 2:1, 2.
19 யெகோவாவின் ஆவிக்குரிய பரதீஸில் வாழ்ந்து, இத்தனை அநேக நிறைவான ஆசீர்வாதங்களை அனுபவித்து வரும் நம்முடைய சிலாக்கியத்தை நாம் எப்பொழுதும் போற்றுவோமாக. நித்திய ஜீவ வசனங்களை உண்மையுடன் பற்றிக்கொண்டிருப்பது யார் என்பது நமக்குத் தெரியும். ஆகவே அவர்கள், விசுவாசத்தில் நம்முடைய உண்மையான பற்றுமாறாத சகோதரர்களும் சகோதரிகளுமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்தவர்களாய் அவர்களோடு நெருங்கிய கூட்டுறவை காத்துக் கொள்ளுங்கள். யெகோவாவின் புதிய ஒழுங்குமுறையில் நித்திய ஜீவனின் மகத்தான பரிசைப் பெற்றுக் கொள்ளும் உறுதியோடு சத்தியத்தை முதலில் கற்றுக்கொண்ட சமயத்தில் நமக்கிருந்த அதே மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தொடர்ந்து கொண்டிருப்போமாக. பவுல் அவ்வளவு பொருத்தமாகச் சொன்னது போலவே: “எவனும் உங்கள் பந்தயப் பொருளை நீங்கள் இழந்து போகும்படி உங்களை வஞ்சியாதிருக்கட்டும்!”—கொலோசெயர் 2:18. (w86 3/15)
SOME PORTION IS MISSING FROM THE END OF THIS ARTICLE. COULD NOT BE COPIED FROM THE DISKETTE DUE TO ERROR.