மதமும் அரசியலும் ஒரு நிரந்தரமான கூட்டுறவா?
ஒரு நாள் ரஷ்ய அரசனான வ்ளாடிமர் I தன் குடிமக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற வேண்டுமென்று தீர்மானித்தான். அவன் தானே பொ.ச.987-ல் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மதத்தை தழுவியிருந்த ஒரு இளவரசியை மணந்தபிறகு மதமாற்றமடைந்தான். இப்பொழுது அவன், தன் குடிமக்கள் யாவரும் ஒரே சமயத்தில் மொத்தமாக ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று ஆணை பிறப்பித்தான்—அவசியமானால் கத்தி முனையிலே. காலாகாலத்தில் ரஷ்ய சர்ச்சானது தன்னுடைய “தாயாக” இருந்த கிரேக்க சர்ச்சின் பிடியிலிருந்து விடுபட்டு கடைசியாக அரசின் ஒரு இலாகாவாகவும்கூட ஆனது. இன்றைக்கு சோவியத் அதிபதிகள் அரசாங்க பூர்வமாக கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று மறுத்தபோதிலும், ரஷ்யாவில் சர்ச்சும் அரசும் இன்னும் அமைதியற்ற ஒரு கூட்டு உறவில் இருந்து வருகிறது.
அநேக நூற்றாண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அரசனாகிய எட்டாவது ஹென்றி சர்ச்சுக்கும் அரசாங்கத்துக்குமிடையே ஒரு நெருங்கிய கூட்டுறவை வித்தியாசமான முறைகளில் அமைத்தான். 1532-ம் வருடம் தன் மனைவியாகிய ஆரகனின் காத்தரீன் தனக்கடுத்து சிங்காசனத்துக்கு வரக்கூடிய ஒரு ஆண் மகனை பெறாததன் காரணமாக கவலை கொண்டான். பிரச்னையைத் தீர்க்க ஹென்றி இரகசியமாக தன் காதலியாகிய அனி பொலீனை மணந்தான். இது காண்டர்பரி ஆர்ச் பிஷப்பின் மறைமுக ஆதரவின் பேரில் நடந்தது. ஹென்றியின் அந்த முதல் விவாகம் ரத்து செய்யப்பட்டதாக அந்த பிஷப் அறிவித்தான். 1534-ல் இந்த விபசாரக்காரனும் கொடுங்கோலனும் தன்னை சர்ச் ஆப் இங்கிலாந்தின் தலைவனாக அறிவித்தான். இன்று இந்நாள்வரை இங்கிலாந்தின் அரச, அரசிகள் இந்தப் பட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். சர்ச் ஆட்சி குழுவின் தீர்மானங்கள் பார்லிமெண்டினால் அங்கீகாரத்துக்கு உட்பட்டதாகவும் பிஷப்புகளும் சபையின் (House of Lords) அங்கத்தினர்களாக பிரிட்டன் நாட்டை ஆளுவதில் பங்கு கொள்கிறவர்களாகவும் இருந்தனர். இப்படியாக இங்கிலாந்தில் சர்ச்சும் அரசாங்கமும் 450 வருடங்களுக்கு மேலாக விவாகம் செய்யப்பட்டிருந்ததது.
தற்காலத்திய சர்ச்-அரச விவாகங்கள்
1936-ல் ஸ்பேய்னிலே ரிபப்ளிகன் அரசாங்கத்திற்கு விரோதமாக ஒரு கிளர்ச்சி ஏற்பட்டு உள்நாட்டுப் போராக மாறி ஜெனரல் பிராங்கோ பதவிக்கு உயரும்படியாக ஆனது. இடது சாரியினரை மலைக்கச் செய்யும் வகையில், பிராங்கோ, குருமார்கள் அளித்த அளவு கடந்த ஆதரவின் காரணமாக அதிகப்படியான அதிகாரத்தை குருமாருக்குக் கொடுத்தான்.
1983-ல் சர்ச்சுகளின் உலகக் கவுன்சில் (World Council of Churches) கனடா நாட்டில் வான்கூவரிலே கூடியது. அதனுடைய பொதுக் காரியதரிசி பிலிப் பாட்டர் “அரசியலிலே நிலைத்து இருக்கும்படி” கூறினார். அநேக நாடுகளில் அரசியல் தொகுதிகளாக போராடுகிறவைகளுக்கு சர்ச்சுகளின் உலகக் கவுன்சில் மானியத் தொகைப் பணத்தை அளிப்பதானது சர்ச்சுக்கு செல்பவர்கள் அநேகருக்கு கவலைக்கிடமான காரியமாக இருந்துவந்திருக்கிறது.
மதம் அரசியலில் தலையிடுகிறது என்பதைப்பற்றி கேள்விக்கிடமேயில்லை. என்றபோதிலும் முக்கியமான கேள்வி, அது அப்படி தலையிட வேண்டுமா? அது நல்லதா கெட்டதா? மதம் அரசியலிலே ஈடுபடுவதானது அரசியலின் ஒழுக்க தராதரங்களை உயர்த்தியிருக்கிறதா அல்லது மதத்தை மாறுபடையச் செய்திருக்கிறதா? எதிர்காலத்தைப் பற்றியது என்ன? மதமும் அரசியலும் தங்கள் ‘காதல் விவகாரத்தை’ தொடர்ந்து அனுபவிப்பார்களா அல்லது கசப்பு ஏற்பட்டு, ஒன்றுக்கொன்று மோதும் பாதையில் அவைகளை வைக்குமா? (w85 8/1)
[பக்கம் 3-ன் படம்]
இங்கிலாந்து சர்ச்சின் முதல் தலைவர்