உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • hf பாகம் 4 பக். 12-14
  • வரவுசெலவை சமாளிப்பது எப்படி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வரவுசெலவை சமாளிப்பது எப்படி?
  • மணவாழ்வில் மகிழ்ச்சி மலர
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • 1 நன்கு திட்டமிடுங்கள்
  • 2 நேர்மையாக இருங்கள், வெளிப்படையாகப் பேசுங்கள்
  • பணத்தை நிர்வகிப்பது எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • பணம்தான் வாழ்க்கையா?
    விழித்தெழு!—2015
  • பணம்தான் எல்லாத் தீமைக்கும் வேரா?
    பைபிள் தரும் பதில்கள்
  • சிக்கனமாய்ச் செலவு செய்யுங்கள்
    விழித்தெழு!—2009
மேலும் பார்க்க
மணவாழ்வில் மகிழ்ச்சி மலர
hf பாகம் 4 பக். 12-14
பணத்தை எப்படி ஞானமாக செலவு செய்யலாம் என்று கணவன்-மனைவி பேசி முடிவெடுக்கிறார்கள்

பகுதி 4

வரவுசெலவை சமாளிப்பது எப்படி?

“நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்.”—நீதிமொழிகள் 20:18, பொ.மொ.

குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள பணம் நமக்கு முக்கியம். (நீதிமொழிகள் 30:8) “பணம் பாதுகாப்பு தரும்” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 7:12, NW) கணவன் மனைவியாகச் சேர்ந்து பண விஷயங்களைப் பற்றி பேசும்போது சில சமயம் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். இருந்தாலும், பணப்பிரச்சினை உங்கள் வாழ்க்கையில் பெரிய விரிசலை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 4:32) பணத்தை எப்படிச் செலவிடலாம் என்பதைப் பற்றி இருவரும் சேர்ந்து முடிவெடுங்கள், ஒருவரையொருவர் நம்புங்கள்.

1 நன்கு திட்டமிடுங்கள்

பைபிள் என்ன சொல்கிறது? “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், அதைக் கட்டி முடிக்கப் போதுமான வசதி தனக்கு இருக்கிறதா என்று முதலில் உட்கார்ந்து செலவைக் கணக்கிட்டுப் பார்க்காமல் இருப்பானா?” (லூக்கா 14:28) வரவுசெலவைப் பற்றி இருவரும் கலந்துபேசி திட்டமிடுவது ரொம்பவே முக்கியம். (ஆமோஸ் 3:3) என்ன வாங்க போகிறீர்கள், அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். (நீதிமொழிகள் 31:16) பணம் இருப்பதால் நீங்கள் ஆசைப்பட்டதையெல்லாம் வாங்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். கடன் வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள். வரவுக்கேற்ற செலவு செய்யுங்கள்.—நீதிமொழிகள் 21:5; 22:7.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • மாதக் கடைசியில் உங்களிடம் பணம் மிச்சம் இருந்தால் அதை என்ன செய்வதென இருவராகத் தீர்மானியுங்கள்

  • பண நெருக்கடி ஏற்பட்டால், உங்கள் செலவுகளை எப்படிக் குறைக்கலாம் என்று திட்டமிடுங்கள். உதாரணத்திற்கு, அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்

முக்கியமான செலவுகள் என்ன என்று கணவனும் மனைவியும் யோசித்து பார்க்கிறார்கள்

2 நேர்மையாக இருங்கள், வெளிப்படையாகப் பேசுங்கள்

பைபிள் என்ன சொல்கிறது? ‘யெகோவாவுடைய பார்வையில் மட்டுமல்ல, மனிதர்களுடைய பார்வையிலும் நேர்மையாக இருங்கள்.’ (2 கொரிந்தியர் 8:21) நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள், எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை உங்கள் கணவரிடம் அல்லது மனைவியிடம் மூடிமறைக்காமல் சொல்லுங்கள்.

ஒரு பெரிய செலவு செய்ய வேண்டியிருந்தால் அதைப் பற்றி நீங்கள் இருவரும் முதலில் கலந்துபேசுங்கள். (நீதிமொழிகள் 13:10) நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை, உங்களுடைய பணமாகப் பார்க்காமல் குடும்பத்துடைய பணமாகப் பாருங்கள். (1 தீமோத்தேயு 5:8) பண விஷயத்தைப் பற்றி எதையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பேசும்போது, நீங்கள் இருவரும் சந்தோஷமாகவும் சமாதானமாகவும் இருக்கலாம்.

ஷாப்பிங் போயிருக்கும்போது லிஸ்ட்டில் எழுதியிருப்பதை கணவனும் மனைவியும் எடுத்து பார்க்கிறார்கள்

நீங்கள் என்ன செய்யலாம்?

  • கைசெலவுக்கு நீங்கள் இருவரும் தனித்தனியாக எவ்வளவு பணம் வைத்துக்கொள்ளலாம் என்று முன்னதாகவே முடிவு செய்யுங்கள்

  • பண விஷயத்தில் பிரச்சினை வரும்வரை காத்திருக்காதீர்கள், அதைப் பற்றி முன்னதாகவே பேசுங்கள்

பணம் எவ்வளவு முக்கியம்?

பணம் முக்கியம்தான், ஆனால் பணத்தை நினைத்து அநாவசியமாகக் கவலைப்படாதீர்கள், அதனால் உங்களுக்குள் பிரச்சினைகள் வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். (மத்தேயு 6:25-34) கைநிறைய பணம் இருந்தால்தான் சந்தோஷமாக வாழ முடியும் என்று நினைப்பது தவறு. “எல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (லூக்கா 12:15) கோடி ரூபாய் கொடுத்தாலும் சந்தோஷமான திருமண வாழ்க்கையை விலைக்கு வாங்க முடியாது. அதனால், கொஞ்ச பணம் இருந்தாலும் அதை வைத்துத் திருப்தியாக வாழுங்கள். கடவுளை முழுமையாக நம்புங்கள். அப்போது, உங்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், யெகோவாவுடைய ஆசீர்வாதமும் கிடைக்கும்.—எபிரெயர் 13:5.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...

  • கடனில்லாமல் வாழ நாங்கள் குடும்பமாக என்ன செய்ய வேண்டும்?

  • பண விஷயத்தைப் பற்றி நாங்கள் இருவரும் கடைசியாக, எப்போது வெளிப்படையாகப் பேசினோம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்