பாடம் 11
இயேசுவைப் பற்றி எழுதியவர்கள்
இந்தப் படத்துல இருக்கிறவங்க எல்லாரும் யார் தெரியுமா?— மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், பேதுரு, யாக்கோபு, யூதா, பவுல். இவங்க எல்லாருமே இயேசு பூமியில இருந்தப்போ வாழ்ந்தாங்க. இயேசுவைப் பத்தி எழுதினாங்க. அவங்க எழுதின புத்தகம் எல்லாம் பைபிள்ல இருக்கு. இப்போ அவங்களை பத்தி கொஞ்சம் படிக்கலாம்.
இவங்களை பத்தி கொஞ்சம் சொல்லு, பார்க்கலாம்?
முக்கியமான ஒரு வேலையை செய்றதுக்காக இயேசு சிலரை தேர்ந்தெடுத்தார். அவங்கதான் அப்போஸ்தலர்கள். இந்தப் படத்தில இருக்கிற அப்போஸ்தலர்கள் 3 பேர் இயேசுவோட ஊழியம் செய்தாங்க. அவங்க யார் யார்னு தெரியுமா?— மத்தேயு, யோவான், பேதுரு. மத்தேயுவுக்கும் யோவானுக்கும் இயேசுவை ரொம்ப நல்லா தெரியும். அதனால இயேசுவை பத்தி மத்தேயு ஒரு புத்தகமும் யோவான் ஒரு புத்தகமும் எழுதினாங்க. வெளிப்படுத்துதல், 1 யோவான், 2 யோவான், 3 யோவான் புத்தகங்களை அப்போஸ்தலன் யோவான் எழுதினார். 1 பேதுரு, 2 பேதுரு புத்தகங்களை அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். ஒரு சமயம் யெகோவா வானத்தில இருந்து, ‘இயேசு என் செல்ல மகன். இவரைப் பார்த்து நான் பெருமைபடுறேன்’னு இயேசுவை பார்த்து சொன்னார். இதை 2 பேதுரு புத்தகத்தில பேதுரு எழுதினார்.
இயேசுவை பத்தி எழுதின இன்னொருத்தர் பேரு மாற்கு. கெட்டவங்க, இயேசுவை கொலை செய்றதுக்கு பிடிச்சிட்டு போனதை அவர் நேர்ல பார்த்திருக்கலாம். இன்னொருத்தர் லூக்கா. அவர் ஒரு டாக்டர். இயேசு இறந்த பிறகு, அவர் கிறிஸ்தவரா மாறியிருக்கலாம்.
படத்தில இயேசுவோட தம்பிங்க ரெண்டு பேர் இருக்காங்க. அவங்களும் பைபிள் புத்தகங்களை எழுதினாங்க. அவங்க பேரு என்ன?— யாக்கோபு, யூதா. ஆரம்பத்தில இயேசு சொன்னது அவங்களுக்குப் பிடிக்கல. அவரை பைத்தியம்னுகூட சொன்னாங்க. ஆனா, அப்புறமா அவங்க இயேசுவை நம்பினாங்க. கிறிஸ்தவங்களா மாறினாங்க.
பைபிளை எழுதின இன்னொருத்தர் பவுல். அவரையும் நீ படத்தில பார்க்கலாம். கிறிஸ்தவரா ஆகுறதுக்கு முன்னால அவரோட பேரு சவுல். அவருக்குக் கிறிஸ்தவங்கள சுத்தமா பிடிக்காது. அவங்களை அடிச்சு, ரொம்ப கஷ்டப்படுத்தினார். அப்புறம் எப்படி பவுல் கிறிஸ்தவரா மாறினார்?— ஒருநாள், பவுல் ஊருக்குப் போயிட்டு இருந்தார். திடீர்னு வானத்தில இருந்து ஒருத்தர் அவர்கிட்ட பேசினார். அது யார் தெரியுமா? இயேசுதான் பேசினார்! ‘என்னோட மக்களை நீ ஏன் இப்படி கஷ்டப்படுத்துற?’னு பவுல்கிட்ட கேட்டார். அதுக்கு அப்புறம், பவுல் நல்லவரா மாறிட்டார். கிறிஸ்தவராவும் மாறிட்டார். பைபிள்ல, ரோமர் புத்தகத்திலிருந்து எபிரெயர்வரை மொத்தம் 14 புத்தகங்களை பவுல் எழுதியிருக்கார்.
நாம தினமும் பைபிள் படிக்கிறோம்தானே?— பைபிளை படிச்சு படிச்சு இயேசுவைப் பத்தி நிறைய தெரிஞ்சிக்கலாம். உனக்கு இயேசுவை பத்தி நிறைய தெரிஞ்சிக்க ஆசையா இருக்கா?—