உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • yc பாடம் 10 பக். 22-23
  • இயேசு எப்போதுமே கீழ்ப்படிந்தார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசு எப்போதுமே கீழ்ப்படிந்தார்
  • செல்லக்குட்டிக்குச் சொல்லிக்கொடுங்கள்
  • இதே தகவல்
  • இயேசு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • “இவர் என்னுடைய குமாரன்”
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • ‘இருதயத்தில் பதித்து ஆழ்ந்து யோசித்தாள்’
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • ‘இதுதான் என் மகன்’
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
மேலும் பார்க்க
செல்லக்குட்டிக்குச் சொல்லிக்கொடுங்கள்
yc பாடம் 10 பக். 22-23
யோசேப்பும் மேரியும் இயேசுவை ஆலயத்தில கண்டுபிடிக்கிறாங்க

பாடம் 10

இயேசு எப்போதுமே கீழ்ப்படிந்தார்

நீ எப்பவும் உன் அப்பா-அம்மா பேச்சை கேட்டு நடப்பியா?— அது சிலநேரம் கஷ்டமாதான் இருக்கும். இயேசு யெகோவா பேச்சையும் அவரோட அப்பா-அம்மா பேச்சையும் கேட்டு நடந்தாரா?— ஆமா, எப்பவுமே அவங்க பேச்சை கேட்டார். உனக்கும் அவரை மாதிரி இருக்க ஆசையா? சரி, இப்போ அவரை பத்தி படிக்கலாம்.

பூமிக்கு வர்றதுக்கு முன்னாடி, இயேசு யெகோவாகூட இருந்தார். பூமிக்கு வந்தப்போ இங்கே அவருக்கு ஒரு அப்பா-அம்மா இருந்தாங்க. அவங்கதான் யோசேப்பு, மரியாள். அவங்க எப்படி இயேசுவோட அப்பா-அம்மா ஆனாங்க?—

இயேசுவை பூமிக்கு அனுப்பி வைக்க யெகோவா ஆசைப்பட்டார். அதனால, இயேசுவோட உயிரை மரியாள் வயித்துல வைச்சார். இது ஒரு பெரிய அதிசயம்! இயேசு மரியாளோட வயித்துல குழந்தையா வளர்ந்தார். 9 மாசத்துக்கு அப்புறம் பிறந்தார். இப்படித்தான் யோசேப்பும் மரியாளும் இயேசுவுக்கு அப்பா-அம்மாவா ஆனாங்க.

இயேசுவுக்கு யெகோவாவை ரொம்பப் பிடிக்கும். அது நமக்கு எப்படித் தெரியும்? இயேசுவுக்கு 12 வயசு இருக்கும்போது, அவரோட வீட்டுல இருந்த எல்லாரும் எருசலேம்னு ஒரு ஊருக்கு பண்டிகை கொண்டாட போனாங்க. திரும்பி வரும்போது, இயேசு காணாம போயிட்டார். இயேசு எங்கே போனார்?—

இயேசு ஏன் ஆலயத்தில இருக்கிறார்?

யோசேப்புக்கும் மரியாளுக்கும் ரொம்ப கவலையா இருந்துச்சு. வேக வேகமா எருசலேமுக்குப் போனாங்க. இயேசுவை தேடினாங்க. மூணு நாளுக்கு அப்புறம், அவரை ஆலயத்துல கண்டுபிடிச்சாங்க. கடவுளை வணங்குற இடம்தான் ஆலயம். இயேசு ஏன் ஆலயத்திலேயே இருந்துட்டார்?— அவருக்கு யெகோவாவை ரொம்பப் பிடிக்கும். யெகோவாவுக்குப் பிடிச்ச மாதிரி நடக்க ஆசைப்பட்டார். அதனால யெகோவா அப்பாவைப் பத்தி நிறைய தெரிஞ்சிக்கிறதுக்காக ஆலயத்திலேயே இருந்துட்டார். இயேசு பெரியவரான பிறகும், யெகோவா பேச்சைக் கேட்டார். அவருக்குக் கஷ்டமா இருந்தாலும், உயிரே போனாலும் யெகோவா பேச்சைக் கேட்டார். யோசேப்பு-மரியாள் பேச்சை இயேசு கேட்டாரா?— ஆமா, அவங்க பேச்சையும் கேட்டு நடந்தார்.

இதுல இருந்து நீ என்ன கத்துக்கிட்ட?— உனக்குக் கஷ்டமா இருந்தாலும், அப்பா-அம்மா பேச்சை கேட்கணும். கேட்பியா?—

பைபிளில் படிங்க

  • லூக்கா 1:30-35; 2:45-52

  • எபேசியர் 6:1

  • எபிரெயர் 5:8

கேள்விகள்:

  • யோசேப்பும் மரியாளும் எப்படி இயேசுவோட அப்பா-அம்மா ஆனாங்க?

  • இயேசுவை அவரோட அப்பா-அம்மா எங்க கண்டுபிடிச்சாங்க?

  • இயேசுகிட்ட நீ என்ன கத்துக்கிட்ட?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்