தொடர்ந்து முன்னேற்றம் செய்யுங்கள்
இந்தப் பள்ளி நிகழ்ச்சிநிரலில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனை குறிப்புகள் ஒவ்வொன்றிலும் நீங்கள் தனிப்பட்ட விதமாக உழைக்கிறீர்களா? பரிந்துரைக்கப்பட்ட பயிற்சிகளை முடித்துவிட்டீர்களா? பள்ளியிலோ வேறு கூட்டங்களிலோ பேச்சுக்கள் கொடுக்கும்போதும் வெளி ஊழியத்தில் ஈடுபடும்போதும் ஒவ்வொரு குறிப்பையும் நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?
தொடர்ந்து தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள். நீங்கள் எவ்வளவு காலமாக பேச்சுக்கள் கொடுத்து வந்தாலும், இன்னும் முன்னேற்றம் செய்வதற்குரிய அம்சங்கள் இருக்கின்றன.