படிப்பு 28
கேட்போருடன் தொடர்பும் குறிப்புகளின் உபோயகமும்
1. உங்கள் கேட்போருடன் நல்ல தொடர்புகொண்டிருத்தல் போதிப்பதில் பெரும் உதவியாக இருக்கிறது. அது அவர்களுடைய மரியாதையைப் பெற்றுத்தந்து அதி பலன்தரத்தக்க விதமாகப் போதிப்பதற்கு உங்களுக்கு உதவி செய்கிறது. அவர்களோடு உங்களுடைய தொடர்பு, ஒரு பேச்சாளராக அவர்களுடைய ஒவ்வொரு பிரதிபலிப்பையும் உங்களால் உடனடியாக உணரமுடிகிறவிதமாய் நெருக்கமான ஒரு தொடர்புக்குளுள் கொண்டுவர வேண்டும். கேட்போருடன் இப்படிப்பட்ட ஒரு தொடர்பு உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்பதில் தீர்மானிப்பதில் குறிப்புகளின் உபயோகம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. விரிவான குறிப்புகள் தடங்களாக இருக்கக்கூடும்; ஆனால் குறிப்புகளை திறமையாக பயன்படுத்துவது தொந்தரவாக இல்லை, சாதாரணமாக இருப்பதைவிட ஓரளவு நீளமாக இருப்பதை சூழ்நிலைகள் தேவைப்படுத்தினாலும்கூட அவ்விதமாக அது இருப்பதில்லை. இது ஏனென்றால் திறமையுள்ளவராக இருக்கும் ஒரு பேச்சாளர் குறிப்புகளை அளவுக்கு அதிகமாகவோ தவறான சமயத்திலோ பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் கேட்போருடன் கொண்டிருக்கும் தொடர்பை இழந்துவிடுவதில்லை. உங்களுடைய பேச்சு ஆலோசனைத் தாளஇல் இதற்கு கவனம் கொடுக்கப்பட்டிருக்கிறது, மேலும் இது “கேட்போருடன் தொடர்பு, குறிப்புகளின் உபயோகம்” என்பதாக பட்டியலிடப்பட்டிருக்கிறது.
2. கேட்போருடன் பார்வையால் தொடர்பு. பார்வையால் தொடர்பு என்பது உங்கள் கேட்போர் கூட்டத்தைப் பார்ப்பதை அர்த்தப்படுத்துகிறது. அது வெறுமென கோட்போர் கூட்டத்தை பார்ப்பதை அல்ல, ஆனால் கூட்டத்திலுள்ள தனிநபர்களைப் பார்த்து அதற்கேற்ப பிரதிபலிப்பதை அது அர்த்தப்படுத்துகிறது.
3. உங்கள் கேட்போர் கூட்டத்தைப் பார்ப்பது என்பது எவரும் விடாதிருக்கும்படி ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு வெறுமென சீரான ஓர் அசைவை அர்த்தப்படுத்துவதில்லை. கோட்போர் கூட்டத்திலுள்ல் ஒருவரைப் பார்த்து அந்த நபரிடமாக ஒரிரண்டு வாக்கியங்களைச் சொல்லுங்கள். பின்னர் மற்றொருவரைப் பார்த்து அந்த நபரிடமாக இன்னும் ஒருசில வாக்கியங்களைச் சொல்லுங்கள். ஒருவர் சங்கடமாக உணரும்படி எவரையாவது நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிராதேயுங்கள், முழு கேட்போர் கூட்டத்திலும் ஒருசில ஆட்களின்மீது மாத்திரமே கவனத்தை ஒருமுகபக்படுத்தாதீர்கள். இவ்விதமாக கேட்போர் கூட்டம் முழுவதிலுமாக தொடர்ந்து சொல்லுங்கள், ஆனால் ஒரு நபரிடமாக பேசும்போது அவரோடு உண்மையில் சம்பாஷித்து மற்றொருவரிடமாகச் செல்லும் முன் அவருடைய பிரதிபலிப்பைக் கவனியுங்கள். உங்கள் குறிப்புகளை நீங்கள் கண் அசைவிலேயே விரைவாகப் பார்க்கும்படி அவை பேச்சாஷர் நிலைமேடையில் அல்லது உங்கள் கையில் அல்லது பைபிளில் வைக்கப்பட வேண்டும். குறிப்புகளைப் பார்ப்பதற்கு உங்கள் தலையையே அசைப்பது அவசியமாக இருக்குமானால், கேட்போருடன் தொடர்பு பாதிக்ப்படும்.
4. உங்கள் ஆலோசகர் நீங்கள் எவ்வளவு அடிக்கடி உங்கள் குறிப்புகளை உபயோகிக்கிறீர்கள் என்பதை மட்டுமல்ல, எப்போது அவற்றைப் பார்க்கிறீர்கள் என்பதையுங்கூட கவனிப்பார். ஓர் உச்சக்கட்டத்துக்கு வருகையில் நீங்கள் குறிப்புகளை பார்த்துக்கொண்டிருந்தால், உங்கள் கேட்போர் கூட்டத்தின் பிரதிபிப்பை பார்க்கமாட்டீர்கள். இடைவிடாமல் உங்கள் குறிப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தாலும்கூட, நீங்கள் தொடர்பை இழந்துவிடுவீர்கள். பொதுவா இது கலவரமடைந்துவிடும் ஒரு பழக்கத்தை அல்லது பேச்சுக் கொடுப்பதற்கு தாயாரிப்பு குறைவைச் சுட்டிக்காட்டுகிறது.
5. அனுபவமுள்ள பேச்சாளர்கள் ஒரு உரையிலிருந்து ஒரு முழு பேச்சையும் கொடுக்கும்படியாக அழைக்கப்படும் சமயங்கள் இருக்கின்றன. நிச்சயமாகவே இது கேட்போருடன் பார்வையால் தொடர்பு கொள்வை ஓரளவு கட்டுப்படுத்துகிறது. ஆனால் நல்ல தயாரிப்பின் விளைவாக பொருளோடு நன்கு அறிமுகமாகி இருக்கையில், அவர்கள் தங்கள் இடத்தை விட்டுவிடாமலே அவ்வப்போது தங்கள் கேட்போர் கூட்டத்தை பார்க்கமுடிகிறவர்களாக இருக்கின்றனர் இது அவர்களுடைய பாங்கில் உணர்ச்சியுடன் வாசிப்பதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது.
6. நேரடியாக பார்த்துப் பேசுவதன் மூலம் கேட்போருடன் தொடர்பு. கேட்போருடன் பார்வையால் தொர்புகொள்ளுவது போலவே இது இன்றியமையாததாகும். உங்கள்கேட்போரைப் பார்த்துப் பேசுகையில் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை இது உட்படுத்துகிறது.
7. தனிப்பட்ட முறையில் ஒரு நபரோடு பேசுகையில், “நீங்கள்,” “உங்களுடைய” அல்லது “நாம்” “நம்முடைய” என்று சொல்வதன் மூலம் நீங்கள் அவரை நேரடியாக பார்த்துப்ப பேசுகிரீர்கள். பொருத்தமாயிருக்கும் இடங்களில், ஒரு பெரிய கேட்போர் கூட்டத்தினிடமாகவும் நீங்கள் அதே முறையில் பேசலம். உங்கள் பேச்சைஒரு சமயத்தில் ஓரிரு ஆட்களோடு கொண்டிருக்கும் ஒரு சம்பைஷனையைப் போல கருதுங்கள். அவர்கள் உங்களோடு உண்மையில் பேசியது போல பிரதிபலிக்கும் பொருட்டு போதிய அளவு உன்னிப்பாக அவைகளைக் கவனியுங்கள். இதனால் உங்கள் பேச்சுமுறை குறிப்பிட்ட ஒரு நபருக்குப் பொருந்துவது போல அமையும்.
8. ஆனால் ஓர் எச்சரிக்கையான வார்த்தை உங்கள் கேட்போர் கூட்டத்தோடு அளவுக்கு அதிகமான நெருக்கமாகிவிடும் ஆபத்தை தவிர்த்திடுங்கள். வெளி ஊழியத்தில் கதவண்டையில் ஓரிரு நபர்களோடு கொண்டிருக்கும் கண்ணியமான சம்பாஷனையில் இருப்பதைவிட அதிகமான நெருக்கமான அவசியமில்லை, ஆனால் நீங்கள் அந்தச் சமயத்தில் செய்வதைப் போலவே நேரடியாக இருக்கமுடியும், இருக்கவும் வேண்டும்
9. மற்றொரு ஆபத்து, தனிப்பட்ட உங்கள் சுட்டுப்பெயர்களின் உபயோகத்தில் நீங்கள் கவனமாக இருந்து விரும்பத்தகாத வெளிச்சத்தில் உங்கள் உங்கள் கேட்போரை வைக்காதிருக்க வேண்டும். உதாரணமாக, குற்றசெயல்களைப் பற்றிய ஒரு பேச்சில், உங்கள் கேட்போரே குற்றவாளிகள் என்று அனுமானிக்கும் வகையாக அவர்களைக் குறிப்பிட்டு பேசமாட்டீர்கள். அல்லது, நீங்கள் ஊழியக் கூட்டத்தில் குறைவான மணிநேரங்களைப் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டிருந்தால் எப்பொழுதும் “நீங்கள்” என்று சொல்வதற்கு பதிலாக “நாம்” என்ற சுட்டுப்பெயரை பயன்படுத்தி உங்களையும் பேச்சில் உட்படுத்திக் கொள்ளலாம். முன்யோசனையும் கரிசனையும் எளிதில் இத்தகைய எந்வொரு ஆபத்தையும் மேற்கொள்ள வேண்டும்
*****************
10. குறிப்புத்தாளின் உபயோகம். வெகு சில ஆரம்ப பேச்சாளர்களே ஆரம்பத்தில் ஒரு குறிப்புத்தாளிலிருந்து பேசுகின்றனர். பொதுவாக அவர்கள் முன்கூட்டியே பேச்சை எழுதிக்கொண்டு, அதை வாசிக்கவோ மனப்பாடமாக ஒப்பிக்கவோ செய்வார்கள். உங்கள் ஆலோசகர் ஆரம்பத்தில் இதை கவனிக்கமாட்டார், ஆனால் உங்கள் பேச்சு ஆலோசனைத் தாளில் “குறிப்புகளின் உபயோகம்” என்பதற்கு வருகையில் அவர் குறிப்புகளிலிருந்து பேசுவதற்கு உங்களை உற்சாகப்படுத்துவார். அதில் தேர்ச்சிப்பெற்ற பிறகு, ஒரு பொதுப்பேச்சாளராக முன்னால் மிக நீண்டதொரு படியை நீங்கள் எடுத்திருப்பதைக் காண்பீர்கள்.
11. வாசிக்கக்கூட தெரியாத பிள்ளைகளும் வயதுவந்தவர்களும் கருத்துக்களைத் தெரிவிக்கும் உதாரணங்களைப் பயன்படுத்தி பேச்சுக்களைக் கொடுக்கின்றனர். ராஜ்ய ஊழியம் பிரதியில் கொடுக்கப்படிருக்கும் வேதாகம அளிப்புகளைப் போலவே ஓர் எளிய குறிப்புத்தாளை வைத்துங்கூட ஊங்கள் பேச்சை நீங்கள் தயாரிக்கலாம். கையால் எழுதப்பட்ட உரை எதுவுமின்றி நீங்கள் வழக்கமாக வெளி ஊழியத்தில் பேசுகிறீர்கள். ஒரு முறை அப்படிச் செய்வதற்கு உறுதிப்பூண்டுவிட்டீர்களேயானால், அப்படியே பள்ளியிலும் எளிதில் அதைச் செய்யலாம்.
12. இந்தப் பண்பின்பேரில் வேலைசெய்வது, தயாரிக்கையிலும் பேச்சுக்கொடுக்கையிலும் கையால் எழுதப்பட்ட ஒரு உரையை விட்டொளிப்பதற்கு உங்களுக்கு உதவிசெய்வதற்காகவே இருப்பதால், பேச்சை மனப்பாடம் செய்யாதீர்கள். இந்தப்படிப்பின் நோக்கத்தை அது தோற்கடித்துவிடும்.
13. நீங்கள் வேதவசனங்களைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால், எப்படி? யார்? எப்போது? எங்கே? போன்ற வினையெச்சக் கேள்விகளை உங்களையே கேட்டுக்கொள்ளலாம். பின்னர், அவை உங்கள் பொருளோடு பொருந்துகையில், இந்தக் கேள்விகளை உங்கள் குறிப்புகளின் ஒரு பாகமாக பயன்படுத்துங்கள். பேச்சைக் கொடுக்கையில் வெறுமனே ஒரு வேதவசனத்தை வாசித்து, பொருத்தமாகவே இருக்கையில் உங்களையே அல்லது உங்கள் வீட்டுக்காரரை இந்தக் கேள்விகளைக் கேட்டுப் அவற்றுக்குப் பதிலளியூங்கள். இது அத்தனை எளிதாக இருக்கலாம்.
14. புதிதாகப் பேச்சுக் கொடுப்பவர்கள் எதையாவது மறந்துவிடுவார்களோ என அடிக்கடி கவலைப்படுகின்றனர். இருந்தபோதிலும், உங்கள் பேச்சை தர்க்கரீதியாக விரிவாக்கியிருப்பீர்களென்றால், நீங்கள் அதை கவனியாமல்விட்டால் எவருமே எந்த ஓர் எண்ணத்தையும் தவறவிடப்போவதில்லை. எப்படியும் பொருளை எடுத்துரைப்பது இந்தக் கட்டத்தில் பிரதான அக்கறைக்குரியதாக இல்லை. இப்பொழுது ஒரு குறிப்புத்தாளிலிருந்தும் பேச நீங்கள் கற்றுக்கொள்வதே அதிக முக்கியம்.
15. இந்தப் பேச்சை கொடுக்கையில் ஏற்கனவே கற்றுக்கொண்டிருக்கும் அநேக பண்புகளை நீங்கள் இழந்துவிட்டிருப்பதாக உணருவது சாத்தியமாகும் அதிர்ச்சியடைந்துவிடாதீர்கள். அவை திரும்ப வந்துவிடும், மேலும் கையால் எழுதப்பட்ட உரை ஒன்று இல்லாமல் பேசுவதற்கு கற்றுக்கொள்ள முடிந்துவிட்டால் அவற்றில் அதிக தேர்ச்சிபெற்றவராக உங்களை நீங்கள் காண்பீர்கள்.
16. ஊழியப் பள்ளியில் பேச்சுக்களுக்காக பயன்படுத்தப்படும் குறிப்புகளை பற்றி ஒரு வார்த்தை. அவை கருத்துக்களை ஒப்பிக்க அல்ல, நினைவுபடுத்திக்கொள்ள பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்புகள் சுருக்கமாக இருத்தல் வேண்டும். அவை நேர்த்தியாக, ஒழுங்காக, புரியும்படி இருத்தல் வேண்டும். உங்கள் பேச்சு அமைப்பு ஒரு மறுசந்திப்பாக இருக்குமானால், உங்கள் குறிப்புகள் ஒரு வேளை உங்கள் பைபிளுக்குள் வெளியில் தெரியாதபடிக்கு இருக்க வேண்டும். அது ஒரு மேடைப்பேச்சாக இருந்து, நீங்கள் பேச்சாளர் நிலை மேடையை பயன்படுத்துவீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால், குறிப்புகள் ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது. ஆனால் நீங்கள் நிச்சயமாகவே இல்லையென்றால், அதற்கேற்ப தயாரியுங்கள்.
17. தலைப்பை உங்கள் குறிப்புகளின்பேரில் எழுதிவைப்பது மற்றொரு உதவியாகும். பிரதான குறிப்புகளும்கூட கண்ணுக்குத் தெளிவாக மேலெழுந்து நிற்க வேண்டும். எல்லா எழுத்துக்களையும் தடித்ததாக எழுதியோ அடிக்கோடிட்டோ கொள்ள முயற்சிசெய்யுங்கள்.
18. உங்கள் பேச்சைக் கொடுக்கையில் ஒரு சில குறிப்புகளை மாத்திரமே நீங்கள் பயன்படுத்துவது, உங்கள் தயாரிப்பில் சிக்கனமாக இருக்கலாம் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. முதலில் பேச்சை விளக்கமாக தயாரித்து, நீங்கள் விரும்பும்விதமாக ஒரு முழுமையான குறிப்புத்தைளை உண்டுபண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் இரண்டாவதாக ஒன்றை, அதிக சுருக்கமான ஒன்றைத் தயாரித்துக்கொள்ளுங்கள். பேச்சைக் கொடுக்கையில் உண்மையில் நீங்கள் பயன்படுத்தும் குறிப்புத்தாள் இதுவாகவே இருக்கும்.
19. இப்பொழுது இரண்டு குறிப்புத்தாள்களையும் உங்கள் முன்னால் வைத்து விட்டு, சுருக்கப்பட்ட குறிப்புத்தாளை மாத்திரமே பார்த்துக்கொண்டு முதல் பிரதான குறிப்பின் பேரில் உங்களால் சொல் முடிந்த அளவு சொல்லிப்பாருங்கள், அடுத்து, அதிக விளக்கமான குறிப்புத்தாளின்மீது பார்வையை செலுத்தி, நீங்கள் கவனிக்கத் தவறியவற்றைப் பாருங்கள். சுருக்கமான உங்கள் குறிப்புத்தாளிலுள்ள இரண்டாவது பிரதான குறிப்புக்குச் சென்று அதையே செய்துபாருங்கள். காலப்போக்கில், சுருக்கமான குறிப்புத்தாள் உங்களுக்கு அவ்வளவு பரிச்சயமாகிவிடுவதால், அதிக விளக்கமான குறிப்புத்தாளிலுள்ள அனைத்தையும், உங்களுடைய ஒருசில சுருக்கமான குறிப்புகளைப் பார்ப்பதன் மூலமே நினைவுக்குக் கொண்டுவந்துவிட முடியும். பழக்கத்தோடும் அனுபவத்தோடும் சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்துப் பேசுவதிலிருக்கும் அனுகூலங்களைப் போற்ற ஆரம்பித்து, நிச்சயமாக தேவேப்பட்டால் மட்டுமே கையால் எழுதப்பட்ட ஒரு உரையை பயன்படுத்துவீர்கள். பேசும்போது நீங்கள் அதிக தளர்ந்த நிலையிலிருப்பதை உணருவீர்கள். மேலும் உங்கள் கேட்போர் கூட்டம் அதிகமான மரியாதையோடு செவிகொடுத்துக் கேட்பார்கள்.
[கேள்விகள்]
1. கேட்போருடன் தொடர்பின் முக்கியத்துவத்தையும் இதில் குறிப்புகளின் உபயோகம் வகிக்கும் பாகத்தையும் விளக்கவும்.
2-5. பலன்தரத்தக்க விதமாக கேட்போருடன் பார்வையால் தொர்பு கொள்வதை எது உறுதிசெய்கிறது?
6-9. கேட்போருடன் தொடர்பைப் பெறுவதற்கு மற்றொரு வழிமுறையையும் எச்சரிக்கையாயிருக் வேண்டிய படுகுழிகளையும் குறிப்பிடவும்.
10, 11. ஒரு குறிப்புத்தாளை உபயோகிக்க கற்றுக்கொள்வதற்கு எது நம்மை உற்சாகப்படுத்த வேண்டும்?
12, 13. ஒரு குறிப்புத்தாளை உண்டுபண்ணுவதன் பேரில் ஆலோசனைகளைக் கொடுக்கவும்.
14, 15. என்ன காரணக்கூறுகள் நம்மைச் சோர்வடையச் செய்யக்கூடாது?
16, 17. குறிப்புகளை உண்டுபண்ணுவதில், நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?
18, 19. ஒரு குறிப்புத்தாளை உபயோகிப்பதை நாம் எவ்வாறு பழகிக்கொள்ளலாம்?