உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 10/22 பக். 32
  • நெஞ்சில் நிறைந்த படம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நெஞ்சில் நிறைந்த படம்
  • விழித்தெழு!—1999
விழித்தெழு!—1999
g99 10/22 பக். 32

நெஞ்சில் நிறைந்த படம்

கேரன் என்பவள் 20 வருஷங்களுக்கும் மேல் யெகோவாவின் சாட்சியாக இருக்கிறாள். மதத்தைப் பற்றி பேசினால் அவளுடைய அப்பா துளிகூட அக்கறை காட்டமாட்டார். ஆனால் சமீபத்தில் அந்த நிலை மாறியது. அறுவை சிகிச்சை முடிந்து சுகமடையும்வரை மருத்துவமனையிலேயே அவளுடைய அப்பா தன்னுடைய நேரத்தை செலவழித்தார். ஒருநாள் சலிப்பாக இருந்த சமயத்தில், ஒரு பக்கத்தையும் விடாமல் செய்தித்தாள் முழுவதையும் புரட்டினார். அவருக்கு ஒரே அதிர்ச்சி. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தன் மகளுக்கு போன் செய்தார். கேரன் கூறுகிறாள்: “போனில் டாடி சொன்னாங்க, ‘கேரன் இந்த உலகம் அழியப் போகுது.’ முக்கியமாக பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைப் பற்றி படித்து அதிர்ச்சி அடைந்திருந்தார்.

“நான் அவருக்கு தைரியமூட்ட நினைப்பதற்குள் உடனே அவர் சொன்னார்: ‘இன்னைக்கு வீட்டுக்கு ரெண்டு பெண்கள் வந்தாங்க. பொதுவாக வீட்டின் கொல்லைப்புற தோட்டத்தில்தான் நான் இருப்பேன், ஆனால் வீட்டுக்கு முன்னால் இருக்கும்போதே அவர்கள் என்னை பார்த்துட்டாங்க. ஒரு பெண் அழகான தோட்டத்தின் படத்தை எனக்கு காட்டினாள். “எங்க வீட்டுக்கு பின்னாலயும்தான் அழகான தோட்டம் இருக்கு, நீங்க வந்து பாருங்க” என சொல்ல நினைச்சேன், ஆனால் சொல்லவில்லை. பின்பு அந்தப் பெண், இந்த முழு பூமியும் சமாதானமாயிருக்கும், எல்லாரையும் மகிழ வைக்கும் அந்தத் தோட்டம் இந்தப் படத்திலுள்ள தோட்டத்தைப் போல இருக்கும் என்று சொன்னாள். நான் அந்தப் புத்தகத்தை வாங்கவில்லை. ஆனால் அவுங்க போனபிறகும்கூட அந்தப் படம் என் மனசவிட்டுப் போகவே இல்லை. நான் அதைப் பற்றியும் அனைவரும் சமாதானமாக இருக்கப்போவதைப் பற்றியும் யோசித்துக்கொண்டே இருந்தேன். எந்தப் புத்தகத்தைப் பற்றி சொல்கிறேன் என்று உனக்கு தெரியுமா? எனக்கு ஒரு பிரதியை வாங்கித் தருவியா?’ ”

கேரன் மகிழ்ச்சியோடு ஒத்துக்கொண்டாள். அவளுடைய தகப்பன் குறிப்பிட்ட அந்தப் படத்தைத்தான் நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்பதே அப்புத்தகத்தின் தலைப்பு. மனிதர் சமாதானமாக கூடிவாழும் ஒரு பூகோள பூங்காவனமாக இந்தப் பூமியை கடவுள் விரைவில் மாற்றுவார் என்ற பைபிளின் வாக்குறுதியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் வசிக்கும் இடத்திலுள்ள எங்களுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பதன் மூலம் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற பிரசுரத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் விரும்பினால், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கோ அல்லது இந்தப் பத்திரிகையில் 5-ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசங்களில் ஒன்றிற்கோ அனுப்புங்கள்.

நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற பிரசுரத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

◻ என்னை சந்திப்பதற்கு உங்களுடைய பிரதிநிதிகளில் ஒருவரை அனுப்பி வையுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்