பேராசிரியருடைய மனதை கவர்ந்தது
அது என்ன என்பதாக யோசிக்கிறீர்களா? உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) என்ற 192-பக்கங்களைக் கொண்ட புதிய புத்தகமே அவருடைய மனதை கவர்ந்தது. இப்புத்தகம் மே 1998-ல் உலகெங்கும் வெளியிடப்பட்டது. இதுவரை 33 மொழிகளில் ஒரு கோடிக்கும் மேலான பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. விசுவாசத்தை பலப்படுத்தும் இந்தப் பிரசுரத்திற்கான பாராட்டுக்கள் பலதரப்பினரிடமிருந்து வந்துள்ளன.
ஐக்கிய மாகாணங்களின் தென் கரோலினாவில் நர்ஸிங் கோர்ஸ் படிக்கும் ஒரு மாணவி அந்தப் புத்தகத்தைக் குறித்து ஆச்சரியத்துடன் இவ்வாறு கூறினாள்: “அந்த புத்தகத்தில் 4-வது அதிகாரத்தை திறந்து வாசித்தபோது, என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை! நாங்க கிளாஸில் பயன்படுத்தும் புத்தகத்திலுள்ள மேற்கோள் அதில் இருந்தது!
“அடுத்த திங்கட்கிழமை என்னுடைய பேராசிரியரிடம் போய், உங்ககிட்ட நான் ஒரு நிமிஷம் பேசணும் என்று கேட்டேன். அவரிடம் அந்த புஸ்தகத்தை கொடுத்து, இதிலுள்ள விஷயங்களைப் படிக்கும்போது அவை உங்களுக்கு உற்சாகமளிப்பதாக இருக்குமென்று சொன்னேன். மூளையைப் பற்றிய தகவல்களுள்ள 54-ம் பக்கத்தை நான் அவருக்கு எடுத்துக் காட்டினேன். அவர் அதை மனசுக்குள்ளே வாசித்துப் பார்த்துவிட்டு, ‘இது ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்குது! நான் இதை படிச்சு பார்க்கிறேன்’ என்று சொன்னார். என்னுடைய பேராசிரியரிடம் ஒரு புத்தகத்தை கொடுத்ததற்குப்பின், என்னுடன் படிக்கும் இரண்டு மாணவிகளும் அந்தப் புத்தகத்தை விரும்பியதால் ஆளுக்கு ஒரு பிரதியை அவர்களுக்கும் கொடுத்தேன்.”
துருவி ஆராயப்பட்ட, அத்தாட்சிகளுடன் கூடிய இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் பின்வரும் கூப்பனை பூர்த்தி செய்து பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள்.
◻ உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற புத்தகத்தை எனக்கு அனுப்பி வையுங்கள்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொடுக்க தயவுசெய்து என்னை தொடர்புகொள்ளுங்கள்.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
அட்டைப் படங்கள்: J. Hester and P. Scowen (AZ State Univ.), NASA