திருடனிடமிருந்து பணத்தை மீட்ட “போலீஸ்”
மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜீரியாவில் இது நடந்தது. ஒருவர் வேறொரு நகரத்திற்கு டாக்ஸியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது தன்னுடன் பயணம் செய்தவரிடம், கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிறுபுத்தகத்தை அவர் காண்பித்தார். “கடவுள் வெறுக்கிற பழக்கங்கள்” என்ற பாடத்தை அந்நபரிடம் கலந்து பேசினார். ஒரு ஹோட்டலில் டாக்ஸி நின்றது. அப்புத்தகத்தால் கவரப்பட்ட அந்த மனிதன் தான் கொண்டுவந்த பையை காண்பித்து சொன்னான்: “இதில் பணம் இருக்கிறது. இதை டாக்ஸியின் டிக்கியிலிருந்து நான் திருடினேன்.”
பணத்தை திருடிய அந்த மனிதன் தன்னுடைய தவறான நடத்தைக்காக இப்போது வருந்தினான். ஆகவே பணத்தின் உரிமையாளரிடம் அதை ஒப்படைக்க விரும்பினான். தன்னோடு பயணம் செய்த இளம் வியாபாரிதான் அதற்கு சொந்தக்காரர் என்பது தெரியவந்தது. அதில் எவ்வளவு பணம் இருந்தது தெரியுமா? 1,50,000 நைரா (கிட்டத்தட்ட 1,700 அமெரிக்க டாலர்). அந்த வியாபாரியை இத்திருடன் 500 கிலோமீட்டர் பின்தொடர்ந்து வந்திருந்தான். அந்த வியாபாரி பணம் மீண்டும் கிடைத்ததற்காக நன்றி தெரிவிக்க விரும்பினால், அந்தச் சிறுபுத்தகத்திலிருந்து தகவல்களை தனக்கு காண்பித்த நபருக்கே தெரிவிக்க வேண்டும் என்று அந்த முன்னாள் திருடன் கூறினான். ஏனெனில் பணத்தை திருப்பி தருவதற்கு தன்னை தூண்டியது அந்தச் சிறுபுத்தகத்திலிருந்த தகவல்கள்தான் என்று அவன் சொன்னான்.
டாக்ஸியின் டிரைவரும் மற்ற பயணிகள் அனைவரும் நடந்ததை பார்த்துவிட்டு ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்கள். அச்சிறு புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தங்களுக்கும் ஒரு பிரதி வேண்டும் என கேட்டார்கள். முன்பெல்லாம் சாட்சிகள் என்றாலே முகம் சுழித்த அந்த வியாபாரி, இன்று தனக்கு பைபிள் படிப்பு நடத்த வேண்டும் என்பதாக கேட்கிறார்.
மதிப்புமிக்க இந்தச் சிறுபுத்தகத்தை நீங்களும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இவ்வளவுதான்: பின்வரும் கூப்பனை பூர்த்திசெய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கோ அல்லது இந்தப் பத்திரிகையின் 5-ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ அனுப்புங்கள்.
□ கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிறுபுத்தகத்தை எனக்கு அனுப்புங்கள். எந்த மொழி
□ இலவசமாக பைபிளை கற்றுக்கொடுக்க தயவுசெய்து என்னை தொடர்புகொள்ளுங்கள்.