மாஸ்கோ ஆசிரியைக்கு உதவியது விழித்தெழு!
ஒரு ஆசிரியை ரஷ்யாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய பள்ளி பாடங்களில் விழித்தெழு! பத்திரிகையிலிருந்து கட்டுரைகளை உபயோகிக்க எண்ணியிருப்பதை குறிப்பிட்டிருந்தார். அவர் இவ்விதம் விவரித்தார்:
“விழித்தெழு! பத்திரிகை, நான் வாழ்வதற்கு புதிய சக்தியை அளித்து, மனதை அமைதிப்படுத்தி, சோர்வை ஏற்படுத்தும் எண்ணங்களிலிருந்து என்னை விடுதலையாக்குகிறது என்று உணர்கிறேன். நுண்ணுயிரிகளோடு மனிதனின் போராட்டத்தைப் பற்றிய [பிப்ரவரி 22, 1996, வெளியீடு] அருமையான கட்டுரைகளுக்காக உங்களுக்கு நன்றி. உங்கள் பத்திரிகைகள் சென்றடையும் எல்லா வீடுகளுக்கும் நன்மை அளிக்கின்றன என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. விழித்தெழு! பத்திரிகையைப் பெற்றுக்கொள்ள வெகு ஆவலாக இருக்கிறேன். . . . உங்கள் பத்திரிகை எனக்கு உதவி செய்யும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.”
மாஸ்கோவிற்கு தென்கிழக்கே 1,100-க்கும் அதிக கிலோமீட்டர் தொலைவில், இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான ஜனத்தொகை உள்ள ஸ்டாவ்ரொபொல் என்ற நகரத்திலிருந்தும் இதேவிதமான ஒரு கடிதம் வந்தது; அது இவ்விதம் வாசிக்கிறது: “நான் விழித்தெழு!-வைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். சமீபத்தில் இப்பத்திரிகையின் இரண்டு பிரதிகள் எனக்கு கிடைத்தன. ஜனங்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டிருப்பதை அந்தக் கட்டுரைகள் எடுத்துக்காட்டின. சில கட்டுரைகள் எனக்கு தெரியாத செய்திகளை விவரித்தன. இவ்வளவு நடைமுறையான விதத்தில் சம்பவங்களை விளக்குவதை என் வாழ்க்கையிலேயே முதன்முறையாக இப்பொழுதுதான் கவனித்தேன்.”
நீங்கள் இன்னொரு விழித்தெழு! பிரதியைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் அல்லது உங்களுடைய வீட்டிற்கு ஒருவர் வந்து உங்களோடு இலவசமாக பைபிள் படிக்க நீங்கள் விரும்பினால், தயவுசெய்து Praharidurg Prakashan Society, Plot A/35 Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்திற்கோ அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் பொருத்தமான விலாசத்திற்கோ எழுதுங்கள்.