ஏப்ரல் 11, 1998 —நினைவில் வைக்கவேண்டிய நாள்
இயேசு இறப்பதற்கு முந்திய மாலையில் அவர் தம்முடைய அப்போஸ்தலர்களிடம் புளிப்பில்லாத அப்பத்தையும், திராட்சரசத்தையும் கொடுத்து, அவர்களை சாப்பிடவும் குடிக்கவும் சொன்னார். இதையும்கூட அவர்களிடத்தில் சொல்லிவைத்தார்: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.”—லூக்கா 22:19.
வருடாவருடம் வரும் இந்த நினைவுகூரும் கொண்டாட்டம், இவ்வருடம் ஏப்ரல் 11-ம் தேதி சனிக்கிழமை அன்று, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைபெறவிருக்கிறது. தனிச்சிறப்புவாய்ந்த அன்றைய இரவு, உலகெங்கிலும் யெகோவாவின் சாட்சிகள் ஒன்றுகூடிவருவார்கள். இந்த நினைவுகூரும் நாளை எப்படி கொண்டாட வேண்டும் என்று இயேசு கட்டளையிட்டாரோ அதன்படியே கொண்டாடுவார்கள். நீங்களும்கூட எங்களோடு சேர்ந்து ஒரு பார்வையாளராக இருக்க வேண்டும் என்று உங்களை அன்போடு அழைக்கிறோம். இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கும் சரியான நேரத்தையும் இடத்தையும் தயவுசெய்து உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளிடத்தில் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.