உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 12/8 பக். 19-27
  • உங்களுக்குத் தெரியுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்குத் தெரியுமா?
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வினாடிவினாவுக்கான விடைகள்
  • யெகோவாவின் சாட்சிகளுடைய 1996 வருடாந்தர புத்தகத்திலிருந்து அனுபவங்கள்
    விழித்தெழு!—1996
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—2004
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—1998
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 12/8 பக். 19-27

உங்களுக்குத் தெரியுமா?

(இந்த வினாடிவினாவுக்கான விடைகளை, கொடுக்கப்பட்டுள்ள பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம், விடைகளின் முழுப் பட்டியல், பக்கம் 27-ல் அச்சிடப்பட்டிருக்கிறது. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட, “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)

1 வேதபாரகர்களையும் பரிசேயர்களையும் கண்டனம் செய்தபோது, ‘தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே கொலைசெய்யப்பட்டவர்’ என்று இயேசு யாரைக் குறிப்பிட்டார்? (மத்தேயு 23:35)

2. பென்யமீனின் முதற்பேறான குமாரன் யார்? (ஆதியாகமம் 46:21)

3. ஆரோனின் வம்சத்தில் வந்த எந்த ஆசாரியன் புகழ்பெற்ற நகல் எழுதுபவராகவும் நியாயப்பிரமாண போதகராகவும் இருந்தார்? (நெகேமியா 8:1, 2, NW)

4. உண்மையில் ஞானியாயிருப்பதற்கு இவ்வுலகத்தின் பார்வையில் ஒரு மனிதன் என்னவாய் ஆக வேண்டும்? (1 கொரிந்தியர் 3:18, 19)

5. காதின் கீழ் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? (லேவியராகமம் 14:14)

6. பண ஆசையின் விளைவுகளாக பவுல் எவற்றை குறிப்பிட்டார்? (1 தீமோத்தேயு 6:10)

7. எசேக்கியேலின் தரிசனத்தில் பரம ரதத்தின் “மேல்தளம்” எதைப்போல் காணப்பட்டது? (எசேக்கியேல் 1:22, திருத்திய மொழிபெயர்ப்பு)

8. பவுலை ரோமுக்கு கைதியாக கொண்டுசெல்லும்போது கப்பல் சொரிமணலில் சிக்கிக்கொள்ளுமோ என்று மாலுமிகள் பயந்த அந்த வளைகுடாவின் பெயர் என்ன? (அப்போஸ்தலர் 27:17, தி.மொ.)

9. ஆரோனின் கோல் எந்த மரத்திலிருந்து எடுக்கப்பட்டது? (எண்ணாகமம் 17:8)

10. கலகக்காரர்களிடமிருந்து தன்னுடைய விருந்தினர்களைப் பாதுகாப்பதற்காக லோத்து எந்தளவுக்குச் சென்றார்? (ஆதியாகமம் 19:6-8)

11. மெம்பிஸ் என்ற எகிப்திய நகரத்தின் பைபிள் பெயர் என்ன? (ஏசாயா 19:13)

12. சிவப்பு பெண் மான் எப்படி அழைக்கப்படுகிறது? (நீதிமொழிகள் 5:19)

13. எந்த ஜந்துக்கள், ஓரளவு சிக்கலான சமுதாய அமைப்பால் “இனம்” என்று அழைக்கப்படுகின்றன? (நீதிமொழிகள் 30:25, பொது மொழிபெயர்ப்பு)

14. யூதாவின் மனைவியினுடைய கானானிய தகப்பன் யார்? (ஆதியாகமம் 38:2)

15. ஆண் கழுதை மற்றும் பெண் குதிரையின் கலப்பின குட்டியின் பெயர் என்ன? (2 சாமுவேல் 13:29)

16. “யெகோவாவுக்கு அருவருப்பானவை” என்று சொல்லப்படுவன யாவை? (நீதிமொழிகள் 12:22, NW)

17. எந்தப் பொய்க் கடவுளுக்கு இஸ்ரவேலிலுள்ள 7,000 பேர் பணியவில்லை என்பதாக எலியாவுக்கு தெரிவிக்கப்பட்டது? (1 இராஜாக்கள் 19:18)

18. எபிரெய வார்த்தையான “ஷீயோலையும்” கிரேக்க வார்த்தையான “ஹேடீஸையும்” மொழிபெயர்க்கப் பயன்படுத்தப்பட்ட எந்த வார்த்தை மரித்தவர்களுக்கு நேரிடுவதன்பேரில் குழப்பத்தை உண்டுபண்ணியிருக்கிறது? (அப்போஸ்தலர் 2:31)

19. நீதியுள்ள அன்னாளை வெறித்திருப்பதாக தவறாய் கருதியவர் யார்? (1 சாமுவேல் 1:13)

20. ரோம சபையில், “கிறிஸ்துவுக்குள் அங்கீகரிக்கப்பட்டவன்” என்று பவுல் யாரை அழைத்தார்? (ரோமர் 16:10, NW)

21. சுவிசேஷங்களில், 11 அப்போஸ்தலர்களுள் எந்த அப்போஸ்தலனுடைய கூற்றுகள் அதிகமாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன? (மத்தேயு 15:15)

22. எதை அறிவிப்பதன் மூலம் பவுல் சவுக்கடியிலிருந்து தப்பினார்? (அப்போஸ்தலர் 22:25-29)

23. இயேசுவின் உடலை அடக்கம் பண்ணுவதற்காக ஆயத்தப்படுத்துகையில் நிக்கொதேமு எந்த இரண்டு வகையான நறுமணப் பொருட்களை உபயோகித்தார்? (யோவான் 19:39)

24. ஒருவன் மட்டுமே நன்றி சொல்வதற்காக திரும்பி வந்த அச்சந்தர்ப்பத்தில் இயேசு எத்தனை குஷ்டரோகிகளை சுகப்படுத்தியிருந்தார்? (லூக்கா 17:12-19)

25. தனக்காக வழக்காட முடியாத நிலையிலுள்ள, எத்தகைய குறைபாடுள்ள நபரை சபிப்பதை யாயப்பிரமாணம் தடை செய்தது? (லேவியராகமம் 19:14, தி.மொ.)

வினாடிவினாவுக்கான விடைகள்

1. “பரகியாவின் குமாரனாகிய சகரியா”

2. பேலா

3. எஸ்றா

4. பைத்தியக்காரனாக வேண்டும்

5. காது மடல்

6. “விசுவாசத்தைவிட்டு வழுவிப்போவது” உட்பட “எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது”

7. “ஆச்சரியமான பளிங்கு போல்”

8. சிர்த்திஸ்

9. வாதுமை

10. அவர்களுக்கு தன்னுடைய மகள்களை கொடுக்க முன்வந்தார்

11. நோப்

12. மடமான்

13. எறும்புகள்

14. சூவா

15. கோவேறு கழுதை

16. பொய் உதடுகள்

17. பாகால்

18. நரகம்

19. பிரதான ஆசாரியன் ஏலி

20. அப்பெல்லே

21. பேதுரு

22. தான் ஒரு ரோமன் என்பதை

23. வெள்ளைப்போளமும் கரியபோளமும்

24. பத்து

25. செவிட்டுத்தன்மை

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்