காவற்கோபுரத்தை அவன் பெரிதும் மதிக்கிறான்
ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் அ.ஐ.மா., ஒஹாயோவிலுள்ள டலிடோவிலிருந்து இவ்விதமாக எழுதினான்: “நான் ஒரு ரோமன் கத்தோலிக்கனாக இருந்தாலும்கூட, உங்களுடைய நல்ல பத்திரிகைக்கு சந்தா செய்ய விரும்புறேன். காவற்கோபுரத்தில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டதுக்கு காரணம் என் நண்பன் டிரவர்தான். வகுப்பில், அவன் எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான். நானும் அவனும் கிட்டத்தட்ட ஒரு வருஷமா நண்பர்கள்; அவன் எனக்கு இயேசு, யெகோவா மற்றும் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியெல்லாம் நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறான்.
“டிரவருக்கும் என்னோட வயசுதான்; அவனும் நானும் ஒரே வளர்த்தி; அவனோட மதத்தில் அவனுக்கு ரொம்ப பக்தி. அவன் காவற்கோபுர பத்திரிகைக்கு சந்தா செஞ்சிருக்கான். அவனுடைய பத்திரிகையில ஒன்னை எனக்கும் படிச்சுப்பார்க்க கொடுத்தான். நீங்க எழுதுற அறிவுப்பூர்வமான கட்டுரைகள் எனக்கு பிடிச்சிருக்கு. நான் ஒரு யெகோவாவின் சாட்சியா இல்லாட்டாலும், அதை நீங்க பெரிசா எடுத்துக்காம உங்க பத்திரிகைக்கான சந்தாவ எனக்கு அனுப்புவீங்கன்னு நம்புறேன்.”
காவற்கோபுரத்தையும் அதனுடைய துணைப்பத்திரிகையான விழித்தெழு!-வையும் உலகமுழுவதுமுள்ள பல தேசத்தையும் மதத்தையும் சேர்ந்த மக்கள் படித்து மகிழ்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டுமே இந்த இரண்டு பத்திரிகைகளும் 120-க்கும் மேற்பட்ட மொழிகளில், 90 கோடிக்கும் அதிகமான பிரதிகள் அச்சடிக்கப்பட்டன!
காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை தொடர்ந்து வாசித்தால் நீங்களும்கூட நன்மையடைவீர்கள். இவற்றின் ஒரு பிரதியையோ, ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பையோ நீங்கள் பெற விரும்பினால், Praharidurg Prakashan Society, Plot A/35 Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்திற்கோ பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ தயவுசெய்து எழுதுங்கள்.