“அதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம்”
உக்ரேனில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள், ரயிலுக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுடன் அடிக்கடி பேசுகின்றனர். பைபிளில் ஆர்வம் காட்டிய ஒரு பெண்ணிடம் என்னுடைய பைபிள் கதை புத்தகம் ஒன்று அளிக்கப்பட்டது; இது, பைபிள் வரலாற்றை காலவரிசைப்படி விவரித்து, நிறைய படங்களைப் பயன்படுத்தும் ஒரு புத்தகம்.
பின்பு, அதே ரயில் நிலையத்தில், அந்தச் சாட்சியை அப்பெண் மீண்டும் சந்தித்து புத்தகத்திற்காக நன்றி தெரிவித்தார். அவர் சொன்னதாவது: “என் மகன் அவனுடைய பாடப்புத்தகங்களைப் படிக்க விரும்பியதேயில்லை. அவற்றை தொட்டுக்கூட பார்க்கமாட்டான். ஆனால் பைபிள் கதை புத்தகத்தை அவனிடம் நான் கொடுத்தபோது, அந்தப் படங்களைப் பார்த்தானோ இல்லையோ, அதை வாசிக்க அவனுக்குக் கொள்ளை விருப்பம். சுமார் இரண்டே வாரத்துக்குள் அந்தப் புத்தகம் முழுவதையும் வாசித்துவிட்டான். அதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். ஆனால் எல்லாவற்றையும்விட, கடவுளைப் பற்றி தெரிந்துகொண்டதில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம். அவனிடத்தில் இந்த மாற்றங்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கே மகிழ்ச்சியாக இருக்குது. வாசிக்க இன்னும் ஏதாவது இருந்தால் தயவுசெய்து எனக்குக் கொடுங்களேன்.”
அருகில் நின்றுகொண்டிருந்த மற்றொரு பெண் இந்தக் கதையைக் கேட்டார். என்னுடைய பைபிள் கதை புத்தகம் ஒன்று தனக்கும் கிடைக்குமா என்று கேட்டார். நீங்களும்கூட இந்த 256 பக்க புத்தகம் ஒன்றைப் பெற, அல்லது பைபிள் கல்வியின் மதிப்பைப் பற்றி உங்களிடம் கலந்து பேசும் எவரையாவது உங்கள் வீட்டிற்கு வரும்படி ஏற்பாடு செய்ய விரும்பினால், பின்வரும் Watchtower, Niederselters, Am Steinfels, D-65618 Selters, Germany என்ற விலாசத்திற்கோ, அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் உங்களுக்கு வெகு அருகில் இருக்கும் விலாசத்திற்கோ எழுதுங்கள்.