“குழந்தைகள்போல் அவர்களுக்கு ஒரே குஷி”
மூன்று குழந்தைகளுக்கு தகப்பனான 32 வயது சிர்கீ, தன்னுடைய நண்பர்களிடம் உயிர்—அது எப்படி இங்கு வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை காண்பித்தபோது, அவர்கள் பிரதிபலித்ததை மேற்சொன்னவாறு விவரித்தார். என்ன நடந்தது என்பதை ரஷ்யாவிலுள்ள டாடர்ஸ்டானில் வசிக்கும் சிர்கீ இவ்வாறு விவரிக்கிறார்:
“முதலில் நாங்கள் அதிலுள்ள படங்களைப் பார்த்து அவற்றின் கீழேயுள்ள விளக்கக் குறிப்புகளை வாசித்தோம். கருத்தைக் கவர்கிற கலந்தாலோசிப்புகள் பின்தொடர்ந்தன. என்னுடைய நண்பர்கள் எல்லாருமே இளம் தகப்பன்மாரும் தாய்மாரும் ஆவர் . . . நாங்கள் எல்லாருமே ஈஸ்டர் சமயத்திலும், ஞானஸ்நானங்களுக்காகவும் சர்ச்சுகளுக்கு செல்வோம். எங்களுடைய ஆர்வம் அந்தளவுக்குத்தான் இருந்தது.
“ஆனால், உங்களுடைய புத்தகத்தில் மட்டும் எங்களுக்கு எப்பேர்ப்பட்ட ஆர்வம் இருக்கிறது! அந்தப் புத்தகத்தின் வண்ணமிக்க, அழகாக வடிவமைக்கப்பட்ட அட்டை கவனத்தை விரைவில் கவருகிறது. கையில் எடுத்துவிட்டால்போதும், கீழே வைக்க மனமே வராது. நீங்கள் எதைக் கற்றுக் கொண்டீர்களோ அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டுமென ஆசைப்படுவீர்கள். அதையும்விட, அந்த தகவல்களை வாசித்து அவற்றை கலந்தாலோசித்த பிறகு, நீங்கள் திருப்தியாகவும் நிறைவாகவும் உணருவீர்கள். கடைசியில், அனுபவிக்கத்தக்க, அறிவுக்கூர்மையுள்ள, பிரயோஜனமான ஒன்றைச் சம்பாஷிப்பதற்கு கண்டுபிடித்துவிட்டோம்.
“உண்மையில், நாம் ஆவிக்குரியவிதமாக வெறுமையான உணர்வில் வாழ்கிறோம். பணம், பிரச்சினைகள், கவலைகள், மறைவான சூழ்ச்சித்திட்டம் இவற்றைப் பற்றிதான் எல்லாரும் பேசுகிறார்கள். இத்தகைய காரியங்கள் மனதைத்தான் நொறுங்கச் செய்கின்றன. அவற்றைப் பற்றி சிந்தித்த பிறகு உங்களால் சரிவர தூங்க முடியாது, மேலும் மனித தொல்லைகள் என்ற குப்பைத் தொட்டிக்குள் அமிழ்த்தப்படுவதால் காலையில் விழித்தெழுவதற்கும் நீங்கள் விரும்புகிறதில்லை.”
ஒருவேளை இதுபோன்ற உணர்ச்சிகள் உங்களுக்கும் இருக்கலாம். ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட பைபிள் மாணாக்கர்கள் அடங்கிய உலகளாவிய அமைப்பாக இருக்கும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட இந்தக் கவர்ந்திழுக்கும் பிரசுரத்தின் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள நீங்கள் விரும்புவீர்கள். கூடுதலான தகவலையோ அல்லது ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பையோ நீங்கள் பெற விரும்பினால், Watchtower, Niederselters, Am Steinfels, D-65618 Selters, Germany என்ற விலாசத்திற்கோ பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்டுள்ள பொருத்தமான விலாசம் ஒன்றிற்கோ தயவுசெய்து எழுதுங்கள்.