உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 5/8 பக். 32
  • விழித்தெழு! 1990-ல் அறிவித்தது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விழித்தெழு! 1990-ல் அறிவித்தது
  • விழித்தெழு!—1997
விழித்தெழு!—1997
g97 5/8 பக். 32

விழித்தெழு! 1990-ல் அறிவித்தது

சமீபத்தில், “பசு-பித்து நோய்” (mad-cow disease) ஐரோப்பாவை கலக்கியிருக்கிறது. அந்த நோய் மனிதருக்கும் தொற்றலாமென அநேகர் பயப்படுகின்றனர். நோயால் தாக்கப்பட்ட மிருகங்களின் மாமிசத்தை உண்பதால் குருஸ்ஃபெல்ட்-யாக்கப் நோய் (CJD) வருமெனவும் சிலர் நம்புகின்றனர்; நடு நரம்பு மண்டலத்தைப் படிப்படியாக பாதித்து உயிரைக் குடிக்கும் கொடிய நோய் இது. பசு-பித்து நோய் பற்றிய செய்தி பரவியபோது, மாட்டுக்கறி சாப்பிடுவோரின் எண்ணிக்கை பேரளவில் குறைந்தது ஆச்சரியமல்லவே.

ஆர்வத்தைத் தூண்டும் விஷயம் என்னவென்றால், இத்தாலிய வெளியீடான டுட்டோரேட்ஜோ-வின் மே 1996 பிரதியில் ஸ்டேஃபான்யா ஃபார்ராரி என்பவர் இவ்வாறு எழுதினார்: “இந்தக் கொள்ளை நோயைப் பற்றி ஏற்கெனவே 1990-ல் அறிவித்த ஒரு பத்திரிகையை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம்—அதுதான் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்படும் விழித்தெழு! பத்திரிகை.” நவம்பர் 8, 1990 ஆங்கில விழித்தெழு!-வில் (தமிழில் ஏப்ரல் 8, 1992 பிரதியில்) பிரசுரமான “பிரிட்டனின் ‘பசு-பித்து’ பிரச்சினை,” என்ற கட்டுரையைத்தான் அவர் குறிப்பிட்டார். அந்தக் கட்டுரையின் முதல் நான்கு பாராக்களை மேற்கோள்காட்டிய பிற்பாடு, “இந்த முழு காரியமும் உலகறிந்த விஷயமாவதற்கு ஆறு வருடங்களுக்கு முன்னரே” இந்தக் கட்டுரை வெளியானது என்று ஆச்சரியத்துடன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து சொன்னார்: “1990-ல் வெளியான, காலத்திற்கேற்ற தகவலளித்த அந்தப் பிரதியைப் பார்த்து சிலர் இவ்வாறு சொல்லியிருக்கின்றனர்: ‘இப்படிப்பட்ட கருத்தார்ந்த, முக்கியமான காரியத்தை யெகோவாவின் சாட்சிகள் முன்னமே அறிந்திருந்தார்களென்றால் ஏன் அனைவரது கவனத்திற்கும் அவர்கள் அதைக் கொண்டுவரவில்லை; அவர்களது சபைகளில் இல்லாதவர்களுக்கும் ஏன் அதைச் சொல்லவில்லை?’ நாம் நேர்மையாக இதைச் சிந்தித்துப் பார்க்கலாம்: 1990-ல் ஒரு யெகோவாவின் சாட்சி நம் கதவைத் தட்டி பைபிளைப் பற்றி சொல்லி, அவர்களது பத்திரிகை வெளியிட்ட அந்தக் கட்டுரையைக் காண்பித்திருந்தால், வேறு மதத்தினரான நம்மில் எத்தனைபேர் அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்போம்?”

1990-ல், “பிரிட்டனின் ‘பசு-பித்து’ பிரச்சினை” என்ற கட்டுரை பிரசுரமானபோது, விழித்தெழு! பத்திரிகை 62 மொழிகளில், ஒவ்வொரு இதழும் சராசரியாக சுமார் 1.2 கோடி பிரதிகள் அச்சடிக்கப்பட்டுவந்தது. காலத்துக்கேற்ற இந்தப் பத்திரிகையை யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் 200-க்கும் அதிகமான நாடுகளில் மும்முரமாக விநியோகம் செய்துவந்தனர். இன்று, விழித்தெழு! 82 மொழிகளில் பிரசுரிக்கப்படுகிறது; ஒவ்வொரு இதழும் சராசரியாக 1,83,50,000 பிரதிகள் அச்சடிக்கப்படுகிறது. இந்தப் பத்திரிகை தகவலளிக்கும் காலத்துக்கேற்ற கட்டுரைகளை தொடர்ந்து வெளியிடுகிறது. விழித்தெழு! பத்திரிகையை இனி நீங்கள் பெற விரும்பினால், தயவுசெய்து உள்ளூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது 5-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விலாசங்களில் அருகிலுள்ள ஏதாவது ஒன்றிற்கு எழுதுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்